(Reading time: 22 - 44 minutes)

 

'குட் மார்னிங்' அவனுடைய குரலில் சுழன்று திரும்பினாள் அபர்ணா. ஸ்டாப் ரூமில் இருந்தாள் அவள்.

மலர்ந்து விரிந்த முகம், ஏதோ எண்ண ஓட்டத்தில் சட்டென வாடியது. 'நான் இந்துவோட கலீக் பேசறேன்' மனதிற்குள் நேற்றைய மாலை நிகழ்வுகளின் ஓட்டம்.

'குட் மார்னிங்' சொல்லிவிட்டு அவன் கையை பார்த்தபடியே கேட்டாள் கை எப்படி இருக்கு? அவள் முகத்திலும் குரலிலும் எப்போதும் இருக்கும் கலகலப்பு காணாமல் போயிருந்தது.

பரவாயில்லைடா. என்றான் அவன்.

மெல்ல தலையசைத்து விட்டு விலகி நடந்தாள் அபர்ணா. தைரியமாய் அவன் கண்களை சந்திக்கவே முடியவில்லை அவளால். அவன் முகத்தை பார்த்த மாத்திரத்தில் உண்மைகள் உடைந்து விடுமோ என்கிற அச்சம்.

தலை கனத்துக்கொண்டிருந்தது அவளுக்கு. இரவு முழுவதும் ஒரு துளி உறக்கம் இல்லை. தூக்கம் உடலை அழுத்த, நடக்கும் போதே கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலே தோன்றியது. அவள் நடை ஒரு நொடி தடுமாற, பதறிக்கொண்டு அருகே ஓடி வந்தான் பரத்.

என்னாச்சுமா? உடம்பு சரியில்லையா?

அதெல்லாம் இல்லை. ராத்திரி தூங்கலை அவ்வளவுதான்.

அவள் ஏன் உறங்கவில்லை என்று உடனே புரிந்தது அவனுக்கு, 'என்னடா? நான் நேத்து அவ்வளவு சொன்னேன்ல. தேவை இல்லாம மனசை குழப்பிக்கிட்டு..... பேசாம லீவ் போட்டுட்டு போய் ரெஸ்ட் எடு. போ.

இல்லைப்பா. லீவ் நிறைய போட்டாச்சு. கிளாஸ் இருக்கு வரேன்' நிமிராமல் சொல்லி நகர்ந்தவளை கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்தான் 'என்ன செய்வதாம் இவளை.?

அவன் தனது வகுப்பறைக்குள் நுழைய, வாழ்கையில் முதல் முறையாய் பாடத்தில் கவனம் செல்லவில்லை அவனுக்கு. மனம் அவளையே சுற்றியது. மாணவர்களுக்கு ஏதோ ஒரு வேலையை கொடுத்து விட்டு, இருக்கையில் சென்று அமர்ந்தான். 

தடுமாறிய படியே நடந்தாளே மயங்கி விடுவாளோ? மனம் பதபதைத்துகொண்டே இருக்க இருக்கையிலிருந்து எழுந்து இங்குமங்கும் நடந்துக்கொண்டே இருந்தான்.

அடுத்த ஒரு மணி கழித்து அவன் தனது வகுப்பை முடித்துக்கொண்டு அந்த வகுப்பறையை விட்டு வெளியேற அதே வகுப்பறைக்குள் நுழைய எதிரே வந்தாள் அவள்.

மனதிற்குள் கொஞ்சம் நிம்மதி படர என்னடா? ரொம்ப டயர்டா இருக்கா? நீ மயக்கம் போட்டிடுவியோன்னு எனக்கு பயம்மா இருக்குடா என்றான்.

அதெல்லாம் ஒன்னுமில்லப்பா. ஐ யாம் ஆல் ரைட். வகுப்பறைக்குள் போய்விட்டிருந்தாள்

யோசித்தபடியே இரண்டடி நடந்தவன் நின்று திரும்பினான். வகுப்பறைக்குள் நுழைந்து 'எக்ஸ்கியூஸ் மீ. மேடம். if you don't mind  நான் இங்கே உட்கார்ந்துக்கலாமா?' என்றான்

ம்? திகைத்து நிமிர்த்தினாள் கண்களை. எதுக்கு?

எனக்கு இந்த ஹவர் கிளாஸ் இல்லை. ஸ்டாப் ரூம்லே பவர் இல்லை. fan லைட் எதுவுமே வேலை செய்யலை. நான் இங்கேயே உட்கார்ந்து என் வேலையை பார்த்துக்கறேன், நீங்க கிளாஸ் கண்டினியூ பண்ணுங்க. அவள் பதிலுக்கு காத்திராமல் மாணவர்கள் யாருமில்லாத அந்த கடைசி இருக்கையில் சென்று கையில் இருந்த தனது மடிக்கணினியை திறந்துக்கொண்டு அமர்ந்து விட்டிருந்தான் பரத்.

வகுப்பறையில் அப்படி ஒரு நிசப்தம்., அவன் அங்கே அமர்ந்திருக்கும் காரணத்தினாலோ என்னவோ அவளது வகுப்பில் எப்போதும் இருக்கும் சின்ன சின்ன சலசலப்புக்கள் கூட இன்று இல்லை.

