(Reading time: 22 - 44 minutes)

 

மாலை ஐந்து  மணி. ஸ்டாப் ரூமிற்குள் வந்தாள் அபர்ணா. அங்கே பரத் இல்லை. அவளது அழைப்பையும் ஏற்கவில்லை அவன். அவனது கைப்பேசி ஒலித்துக்கொண்டே இருந்தது.

எங்கே சென்று விட்டான்.? என்னிடம் சொல்லாமல் வீட்டுக்கு கிளம்ப மாட்டானே? யோசித்தபடியே கல்லூரியை ஒரு வட்டம் அடித்து விட்டு, அவன் எண்ணை முயன்றபடியே மறுபடியும் அவள் ஸ்டாப் ரூமுக்குள் வர, அங்கே அமர்ந்திருந்தான் அவன். அங்கே வேறே யாரும் இல்லை.

அவனருகில் அவனது கைப்பேசி மௌனமாய் ஒளிர்ந்துக்கொண்டிருக்க, கண் மூடி இருக்கையின் பின்னால் சாய்ந்திருந்தான் பரத்.

அவளது உள்ளுணர்வு ஏதோ ஒன்று சரியில்லையோ என்று எண்ண வைத்தது. தலையை குலுக்கிகொண்டாள் அபர்ணா. அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் எதற்காக தேவை இல்லாமல் கற்பனை செய்துக்கொள்கிறேன் ?

சில நொடிகள் பேசாமல் நின்றவள் 'கண்ணா...' என்றாள் மென்மையாக..

சரேலென கண் திறந்தான் அவன். அவளை தலை முதல் கால்  வரை மெல்ல மெல்ல அளந்தது அவனது  பார்வை.

என்னப்பா அப்படி  பார்க்கறீங்க? நான் உங்களை அப்படி கூப்பிடலாம்தானே.  வீட்டிலே எல்லாரும் உங்களை அப்படிதானே கூப்பிடுவாங்க. எனக்கு அந்த பேர் ரொம்ப பிடிச்சிருக்கு. நான் இந்த கண்ணனோட கண்ணம்மா, நல்லாருக்கா? அழகாய் தலையசைத்து புன்னகையுடன் கேட்டாள் அவள்.

நாற்காலியை விட்டு மெல்ல எழுந்தான் அவன். சில நொடிகள் அவள் முகத்தையே பார்த்தவனின் இதழ்களில் சின்னதாய் ஒரு புன்னகை ஓட, மெல்ல தலையசைத்தான் பரத்.

ஏன் கண்ணா? இவ்வளவு டல்லா இருக்கீங்க? கேட்டாள் அவள் சோர்ந்து போயிருந்த அவன் முகத்தை பார்த்தபடியே...

ம்? என்றவன் கொஞ்சம் தலை சுத்திச்சுடா. ரொம்ப நாளைக்கு அப்புறம் திடீர்னு தலை சுத்திச்சு. என்றான் நிதானமாக.

ஏன் பா உடம்பு சரியில்லையா? டாக்டர் கிட்டே போலாமா? அவள் அவசரத்துடன் கேட்க பெருமூச்சுடன் கலந்த புன்னகையுடன் இடம் வலமாக தலை அசைத்தான் அவன்.

சரியாயிடுச்சுடா. உன்னை பார்த்ததும் எல்லாம் சரியாயிடுச்சு. கிளம்பலாமா? தனது பையை முதுகில் மாட்டிக்கொண்டு நடந்தான் பரத்.

அவனுடனே நடந்தாள் அபர்ணா. தனது கைகளை பேன்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்துக்கொண்டு யோசனையுடன் தரையை பார்த்தபடியே நடந்தான் அவன்.

'proffesor சார்' மௌனத்தை கலைத்தாள் அபர்ணா. என்னாச்சு சார்.? என்னை ஹாஸ்டல்லேர்ந்து காலேஜ் கூட்டிட்டு வரும்போது கூட நல்லா தானே இருந்தீங்க? திடீர்ன்னு என்ன ஆச்சு?

ம்? என்னது? அவள் கேள்வியில் கலைந்தவன், சட்டென தன்னிலை பெற்று புன்னகைதான் '

பாரு. உன்கிட்டே சொல்லணும்னு காலையிலேயே நினைச்சேன். மறந்திட்டேன்' இன்னைக்கு நைட் டின்னருக்கு நீ நம்ம வீட்டுக்கு வந்திடு.

நா ..னா? என்றவளுக்குள்ளே  பல யோசனைகள் அலை மோதின

நீ இல்லாம பின்னே உங்க பாட்டியா?

இல்லப்பா.. அது நான்...

'எந்த கதையையும் கேட்க நான் தயாரா இல்லை. இப்போ நீ ஹாஸ்டல் போயிட்டு குட்டியா ஒரு தூக்கம் போட்டுட்டு, எந்திரிச்சு ஜில்லுனு ரெடியாயிடுவியாம். நான் 7.30 மணிக்கு கரெக்டா வந்து உன்னை பிக் அப் பண்ணிப்பேனாம்.. சும்மா அசத்தலா ஹீரோயின் மாதிரி ரெடியாகணும். நான் என் பொண்டாட்டிய பார்த்து அப்படியே மயங்கி போயிடணும். ஓகே யா? லவ் யூ ஸ்வீட் ஹார்ட். புன்னகையுடன் சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் தனது வண்டியை கிளப்பிக்கொண்டு பறந்தே விட்டிருந்தான் பரத்.

விஷ்வா அங்கே வரும் வேளையில் பரத்தின் காதலியாக நான் அங்கே போய் நிற்பதா? இந்த விஷயம் தெரிந்து விட்டால் என்ன செய்வான் விஷ்வா? அதன் பின் அவன் எனக்காக யோசிக்க துவங்கி விட மாட்டானா? தனது வாழ்கையை பற்றி மறந்தே விட மாட்டானா? யோசித்தபடியே சிலையாக நின்றிருந்தாள் அபர்ணா. 

தொடரும்...

Go to episode # 12

Go to episode # 14

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.