(Reading time: 33 - 66 minutes)

 

ரணியோ...துவியோ...அவர்கள் விருப்பத்தை அறிந்து அவர்கள் திருமணத்திற்கு துணை நிற்பவன்.....இவள் விருப்பமே கேட்காமல்  இவளை நிச்சயம் செய்ய வந்தது எப்படி?

இவள் விருப்பம் அவன் மேல் என்று அவனுக்கு நிச்சயமாக தெரிந்திருந்திருக்கும்....

ரக்க்ஷத்துடனான முதல் சந்திப்பில் இவள் சொன்ன முதல் வார்த்தைகளே ‘எனக்கு இந்த கல்யாணத்தில கொஞ்.........சம் கூட விருப்பம் கிடையாது, ஐ’ம் இன் லவ் வித் சம் ஒன்’

இதற்கு கொஞ்சமும் அசையாமல் இவள் உதடுகளை ரசித்து கொண்டிருந்தான் ரக்க்ஷத்.

 அவன்...அடுத்தும் மறுநாள் அவனை சந்தித்த போதும், ஒவ்வொரு முறை இவள் ரக்க்ஷத்தை  பலமாக மறுக்கும் போதும், அல்லது ஜாஷ் மீதானா தன் காதலை குறித்து பேசும் போதும், காதலுற்ற ஆணுக்குள்ள இயல்பானா பொறாமை, எரிச்சல் எதுவுமின்றி இவள் என்னவோ ரக்க்ஷத் மேலுள்ள காதலை பேசிக்கொண்டிருப்பது போன்று ரசித்து இவளிடம் காதல் கதை பேசிக்கொண்டிருந்தான்.

மொத்தத்தில் இன்றுவரை ரக்க்ஷத் ஜாஷை பற்றி சிறு எரிச்சல் கூட கொண்டதில்லை...

ஜெஷுரன் இவளை மிரட்ட வந்ததை இவள் ஜாஷ் என புரிந்து கொண்டு பேசிய போது,  இவள் பாதுகாப்பிற்காக அத்தனை தவித்த ரக்க்ஷத், அந்த ஜாஷை பத்தி இவளிடம் விசாரிக்கா விட்டாலும்...ஒற்றை வார்த்தையில் ஆரா விஷயத்தை அறிய முடிந்தவன்...இருந்த இடத்தில் இருந்து உலகளாவிய குற்றவாளியை துப்பறிய முடிந்தவன்...ஜாஷை தேடவே இல்லை....

மாறாக இவளை பகலெல்லாம் பார்வையால் பாதுகாத்தான். தவிக்க தவிக்க அடைகாத்தான். ஆக வருபவன் வேறு யாரோ என ரக்க்ஷத்திற்கு தெரிந்திருக்கிறது. எப்படி?

ரக்க்ஷத்தான் ஜாஷ் என்றால் இது நிச்சயம் சாத்தியம்.

அதோடு இவளை விட்டு பகலெல்லாம் விலகாமல் அவ்வளவு பாதுகாக்க நினைத்தவன் இவள் ரக்க்ஷத்தை காதலிப்பதை அறிந்த பின்னும், உடனே திருமணம், அப்பொழுதுதான் எல்லா நேரமும் நான் உன்னோடு இருக்க முடியும் என்று ஏன் சொல்லவில்லை? இவளே அவன் அப்படி கேட்பான் என எதிபார்த்தாள் தானே!

இவள் ரக்க்ஷத்தை அறிந்த வரை, அவன்தான் ஜாஷாக இருக்கும் பட்சத்தில், இவள் ஜாஷை தவறாக நினைக்கும்போது, அதை அவனால் நிவர்த்தி செய்யமுடியாதவரை, நிச்சயமாக திருமணத்திற்கு மணம் ஒப்ப மாட்டான். இவளை ஏமாற்றுவது போல் அவனுக்கு தோன்றும்.

அதுவும்.....சட்டென மற்றொன்றும் தோன்றியது, பகலெல்லாம் பாதுகாத்தவன் இரவு இவளை எப்படி பிரிந்தான்? பிரிந்தானா?

இவள் ஜெஷுரனிடம் பேசி ஜெஷுரனுக்கும் இவளுக்கும் ஒரு பரஃஸ்பர புரிதல் வந்த மறுநாளிலிருந்து, இவளை பகலில் பார்வைக்குள் வைத்து பாதுகாக்கும் வழக்கத்தை ரக்க்ஷத் கைவிட்டானே....அப்படியானால்  ரக்க்ஷதிற்கு இரவில் இவள் அறையில் நடப்பது தெரிந்திருக்கிறது. இரவில் அவன் அங்கே இருந்திருக்கலாம். அப்படியா?.....இது சாத்தியமா?

அந்த சூட்...அது போல் ஒன்று அவனிடம் இருந்தால் சாத்தியம் தான்.....வெறும் சாதாரண ராணுவ அதிகாரிக்கு இந்த சூட் கிடைக்காது...ஆனால் தீவிரவாதிகளை ஹேண்டில் செய்யும் தீவிரவாதிகளுக்கு இது உதவும் என ஜெஷுரன் சொன்னானே....

அந்தவகையில் யோசித்தாலும் ரக்க்ஷத்திற்கும் தீவிரவாதிகளை கையாளும் பணிக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக தானே அர்த்தம்.

இவை அனைத்தும் யூகங்கள். குழப்ப குட்டைகள் என்றும் சொல்ல்லாம்.

ஆனால் இனியும் இதன் அடிப்படை தெரியாமால்....இவளால் முடியாது.

தேவை திட ஆதாரம்.

