(Reading time: 28 - 55 minutes)

 

வளின் செய்கை அவனுக்கு வலிக்க, பிடிக்கலையாடா… சரிடா… இனி இப்படி பண்ணமாட்டேன்… உன் பக்கத்தில் இருக்கும்போது நான் என்னை மறந்துடுறேன்… அதான்… சரி… விடுடா… நீ சீக்கிரம் கிளம்பு குட்டீஸ் தேடுவாங்க என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது அவள் கண்கள் லேசாக கலங்குவதை கண்டவன் பதறினான்….

சகி… ப்ளீஸ்டா… எதுக்குடா அழற?... நான் தான் இனி இப்படி பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேனே… என்றவனிடம்,

எனக்கு உங்களை பிடிச்சிருக்கு ரொம்ப… என் தலையில் வச்சு விட வேண்டி தானே… அத விட்டுட்டு இப்படி என் கையில தரீங்க…. நீங்களே வச்சு விடுங்கன்னு தான் நான் திரும்பினேன்… நீங்க அதை தப்பா புரிஞ்சிகிட்டீங்க…. என்றவளை லட்சம் மடங்கு கண்ணில் மின்னும் காதலுடன் பார்த்திருந்தான் ஆதர்ஷ்…

ராம்…. ப்ளீஸ்…  நேரமாகுது… என்று அவள் கெஞ்ச… அவளின் கூந்தலில் சூடினான் மல்லிகையை…

இரண்டு தோளிலும் அவன் வைத்திருந்த மல்லிகை கொஞ்சி கொண்டிருக்க, அவளோ அவன் பார்வையால் திணறிக்கொண்டிருந்தாள்….

தர்ஷ்…………… போதும்….  என்று இரு கை கொண்டு அவள் முகம் மூடிக்கொள்ள, அவளை அள்ளி அணைத்துக்கொள்ள துடித்த மனத்தை கட்டுப்படுத்த அவன் பெரும்பாடு பட வேண்டியிருந்தது…

சகி நீ கிளம்புடா… என்றவன் ஒரப்பார்வையால் அவளை மென்மையாக காற்றுக்கும் நோகாதபடி வருடிக்கொண்டிருந்தான்… அவள் காரிலிருந்து இறங்கி சற்று தூரம் நடந்து சென்று தள்ளி நின்று செடியின் அருகே நின்றவாறு கால்களால் தரையில் கோலமிட்டுக்கொண்டிருந்தாள் வெட்கம் தோய்ந்த முகத்துடன்…

அவன் அவளை மேலும் ரசிக்க முற்பட, அவளோ அவன் சூடிய மலர்களை கொண்டு, கூந்தலால் நாணத்துடன் சேர்த்து தன் முகத்தை மறைத்தாள்…

அதை அவனோ திகட்ட திகட்ட பார்த்து அந்த செம்மை நிறப் பூங்கொடியாளை மனதிற்குள் பதிய வைத்துக்கொண்டான் அழகுற….

கண்ணில் கடைக்கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே

கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே

நாணம் கொண்டு மேகம் கொண்டும் மறையும் நிலவென

கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன….”

“ஏண்டி நீ சாமி கும்பிட தானே போன…. என்னவோ கோவிலை விலை பேச போன மாதிரி எவ்வளவு நேரம்டி… சீக்கிரம் வா… அண்ணி கேகரி செஞ்சு வெயிட் பண்ணுறாங்க… வா போகலாம்” என்றபடி உள்ளே வந்த சாகரியை இழுத்துச்சென்றாள் மயூரி….

தன்னைச்சுற்றி அத்தனை உறவுகள் குதூகலித்தபோதும் அவளது மனம் மட்டும் அந்த சுவாமியின் வார்த்தைகளிலே உழன்று கொண்டிருந்தது… யாரிடம் அவள் அதைப் பற்றிக்கூற முடியும்?... யாரிடம் சென்று வழி கேட்க முடியும்?... அவளது பூஜையறை ஸ்ரீராமனைத் தவிர…

நாட்கள் மட்டும் வேகமாய் விரைந்தோடியது… புத்தாண்டும், உழவர் திருநாளும் எப்போது வந்ததென்று கூட அறிய முடியாத அளவு விரைவில் சென்றுவிட, அனைவர் வாழ்க்கைப் பாதையும் சீராக சென்று கொண்டிருந்தது…

பிப்ரவரி ஆரம்பத்தில் ஒரு நாள் தினேஷிற்கு ஒரு ஆர்டர் வர, அது விஷயமாக அவன்  வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது… அது சம்பந்தமாக அவன் காவ்யாவிடம் விஷயத்தை தெரிவித்த போது அவள் உங்களை விட்டு என்னால் தனியே இருக்க முடியாது…. நானும் வந்து விடுகிறேன் என்றாள்….

அவனும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்….

பிப்ரவரி 14…. உலக காதலர்கள் தினம்… அன்று தான் தினேஷ் காவ்யாவை மணமுடித்திருந்தான் பல வருடங்களுக்கு முன்னால்…

மயூரியும் சாகரியும் தத்தமது பெற்றோரை வரவழைத்திருந்தனர்… தினேஷும் காவ்யாவும் புது ஆடை உடுத்தி பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு சென்றனர்…

நந்து குட்டி நம்ம அப்பா அம்மாவுக்கு இன்னைக்கு கல்யாண நாளாம்… நாம என்ன கிஃப்ட் கொடுக்க?...

