(Reading time: 33 - 66 minutes)

 

டிஃபென்ஸ் சீக்ரட்ஸ் சொல்லமுடியாது....சொல்லவும் கூடாது........அதனாலா நீங்க மறைக்கிறது சரிதான்...ஆனால் என்னால தாங்க முடியலியே....நான்...நான்.....குழம்பியே செத்துருவேன் ஜாஷ்...”

“நான் எப்பவுமே நானா தான் இருக்கேன் லயாமா....” அவள் பின் தலையை வருடினான்.

நிமிர்ந்து பார்த்தாள். ஆயிரம் கேள்விகள்.

“நிறைய நேரம் நாம தேடுறது நம்ம பக்கத்திலதான் இருக்கும் நமக்குதான் தெரியுறது இல்ல...நாம நினைச்ச விதத்தில் அது வரலைனா, அத புறகணிச்சிடுறோம். நான் தாடியும் துப்பாக்கியுமா வந்திருந்தா உனக்கு என்னை தெரிஞ்சிருக்கும்.....கல்யாணத்துக்கு வர்றவன் வரவேண்டிய கோலமா அது?...”

மூச்சடைத்து கொண்டு வந்தது உணர்ச்சி வெள்ளம் மங்கைக்குள்.

“முறையா பொண்ணு கேட்டு, கல்யாணம் செய்யலாம்னு வந்தேன்....”

“இப்படி வரபோறவங்க முதல்ல என்னை பிரியுறப்ப வருவேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்....நான் கேட்ட அந்த எஃஸ் ங்கிற மெசேஜ் அனுப்பி இருக்கலாம்......”

அழுகை அவசர துணை.

நிதானமாக வந்தது அவன் விளக்கம்.

“அப்ப என் வயசு இருபது...கல்யாணத்த பத்தி நினைக்கிற வயசு கூட கிடையாது... அப்ப எனக்கு உன்மேல் எந்த காதலும் கிடையாது...சொல்லபோனா  முதல்ல கொஞ்சம் கோபம்தான்... அப்போ என் சூழல் பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா?....நான் உயிரோட திரும்புவேன்னே நிச்சயம் கிடையாது.... எனக்கு 30வயசா இருந்து கல்யாணமாகி 2 குழந்தைங்க கூட இருந்திருக்கலாம்....எதையும் யோசிக்காம....என்னடா இந்த பொண்ணு இப்படி இருக்காளேன்னு இருந்தது...ஒரே பொண்ணா.....அம்மா வேற இல்லாம வளந்ததால உன் தேவை....என்னை அப்படி பார்க்க வச்சிடிச்சுனு நினச்சுகிட்டேன்...அதனால கோபம் கன்சர்னா மாறிட்டு..

அந்த சி.டி அதான் கேம்ப் டேவிட் ப்ராஜக்டுக்கு அப்புறமும் நீ சொன்ன மாதிரி அப்படி மெசேஜ் அனுப்ப எனக்கு விருப்பம் இல்ல...எப்படியும் உன் மனசுல அது தேவையில்லாத நம்பிக்கைய வளக்கும்....அதோட நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள தொடர்பு தெரிய கூடாத யாருக்கு தெரிந்தாலும்...அது நானே எனக்கு கொடுத்துகிற மரண தண்டணை...”

கொஞ்ச நாள்ல ஃப்ரெண்ட்ஸ் ப்ராஜக்ட்னு நீ என்னை மறக்க வேண்டிய விதமா மறந்து நினைக்க வேண்டிய விதமா நினைப்பன்னு நம்பி விலகி இருந்தேன்......அதாவது நீ எதிர் பார்த்த வகையில்  தொடர்பில இல்லாம இருந்தேன்....மத்தபடி நீ படிச்ச காலேஜ்ல தான் படிச்சேன்.....பட் வேற டிபார்ட்மென்ட்.... ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்ட்.....நான் உன்னை அல்மோஸ்ட் எல்லா நாளும் பார்த்திருக்கேன்......எனக்கு அப்பவும் உன் மேல் காதல்னு எதுவும் கிடையாது...

 அப்புறம் படிப்பு முடிஞ்சு பிஸினஸ் பார்க்க போய்ட்டேன்...அப்ப தான் அண்ணா என் மேரேஜ் பத்தி பேசினான்....அவனுக்கு ஏர்லி மேரேஜ்....அதனாலயோ என்னவோ என் 25 வயசிலேயே அவன் கல்யாணத்தை பத்தி பேசினான்....

