(Reading time: 33 - 66 minutes)

 

வாட்..?” அதிர்ந்தாள் நிரல்யா.

“ஜெஷுர் குணத்துக்கு அவன் என்ட்ட எந்த எதிர்பும் தெரிவிக்காம போனதுதான், முதல்ல அவன் மேலே எனக்கு ஆரணி விஷயத்தில உறுத்திச்சு.... அதே நேரம் அவன் பக்கம் நியாயம் இருந்தால், உன்னை தனியா டார்கட் செய்வானோன்னு ஒரு எண்ணமும் இருந்துச்சு...

அன்னைக்கு ஞாபகம் இருக்கா....நான் உன்னை விட்டுட்டு திரும்புனதும்...உன் ரூம் லைட் அணைஞ்சது...உடனே நான் உன் ரூமுக்கு தான் வந்தேன்...என் ஆக்டோ சூட்டை போட்டுகிட்டு....”

“ஆக்டோ சூட் உங்கட்டயும் இருக்கும்னு நானும் கொஞ்சம் முன்னாடிதான் கெஸ் பண்ணேன்....”

“நீ கெஸ் பண்ணிருப்பன்னு நானும் எதிர்பார்த்தேன்....

“அன்னைக்கு அந்த ஆக்டோ சூட்டை போட்டுட்டு உன் ரூம் பால்கனி வழியாதான் வரனும்னு நினைச்சேன்...ஆனால் நான் பக்கத்தில் வந்ததும் ஜெஷுரனுக்கு நான் வர்றதை அவன் சூட் காமிச்சு கொடுத்திருக்கும்....அவன் ஓடிட்டான்...”

“ஆனால் நீ ரொம்ப பயந்துட்ட...சூட்டை கழட்டிட்டு உன்னை தேடி வந்தேன்....மத்தது உனக்கே தெரியும்...

ஜெஷுரன் இந்த அளவுக்கு இறங்கினதும் நான் ரொம்பவும் டென்ஷனாயிட்டேன்....ஏன்னா அவன்ட்ட அந்த சூட் இருக்குன்னு எனக்கு தெரியும்...உன்னை எங்க ஒளிச்சு வச்சாலும் அவனால உன்னை தேடி வர முடியும்னு தெரியும்...

அதனால உன் கூடவே இருக்கனும்னு முடிவு செய்தேன்....நீ மட்டும் ஜாஷ் தான் தப்பு செய்றான்னு நினைக்காம இருந்திருந்தா அன்னைக்கே உன்னை கல்யாணம் செய்திருப்பேன்.....

ஆனா நீ ஜாஷை தப்பா நினைக்றப்ப என்னால உன்னை கல்யாணம் செய்ய மனசு வரலை....ஒரு வகைல நான் உன்னை ஏமாத்துற மாதிரி அது தோணிச்சு....

அதோட உனக்கே அந்த நேரத்தில் இந்த கல்யாணத்தில் விருப்பமும் இல்ல...அந்த ஜுவல் ஷாப்பில் அது எனக்கு தெளிவா புரிஞ்சுது....

ஆனா அதே நேரம் நீ கொஞ்சம் பழைய மாதிரி...அதாவது நம்ம முதல் மீட்டிங்க்ல ஜோக்லாம் அடிச்ச மாதிரி அன்னைக்கு தான் என்ட்ட பேச ஆரம்பிச்ச....சரி பொண்ணு ஃபார்முக்கு வந்துகிட்டு இருக்குது...ரக்க்ஷத்தை ஏத்துகிட்டு ஜாஷை மறந்துட்டனு நினைச்சா...அன்னைக்கு நைட்டே நீ வேறமாதிரி....அழுத...”

“அப்ப நைட் ஆக்டோ சூட்ல நீங்க என் ரூம்லயா இருந்தீங்க....” அவள் யூகித்தது தான் என்றாலும்...அவன் வாய் வார்த்தையாய் கேட்க...வெட்கம் முதல் ஓராயிரம் உணர்வுகள்.

“ஹேய்....இப்படில்லாம் வெட்கபட்டு மனுஷனை டென்ஷனாக்காத....பெட் ரூமோட சரிமா தாயே...டிரஸிங் ரூம்...இன்ன பிற...எதுக்குள்ளயும் நான் மனசால கூட நுழஞ்சது கிடையாது....

அப்படி பொறுக்கிதனம் பண்றதுக்கு...ஜாஷை நீ என்னமும் நினச்சுகோன்னு உரிமையா உன்னை கல்யாணம் செய்துட்டு போயிருப்பேன்....”

“இதுக்கு நீங்க ஜெஷுர் அண்ணாவை மீட் பண்ணி எல்லாத்தையும் சால்வ் செய்திருக்கலாமே.....”

“ரெண்டு விஷயம், வர்றது ஜெஷுர்தாங்றது என் யூகம்....ஒரு வேளை ஆயிரத்தில் ஒரு வாய்ப்பா வேற யாராவதா இருந்தால்....நான் ஜெஷுர தேடி போன நேரத்தில் வர்றவன் உன்னை எதுவும் செய்துட்டான்னா....?

ரெண்டாவது ஜெஷுரை நான் தேடி வெளிய போன நேரத்தில் ஜெஷுரே இங்க வந்து உன்னை ஏதாவது செய்துட்டா...அவன் உன் மேல பிஃஸ்டல் வச்சுட்டான்தானே....எப்படி நம்ப...உணர்ச்சி வசத்திலா ஏதாவது செய்துட்டு அப்புறம் அது தப்புனு அவன் மனம் உணர்ந்துட்டாலும்....உன் நிலமை...அப்படியெல்லாம் ரிஃஸ்க் எடுக்க முடியலை..”

