(Reading time: 10 - 20 minutes)

 19.கௌரி கல்யாண வைபோகமே - ஜெய்

 வாங்க வாங்க. வா கௌரி. என்ன உன்னோட ஹெட் காலைலேயே ஆபீஸ் ஓடிப் போய்ட்டார். நீ ப்ரீயா இருக்க?

“ஹாய் சுதா எப்படி இருக்கீங்க. எனக்கு பதிலாதான் கால் எடுக்க அவர் போய் இருக்கார். இன்னும் கல்யாணத்துக்கு நாலு வாரம்தானே இருக்கு. நான் ஷாப்பிங் கூட இன்னும் ஆரம்பிக்கலை. அதனால இந்த வாரத்துல இருந்து வீட்டுலேர்ந்தே வேலை செய்ய அப்ரூவல் வாங்கிக் கொடுத்துட்டார். இந்தக் கல்யாணப் பொண்ணுக்காக அவரை திட்டாம மன்னிச்சு விட்டுடுங்க.”

“ஆமாம் அப்படியே திட்டிட்டாலும் உடனே பயந்துட்டுத்தான் மறு வேலை பார்ப்பாரு உங்க பாஸ்”

Gowri kalyana vaibogame

“ஹா ஹா ஹா, எல்லார் வீட்டிலும் இதுதான் நிலைமைப் போல. ஆபீஸ்ல புலி, வீட்டுல எலி. உங்க அப்பா வந்தாச்சா சுதா”

“அவர் அப்போவே வந்துட்டார். பக்கத்துல கடை வரைக்கும் போய் இருக்கார். இப்போ வந்துடுவார். என்ன சாப்பிடறீங்க அங்கிள். காபியா, இல்லை ஜூஸ் மாதிரி ஏதானும் குடிக்கறீங்களா”

“சுதா நீங்களே ஜூஸ் மாதிரின்னு சொல்லிட்டீங்க. அதனால அது வேண்டாம். அங்கிள் கூட முதல்ல பேசி முடிச்சுடறோம். அப்பறம் விஷப்பரிட்சைக்கு போகலாம்.”

“கொழுப்பு கௌரி உனக்கு, இதோ அப்பா வந்தாச்சு. நீங்க பேசிட்டு இருங்க. நான் போய் பசங்களை ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வந்துடறேன்”

“வாங்க ராமன். வாம்மா கௌரி. சாரி வந்து ரொம்ப நேரம் ஆச்சா. எங்க பத்து வரலை?”

“இல்லை சார் இப்போதான் வந்தோம். சம்மந்திக்கு இன்னைக்குப் பத்திரிகை கொடுக்கற வேலை இருக்கறதால வரலைன்னு சொல்லிட்டார். கமிஷ்னர் என்ன சொன்னார். நீங்க என்ன முடிவெடுத்து இருக்கீங்க.”, நேரடியாக விஷயத்திற்கு வந்தார் ராமன்.

“முதல்ல சேனல் ஆளுங்களைக் கூப்பிட்டு ஒரு பிரஸ் மீட் மாதிரி அரேஞ்ச் பண்ணி விஷயத்தை சொல்லிடலாம்ன்னு முடிவு பண்ணினோம். அதுல சில சிக்கல் வரும்போல இருக்கு. என்னதான் உஷாரா இருந்தாலும் ஏதானும் ஒரு வழியா விஷயம் வெளிய கசிஞ்சுடும். ஆளு உஷாராகி எஸ்கேப் ஆகிடுவான். இன்னும் என்ன ஆளு ஆளுன்னு, எக்ஸ் மினிஸ்டர் ரகுராமோட சகலை ரவிதான் இதுக்கெல்லாம் காரணம்.   அந்தாள் இப்போ பதவில இல்லாட்டாலாம் அவனுக்கு இன்னும் கட்சில செல்வாக்கு இருக்கு. கூஜா தூக்கவும் ஆளுங்க இருக்காங்க”

“அடப்பாவி அவனா இதுக்குப் பின்னாடி இருக்கறது. போன வாரம் கூட ஏதோ முன்னூறு பேருக்கு இலவச கல்யாணம் எல்லாம் பண்ணி வச்சானே.”, ராமன் அப்பாவியாக கேட்டார்.

“மக்களோட துட்டை எடுத்து முந்நூறு என்ன மூவாயிரம் கல்யாணம் கூட பண்ணுவாங்க. அதுவும் தவிர அடுத்த வருஷ ஆரம்பத்துல எலெக்ஷன் வேற வருதே. அதுக்கு ஏதானும் ஸ்டன்ட் வேலை பண்ண வேண்டாம்”

“இப்போலாம் வர்ற அரசியல்வாதிகள்ல யாரை நம்பறதுன்னே தெரியலை”

“அது என்னவோ சரிதான் ராமன் சார். ஆனால் இப்போ எலெக்ஷன் வர்றதும் நமக்கு சாதகம்தான். தேர்தல் சமயத்துல மக்களைப் பகைச்சுக்க எந்த அரசியல்வாதியும் விரும்ப மாட்டான். அதுவும் இந்த ஆள் ஏற்கனவே ஏதோ ஒரு விஷயத்துல மாட்டினதுனாலதான் காபினெட்லேர்ந்து தூக்கி இருக்காங்க. திருப்பி ஒரு விஷயம்ன்னா அந்த ஆள் தலை தூக்கறதே கேள்விக் குறி ஆயிடும், அதனால அடக்கி வாசிப்பான்னு நினைக்கறோம்”