அவனை பார்த்துக்கொண்டே வகுப்பை துவங்கினாள் அவள். தனது கண்ணெதிரே அவள் இருக்கிறாள் என்பதிலேயே ஒரு நிம்மதியான சுவாசம் எழுந்தது அவனிடத்தில்.

கணினியை நோக்கி அவன் தனது பார்வையை திருப்பிக்கொள்ள எவ்வளவு முயன்றாலும், அவன் கண்கள் மறுபடி மறுபடி அவளை நோக்கியே திரும்பின, . அவளது ஒவ்வொரு அசைவிலேயுமே இருந்தது அவன் கவனம். அவனது பார்வையின் அரவணைப்பிலேயே இருந்தாள் அவள்.

சோர்வும், தூக்கமும் அவளை அழுத்த கஷ்டப்பட்டு குரலை உயர்த்தி வகுப்பை நடத்திக்கொண்டிருந்தாள் அபர்ணா. 'ஏண்டா இப்படி தூங்காம உடம்பை கெடுத்துக்கறே? என்று கேட்பதை  போலே  தாய்மையும், அக்கறையும்  கலந்த பார்வை அவனிடத்தில்.

அவன் தவிப்பும், அக்கறையும் அவளை வியப்பின் உச்சியில் கொண்டு நிறுத்தியிருந்தது. சில நிமிடங்கள் பாடங்களை நடத்திவிட்டு, மாணவர்களுக்கு சில வேலைகளை  கொடுத்துவிட்டு  நிமிர்ந்தாள் அவள் .

அவன் கண்கள் அவளை மெல்ல வருடின. சில நிமிடங்கள் அமர்ந்துக்கொள் என்றான் கண் ஜாடையில். நாற்காலியில் சென்று அமர்ந்தாள் அவள்.

மாணவர்கள் எல்லாரும் எழுதிக்கொண்டிருக்க, அவள் கண்கள் அவன் கண்களை சந்தித்தன. கண் இமைக்காமல் அவளையே பார்த்தவன், சின்னதான புன்னகையுடன், உதடு குவித்து காற்றில் அனுப்பினான் தனது நேசத்தை.

காற்றில் கலந்து, அவள் கன்னம் சேர்ந்து இதயம் வருடி, உயிரில் கலந்தது அவனது நேசம். கொஞ்சம் சிலிர்த்துதான் போனாள் அபர்ணா. அப்படியே ஓடி சென்று அவனுக்குள் அடைக்கலமாகவே தவித்தது அவள் மனம்.

வகுப்பு முடிந்தும், அவள் வெளியேற சில நிமிடங்கள் கழித்து அவளை பின் தொடர்ந்து வந்தான் அவன்.

அடுத்த ரெண்டு ஹவர் உனக்கு கிளாஸ் இல்லைதானே. ஹாஸ்டல் போய் கொஞ்ச நேரம் தூங்கிட்டு, லஞ்ச் முடிஞ்சதும் வா.

இல்லைப்பா... யாரவது ஏதாவது சொல்லப்போறாங்க.

யாரும் எதுவும் சொல்ல மாட்டங்க. அப்படியே யாரவது ஏதாவது சொன்னாலும் நான் பார்த்துக்கறேன். நீ இப்போ வண்டி ஓட்ட வேண்டாம் நான் டிராப் பண்றேன் வா. கையை பிடித்து இழுக்காத குறையாக தனது வண்டியில் அவளை ஏற்றிக்கொண்டு கிளம்பி விட்டிருந்தான்.

அங்கிருந்து பத்து நிமிட பயணத்தில் அவளது ஹாஸ்டல்.

அவள் மனதில் பல எண்ணங்கள் அலை அலையாய். அவள் கை அவன் தோளை அழுத்தமாக பற்றிக்கொண்டது. அவன் முதுகில் முகம் புதைத்துக்கொண்டாள்.

வாசலில் இறக்கி விட்டு சொன்னான், தூங்கிட்டு லஞ்ச் முடிஞ்சிட்டு வெயிட் பண்ணு நான் வந்து பிக் அப் பண்ணிக்கறேன்.

அவள் தலையசைத்து விட்டு நகரப்போக ஏதோ யோசனையுடன் அழைத்தான் அவன் 'கண்ணம்மா...

ம்? திரும்பினாள்

நிஜமா உனக்கு என்னடா பிரச்சனை?

ம்? என்று நிமிர்ந்தாள் அபர்ணா. மனதிற்குள் விஷ்வா வந்து போக எதுவுமே சொல்ல இயலவில்லை அவளால். தரையை பார்த்துக்கொண்டே இடம் வலமாய் தலையசைத்தாள் 'பிரச்சனையெல்லாம் ஒண்ணுமில்லை'

ஒரு பெருமூச்சு எழுந்தது அவனிடம். சரி என்கிட்டே சொல்லவேண்டாம் .பட் ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ கண்ணம்மா.....

மெல்ல நிமிர்ந்தாள் அவள்.

நாம ரெண்டு பெரும் காலத்துக்கும் ஒண்ணா இருக்கப்போறோம். அதிலே எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எப்பவுமே நான் சொல்றதுக்கு நீயும், நீ சொல்றதுக்கு நானும் தலையாட்டிட்டே இருக்க முடியாதுடா. சினிமாவிலேயும், கதையிலேயும் அது நடக்கும். நமக்குள்ளே பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதுதான் யதார்த்தம். அதையே யோசிச்சிட்டு நீ இப்படி தூங்காம...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.