(Reading time: 29 - 58 minutes)

றுக்கி அணைத்திருந்த புகைப்படத்தை பார்த்தவன், கனவுகளில் மட்டும் தான் நான் வாழ்ந்து வர வேண்டுமா உன்னுடன், நிஜத்தில் உன்னுடன் வாழ ஏங்கி நான் காணும் கனவுகளில் ஏன் மண்ணை அள்ளித் தூவுகின்றாய் சீதை?... இது எனக்கு சுமையான சோகம் தான்... எனினும் நீ தந்ததால் அதை வரமாகவே நான் கருதுகிறேன்... நீ என்னை மறந்ததும் நிஜம் தான்… என்னை விட்டு பிரிந்ததும் உண்மை தான்… ஆனால், என் நெஞ்சில் இருந்துகொண்டு உன் காதலால் என்னை இன்றும் வழிநடத்தி எனக்கு துணையாக வருகிறாயே… அது போதும் என் காயங்கள் ஆற்ற… ஆனாலும் இந்த காயங்கள் முழுமையாக என்று தான் ஆறும் சீதை?... இல்லை ஆறாமலே போய்விடுமா என் கண்மணியே.... எனில் இது இறைவன் எனக்கு கற்றுக்கொடுக்கும் வாழ்க்கை பாடமா? யாரையும் காதலிக்காதே என்று... சீதை... என்னால் முடியவில்லையடி... நீ என்னை மறந்தாயா?... என்னை தீயில் போட்டு எரித்தாலும் என் நெஞ்சம் இதை ஏற்குமா?... தாங்குமா என் சகி?....

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை

கண்களிலே தூவி விட்டாய் மண்துகளை

இந்த சோகம் இங்கு ஒரு சுகமானது

அது வரமாக நீ தந்தது

நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்

என் துணையாக வருகின்றது

ஆறாத காயங்கள் என் வாழ்க்கைப் பாடமா???...

இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?...”

நான் மறந்தது என் விதி ராம்… நான் வேறென்ன சொல்ல???... உங்களின் காயத்திற்கு மருந்தாகும் வரம் எனக்கு கிடைக்கவில்லையே…. காயம் கொடுத்ததே நான் தானே… பாவி நான்… பாவியாகி போனேனே… என் உள்ளம் கொதிப்பது எனக்கு தான் தெரியும் ராம்… யாருக்கு தெரியும் அது?... யார் தான் அறிவார் நம் காதல் சேருமா என்பதை?... என்னைப் படைத்த கடவுள் கூட அறிவாரோ என் வாழ்க்கையை???... உங்களின் காதல் நதியில் என் காதல் சிறகு சருகாகி மிதந்து தனியே அலைந்து வாடுகிறதே… என் நெஞ்சம் உடைந்து போவதை தடுக்க முடியாது நான் படும் அவஸ்தையை எப்படி நான் உரைப்பேன்?... தங்களின் கால்தடத்தை பின்பற்றி  என் பயணம் நான் தொடங்கும் முன்பு வெண்பனித்திரை ஒன்று தோன்றி எனது பாதையை மறக்கின்றதே…. ஏன் எதற்கு இந்த காயங்கள் எனக்கு?... நான் செய்த தவறுதான் என்ன?... என்னைப் பார்க்கும் நொடி கூட அந்த கடவுளுக்கு நான் பாவமாக தெரியவில்லையே…. விதியின் விளையாட்டில் சிக்கி சின்னாபின்னமாகி போக நம் காதல் என்ன குழந்தைகள் கையில் வைத்து விளையாடும் பொம்மையா???... ராம்… என் தர்ஷை நான் தொலைச்சிட்டேனே… அய்யோ…. என்றவள் சிறுபிள்ளையாய் கதற…

உள்ளிருக்கும் இதயத்திற்கு எனைப் புரியும்

யாருக்கு தான் நம் காதல் விடை தெரியும்

காதல் சிறகானதுஇன்று சருகானது

என் உள் நெஞ்சம் உடைகின்றது

உன் பாதை இதுஎன் பயணம் அது

பனித்திரை ஒன்று மறைக்கின்றது

ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா?...

விதி கண்ணாமூச்சி விளையாட நாம் காதல் பொம்மையா???...”

