(Reading time: 33 - 66 minutes)

 

 ப்புறம்...?”

“.உன்னை ஜெஷுர் டார்கெட் செய்ததும் ஆரு விஷயத்தில் அவன் பக்கம் தப்பு இருக்காதுன்னு புரிஞ்சுது.....நைட் முத நாள் நீங்க ரெண்டு பேரும் பேசுனீங்களே....அதில இருந்து நான் துவிய பத்தி விசாரிக்க ஆரம்பிச்சேன்.....அருண் கூட அவளுக்கு இருந்த லிங்க் தெரிஞ்சப்ப.... இதுல அவன் கை இருக்கும்னு தோணிச்சு....அதே நேரம்  ஜெஷுரும் அருணை பத்தி விசாரிக்க ஆரம்பிச்ச உடனே எனக்கு கன்ஃபார்மா தெரிஞ்சுட்டு இது அருண் வேலைதான்னு....

அடுத்து நடந்ததுதான் உனக்கே தெரியுமே.....”

“அப்படின்னா இப்பவும் நீங்க உங்க வேலை விஷயமா ரொம்ப....நான் எப்படி...தினம் தினம் பயந்துட்டே....எனக்கு எப்பவும் நீங்க வேணும்....” நிதர்சனம் உரைக்க தவிக்க ஆரம்பித்தாள் நிரல்யா.

அவன் எதற்காக விஷயத்தை மறைத்தான் என்பது நிரல்யாவிற்கு அனுபவ பூர்வமாக புரிந்தது.

“..என்னோட பழைய ப்ரொஜெக்ட் அப்பவே முடிஞ்சுட்டுது லயாமா....இப்ப அப்பப்ப எதாவது புது இன்ஃஸ்ட்ரூமென்ட்ஸ்....எக்யூப்மென்ட்ஸ் இன்வென்ட் பண்ணாங்கன்னா அதை ஸ்டடி பண்ணி ரிவியூ கொடுக்ற வேலை மட்டும்தான் நான் டிஃபென்ஸ் சைட் செய்துகிட்டு இருக்கேன்...அதான் என்ட்ட இவ்ளவு இன்ஸ்ரூமென்ட்ஸ் இருக்க ரீசன்...மத்தபடி நோ ஃபீல்ட் வொர்க்.....ஆனா சி.டி ப்ரொஜெக்ட்ல ஃபீல்ட் வொர்க் செய்தது நான் தான்னு அடிவாங்கினவங்க க்ரூப்ல யாருக்கு தெரிந்தாலும்....கண்டிப்பா தேடி வருவாங்க....

அதோட அந்த டைம் நான் உனக்கு ஹெல்ப் செய்தேன்னு சி.டி ஹோஃஸ்ட் செய்த நாடுகளுக்கு,மத்த எம்லாயீஃஸுக்கு தெரிஞ்சாலும் என்னை சும்மா விட மாட்டாங்க....சி.டி பலநாட்டு கூட்டு முயற்சி....அதை செய்தது ஃபாகா நேஷன்ஸ். அல்மோஸ்ட்  உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் ஃபாகா நேஷன்ஸ் மெம்பெர்ஃஸ்.

 ஆனா அந்தந்த நாடுகளின் பிரதமர்களும் பிரெசிடெண்டுகளும் மட்டும்தான் இந்த ஃபாகா நேஷன்ஸ் பத்தி தெரியும்.  ஒரு குறிப்பிட்ட நாட்டின் முதல் நிலை தலைவரின் முயற்சியால் தோற்றுவிக்கபட்டது. அவர் எந்த நாட்டுகாரர்னு கூட யாருக்கும் தெரியாது.

இந்த ஃபாகா நேஷன்ஃஸ்க்கு  தலைவர் இருக்கிறார். அவருக்கு மட்டும்தான் இது பத்தி, இதுல உள்ள எல்லா மெம்பெர்ஃஸ், டிபார்ட்மென்ட்ஃஸ், எம்ப்லாயீஃஸ் பத்தி எல்லாம் முழுசா தெரியும். மத்த எல்லாருக்குமே பார்ட்லி நாலெட்ஜ் தான்.

