(Reading time: 49 - 98 minutes)

 

ண்ணுல்லம்மா... நான் ஒரு கம்பெனி ஆர்டர் எடுக்குரதுக்காக அவங்களுக்கு presentation அனுப்பிசிருந்தேன் அவங்ககூட சேர்ந்து கொஞ்ச நாள் அங்க வேலை பார்க்கணும்... புது designers... புது துணிகள், இன்னும் நிறைய பேசணும் அங்க இருக்க நம்ம branchku போகணும்... எப்படியும் வேலை முடிய கொஞ்ச நாள் ஆகும்.”

“நல்ல விஷயம் தானேடா... எப்போ போகணும்...”

“நாளைக்கே கிளம்பனும்” என்று அனுவை பார்த்தவாறு கூறினான்.

“எங்க அஸ்வத்?”

“மும்பை அக்கா...”

ற்றவர்கள் அறிந்த செய்தியில் மகிழ்ச்சியடைய... அனுவின் முகம் கொஞ்சம் சோர்ந்து போனது. இப்போது புரிந்தது அவன் முகம் என் வாடி போனது என்று... அதை புரிந்து கொண்ட அர்ச்சனா அவனை நோக்கி “அனுவையும் கூட்டிட்டு போயேன்...”

“அதானே ரெண்டு பெரும் தேனிலவு போன மாதிரி இருக்கும்...” என்று யோசனை தந்தனர்.

அதற்குள் அனு, “எனக்கு பாஸ்போர்ட் இல்லை அண்ணி... எப்படியும் நாளைக்கே போகணும்னா அதுக்குள்ள முடியாது...” என்று மனம் சோர்ந்தாலும் வெளியில் காட்டிகொள்ளாமல் கூறினாள். அதன் பின் சோக கீதம் பாடினால் நன்றாக இருக்காது என்று தோன்றிவிட இலகுவாக பேசி அவனையும் சிரிக்கவைக்க பார்த்தாள்.

“குறைந்தது எத்தனை நாள் அங்க இருப்ப?”

“1 மாதம்...”

“ஓ... அப்போ அதுக்கு ஏத்த மாதிரி எடுத்து வைக்குறேன்...” என்று பேசிக்கொண்டே அவனுக்கு தேவையானவையை பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தாள். அவள் பேசிக்கொண்டிருக்க அவளை பின்னால் இருந்து அணைத்துக்கொண்டான் அஸ்வத்...

ஒன்றும் சொல்லாமல் அமைதியாக சிறிது நேரம் கடத்தினர்..

“அனு...”

“ம்ம்ம்ம்...”

“ஏண்டி இவ்வளவு வாய் பேசுறல்ல ஒரு பாஸ்போர்ட் ரெடி பண்ணனும்னு உனக்கு தோணவே இல்லையா...”

“ஏன் இத்தனை நாள் கூடவே தானே இருந்த உனக்கு கேட்கனும்னு தோணலையா?” 

“எல்லாத்துக்கும் எதாவது மாத்தி மாத்தி சொல்லு... போடி...” என்று கடுப்பில் போய் படுத்துக்கொண்டான்.

அவளுக்கும் வருத்தமாக தான் இருந்தது. வெகு நாட்கள் இல்லை என்றாலும் பெரிய இடைவெளிக்கு பிறகு சேர்ந்தமையால் மீண்டும் தூரம் தள்ளி போக மனம் வரவில்லை இருவருக்கும். அருகிலே திட்டிக்கொண்டே இருந்தாலும் அந்த அருகாமை இருவருக்குமே இனித்தது. ஒருவழியாக இரவும் கடந்துவிட, அவன் கிளம்பும் நேரம் வந்தது. விடுமுறை கொண்டாட வந்தவர்களும் அவனை வழியனுப்பி வைத்துவிட்டு கிளம்பிவிட, தனிமை கொஞ்சம் கொஞ்சமாக தொற்றிக்கொண்டது.

வள் தனிமை அவளது அத்தை மாமாவிற்கு நன்றாக புரிந்துவிட ஒரு யோசனை செய்தனர். “அனு...”

“என்ன மாமா?”

“நீ ரேடியோ ஸ்டேஷன் போறதில்லையாமா?”

“இல்லை மாமா பொங்கலோடு சேர்த்து ஒரு ஒருவாரம் லீவ் போட்டிருந்தேன்.”