“சரி தினமும் நைட் என்னை கண்காணிச்சீங்க...அப்புறம்”

“கண்காணிச்சனா....காவல்காத்தேன்...தூக்கமே இல்லாம துப்பாக்கியோட ஒருத்தன் நீ தூங்றவரைக்கு உன் ரூம்ல நின்னுட்டு, அப்புறமா தூங்கி....நீ எந்திருக்கும் போது கிளம்பி ஃப்யூ மினிட்ஸ்ல திரும்பவும் ரெடியாகி...”

“ஓ ..அதான் ஆருவை எட்மாண்டன் அனுப்பினீங்களா...”

“அப்புறம்...எதுக்காம்?”

“நான் கூட சார் என்னமோ என் கூட டூயட் பாடத்தான் அப்படி ப்ளான் செய்தீங்கன்னு நினைச்சேன்...”

“ஆமா டூயட் பாட மனசு அப்படியே பொங்கி பொங்கி நல்லா வருமே... நைட் ஆனா...ஜாஷையும் காதலிச்சேன்...ரக்க்ஷத்தையும் காதலிக்கேன்....நான் நல்லவளா கெட்டவளான்னு ஊன்னு அழுதுட்டு காலைல ஈன்னு சிரிப்ப...உன்னை பார்த்து டூயட் பாடத்தான் தோணும்...அறிவே கிடையாதா உனக்கு?  எதை நினச்சு அழனும்னு விவஸ்தையே கிடையாதா? உன்னை ஜெஷுர்ட்ட இருந்தோ இல்ல மொத்த உலகத்துட்ட இருந்தோ கூட பாதுகாத்றலாம்னு நம்பிக்கை இருந்தது...அனால் உன்னை எப்படி இந்த விஷயத்தில புரியவக்க போறேன்னுதான் ரொம்பவும் தவிச்சு போயிட்டேன்......இப்படி யோசிக்காதன்னு உன்ட்ட சொல்ல எனக்கு வழி இல்ல..ஏன்னா நான் இப்படி யோசிக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்னு நீ திருப்பி கேட்ப.....ஜாஷ் பத்தி, ஆக்டோ சூட்ட பத்தி சொல்லிரலாம்னு பார்த்தா...இதுக்கு அழுறத விட்டுட்டு  என் ஸேஃப்ட்டிக்காக அடுத்து அழ ஆரம்பிப்பன்னு பட்டுது...எப்படி பார்த்தாலும் நம்ம மேரேஜ் லைஃப் அழுவினி ஆவுடையம்மா கூடதான்னு நான் நொந்தே போய்ட்டேன்...”

“நீங்கதான் என் பாஸ்ட்...என் ப்ரசென்ட்டும் கூட...அது உங்களுக்கு தெரியுங்க்ரதால என் அழுகை உங்களுக்கு லூசுதனமா தெரியுது....அதே இது என் இடத்தில இருந்து யோசிச்சு பாருங்க....”

“உன் இடத்தில இருந்து தாங்க மேடம் சொல்றேன்....உன் வியூ படி ஒருத்தங்க தப்பு செய்துட்டு அதை உணர்ந்து திருந்துனா அது ஒழுக்க கேடானா விஷயமா...?”

“அப்ப நான் ஜாஷை லவ் பண்ணது தப்புங்றீங்களா....அந்த காதல் தப்புனா...ரக்க்ஷத் மேல வந்த காதலும் தப்பு தானே...”

 “நமக்கு சேராத ஒரு டிரஸை தெரியாம வாங்கிட்டு வந்துட்டோம்....தெரிஞ்சதும் போய் குடுத்துட்டு நம்ம சைஃஸ்க்கு மாத்திகிடுறது இல்லையா..., அது மாதிரிதான்...

கல்யாணம் செய்றதை பத்தியும் அதை ரத்து செய்றது பத்தியும் ஆயிரம் சட்டம் இருக்கும்.....எங்கயாவது காதலை பத்தி சட்டம் இருக்குதா....?

பைபிள்படி பார்த்தால் கணவன் மனைவிக்கு இடையில் வருவது மட்டும்தான் காதல், கல்யாணத்துக்கு வெளியே காதல் என்று ஒன்று இல்லவே இல்லை.

மேரேஜ்க்கு முன்னால அந்த காதலோட வாசத்தைதான் நாம அறிய முடியும்.....பலாபழ ஸ்மெல்லும் பலாபழமும் ஒன்னா........திருமணம் இல்லாமல் முழுகாதலை யாரும் அறியவே முடியாது....

பரஃஸ்பர ஈர்ப்பு தோன்றினாலும்...... உனக்கானது உனக்கே உனக்குன்னு கால்யாணத்தில் கையில் வர்றவரைக்கும், ஆசையில் கோட்டை கட்டாம காத்திருன்னுதான் வேதம் சொல்லுது....செஞ்சியா நீ...செஞ்சிருந்தா நிம்மதியா இருந்திருப்ப...

நான் நிம்மதியா இருந்ததுக்கு முக்கிய காரணம் அது....

அந்த வகையில நீ செய்தது தப்புதான....அத திருத்திகிட்டதுதான் சரி....”

மௌனம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.