(Reading time: 49 - 98 minutes)

 

திடிரென மாட்டிகொண்ட அதிர்ச்சியில் அவள் திருதிருவென முழிக்க, அதை இன்னமும் ரசித்துக்கொண்டே மேலும் ஏற்றிவிட்டான் அஸ்வத். “இது என்ன அத்தை எங்களுக்குள்ள தானே... சில நேரம் செல்லமா நாயே பேயேன்னு கூட திட்டுவாள் அதெல்லாம் பெரிய விஷயமா?” என்று ஒன்றும் அறியாதவன் போல பற்றிவைக்க, “அடப்பாவி இது ஒரு விஷயமா இது ஒரு விஷயமான்னு கேட்டே இப்படி மாட்டி விடுறானே” என்று நொந்து கொண்டு அவனை கொதறிவிடுவது போல் முறைத்தாள்.

“நீ தப்பா எடுத்துக்க மாட்டப்பா ஆனால் வெளில இருந்து பார்க்குரவங்களுக்கு அப்படியா தெரியும்... என்ன இப்படி அவங்க அம்மா வளதிருக்காங்கன்னு தானே தோணும்... இனிமேல் ஒழுங்கு மரியாதையாய் வாங்க போங்கன்னு பேசு” என்று மிரட்டினார் ஹேமா. எதுவும் பேச முடியாமல் மௌனமாக அமர்ந்து அவள் அருகில் இருந்த செய்தித்தாளை திருப்ப, சில நொடிகள் அவள் முகத்தியே பார்த்துக்கொண்டிருந்தவன்.

“அனு, என்ன புக் இது” என்று எட்டி அவளுக்கு மறு பக்கம் இருந்த புத்தகத்தை எட்டி எடுப்பது போல் நன்றாக அவள் மீது சாய்ந்து எடுத்தான். முதல் முறை அவன் அருகாமையும் தீண்டலும் உடலில் மின்சாரம் பாய்ச, எதுவும் கூற முடியாமல் கண்களை தாழ்த்திக்கொண்டாள். சீண்டலுக்கு சண்டை போடுவாள் என்று அவன் எதிர்பார்த்து தோர்த்து போக, பதிலுக்கு அவளது கன்னத்து சிவப்பு அவனை இழுத்தது...

“ஏன்டி எல்லாம் தெரிஞ்சும் மாறாத மாறியே நடிக்குற” என்று அவன் கேட்டான்.

சில நொடிகள் அவன் கண்களில் கலந்தவள் நொடிகளில் சுதாரித்து “அதெல்லாம் இல்லை... நீங்களே கற்பனை பண்ணிக்காதிங்க” என்று பொய்யாக பேசிவிட்டு தாயின் பக்கம் சென்றுவிட்டாள்.  செல்லும் நேரமெல்லாம் இனிமையான இம்சையாகவே சென்றது அவர்களுக்கு... அவள் தான் தொட்டாலும் வெறுக்கபோவதில்லை என்று அறிந்தாலும், திருமணம் ஆன புதிதில் நடக்கும் சிறு சிறு குறும்புகளை இழக்க இருவருக்குமே மனமில்லை. அவள் மனம் கனியும் நேரம் வருவதற்காக சுவையான நேரத்தை ரசித்தபடி காத்திருந்தான் அஸ்வத்.. கூடுதல் சீண்டல்கள் செய்துகொண்டு.

அங்கே இருந்த இரண்டு நாட்களுமே நல்ல உபசரணை நடந்தேறியது... மருமகன் என்ற வேறுபாடின்றி மகனாகவே வளம் வந்தான் அஸ்வத். பெரியவர்களின் மனமும் இவர்களின் குறும்பு பேச்சிலும் சந்தோஷமான முகத்திலும் நிறைந்து போனது. “மாமா வெளிய கொஞ்சம் வேலை இருக்கு போயிடு வந்திடுறேன்”.

“சரிப்பா...”

“எங்க மாமா அனுவை காணோம்” என்று வாசலில் நின்று கண்கள் உள்ளறையை துளாவிக்கொண்டிருக்க பார்த்தான். அவனது செய்கையில் கொஞ்சம் சிரிப்பு தோன்றினாலும், “உள்ள வேலையா இருக்காள் போலப்பா... இரு... அனு.... அஸ்வத் கூப்பிடுறாரு பாரு...”

“வரேப்பா...”

அனு வெளி அறைக்கு வந்ததும் முகம் ஜொலிக்க அவளை பார்த்தவன், அவள் தன் பார்வையில் கூச்சப்படுவதை உணர்ந்து சிரித்துக்கொண்டான். அவள் வருவதை கண்டு வெளியே சென்றுவிட, அவனை தொடர்ந்து சென்றாள், “எதுக்குடா கூப்பிட்ட?”

“என்னது இன்னமும் டா வா? இரு அத்தைட்ட சொல்லுறேன்....” என்று கூறிவிட்டு “அத்த....” என்று முன்னறைக்கு கூட கேட்காமல் ஆனால் கொஞ்சம் குரல் உயர்த்தவும் பயத்தில் வேகமாக சென்று அவன் இதழ்களை மூடினாள். “சரியான அத்தைக்கு ஏத்த மருமகன், ஏன்... ஏங்க இப்ப கத்துறிங்க?” என்று ரொம்ப பவ்வியமாக பேசினாள் அனு. அவளின் மாறுதலை பார்த்து புன்னகை பூத்தவன் இன்னமும் அவள் கைகள் தன் இதழ்களை மூடியிருப்பதை உணர்ந்து மெல்ல அதில் இதழ் பதித்தான்.