திகாலை எழுந்து சொல்லாமல் கொள்ளாமல் அவன் வீட்டிற்கு பறந்தாள்.

அறிவிப்பின்றி உள்ளே நுழைந்தாள். வருங்கால எஜமானியை தடுக்கும் காவல்காரன் எவர்?

புயலென அவன் அறை புகுந்தாள்.

இவளறை அவன் வந்தது உண்டு.

அவன் அறைக்கு இங்கு இவளுக்கு இதுவே முதல் விஜயம்.

எங்கு தேட? என்ன தேட?

விழி சுற்றி அறையை அளவிட்டாள்.

இவள் நின்றிருந்த வாசலிலிருந்து இடபுறம் நீண்டு அமைந்திருந்தது அறை.

வலபுறம் ஒரு மரநிற வாட்ரோப் போல எதோ ஒன்று.

அதன் ஓரமாக உள் புறமாக தெரிந்தது சிறு சந்து போல் இட அமைப்பு. அதன் முடிவில் ஒரு கதவு.

இட புறம் சிறு மேஜை, அதன் மேல் ஒரு கண்ணாடி.

 அடுத்ததாய் இளம் பச்சை நிற பெரும்படுக்கை, அடுத்து ஓடி விளையாட தேவையான அளவு இடம், முடிவில் சுவர் அருகில் படுக்கை நிறத்திலேயே ஒரு சோஃபா, அதன் மேல் பரவியிரிந்த சாளரம், அதன் வழியாக தெரிந்த பால்கனி, அடுத்து மூலைக்கு அருகில் மற்றொரு கதவு. இடபுற சுவர் முக்கால் பாகம் மறைத்து தொங்கிய திரை சீலை.

படுக்கைக்கு மேல், சுவரில் எலக்ட்ரானிக் ஃபோட்டோ டிஸ்ப்லேயர் இப்பொழுதும் ஓடிகொண்டுதான் இருந்தது. நிச்சயத்தின்போது எடுக்க பட்டிருந்த இவளது தனி படங்கள். இடையிடையே இவளது ஓவியங்கள். அவன் கை வண்ணம்தான்.

இதில் எங்கிருந்து தேட வேண்டும்?

வாட்ரோப் என்றது முதல் மனம். ஜாஷ் எதையும் எல்லோரும் எதிர்பார்க்கும் இடத்தில் வைக்கமாட்டான்.

படுக்கை, மேஜை இப்படி தேடும் போதே அவளுக்கு மனம் சோர்ந்து அழுகை வந்தது.

சாட்சி வைப்பவனா அவன்?

டுக்கையில் அமர்ந்து தலை குனிந்து அழ ஆரம்பித்தாள். எவ்வளவு நேரம் அழுதாளோ, எதோ தோன்ற, நிமிர்ந்து பார்த்தால், அந்த படுக்கை அருகிலிருந்த மேஜைக்கு, மேலிருந்த கண்ணாடியிலிருந்து, பளிச் பளிச் என மாறும் ஒளி கற்றை, இவளை தொட்டு தொட்டு செல்வது, அவள் கவனம் கலைத்திருக்கிறது என புரிந்தது.

ஃபோட்டோ டிஸ்ப்லேயரை படுக்கையின் தலைக்கு மேல் மாட்டிவைத்துவிட்டு, படுக்கையில் சற்று ஓரமாக படுத்தால் இப்படங்கள் கண்ணாடியில் தெரிவதை பார்க்கும் படி அமைத்திருந்தான் அவன்.

முகத்துக்கு நேராக ஃபோட்டோ டிஸ்ப்லேயரை மாட்டி இருந்தால், தூங்கும் போது முகத்திற்கு நேராக இப்படி நிறம் மாறி மாறி தொல்லை தரும் என நினைத்திருப்பானாக இருக்கலாம்.

அதில் சென்று நின்றது இவளது கவனம்.

இவளது புகை படம் ஒன்று , அடுத்து இவளை அவன் வரைந்திருந்த ஓவியம் ஒன்று என வரிசையாக வந்து கொண்டிருந்தது.

திடும் என ஒரு அதிர்வு இவளுள். இதயம் நின்றே போயிற்று, காரணம் அந்த ஓவியம.

இவள் முகம், அதன் பின்புலம் முழுவதும் எல்லையற்ற நீர் பரப்பு....கடல். இது மாத்திரம்தான் ஓவியம்.

அத்தனை தத்ரூபமாய்....இவள் கண்கள்...அதில் வெளிப்பட்ட உணர்விலும் அலையடித்தது.

இது...இது...இவள் ஜாஷை பிரிந்த தருணத்தின் பதிவு.

கேட்டால் நான் கற்பனையில் வரைந்தது என அவன் சொல்ல முடியும்...ஏனெனில் அதில் இருக்கும் இவள் முகத்தின் வயது அன்றுள்ளது இல்லை. இன்றுள்ளது.

ஆனாலும் இவளுக்கு தெரியும் இது ஜாஷ் தான்.

ணர்வு உறுத்த நிமிர்ந்து பார்த்தால், வலபுறம் தெரிந்த கதவிற்கு அருகில் அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்த அடையாளங்களுடன் அவன். அசையாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

எத்தகைய உணர்வு அவளை ஆட்கொண்டது என அவளுக்கு தெரியவில்லை.

எப்பொழுது எழுந்தாள், எத்றகாக சென்றாள் ஏன் அழுதாள்...ஒன்றும் புரியவில்லை.

அவன் மார்பில் சரண்.

‘ஜாஷ்.....ஜாஷ்.... ஐ நோ யூ”

அவள் வாய் சொல்ல,

குலுங்கி தீர்த்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.