என் பேரண்ட்ஃஸுக்கு ஒரு நம்பிக்கை உண்டு....அரேண்ஜ்டு மேரேஜ்னா தெரிஞ்ச ஃபமிலில இருந்து, அவங்க  பார்த்து வளர்ந்தவங்களயே, தங்கள் பிள்ளைங்களுக்கு பார்க்கிறது நல்லதுன்னு சொல்லுவாங்க...அந்த வகையில அம்லுவ அக்க்ஷத்துக்கு பண்ணலாம்னு அம்மாவுக்கு அபிப்ராயம்..அதே மாதிரி எனக்கு உன்னையும் , ஆராவுக்கு அகனையும் பண்ணனும்னு அவங்களுக்கு எண்ணம்னு அக்க்ஷத் சொன்னான்...நாம ஒருத்தொருக்கொருத்தர் டச்ல இருந்தது இல்லனாலும் உங்க அப்பாவையும் உன்னையும் அம்மாவுக்கு தெரிஞ்சு இருந்திருக்குது...உங்க வீட்டுக்கும் எங்க வீட்டுகும் காமன் ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப உண்டே....அந்த வகையில் இருக்கலாம்....எப்படியோ அம்மா, அப்பவுக்கு அப்படி ஒரு அபிப்ராயம் இருந்தது....நீ அதை கன்சிடர் பண்ணுனு அக்க்ஷத் சொன்ன பிறகுதான்....எனக்குள்ள ஒரு ஃஸ்பார்க்...என்னமோ இது கடவுளே தொடங்கி வச்ச உறவுன்னு....எனக்கானவள்னு...

துக்கு முன்ன உன்மேல கன்சர்ன் உண்டு கேர் உண்டு......பட் அப்ப இருந்து....கல்யாணத்துக்கு ப்ரிபேர் ஆனேன்..... ரெண்டு வருஷம்... நம்ம மேரேஜ் இயல்பான அரேஞ்ச்ட் மேரேஜா உலகத்துக்கு தெரியனுமே அதுக்காக....தப்பி தவறி கூட சி டி ஹோஸ்ட் செய்த  பீபுள்க்கு சந்தேகம் வந்துட கூடாது....அதுக்காக

உங்க அப்பாட்ட இருந்து நம்பிக்கை சம்பாதிக்க....ஃபமிலி பிஸினஸ் இருந்தாலும் என் பிஃஸினஃஸையும் டெவலப் செய்யணுமே....அதுக்காக...அதோட உன் மனசுல என்னனும் தெரியனுமே......உன் எஜுகேஷன் இன்ஸ்டிடுயூட்டுக்கு நீ வச்ச பேர்லதான் உன் மனசுல நான் இருக்கேன்னு புரிஞ்சுது....

உன் அப்பாட்ட பொண்ணு கேட்டேன்...உன் அப்பா மூலமா உனக்கு அறிமுகம் ஆகிறதுதான் சரின்னு பட்டது..ஆனா உன் அப்பா உனக்கு சம்மதம்னும் உடனே நிச்சயம்னதும் ரொம்ப சந்தோஷபட்டேன்.... ஆனா நிச்சயத்தப்பதான் நீ என்ட்ட இப்பவும் விரும்புறது என் தாடியையும் துப்பாக்கியையும்தான்னு தெரிஞ்சுது...”

“அது அப்படி இல்ல ஜாஷ்...” அவசரமாக மறுத்தாள் பெண்.

“பிறகு எப்படியாம்...7 வருஷமா லவ் பண்றவளுக்கு நேர்ல வந்து நின்னா அடையாளமே தெரியலை...”

“அது....அது....நீங்க சொல்லி இருக்கலாம்ல....”

“எப்ப சொல்லனும்...மீடியா முன்னாடியா....? விஷயம் சி.டி ஹோஸ்டுக்கு போனா...நிச்சயம் முடியும் முன்னாலயே என்ன போட்டாலும் போட்டு தள்ளி இருப்பாங்க...”

“அடுத்து விழா முடியுறதுக்கு முன்னாலயே மேடம் மயங்கி விழுந்திட்டீங்க...என் முகத்தை அவ்வளவு நேரம் கூட உனக்கு சகிக்க முடியல...”

