(Reading time: 49 - 98 minutes)

 

னக்கு தெரியும்... இதோ மேடத்துக்கு சொல்லு...” என்று கைகாட்டினான்.

“2 அண்ணா அண்ணிசும் பொங்கலுக்கு இங்க வராங்களாம்....” என்று கூறவும் அவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு... திருமணத்துக்கு பிறகு ஒன்று மாறி ஒன்று வேலை வந்துவிட யாரையுமே பார்க்க முடியவில்லை. அதன்பின் இப்போது தான் அவர்களை பார்க்கும் நேரம் கிடைக்க போகிறது. அனைவரும் காத்திருக்க மொத்த கூட்டமும் வந்தது அஸ்வத்தின் வீட்டிற்கு.

ஹே.... வாங்க வாங்க...” என்று சிறுசுகள் எல்லாம் அண்ணன் அண்ணிகளை கவனிக்க, பெரியவர்கள் எல்லாம் மற்ற பெரியவர்களை வரவேற்றனர். அர்ஜுன், அஹல்யா, நவீன், அர்ச்சனா என்று நான்கு பேரும் முன்னே வர, அன்பு மற்றும் நவீனின் பெற்றோர் பின்னே வந்தனர். அவர்களை வரவேற்க தேஜுவின் பெற்றோரும், அனுவின் பெற்றோரும் அங்கேயே வந்துவிட, அந்த வீடே விழா கோலம் பூண்டது. அனைவரும் உள்ளே செல்ல, அப்போது தான் மிக முக்கியமானவர்களை விட்டுவிட்ட உணர்வு வந்து திரும்பி பார்த்தாள் அனு. கதவின் ஒரு புறம் விபுனும், மறுபுறம் விருஷிக்காவும் சாய்ந்து நின்றுக்கொண்டிருந்தனர்.

அவர்கள் அருகே அவள் செல்லவும்... “நானும் பாத்துகிட்டே இருக்கேன். எல்லாரும் எங்களை கண்டுக்கவே மாட்டிங்குரிங்க... நாங்க திரும்பி போறோம்” என்று விபுன் முன்னே செல்ல, அவனை பின்தொடர்ந்தாள் தங்கை... “வா ஷீகா நான் உன்ன கூட்டிட்டு போறேன்” என்று கையில் சாவிக்கூட இல்லாமல் விறுவிறுவென காரை நோக்கி சென்றான்.

அவர்கள் செய்வதை பார்த்துக்கொண்டு நின்ற அனைவருக்கும் சிரிப்பாக இருக்க, முன்னே வந்த பெரியவர்களையும் கைகள் வைத்து தடுத்தனர் சிறியவர்கள். அழகழகாக குட்டி ப்ராக்கும் குட்டி ஜீன் டிஷர்ட் அணிந்து முன்னே செல்லும் குட்டி செல்வங்களை ரசித்துக்கொண்டிருந்தனர் அனைவரும். வேக வேகமாக சென்றவன் கதவை திறக்க முடியாமல் எக்கி எக்கி முயற்சிக்கவும், அவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்த அஸ்வத் சிரிப்பு தாங்காமல்... “ஏன்டா சின்ன தொடப்பக்குச்சி சைஸ்ல இருந்துகிட்டு என்ன வசனம் பேசுற” என்று அலேக்காக தூக்கி கொஞ்ச துவங்கிவிட்டான். பின்னே வந்த நிருவும் விருஷிக்காவை தூக்கி கொஞ்ச, இடம் ரம்மியமாக சென்றது. அன்று முழுவதுமே அனு, தேஜுவின் பெற்றோர் அங்கு இருக்க, கதை பேசிக்கொண்டு வேலை செய்ததில் நேரம் இனிமையாக சென்றது. ஒரு கூட்டுக்குடும்பத்தின் சாயல் வந்தது.

சாப்பிட்டுவிட்டு அமர்ந்து அனைவரும் கதை பேச துவங்க, கிளம்ப எத்தனித்தனர் வெங்கட்,ஹேமா, லதா, ரவி தம்பதியினர். “இப்போ எதுக்கு வெங்கட் கிளம்பனும், இங்க இல்லாத இடமா? இன்னைக்கு இங்கேயே ஸ்டே பண்ணலாமே..”

