(Reading time: 28 - 55 minutes)

ங்க… மணி இப்போதான் 12 ஆகுது… நீங்க அதற்குள் அவளின் பிறந்த நாள் விழாவை கொண்டாட வைத்துவிட்டீர்களே ஏன்???”

“எல்லாம் ஆதர்ஷிற்காக தான் கவி…”

“ஆதர்ஷிற்காகவா???.. புரியலையே…”

“கவி, அவனால் இந்த நேரத்தில் இங்கே வர முடியாது… இவர்கள் சந்திக்கவும் முடியாது இந்த நேரத்தில்… அப்படிதானே?...”

“ஆமா…”

“நான் அவளிடம் இதுவரை போனில் பேசியதில்லை… முதன் முதலில் பேசுவது இந்த நாளாக இருக்கட்டுமே…  அதனால் நான் போன் செய்து அவளிடம் பேசிக்கொள்கிறேன்… நீங்க அனுமதி தருவீங்களா என்று அவன் கேட்ட போது என்னாலும் மறுக்க முடியவில்லை… எனவே தான் அவன் வாழ்த்தே அவளுக்கு முதலில் சரியாக 12 மணிக்கு கிடைக்கட்டும் என்றெண்ணி நான் முன்னரே நம் வீட்டு கடிகாரத்தில் நேரத்தை மாற்றி வைத்தேன்… மயூரி இருக்கும் வீட்டிலும் தான்…” என்று கண் சிமிட்டி சொல்லும் கணவனை இமைக்காமல் பார்த்திருந்தாள் அவள்…

மனைவியின் பார்வை சொல்லும் அர்த்தம் புரிந்தும் புரியாமல், “என்னடி இப்படி பார்க்குற?...”

“சும்மாதான்… என் கணவர்… நான் பார்க்குறேன்… உங்களுக்கென்ன…???...”

“எனக்கென்னவா?.. அதுசரி… நீ ஏன் கேட்கமாட்ட?... இப்படி பார்த்து வச்சா மனுஷன் நான் எப்படி சும்மா இருக்குறது????...” என்று முறைப்போடு அவன் சொல்ல…

கணவனின் கோபம் சிரிப்பை தந்தாலும், அதை மறைத்துக்கொண்டு, “யாரு சும்மா இருக்க சொன்னதாம்…?...” என்று அவனருகில் இருந்து எழுந்து செல்ல எத்தனித்தாள்…

“கவி…” என்ற குரல் அவளின் பின்னே தேய… அவள் நின்று நிதானமாக அவனைப் பார்த்தாள்… விழிகளுக்குள் விழிகள் சிக்கிக்கொள்ள, அவன் கைகள் அவளை இழுக்க, அவளும் இசைந்து கொடுத்தாள்…

“ஏண்டா… இவ்வளவு நல்லவனா இருக்குற?...”

“ஹேய்…. என்ன சொன்ன…. ????... திருப்பி சொல்லு….”

“என்னடா சொல்லணும்… ?.. சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ…  இப்படியே நீ செஞ்சுட்டிருந்தா நான் இன்னும் உன்னிடத்தில் என்னை இழந்துடுவேன்… ஹைய்யோ… ஏன் தினு… நீ இப்படி பண்ணுற?... போடா… உன் தங்கைகள் மேல நீ வச்சிருக்குற பாசம், என் மேல நீ வச்சிருக்குற காதல், நம்ம குழந்தைங்க மேல நீ வச்சிருக்குற அன்பு, எல்லாம் என்னை உன் கிட்ட ரொம்ப இழுக்குது தினு…” என்று கண்களில் மையலுடன், காதல் நிரம்ப சொன்னவளை தனக்குள் பூட்டி வைத்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணினான் அவன்…

“அப்படி பார்க்காத தினு… ப்ளீஸ்… நீ அப்படி பார்க்கும்போதெல்லாம்… எனக்கு உன்னை கட்டிபிடிச்சுக்கணும் போல இருக்கு… ப்ளீஸ்டா… அப்படி பார்க்காதே… உன் கவி பாவம்ல…” என்று உதடு பிதுக்கி சொன்னவளின் இதழ்களை வருடியவனின் கைகளை பிடித்துக்கொண்டவள்,

“நீ சேட்டை கார பையண்டா… சின்ன சின்ன குறும்பு பண்ணி ஏண்டா என்னை இன்னும் படுத்துற?... உன் கவியை இப்படியா தவிக்க விடுவ???...”

“தவிக்கவா???”