து சரிதான் சார். ஆனால் இப்போ டிவிக்காரங்களைக் கூப்பிடப் போறதில்லைன்னு சொல்றீங்க. அப்போ எப்படி விஷயத்தை மக்கள்கிட்ட கொண்டு போகப் போறீங்க”

“மீடியாவை நாங்கதான் டைரக்ட்டா தொடர்பு கொள்ளப் போறதில்லை. எங்களுக்குப் பதிலா அதை நீங்கப் பண்ணப் போறீங்க”

“நாங்களா, எப்படி சார். எந்த விதமான ஆதாரமும் இல்லாம குருட்டாம்போக்குல அந்த ரவி மேலப் புகார் கொடுக்க முடியாது இல்லை சார்”

“ராமன் நீங்க ரவி மேல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறதில்லை. இந்த சீட்டுக் கம்பெனி மோசடில போலீஸ் தரப்பிலேர்ந்து இதுவரை எந்த ஆக்ஷனும் எடுக்கலை அப்படின்னு மட்டும் நாங்க சொல்ற தொலைக்காட்சிக்கு ஒரு ஸ்கூப் நியூஸ் கொடுக்கப்போறீங்க. அந்தப் பணம் இல்லாததால கௌரி கல்யாணம் தொங்கல்ல இருக்கறா மாதிரி ஒரு இமேஜ் உருவாக்கப் போறாம்.”

“அது வேண்டாமே பாலு”

“பார்த்தீங்களா. நீங்க பண்ணனும் அப்படின்னு சொன்ன உடனே ஜகா வாங்கறீங்க.”

“ச்சே ச்சே நான் பண்ணாம இருக்க சாக்கு சொல்லலை பாலு.   எல்லாரும் முதல்ல  அந்த ஆளை திட்டினாலும், பின்னாடி கௌஷிக் குடும்பம் எதுவும் கேக்காம இருந்து இருந்தால் எங்களுக்கு கஷ்டப் பட வேண்டிய அவசியம் இல்லைன்னுதான் பேசுவாங்க. அதுவும் இந்த மீடியாக்காரங்க TRP ரேட்டிங் ஏறணும்ன்னே என்ன வேணும்னாலும் பேசி ஏத்தி விடுவாங்க. ‘வரதட்சணை கொடுக்க முடியாததால் மணப்பெண் நிலை என்ன’, இப்படித்தான் அவங்க ப்ரோக்ராமே ஆரம்பிக்கும். இது, கல்யாணம் நிக்கப்போறா மாதிரி ஒரு கற்பனை கதையை அந்த ஆளைப் பிடிக்கறத்துக்காக உருவாக்கப் போறோம்னாலும், அதனால கௌஷிக் குடுபத்துக்கு என்ன இருந்தாலும் கெட்ட பேர்தானே. பாவம் மனசாலக் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவாளுக்கு இது தேவையா, வேண்டாமே”

“அதைப்பத்தி கவலைப்படாதீங்க ராமன். அந்த ஆளைப் பிடிச்சதுக்கப்புறம் இதெல்லாம் சும்மா அவனைப் பிடிக்க நடத்தின நாடகம் அப்படின்னு சொல்லிடலாம். பத்து அதெல்லாம் தப்பாவே நினைக்க மாட்டான். உங்களுக்கு கஷ்டமா இருந்தா நானே வேணும்ன்னாக்கூட அவன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்கறேன் ”

“கண்டிப்பா நூறு சதவீதம் தப்பா நினைக்க மாட்டார். இன்னும் கேட்டா உங்களுக்கு ஒத்துழைப்பு தர உங்கக்கூட சேர்ந்து எங்களை வரதட்சணை கேட்டு வற்புறுத்தறா மாதிரி நடிக்கக்கூட செய்வார். ஆனால் அவர் குடும்பத்தை இதில் இழுக்க எனக்கு இஷ்டம் இல்லை”

“ரொம்ப பிடிவாதமா இருக்கீங்க ராமன். பணம் போட்டவங்க தரப்பிலேர்ந்து இந்தக் கேஸ் மூவ் ஆனாத்தான் அவனை சுலபமா பிடிக்க முடியும். நாங்க என்னதான் பிரஷர் போட்டாலும் ஒரு ப்ரயோஜனமும் இல்லை”

“நீங்க சொல்றது புரியாம இல்லை. வேணும்ன்னா ஒண்ணு பண்ணலாம். என் நண்பன் ராமு தற்கொலைக்கு முயற்சி பண்ணினானே அதையே மீடியாக்கு நியூஸா கொடுத்துட்டா என்ன. அப்படி இல்லாட்டாலும் சர்ஜரி செய்ய பணம் இல்லாம இறந்து போனாரே, அவங்களை வேணா மீடியாக்கிட்ட பேச சொல்லலாம்.”

“ஹ்ம்ம் சொல்லலாம் ராமன். ஆனால் அது நடந்து கொஞ்ச நாள் ஆயிடுச்சு இல்லை. அதனால அந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது.”

“அங்கிள் எனக்கு ஒரு யோசனை தோணுது. சரியா வருமான்னு பாருங்க”

“சொல்லுமா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.