ஃபாகா நேஷன்ஸின் ஒரே நோக்கம் உலக பாதுகாப்பு. அன்டி டெரரிசம் அதில ஒரு ப்ரான்ச். இதுக்குனு தனி ஆர்மிலாம் கிடையாது. அந்தந்த நாட்டு ரணுவத்தை வைத்து வேலையை முடிச்சிடுவாங்க…..” என்றவன்

வள் கண்களை நோக்கி சொன்னான் “எனக்கு இப்ப உன் மேல வேறு விதமா நம்பிக்கை இருக்குது லயாமா...”

என்ன என்றபடி பார்த்தாள்.

“ஒரு நிமிஷம் இங்கயே நில்லுடா....” என்றவன் அவளை விட்டு விலகி அறையின் அடுத்த பகுதியில் சென்று நின்றான்.

“நான் உன்னைவிட்டு எவ்ளவு தூரத்தில இருக்கேன்னு சொல்லுடா....”

எதற்கு கேட்கிறான் என புரியாவிட்டாலும்...பார்வையால் அளந்து சொன்னாள் “அப்ராக்ஃஸ்மேட்லி 30 ஃபீட்...”

“குட்....இப்போ கண்ணை மூடு...”

மூடினாள்.

“இப்போ எங்க இருக்கேன்...?”

இதற்கு என்ன பதில் சொல்வாள்...?

அவளுக்குள், மனதிற்குள், மூடிய விழிகளுக்குள், மொத்தமாக அடி முடி சொல்லமுடியாதவாறு சிரித்தான் அவன். இதயத்தில் ....அவள் சுவாசத்தில் எதிலும் அவன் கலந்திருந்தான். மொத்தத்தில் அவள் உள்ளும் புறமும் அவன் சூழ்ந்திருந்தான்.

“ஐ லவ் யூ டா..” மெல்லமாக சொல்லிகொண்டாள் தன்னுள் வசிப்பவனிடம்.

விஷயம் புரிந்துவிட்டது அவளுக்கு.

நான் உயிரோடும் இருக்கும் காலமெல்லாம் உன் கூடதான்டா இருப்பேன்...அதையும் தாண்டி எது எப்படி ஆனாலும்....மரணமே நேர்ந்தாலும்.... இனி நீ தனியா இருக்க போறதில்ல....ஐ லிவ் இன் யூ, அண்ட்  யூ இன் மீ.

சரீர எல்லைகளை தாண்டும் காதல் அது தெய்வீகம்.

ரணி, அகன் மணவிழா.

ஆரணி விரும்பியது போல் வெஸ்டர்ன் முறையில் திருமணம்,  இந்திய முறையில் ரிசப்ஷென், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தீம் என களை கட்டியது.

திருமணத்திற்கு மார்டென் விக்டொரியன் காஸ்டியூம், ரிஷப்ஷன் கன்னிமாடம் கார்குழலி என கலக்கினாள் ஆரணி.

இரவுக்கு தாமரை வண்ண புடவையில் தங்க சரிகை கொடி ஆடிய புடவையை முடிவு செய்து, வாங்கி வைத்தது வரை அவளேதான்.

ஆனால் ரிஷப்ஷன் முடிந்து அகனின் வீட்டில் ஆரணியை விட்டு வருவதற்காக அலங்காரம் செய்ய தொடங்கியதிலிருந்தே குறைந்து கொண்டு வந்த அவள் வாயாடித்தனம், அக்க்ஷத், அரண்யா, கருண், நிரல்யா, ரக்க்ஷத், துவி, ஜேசன் அவர்களது இரட்டைகள் என்ற சிறு குழு புடை சூழ எட்மாண்டனிலிருந்த அகனின் வீட்டிற்குள் நுழைந்தது முதல் இல்லாமல் போயிற்று.