“ஆமாடா.. மடையா… இப்படி நீ சேட்டை பண்ணும் போதெல்லாம், ஓடி வந்து உன் தோள் சாஞ்சிக்கணும்னு தோணும் எனக்கு… எத்தனை நாள் என்னை  நானே கட்டுப்படுத்த முடியாம கஷ்டப்பட்டிருக்கிறேன் தெரியுமா?... படவா…”

“க………………….வி………………………..” என்று இழுத்தவனிடம்…

“ஐ லவ் யூ தினு கண்ணா… ஹ்ம்ம்… தினு…. என் செல்லம்…” என்று அவனை அணைத்துக்கொண்டாள்… அவனின் கைகளும் அவளை சுற்றி வளைத்துக்கொள்ள தினேஷின் உள்ளமோ மனைவியின் அன்பில், காதலில், வார்த்தையில், கரைந்து உருகி போனது…

உள்ளத்தின் உவகையோ, அவளின் வார்த்தைகளோ, எதுவென்று பிரித்து சொல்ல முடியாத வகையில் அவனை உந்த, அவளை இறுக கட்டிக்கொண்டு அவளின் முகமெங்கும் முத்த மழை பொழிந்தான் தினேஷ்….

“ஹேய்… மயூ…. என்னடா… இந்த நேரத்தில் போன் பண்ணியிருக்க…?..”

“சரி விடுங்க இனி பண்ணலை….”

“ஏய்… கோச்சிக்காதடி… நீ இந்த மிட் நைட் ல எல்லாம் பேசமாட்டியே… அதான் கேட்டேன்…”

“ஹ்ம்ம்… சும்மா பேசணும்னு தோணுச்சு… அதான்…”

“சொல்லுடா…”

“முகில்….”

“என்னடி…”

“முகில்……………………..”

“என்னடி......... என் மயூ…..”

“ஐ லவ் யூ முகில்….”

“………………………………………………..”

“நீங்க எதுவும் சொல்லமாட்டீங்களா?...”

“இதுக்கு பதில் நீ நாளைக்கு காலையில் ஆஃபீஸ் வருவேல்ல… அப்போ சொல்லுறேன்…”

“ஹைய்ய்ய்யோ வேண்டாம்ப்பா….”

“என்ன வேண்டாம்… மயூ…”

“உங்க பதில்தான்….”

“ஏன்… உனக்கு அந்த 3 வார்த்தை வேண்டாமா?...”

“நிஜமாவே நீங்க அதை தான் சொன்னீங்களா?... ஹ்ம்ம்… அப்போ ஒகே தான்… எனக்கு….”

“ஹாஹாஹா… அப்போ நீ வேற எதோ நினைச்சிருக்குற…?... ஹ்ம்ம்… மயூ… அப்போ நாளைக்கு இன்னொரு பதிலும் சேர்த்து கிடைக்கும் உனக்கு…”

“கிடைக்கும் கிடைக்கும் உங்களுக்கு எங்கிட்ட இருந்து அடியும்….”

“சரியான அழுத்தக்காரிடி நீ… கொஞ்சம் கூட இறங்கிவர மாட்டியே…”

“இடத்தை கொடுத்தா நீங்க தான் மடத்தை பிடிக்கிற ஆளாச்சே… அதான்…”

“ஹ்ம்ம்… தெளிவா தாண்டி இருக்குற நீ….”

“பின்னே உங்களை காதலிச்ச பின்னாடியும் தெளிவா இல்லைன்னா எப்படி?...”

“ஆமா ஆமா… என் அறிவு காதலியே…”

“சரிங்க என் மக்கு காதலனே…”

என்று அவளும் சொல்ல இருவரும் சிரித்துக்கொண்டே புன்னகை மாறாமல் இன்னும் சில மணித்துளிகள் பேசிவிட்டு வைத்தனர் நிறைவுடன்…

“சரிப்பா… கண்டிப்பா கோவிலுக்கு போயிட்டு வரேன்…. நீங்க அம்மா எல்லாம் எப்போ இங்கே வரப்போறீங்க?...”

“சீக்கிரமே வருவோம்டா… ஆமா சித்து நந்து குட்டி எல்லாம் நல்லாயிருக்காங்களாடா…”

“இதோ அவங்களே வந்துட்டாங்க… நீங்களே பேசுங்க…” என்று அவர்களிடம் போனை கொடுத்த சாகரி அவர்கள் பேசிமுடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருந்து பின் அவர்களுடன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டாள்…

இரவு அவன் குரலில் மயங்கி போனவள் இன்று வெள்ளிக்கிழமையும் இல்லாது ஞாயிற்றுக்கிழமையும் இல்லாது போனதை மறந்தாள்… அவனிடம் கோவிலுக்கு வர சொல்லாமல் விட்டு விட்ட தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டாள்…

அவன் நம்பர் தெரியும் தான்… எனினும் அவன் வேலையாக இருந்தால், என்ன செய்வது, ஏற்கனவே அவனின் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனக்காக வருபவனை இன்றும் அலைய வைக்க விட அவள் மனம் சம்மதிக்கவில்லை…

அவரை சந்திக்கும் நாள் இன்று தனக்கு இல்லை என்று சற்றே மனம் தளர, கோவிலுக்கு சென்றாள் நந்து சித்துவுடன்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.