“உனக்கு ரொம்ப போர் அடிக்கும். நீ அங்க போயிட்டு வரதால இப்படி தனியாக இருக்க வேண்டாம் பாரு அதுக்கு தான் சொல்லுறோம். அதோட அஸ்வத் கூட முன்னாடி நம்ம கம்பனிக்கு போயிட்டு தானே இருந்த... அப்போ அப்போ நிருகூட அங்க போயிட்டு வாமா...”

“சரி மாமா...”

அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தனிமை சூள்திருக்காமல் பார்த்துக்கொண்டாள். காலை ரேடியோ ஸ்டேஷன் மதியம் முதல் மாலை வரை கம்பெனி என்று சென்றுவிட்டு மீண்டும் வீடு வந்ததும் அத்தை மாமாவோடு நேரம் களித்துக்கொண்டிருந்தாள். தினமும் மறக்காமல் நேரம் தவறாமல் அஸ்வத் அழைத்து பேசினான். வேலை எவ்வளவு தூரம் சென்றுள்ளது.. இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று பேசுவார்கள்.. இவள் இங்கே நடப்பவை அனைத்தையும் கூறுவாள்... ஒருவாறு அவள் எதிர் பார்த்தது போலவே தான் சென்றது திருமணம் முடிந்தும் அவர்கள் கல்லூரி காலத்தில் பேசிக்கொண்டது போலவே இரவில் அலைபேசியில் பேசிக்கொண்டனர். அதே சீண்டல்கள், குறும்பு பேச்சுக்கள்... என்று நேரம் தள்ளி இருந்தாலும் சுவையாக சென்றது. அவன் கூறிய ஒரு மாதத்தில் முடிய வேண்டிய வேலை நீண்டு இன்னுமொரு மாதமாக செல்ல கடினப்பட்டு நாட்களை கடத்தினர்.

“ஹே அனு... என்ன சொல்லாம கொல்லாம திடிர்னு hospital வந்திருக்க? என்ன விஷயம்?”

“எதுவும் இல்லை... சும்மா தான் வந்தேன்... மேடம் இப்போவெல்லாம் ரொம்ப பிஸி அதான் நானே பார்க்க வந்திட்டேன்.”

“ஆமா அனு.. எப்போயோ நாங்க honeymoon ட்ரிப் போட்டோம் அதுகூட போக முடியலை...”

“அதான் டெய்லி வீட்ல honeymoon போல...”

“ஏய் சீ...”

“அடேயப்பா டாக்டருக்கு வெட்கம் வருது...”

“என் விஷயத்தை விடு, அங்க மட்டும் என்னவாம் அஸ்வத் பார்க்குறதை பார்த்தாலே தெரியுதே...” என்று கூறவும் அவனது பார்வையை அப்போது நினைத்தாலும் கன்னம் சூடேறியது... மெல்லிய முறுவலோடு அமர்ந்திருந்தாள்.

“என்ன அனு கனவா? ம்ம்ம்ம் நடத்து நடத்து...”

“தேஜு...”

“என்னடி...”

“எனக்கு ஒரு சந்தேகம்...”

“கேட்க இவ்வளவு யோசிக்குற அளவுக்கு என்ன சந்தேகம்?” என்று அருகில் வந்தாள்.

“அது... அஸ்வத் பக்கத்தில வந்தால் உள்ள படபடப்பா இருக்கு, ஆனால் பிடிக்கலைனும் சொல்ல முடியலை அது ஏன்? அப்பறம் ஏன் ஒரு மாதிரி நெர்வஸ்ஸா இருக்கு?” என்று கேள்விகேட்ட தோழியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்.

“சொல்லுடி...”

“அது ஒரு ஆணின் அருகாமை, பெண்மைக்கே உரிய கூச்சத்தையும் படபடப்பையும் தருது... அந்த ஆணே உரிமை உள்ளவனாகவும் முக்கியமா மனசுக்கு பிடிச்சவனாக இருக்குறதால தடுக்கவும் தோன்றது இல்லை... அவ்வளவு தான்... ஏய் நீ என்ன இந்த கேள்வியை 6 மாதம் கழிச்சு கேக்குற? அப்போ இதுவரைக்கும்...”

....

அவளின் முகத்தை வைத்தே கணித்தவள் மனம் கனிந்துவிட “பார்த்து மேடம் அஸ்வத் பாவம்...” என்று கிண்டலாக பேசி சூழ்நிலையை இலகுவாக்கினாள்.

“அம்மா...”

“எப்படிப்பா இருக்க?”

“நல்லா இருக்கேம்மா...”

“வேலை எப்படி போகுது... எப்போ முடியும்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.