“இருக்கட்டும்ங்க நாளைக்கு திரும்பி வரோம்.. அப்பறம் பொங்கல் பத்தி எந்த பிளானும் சொல்லவே இல்லையே...” என்று வெங்கட்டும், ரவியும் சேர்ந்து கேட்டனர்...

“அதான் அப்பா சொல்லுறோம் அதை இங்கேயே இருந்தால் நல்லா பேசி முடிவெடுக்கலாம் இல்லை... சோ இன்னைக்கு இங்கேயே இருங்க...” என்று ரவியின் கரத்தை பிடித்துக்கொண்டாள் தேஜு... அனுவும் கண்களில் கெஞ்ச, இளகிய தந்தையின் உள்ளங்கள் யோசிக்க, அதை கண்டுகொண்ட மாப்பிள்ளைகள். “சரிப்பா, அத்த மாமா இங்க தான் இருக்க போறாங்க வாங்க எல்லாரும் சேர்ந்து பொங்கல் பிளான் போடலாம்” என்று தோட்டத்து பக்கம் தள்ளிக்கொண்டு போனனர்.

நிரு, அஸ்வத்,அர்ஜுன்,நவீன் எல்லாம் ஒரு கூட்டமாக அமர்ந்துகொள்ள, அஹல்யா, அனு, அர்ச்சனா,தேஜு அனைவரும் எதிர்புறம் அமர்ந்துக்கொண்டனர். பெரியவர்கள் எல்லாம் அவர்கள் அருகில் அமர்ந்துகொள்ள, வேடிக்கை பேச்சுக்கள் துவங்கியது.

“பொங்கலுக்கு என்னபா புதுசா பண்ண போறீங்க? இங்க வீட்டிலேயே பண்ணுறது தானே...” என்று நவீனின் தந்தை துவங்கி வைத்தார்.

“4 நாள் லீவ் அப்பா இப்படி ஒரே இடத்துல இருக்கவா வந்தோம்?எல்லாரும் சேர்ந்து எங்கயாவது போகலாம்.”

“பொங்கல் இங்க வச்சிட்டு டூர் எங்கயாவது போகலாம்” என்றான் நிரு.

“டூர்??? எதுக்குப்பா அளஞ்சுகிட்டே இருக்கணும்...” என்று கண்ணனும் கூற, சிறுவர்கள் எல்லாம் தாய்மார்களிடம் ஒரு ஐடியா கேட்டனர்.

“என்னங்க நீங்க எல்லாம் சேர்ந்து இருக்குற நேரத்துல எதுக்கு அவங்க ஆசை கெடுத்துகிட்டு... எனக்கு ஒரு யோசனை தோணுது...” என்று துளசி கூறவும் மகிழ்ச்சி பொங்க சிறுசுகள் எல்லாம் அவளை நோக்கினர்.

“நம்ம அஹல்யா marriage முடிஞ்சதுமே குலதெய்வம் கோவிலுக்கு போகணும்னு நெனச்சோம் போகவே இல்லை, இப்போ அஸ்வத்துக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சு, இந்த தடவை குலதெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வைக்கலாமே..” என்று அவர் கூறவும் சிறுசுகள் முகமெல்லாம் பளிரென மின்னியது, பழைய எண்ணங்கள் எல்லாம் மேலோங்க ரகசிய பாஷைகள் பேசியது அனு, அஸ்வத், அர்ஜுன், அஹல்யா கண்கள். இந்த யோசனை அனைவருக்கும் பிடித்து போக ஒத்துக்கொண்டனர்.

“உங்க குலதெய்வம் கோவில் எங்க இருக்கு லதா? நீங்க ஏதாவது யோசனை வச்சிருக்கிங்களா? இல்லன்னா தேஜு, அர்ச்சனா கூட இங்கேயே சேர்ந்து பொங்கல் வைக்க சொல்லிடலாம்” என்று ஹேமா கேட்கவும். “கடவுள எதுக்கு பிருச்சு பார்த்துகிட்டு, இந்த முறை எல்லாரும் அங்கேயே பொங்கல் கொண்டாடுவோம்” என்று அவரும், நவீனின் தாயும் ஒத்துகொள்ள, ஒரு வழியாக வித்யாசமான பொங்கலை கொண்டாட தயார் ஆனனர் அனைவரும்.

