(Reading time: 33 - 66 minutes)

 

யமா? அதையெல்லாம் உணர அறிவு மனம் உணர்வு என மொத்தமாய் ஆன்மா தேவையே. அதுதான் இங்கே அதன் முழுநிலையில் இல்லையே!! அலையிடைபட்ட எறும்பாய் ஆலையிடபட்ட கரும்பாய் அவள் மனம்.

உறைந்திருந்தாள் அவள்.

“எப்படி இதல்லாம் உங்களுக்கு தெரியும்...?”

“டெரரிஸ்ட் அட்டாக்கில் கிரவுன்ட் லெவல்ல வேலை செய்றவனுக்கு முழு திட்டமும் தெரியாது...ஒவ்வொரு நிமிஷமும் அவங்கள அனுப்புனவங்கட்ட இருந்து அடுத்து என்ன செய்யனும்னு இன்ஃஸ்ட்ரக்ஷன் வந்துகிட்டே இருக்கும்....இங்க இந்த டிரைவர் கேபினுக்கு அப்படி எந்த மெசேஜ் ட்ரான்ஃஸாக்க்ஷனும் இல்ல.... சிக்னல் மானிடர் பண்ணிட்டேன்....”

“அதான் அடுத்த ஆப்ஷன் உங்கப்பாவை வித்ட்ரா பண்ன வைக்றதா இருக்கும்னு நினைத்தேன்...”

“வா,  பாங்களூரிலிருந்து சாப்பர் இப்ப இங்க ரீச் ஆகிடும்..” என்றவன்

கண்டெய்னரின் முன்பக்க சுவரில் தன் கண்ணாடி சீப்பினால் ஒரு ஆள் நுழையும் வண்ணம் சத்தமின்றி வழி உண்டாக்கி, அதன் வழியாக இவளையும் அழைத்தபடி நுழைந்தான்.

அப்ப மேலே வெறும் சிக்னலுக்காகவா துளை.

வெளியே ஆளே இருந்தாலும் மேல ஹோல் போட்டாதானே நாம செய்றது அவங்களுக்கு தெரியாது....மேல ஆள் இல்லனு நாம ட்ராப் ஆகும் முன்னமே கவனிச்சேன்...” பேசிக்கொண்டே வெளிப்பட்டான்.

இப்பொழுது இவர்கள் கண்டெய்னரையும் டிரைவர் கேபினையும் இணைக்கும் அந்த இடைவெளி பகுதியில்.

காற்றொலி காதடைத்தது.

குளிர் காற்று முகம் தாக்கினாலும், முழு உடல் தொடாவண்ணம் ரட்ச்சகன் என்னும் அரண்.

அவன் பிடி இடை நொறுக்கும் விதமாக இறுகி இருந்தது. காமமற்ற கவன பிடி.

 குனிந்து கேபினையும் கண்டெய்னரையும் இணைக்கும் அந்த  வடிவ சட்டத்தை அறுத்தான். அதே நேரம் சாப்பரின் காற்றாடி காற்றருக்கும் ஒலி காதுக்குள். இவர்கள் முன் வந்து கயிறு விழவும் கண்டெய்னர் கழன்று பின்னோக்கி சரியவும் நொடி வகையில்கூட வித்யாசபடவில்லை நேரம்.

லாரியிலிருந்து பிரிந்த கண்டெய்னர் பின் வந்து கொண்டிருந்த காருக்கு பாதை அடைத்து பரவி விழுந்தது. கண் முன் ஆடிய கயிறை வலகையால் பிடித்து, இடக்கையில் இவளோடு, பறக்க தொடங்கினான் ரக்க்ஷத்.

பல்லாயிரம் வகை உணர்ச்சி ஆயுதங்கள் நிரல்யாவின் மன கப்பலை பல்வேறு திசையிலிருந்து ஓராயிரம் வகையில் ஒரே நேரத்தில் ஓரடியாய் தாக்க, நிகழ் நீங்கி, நிர்மலத்திற்குள் அமிழ்ந்தாள்.

நயன கதவுகள் நடை சாத்தின.

மனதளவில் ஜாஷ்வாவுடன் கடலுக்குள் விழுந்து கொண்டிருந்தாள் அவள்.

ஹெலிகாப்டரிலும் ரக்க்ஷத் விமானிக்கு கட்டளைகள் இட்டவன், ஒரு நேரத்தில் விமானியாகி போனான்.

 இவன் விடுகதையா???  இல்லை, விடையே இவன்தானா???

ரை இறங்கியதும் அவன் யூகம் தான் சரி என்பது உறுதிபட்டது. அப்பாவை மிரட்ட இவளை கடத்தியிருக்கிறார்கள்.

இந்திய அரசு தன் ராணுவ ஹெலிகாப்டர் மூலம், அந்நிய நாட்டு முன்னாள் பிரதமரின் மகளை காப்பாற்றியது என்று செய்தி வெளியிடபட்டது.

அத்தனை களேபரத்திற்கு பின், அன்று பேங்களூரில் தங்கலாம் என்ற ரக்க்ஷத்திடம் விடைபெற்று, இரவோடு இரவாக அவனின்றி கோயம்புத்தூர் வந்துவிட்டாள்.

இனியும் தாங்காது இவனது அருகாமை. வேண்டும் தனிமை.