அவளையும் அவளது அகனையும் அந்த பெரிய வீட்டில் தனியாகவிட்டு ஜேசன் குடும்பம் ஒரு காரிலும், அக்க்ஷத்தின் குடும்பம் ரக்க்ஷத் நிரல்யா அனைவரும் ஒரே காரிலுமாக கிளம்ப, ஆரணி அத்தனை குளிரிலும் வியர்க்க தொடங்கியிருந்தாள்.

செய்வதறியாது சிறுது நேரம் வரவேற்பறையில் நின்றவள்  மெல்ல டைனிங்க் ரூமிலிருந்த ஃபிரிட்ஜை நோக்கி சென்றாள். பின்பு அங்கிருந்து எதையும் எடுக்காமல் சமையலறை பார்த்து சென்றாள்.

மீண்டும் வெறும் கையாக அவள் திரும்பி வந்த போது அங்கிருந்த அகனை காணவில்லை.

சுற்று முற்றும் பார்த்தால் வரவேற்பறையிலிருந்து மாடி செல்லும் அந்த பெரிய படிகட்டின் உச்சியில் நின்று பார்த்து கொண்டிருந்தான் அவள் கணவன். மெல்ல படியேறி அவனிடம் சென்றாள்.

அவன் அவனது அறைக்குள் நுழைய, அவனை பின் தொடர்ந்து உள்ளே நுழைந்தால்...அதிர்ந்தே போனாள் ஆரணி.

அவ்வளவு தாறுமாறாக இருந்தது அறை. அங்கும் இங்குமாக சிதறி கிடந்தன புத்தகங்கள். படுக்கையை பார்த்தால் சில ஸீடி, அவனது உடைகள் சில, இன்ன பிற.

“இப்படியா ரூமை வச்சிருப்பீங்க... “

சொல்லி கொண்டே புடவை தரையில் படாமல் அமர்ந்தவள், புத்தகத்தை அடுக்க ஆரம்பித்தாள். அவள் வல தோள் அருகில், அவளுக்கு சற்றே பின்னாக அவளை போல் அமர்ந்த அகன் “என்ன செய்ய, எனக்கு தெரிஞ்சது இவ்ளவுதான்...” என்றபடி அவளோடு புத்தகத்தை அடுக்க ஆரம்பித்தான்.

பின்னிருந்து அவன் முகம் அவ்வப்போது இயல்பாய் அவள் தோளுரச, அவன் அடுக்க, அங்கு மௌனம் ஆட்சி மொழி.

அவன் அடுக்கும் விதத்தை அப்பொழுதுதான் கவனித்தாள் ஆரணி. அவள் அடுக்க அடுக்க, அடுக்கபட்ட புத்தகங்களை எடுத்து தரையில் ஒன்றன் பின் ஒன்றாக பரப்பி கொண்டிருந்தான் அவன்.

திரும்பி பார்த்து முறைத்தாள்.

“நீதானடா கிட்சென்லாம் போய் வேலை தேடிட்டு வந்த, அதான் வேலை முடிஞ்சுட்டா வருத்த படுவியேன்னு...ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்...”

முறைத்தபடி எழுந்து நின்றாள். அவளோடு அவனும் எழுந்தான்.

புஃஸ் புஃஸ் என கோப மூச்சு விட்டவள்.... “வீட்டு வேலை தேடி வந்த ஆள் மாதிரியா இருக்கேன் நான்... இதுக்கா என்னை இவ்ளவு மேக்கப்லாம் செய்ய வச்சு கூட்டிடு வந்தீங்க உங்களை?...”

அவள் பல்லை கடிக்க ..அவளை இரு கையில் அள்ளியபடி அடுத்த அறைக்குள் நுழைந்தான் அவன் குறும்பு சிரிப்புடன்.

அறை கொள்ளா பூ அலங்காரம்.

“இதுக்குதான் வந்திருக்கோம்னு எனக்கு நல்லாவே தெரியும் பேபி, உனக்குதான் மறந்து போச்சோன்னு நினச்சேன்....”

அவள் முகமெங்கும் வெட்கம்.

விசிலடித்தான் அகன்.

“போடா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.