உன் விருப்பம் அண்ணா… நீ சொல்லு…

இல்லடா நந்தும்மா…  உன் சாய்ஸ் சூப்பரா இருக்கும்டா எப்பவும்… அதான் சொல்லுறேன்…

அட அண்ணா நீயே சொல்லு…. சரி வா… நாம அப்புறமா நாம அதைப் பற்றி பேசலாம்… இப்போ சாமி கும்பிட போகலாம்…

சரிடா வா… என்றபடி தங்கையை அழைத்துக்கொண்டு சென்றான் சித்து…

அப்புறம் செல்வி… என்ன சொல்லுறார் ராசு அண்ணன்?

அவர் என்ன சொல்லப் போறார் தாமரை…

என்ன செல்வி இப்படி பிடிகொடுக்காம பேசுற?... இது நம்ம பிள்ளைகளோட வாழ்க்கை….

அது எனக்கும் தெரியாம இல்லை மதினி… எது நடக்கணுமோ அது கண்டிப்பா நடந்தே தீரும் தாமரை…

அதுவும் சரிதான்… சரி வா… முதலில் போய் சாமியை கும்பிடுவோம்… மாப்பிள்ளைகள் இங்கே வருவாங்கன்னு தினேஷ் சொன்னான்…. சீக்கிரம் கும்பிட்டு வந்து மாப்பிள்ளைகளை பார்க்கலாம்…

சரி மதினி…. என்றபடி செல்வி தாமரையோடு சென்றார்…

ராசு… மாப்பிள்ளை பார்க்க வந்துருக்கோம்டா… ஏண்டா இப்படி உம்முனு இருக்குற?...

அதெல்லாம் எதுவுமில்லை ஜனா… என் முகமே அப்படித்தான்…

யாரு முகம் எப்படி தாத்தா?... என்று கேட்ட சித்துவிடம் என்ன சொல்வது என்று ராசு யோசித்துக்கொண்டிருக்கும்போது,

ராசு தாத்தா முகம் உம்முனு இருக்குனு சொல்றேன்…. அவன் இல்லைன்னு சொல்லுறான்… நீங்களே சொல்லுங்க கண்ணுகளா… இவன் மூஞ்சி எப்படி இருக்கு?...

அவர் கேட்டதற்கு தீவிரமாய் முகத்தை வைத்துக்கொண்டு யோசித்து விட்டு ஆமா ராசு தாத்தா கொஞ்சம் டல்லா தான் இருக்குறாங்க…. என்றனர் இருவரும் ஒருசேர…

என்ன ஆச்சு தாத்தா… உடம்புக்கு சரியில்லையா?... ஊசி போட்டுக்கலாம் டாக்டர் கிட்ட… வாங்க போகலாம்… என்றபடி ராசுவின் கையைப் பிடித்து சித்து இழுக்க…

ஆமா தாத்தா… அண்ணன் சொல்லுறது சரிதான்… ஒரு ஊசி போட்டா சரி ஆயிடும்… வாங்க… என்று நந்துவும் அவரின் இன்னொரு கையைப் பிடித்து இழுக்க,

எனக்கெதுவும் இல்லடா… நான் நல்லா தான் இருக்கேன்… என்றார் ராசு…

ஹ்ம்ம்…. நீங்க பொய் சொல்லலை தானே… தாத்தா?... என்று நந்து கேள்வியாய் பார்க்க,

அந்த பிஞ்சுகளிடம் முழு பொய் சொல்ல விரும்பாத அவர், இல்லடா தாத்தா ரயிலில் வந்தேன்ல அதான் கொஞ்சம் அலுப்பா இருக்கு… உடம்பு தான் வலிக்குது தூங்கி எழுந்தா சரி ஆயிடும்டா என்றார், மனம் தான் வலிக்கிறது என்பதை மறைத்து….

ஓகே தாத்தா… வீட்டுக்கு சீக்கிரம் போயிடலாம்… சரியா… வாங்க போகலாம் என்றபடி அவரின் கைப்பிடித்து இருவரும் செல்ல, ஜனா தினேஷிடம் பேச சென்றார்…

மயூ................

ஹேய்… அப்படி கூப்பிடாதேன்னு சொல்லிருக்கேன்லடி உனக்கு….

அடடா…. ஆமால்ல…. நான் தான் மறந்துட்டேன்…. மயூ…………….. என்றாள் சாகரி மீண்டும் அவளிடம் வம்பிழுத்தபடி….

உன்னை…. என்ன செய்கிறேன் பார் என்றபடி மயில் அவளை அடிக்க கை ஓங்க…

ஹேய்…. அங்கே பார் உன் ஹீரோ….. என்றபடி அவளிடமிருந்து தப்பித்து விலகினாள் சாகரி…

நீ தப்பிக்க பொய் சொல்கிறாயா என்றவள், அவளை முறைக்க, ஹேய்… நிஜமா தாண்டி அங்கே பாரு…. உன் ஹீரோ தான் என்றாள் கை காட்டி….

அவர் இங்கேயா…. என்றபடி திரும்பியவள் மலைத்து தான் போனாள்… பட்டுவேஷ்டி சட்டையில் அழகாக வந்து கொண்டிருந்தான் முகிலன்… கோவிலுக்கு வந்திருந்த பெண்கள் பலரை கவர்ந்தபடி…

அனைவரின் பார்வையும் அவனை சுற்றி இருந்தாலும், அவன் பார்வை என்னவோ அவனின் மயூவிடம் தான் இருந்தது… தங்க நிற புடவை அவளின் தங்க நிற மேனிக்கு இன்னும் அழகு சேர்த்தது… அந்த தங்க நிற மயிலிடம் சொக்கி தான் போனான் முகிலன்… அவன் வர வர, அவனையே இமைக்காமல் பார்த்திருந்தவள், அவன் அருகே வரும் தருணம் குடும்பத்தோடு வந்திருக்கும் நினைவு வந்து சட்டென்று அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.