ரவுமுழுவதும் உணர்ச்சி போராட்டம்.  அதிக பணம் படைத்தவர்களுக்கு அதிக முன்னெச்சரிக்கை உணர்வு இருக்கும்தான். வளர்ந்த சூழல் அதை வளர்த்துவிட்டுவிடும்தான்.

அதுவும் இவன் சராசரிக்கும் மேலான புத்திசாலி. அதனால் இதுவரை ரக்க்ஷத்தின் எந்த நடவடிக்கைகளும் இயல்பே என்றுதான் இவளுக்கு தோன்றி இருக்கிறது.

ஆனால் இன்று நடந்ததை அப்படி சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. இன்றைய நிகழ்விற்கு பின் முன்பு நடந்த பலவுமே நெருடுகிறது. ஜாஷ் இவள் அறைக்கு வந்திருப்பதாக இவள் நினைத்த அன்று  ரக்க்ஷத் பிஃஸ்டலுடன் வந்த விதம், இவளை வெளியே கொண்டு சென்றது,

 தனியாளாய் அருணை சந்திக்க சென்றது...அவனை கைது செய்ய வைத்தது.....ஆரு துவி விஷயத்தை பெர்சனல் ரிகார்டரில் பதிந்தேன் என்றானே....அது என்ன? 

அதைவிடவும் அருணை பற்றி தகவல் திரட்டியது...பல நாடுகளின் கையில் கிடைக்காதவனை பற்றி இவனுக்கு எப்படி தகவல் கிடைத்தது.....?

ஆரணி விஷயம் தனக்கு எப்படி தெரியும் என்று ரக்க்ஷத் விளக்கிய போது நீ ஆருட்ட பேசிட்டு நேர இங்க வர்றன்னு தெரியும்னு சொன்னானே...எப்படி தெரியும்? இவளை கண்காணித்துக் கொண்டிருக்கிறானாக இருக்கும்....இவளை கண்காணிக்கும் நோக்கம் தவறாக இருக்காது...ஆனால்..கண்காணிக்கும் விதம்...இவள் அவனை அடையும் முன் அவனுக்கு அவள் எங்கிருந்து வருகிறாள் என்ற தகவல் தெரிய வேண்டுமென்றால்.... ஸொஃபிஸ்டிகேட்டட் எக்யூப்மென்ட்ஸ்  காரணமாக இருக்கலாம்.. இவனும் ஜெஷுரனை போல பாதுகாப்பு படையில் எங்கோ பணியாற்றி இருக்க வேண்டும்.

அவன் திட்டமிட்டு எதையும் மறைக்க முயன்ற மாதிரியும் தோணவில்லை. ஆனால் இவள் அவனை துப்பறியும் தொனியில் பார்த்திருக்கவே இல்லை.

இன்று கேட்டாலும் காரணம் சொல்லத்தான் செய்வான்.

ஆனால் இவளை உயிர்துளைப்பது வேறு.

யாம்மா  திரும்பி வருவேண்டா....கண்டிப்பா” என்று அவன் அருணை பார்க்க விடைபெற்றானே அந்த நேரத்திலிருந்து இவள் உயிர் வறுக்கும் உணர்வு அலைகரங்கள் சுழன்று சுற்றி இவள் மனதளத்தில் கொண்டு வந்து நிறுத்தும் இருண்ட ஆதவன், இரத்த நிலா,

உருவமற்ற ஓவியம், ஒலியற்ற இசை, நாசி உணரா மண்வாசனை, இருண்ட தீ, வலியற்ற வேதனை, இனம்புரியா இதயமறுகல், ஆகாயத்தின் ஆழ்ந்த அசைவுகள், தாய்மையின் தவிப்பு, தொடுகையற்ற ஸ்பரிசம், அடி முடியற்ற குழப்பம்,  

ரக்க்ஷத்திடம் எதையோ பேசவேண்டும் என்று நினைத்து எதையென்றே புரியாமல் தவித்த தவிப்பு...

இப்பொழுது இன்றைய நிகழ்விற்கு பின், சுருட்டபட்ட தொடுவானம், அகற்றபட்ட பூகோளம் போல் விலகி,  மேக மறைவாய் தெரிவிப்பது ஜாஷ்வாவின் வரிவடிவத்தை.

முன்பு இவள் ஜாஷை பிரியும் போது  கதறிய கதறலை உணர்ந்து அதற்கும் சேர்த்து ரக்க்ஷத் பதில் சொல்வது போன்று இவள் மனம் அந்த லயாம்மா  திரும்பி வருவேண்டா....கண்டிப்பா” வை உணர்ந்ததின் பின்விளைவுதான் அப்பொழுது ஏற்பட்ட குழப்பம்.

வந்துவிட்டானா? அவன் தானா இது?

அல்லது அவனை நினைத்துகொண்டு இவனை பார்க்கும் இழிநிலைக்குட்படுகிறாளா?

இதை இவனிடம் எப்படி கேட்பது? இவன் ஜாஷ்வாவாக இல்லையெனில்,  ரக்க்ஷத்திடம் ஜாஷ்வாவின்  ரகசியத்தை வெளியிட்டு, அன்று இவள் உயிருக்கு விலையாக ஜாஷ்வாவிடம் கொடுத்த வார்த்தையை மீற இவள் எந்நிலையிலும் தயாரில்லை.

ஒருவேளை  இது ஜாஷ்வாவாகவே இருந்தால், இதுவரை இவளிடம் தன்னை வெளிபடுத்தாதவன், இனியுமா காண்பித்துகொள்வான்?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.