உன் கையில் தான் நான் இருக்கிறேண்டா… நான் தொலைந்து போகவில்லைடா… எனக்கு நீ குழந்தை தான் சகி.. என் கையில் நான் வைத்து விளையாட விரும்பும் பொம்மை நீ தானடி பெண்ணே… நீயே என் உயிரடி… ஆனால் என் உயிர் இன்று வலிக்கின்றதே… கடலில் விழுந்தவர் கூட கரை திரும்புதல் உண்டு… உன் காதல் கடலில் விழுந்த எனக்கு கரையேறும் எண்ணமோ வழியோ தோன்றவில்லையே…. உன்னுடனான எனது காதல் சிறுவர்கள் வைத்து விளையாடும் நடை வண்டி இல்லை சீதை, விழுந்து அடிபட்டாலும் எழுந்து நிற்பதற்கு… இப்படி என்னை புலம்ப வைத்து கண்களில் கருப்பு துணியைக் கட்டி அடர்ந்த காட்டிற்குள் விட்டு விட்டு சென்றுவிட்டாயே… நான் எப்படி உன்னிடம் வந்து சேருவேன்???... யாரிடமும் உன்னைப் பற்றி கூற முடியாமல், உன்னிடமும் நான் தான் உன் காதலன் என்றும் என்னால் கூற முடியவில்லையே…. அன்று போல் இன்றும் என் நெஞ்சம் ஊமையாகி வாய்மூடிக்கொண்டதோ???... தெருவின் ஓரம் நிறுத்தி வைத்திருக்கும் பழுதான தேர் போல் இனி நானும் என் காதலும் நிற்கதியாய்….

கடலினிலே விழுந்தாலும் கரை இருக்கும்

காதலிலே விழுந்த பின் கரை இல்லையே

இந்த காதல் என்ன ஒரு நடைவண்டியா?...

நான் விழுந்தாலும் மீண்டும் எழ….

இரு கண்ணைக் கட்டி ஒரு காட்டுக்குள்ளே

எனை விட்டாயே எங்கே செல்ல…..

ஆண் நெஞ்சம் எப்போதும் ஓர் ஊமை தானடி….

அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி…”

ஒவியத்தை வரைந்தவள் அதன் மேலே தலைவைத்து படுத்துக்கொண்டாள்… ராம் ராம்… என்ற அவளின் உளறல் மட்டும் ஓயவே இல்லை சிறிதும்… சீதை… சீதை என்றவனும் இங்கே அவளின் ஓவியத்தை நெஞ்சை விட்டு அகற்றவில்லை கொஞ்சமும்…

இருவரின் உணர்வுகளையும் விழியிலே,உயிரிலே பாடல் மூலமாக சொல்ல வேண்டுமென்று விரும்பினேன்… அதனால் தான் அந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறேன்… தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம், என்னடா பாடல் வரிகளும் அதன் விளக்கமும் இருக்கிறதே என்று..…

சில காரணங்களினால் என்னால் நீளமான அத்தியாயத்தை தர முடியவில்லை இந்த வாரம்… அவசரம் அவசரமாக எழுதினேன்… பிழைகள் இருந்தால் அதற்கு மன்னிக்கவும்…

சாகரியை கடத்தியது யார்?... ஏன்?... அவ்னீஷிற்கும் சாகரியை கடத்தியதில் பங்கு உண்டா???... இரண்டு முறை அவள் கடத்தப்பட்டப்போது அவளுக்கு நேர்ந்தது என்ன?..?... இனி அவள் ஆதர்ஷை தேடி செல்வாளா?... இல்லை மீண்டும் விலக்கி வைப்பாளா?... அவளுக்கு எல்லாம் நினைவு வந்ததாக காட்டிக் கொள்வாளா?.. மாட்டாளா?... ஹரீஷ் ஆதர்ஷிடம் அவள் பட்ட சித்ரவதை சொல்வானா?... மயூரி சாகரியை தேடி வருவாளா?... சாகரியின் டைரியை மயூரி என்ன செய்யப்போகிறாள்???..... தினேஷ்-காவ்யா நந்து சித்துவுடன் எப்போது இந்தியா வருவார்கள்?... மயூரி-முகிலனின் திருமணத்தில் என்ன பிரச்சினை?... ராசு ஏன் சம்மதிக்கவில்லை?... ராசுவின் மகன் யார்?... முகிலனுக்கும் அவரின் மகனுக்கும் என்ன தொடர்பு?... கோதை-சுந்தரம் விருப்பங்கள் நிறைவேறுமா?... என்ற இந்த அத்தனை கேள்விகளையும் சுமந்து கொண்டு நிகழ்கால காதல் நதியில் சீதை-ராமின் பயணம் தொடங்கப் போகிறது… ஹ்ம்ம்… மீண்டும் அடுத்த வார சீதை-ராம் காதல் நதியில் சந்திக்கலாம்….

 

தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்... அடுத்த வாரத்தோடு சீதை-ராமின் பின்னோக்கிய காதல் நதியின் பயணம் முடிவடைந்துவிடும்... ஹ்ம்ம்... மீண்டும் அடுத்த வார சீதை-ராம் காதல் நதியில் சந்திக்கலாம்...

தொடரும்

Go to episode # 17

Go to episode # 19

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.