“அப்படி இல்லபா...உங்களுக்கும்... அதாவது ஜாஷுக்கும்... வேற யார் கூடயாவது கல்யாணம் ஆகி இருக்குமோன்னு நினச்சேன்... ரொம்ப கஷ்டமாயிட்டு......”

“ஆக அப்ப உன்ட்ட பேச முடியல, ஆனா உன்னோட பலவீனம் புரிஞ்சுது...”

“பலவீனமா....?”

“ஆமா....நீ ரொம்ப இமோஷனல் டைப்....அந்த கிட்னாப்பிங்க் டேயிலும் நீ அப்படிதான் நடந்து கிட்ட...எங்கேஜ்மென்ட் டேயிலும் அப்படித்தான்....அப்படி பட்ட உனக்கு என் ப்ரபெஷன்ல உள்ள ரிஃஸ்க் தெரிஞ்சா உன்னால ஒரு நிமிஷம் கூட பயம் இல்லாம, இயல்பா நிம்மதியா இருக்க முடியாதுன்னு தெளிவா புரிஞ்சுது....அதனால ரக்க்ஷத்தாவே தொடர்றதுன்னு முடிவு செய்தேன்...ஏற்கனவே வீட்டில் அக்க்ஷத்துக்கு மட்டும்தான் நான் கமண்டோவா வொர்க் பண்ணது தெரியும்....அதுவும் என்ன செய்தேன்னு தெரியாது.... மத்தவங்களை பொறுத்தவரை நான் அந்த 3 இயர்ஸ் ஆர்மி காலேஜ்ல எதோ கோர்ஃஸ் பண்ணேன் அவ்ளவுதான்....”

“தொடர்ந்து....?”

“தொடர்ந்து லவ் பண்ணி... கல்யாணம் பண்ணி... அப்டி அப்டி..”

“ஆங்?”

“உன் காதல் என் தாடி மேலயும் , என் துப்பாக்கி மேலயும் மட்டுமா இருந்திருந்தா....அதாவது என் ஹீரோயிசம் மேல உள்ள அட்ராக்க்ஷனா இருந்தா கண்டிப்பா ரக்க்ஷத்தா என்னை முழுசா புறகணிச்சுறுவ....

அப்படி இல்லாம உண்மையிலேயே நீ விரும்புறது என் உள்ளான மனிதனைனா ரக்க்ஷத்த நீ விரும்ப ஆரம்பிச்சுடுவ...

ஆனால் வெறும் அட்ராக்ஷனா இருந்தா இப்படி ஏழு வருஷம் காத்து இருந்திருக்க மாட்ட, அதனால நீ என்னை ரக்க்ஷத்தா விரும்ப ஆரம்பிப்பன்னு நம்பினேன்....

இந்த முடிவு எனக்கும் சோதனையாத்தான் இருந்தது...உன்னை ஒவ்வொரு நொடியும் சந்தோஷமா வச்சுக்க அத்தனை திசுக்களும் துடிக்றப்ப...உன் தவிப்பை பார்த்துட்டு சும்மா இருக்க வேண்டிய நிலை....அன்னைக்கு ஃபாஸ்டிங்னு ஹாஃஸ்பிட்டல்ல அட்மிட் ஆனியே....நீ அழுதியே எனக்கு அவ்ளவு கஷ்டமா இருந்தது....ஆனா அந்த உன் தவிப்புதான் மேலும் மேலும் என்னை ஜாஷா காமிக்காம இருக்கிற முடிவு சரின்னு உறுதி படவும் வச்சுது...

நான் நம்புன மாதிரி...எதிர் பார்த்த மாதிரி நீ என்னை ரக்க்ஷத்தா விரும்ப ஆரம்பிச்ச..அன்னைக்கு ஆஃபீஸில் வந்து அழுதியே அப்பவே எனக்கு புரிஞ்சுட்டு.....மறுநாளே ரக்க்ஷத்தா உன்ட்ட ப்ராப்பரா ப்ரொபோஃஸ் பண்ணனும்னு நினைத்தேன்...அதுக்குள்ள ஜெஷுர் உன் ரூமுக்கு வந்து களேபரம் செய்துட்டான்....அதவிட மோசம்...அத செஞ்சது நான் அதாவது ஜாஷ்னு நீ நம்புன....

வந்தது ஜெஷுர்னு எனக்கு முதல்லயே தெரியும்..”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.