பேசிக்கொண்டே இருந்த அனைவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. மடியில் அமர்ந்து அனுவை கொஞ்சிக்கொண்டே இருந்தான் விபுன்.. அவள் கன்னத்தை கிள்ளுவதும் முத்தம் தருவதுமாக விளையாடிக்கொண்டிருந்தான். எதர்ச்சியாக அனு திரும்ப எதிரே அமர்ந்து கொண்டிருந்த அஸ்வத் பொறாமையாக பார்ப்பது தெரிந்தது. அவனை பார்க்க சிரிப்பாக தோன்ற, பொறாமையா படுற படு படு... 3 வர்ஷம் என்னை எப்படி தவிக்க விட்ட, எனக்கு அப்போ கிடைக்காத காதல் தருணம் இப்போ வேணும் அதுக்கு தான் இந்த தண்டனை என்று மனதுக்குள்ளே சொல்லிக்கொண்ட அனுவுக்குமே அந்த தண்டனை கடுப்பாக இருந்தது. அது அவளையும் அல்லவா சோதித்தது... காலை தூக்கம் களைந்து கண்விழிக்கும் போது அயர்ந்து தூங்குபவன் நெற்றியில் முத்தம் தர ஆசையாக இருந்தும் செய்யாமல் பார்த்துக்கொண்டே இருப்பாள். தலை குளித்து எப்போதுமே அவன் தலை துவட்டி அவள் பார்த்ததில்லை, துவட்டிவிட ஆசையாக எழும் மனதையும் அடக்கி அவனை ரசிப்பாள். அவனது சிறுவயது புகைப்படங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவனது தாயின் மடியில் அவன் படுத்திருப்பது போல் ஒரு புகைப்படம் இருந்தது அதை பார்த்தமாத்திரத்தில் தன் மடியில் அப்படி தலை சாய்க்க மாட்டானா என்று எழுந்த ஆவலை கட்டுபடுத்தினாள். இது அனைத்தும் அவன் அறியாமல் அவள் ரசத்தவை.

நினைவுகளில் தொலைந்து போனவள் விபுன் அழைப்பதையும் மறந்து அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை பார்த்த மற்ற மூவரும்.. “போதும்மா கண்ணு வலிக்க போகுது ஒரு நாலு நாள் பொறுத்துக்கோங்க நாங்க ஊருக்கு போனதும் உங்க கொஞ்சல்ஸ் வச்சுக்கோங்க” என்று அஹல்யா கிண்டல் செய்யவும்...

“அண்ணி... அப்பிடலாம் இல்லை...”

“என்ன இல்லை? விழுங்குற மாதிரி அவன் பார்த்தால் பரவால்லை நீயும் அப்படி பார்த்திட்டு இருக்க? என்ன 4 நாளைக்கு சேர்ந்து படுக்க முடியாதுன்னு கோவிச்சிக்குரனா?” என்று அர்ச்சனா மறுபுறம் கிண்டல் செய்ய என்று ஒரு வழியாக பதில் சொல்லி அவர்களை நகர்த்தி செல்வதற்குள் பெரும்பாடு பட்டாள் அனு.

“அச்சோ போன் வைப்பா... எல்லாரும் கிண்டல் பண்ண போறாங்க...”

“இதெல்லாம் அநியாயம் என்னோட பொண்டாட்டிகிட்ட நான் பேசுறேன்... அவங்களுக்கு என்ன?”

“அச்சோ நிரு... எல்லாரும் வந்திருவாங்க சும்மா படுத்து தூங்கு” என்று சிரமப்பட்டு மற்றவர் அறியாமல் பேசிக்கொண்டிருந்தாள் தேஜு.

அதை கண்டுகொண்ட அனு... “ஹே இங்க பாருங்க என்ன கிண்டல் பண்ணிங்க டாக்டர் மேடம் என்ன பண்ணுறாங்கன்னு பாருங்க...” என்று கிண்டல் செய்ய அங்கு ஒரு கிண்டல் ரகளையே நடந்தது.

“அண்ணி நீங்க என்ன கலர் புடவை?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.