இரண்டு நாட்களாக அவன் எடுத்து கொண்ட சிறு சிறு அத்துமீறல்கள் இன்பமாக இருந்தது அவளுக்கு வாய் திறந்து சொல்லாமல் இருந்தாலும் உள்ளுக்குள் ரசித்தாள். அவள் இதழ்பட்ட இடம் குறுகுறுக்க, அதை ரசித்த மயங்கிய மனதை அடக்கி, முகத்தை மாற்றிக்கொண்டாள்.

“என்ன கொழுப்பா? வெளில போகணும்னு சொன்னிங்கள்ள கிளம்புங்க...” என்று தள்ளாத குறையாக கிளப்பினாள்.

“என்ன வெளிய துரத்துரதுல என்ன ஒரு சந்தோஷம்டி உனக்கு... ஹ்ம்ம்...” என்று எப்போதும் போல் அவளிடம் சீண்டிவிட்டு குதுகலமாய் போனான். அவளின் அந்த சில நொடி தடுமாற்றத்தை கண்டுகொண்டவன் மனம் இறகில்லாமல் பறந்தது. அவன் போன பின்பும் அவனின் நினைவே சுற்றி சுற்றி வர ஒருவித மயக்கத்தோடு வேலை செய்தாள்.

நாட்கள் மெல்ல நகர, இரு ஜோடிகளுமே மகிழ்ச்சியாக நேரத்தை கடத்தினர். ஒரு ஜோடி புறாக்கள் சின்ன சின்ன சண்டைகளில் நேரத்தை கடத்த, இன்னொரு ஜோடி புறாக்கள் அன்னியோன்யமாக நேரத்தை கடத்தினர்.

“ஹெலோ...”

“ஹாய் அண்ணி....”

“ஹப்பாடா நியாபகம் இருக்கா உங்களுக்கு???”

“என்ன அண்ணி இப்படி சொல்லிட்டிங்க? நீங்க கூட தான் பேசவே இல்லை...”

“நாங்கலாம் ரொம்ப டிசன்ட்ப்பா நடுல வந்திட்டு யாரு உன் புருஷன்ட திட்டு வாங்குறது...

“அண்ணி அது உங்க தம்பி தான்...”

“அவன் அப்படி இருந்தால் தான் பரவா இல்லையே... பொண்டாட்டி தாசன் ஆகிட்டானே” என்று கிண்டல் பண்ணும் தோணியிலேயே பேசிக்கொண்டிருந்தார். என்னதான் அஹல்யா சொல்வதற்கெல்லாம் மாறாக பதில் தந்தாலும் அவன் பொண்டாட்டி தாசன் என்று கூறியதும் கன்னங்கள் சிவக்க தான் செய்தது.

அவளின் கன்ன சிவப்பை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டே வந்தவன், அருகில் வந்தது அலைபேசியை கையில் வாங்கிக்கொண்டு, “யாருப்பா என்னை தவிர, என் பொண்டாட்டிய வெட்கப்பட வைக்குறது?” என்று குறும்பாக அவளை பார்த்தவண்ணம் கூறினான்.

அவனது பேச்சில் இருந்த குறும்புத்தனத்தை ரசித்து சிரித்த அஹல்யா... “ம்ம்ம்ம் எல்லாம் உனக்கு முன்னாடி பிறந்தவள் தான்.”

“அட அக்கா... நல்லா இருக்கியா?”

“முதல்ல... நீ ஊருல தான் இருக்கியா?”   

“அக்கா... அக்கா... போதும் ஏற்கனவே நீ அவகிட்ட என்ன நல்லா திட்டிப்ப திரும்பியும் ஆரம்பிக்காத.. மாமாகிட்ட கொடு...”

“எல்லாம் என் நேரம்டா...”

“ஹாய் அஸ்வத் எப்படி இருக்க?”

“ரொம்ப நல்லா இருக்கேன் மாமா...”

“நல்லா இருக்கியா? என் தங்கச்சிய கட்டியூமா?!?!” என்று நக்கலாக கூறினான் பதிலுக்கு இருவருமே சிரித்துகொள்ள அஸ்வத் தொடர்ந்தான், “என் அக்காவ கட்டிக்கிட்டு நீங்களே சூப்பரா இருக்கிங்களே மாமா அப்பறம் எனக்கென்ன பெரிய விஷயமா?!” என்று பதில் தந்தான்...

“சரியா சொன்ன அஸ்வத்...” இருவரும் இப்படி அருகில் இருந்தவர்களை பற்றி பேசிக்கொண்டிருக்க ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் அன்பு மனைவிகள்...

...

“ஓ.... சூப்பர் மாமா... எப்போ?”

....

“சூப்பர் பிளான்... சரி மாமா அப்பறம் பேசலாம்...” என்றுவிட்டு அழைப்பை வைத்துவிட்டான். அவர்கள் பேசியது புரியாமல் அனு பார்க்க விளக்க வாய்திறந்தான் அஸ்வத். சரியாக அந்நேரம்

“டேய் மாப்ள...”

“இதோ நியூஸ் வருது பார்” என்று கூறிக்கொண்டே கதவின் பக்கம் திரும்பினான் அஸ்வத். புன்னகையுடன் ஆவலாய் எதிர்பாத்தால் அனு. நிரு அங்கு வந்து “விஷயம் சொன்னாங்களா?” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.