(Reading time: 49 - 98 minutes)

 

6 மாதத்திற்கு பிறகு...

த்த... காப்பாத்து... காப்பாத்து...” என்று விபுன் ஓடிவர... பின்னே “அண்ணா ஓடிரு நான் அத்தைய புடிச்சிக்குறேன்” என்று அஹல்யாவின் கால்களை அழகாக கட்டிகொண்டாள் பாசமலர் தங்கை..

ஓடிவந்த விபுன் நேரே அனுவின் அறைக்குள் வந்துவிட்டு, அனுவின் முந்தானையில் ஒளிந்துகொண்டான்.

அவன் வேகமாக ஓடிவருவதை பார்த்துவிட்டு, அஹல்யாவும் அஸ்வத்தும் ஒருசேர “பார்த்துடா அத்த வயித்துல பட்டுராம...”

“ஏன்? என்னாகும்???”

“உள்ள இருக்க குட்டிப்பாபாக்கு வலிக்கும்” என்று சொல்லிக்கொண்டு விபுனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டான். காலை கட்டிக்கொண்டு நின்ற விருஷிக்காவை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு, “பாரு அனு சளி பிடுச்சுக்கும் தலை துவட்ட வாடான்னு சொன்னாள் கேட்க மாட்டிங்குறான்.”

அவன் அமர்ந்திருக்கும் ஆளை பார்த்துவிட்டு, “எங்க வந்து கம்ப்ளைன் பண்ணுரிங்க அண்ணி, இவ்வளவு வயசு ஆச்சு இவரே துவட்டிக்க மாட்டாரு...” என்று கிண்டல் தொனியில் பேசினாள்.

“அப்படியே மாமா மாதிரி வந்திருக்கடா இந்த விஷயத்திலையும்...” என்று அஹல்யா கூற, மற்ற இருவரும் வேற எதுல என்று வினவினர்.

“வேற எதுல... எல்லாம் உன்கிட்ட ஒட்டிகிரதுல தான்... அஸ்வதும் சரி அவனும் சரி உன்னை விட்டு ஒரு இன்ச் நகர மாட்டிங்குறாங்களே” என்று பேசிக்கொண்டிருக்க அஸ்வத்தின் மடியில் இருந்த விபுனுக்கு பேசியபடியே தன் சேலை தலைப்பில் துவட்டிவிட்டாள் இப்போது அமைதியாக இருந்த விபுனை ஆச்சர்யமாக பார்த்த அஹல்யா, தம்பியின் கண்களையும் பார்த்து புரிந்துகொண்டு, “சரிவாடா போதும் நீ துவட்டிகிட்டது, இன்னைக்கு ஈவெனிங் பர்த்டே function இருக்கு ரெடி ஆகணும் என்று கூப்பிட, இரும்மா... அத்த மாமாக்கு கூட தொடைக்கவே தெரியல தொடச்சுவிடு...” அதேநேரம் அவனின் கண்ணில் மின்னிய குறும்பை கண்ட அனுவுக்கு எல்லாம் புரிந்தது... அவனை மனதில் கொஞ்சிக்கொண்டு விபுனை அழைத்து சென்றதும், அவனது தலையை துண்டினால் துவட்ட போனாள்...

“எனக்கு இதுல வேணாம் உன்னோட புடவையில தான் வேணும்...”

“எப்பா... குட்டி பாபாவே வர போகுது இன்னமும் குட்டி குழந்தை மாதிரி நடந்துக்கோங்க...” என்று கூறினாலும் அவளது தலைப்பிலேயே துவட்டிவிட்டாள். அவள் இடையை சுற்றி வலைத்துக்கொண்டவன், அழுத்தாமல் மெதுவாக தலையை அவள் மீது சாய்த்துக்கொண்டான். “இப்படி இருந்தால் எப்படி துவட்டி விடுவேன் வாகாக இல்லையே...”

“அது உன் சாமத்தியம் எனக்கு இதுதான் வாகாக இருக்கு...”

“இருக்கும் இருக்கும்... என் புடவையை வேற ஈரம் ஆக்காதிங்க...” மெல்ல தலை நிமிர்த்தி அவளை பார்த்தவன் “உனக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன் இங்க கண்ணை மூடிட்டு உட்காரு” என்று அவளை அருகில் அமர சொல்லிவிட்டு மேலே தனியாக பூட்டிவைத்திருந்த பெட்டியை திறந்து கையில் ஒன்றை எடுத்தான்.

அவன் கூறியது போலவே கண்களை மூடியிருந்தவளின் கரத்தை எடுத்து அவனின் பரிசின் மீது வைத்தான். தொட்டதுமே தெரிந்தது அது புடவை என்று... “ஹே புடவையா?” என்று கண் திறந்தவள்... “ஹே இது....” என்று அவள் பார்க்க அவன் ஆம் என்பது போல் தலை அசைத்தான். அது அவனது அண்ணனின் திருமணத்தின் போது அவள் பிடித்தும் எடுக்காமல் போன புடவை அழகான இளம் சிவப்பில், மெல்லிய கொடியின் வேலைபாடு அழகாக இருந்தது. அவன் தனக்காக பார்த்து பத்திரபடுத்தி வைத்ததிலேயே உருகி போனவள் அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, “இதுக்கேவா? இன்னொன்னும் இருக்கே...” என்று கண் சிமிட்டினான்.

என்ன என்பது போல் அவள் பார்க்க, அந்த சேலையை விரித்தவன் சேலை முந்தானை மடிப்பு வரும் இடத்தில் ஒரு மெல்லிய சங்கிலியால் AA என்று ஒன்றின் மீது ஒன்றாக எழுதி இருந்தது.. அது அந்த சேலையோடு வந்தது அல்ல, சொல்லி செய்யப்பட்டிருந்தது... அதை பார்த்துக்கொண்டே இருந்தவளின் கைகள் அதை தடவி மனம் திருப்தி பட்டுக்கொள்ள, அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துகொண்டிருந்தவன் “அது என்னனு தெரியுதா அனு...”

“என்ன?”

“அந்த செயின்?”

.... உற்று பார்த்தவள் வாய் திறந்து ஆச்சர்யபட்டு போனாள் “ஹே... இது காலேஜ்ல உன் சட்டைல மாட்டின செயின் தானே...” என்று கண்கள் விரித்து கேட்டாள்...

அவன் அந்த அழகாய் விரிந்த கண்களில் மூழ்கி ஆம் என்று தலை அசைத்தான். உள்ளமெங்கும் அன்பு பொங்க அவனை அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தம் தந்தாள்.

“1ஸ்ட் அன்னிவெர்சரி பரிசு புடிச்சிருக்கா?”

“ரொம்ப நல்லா இருக்கு... ரொம்ப... பிடுச்சிருக்கு...” (இதை போன எபிசோடு ல சொன்னேனான்னு தெரியலை குழந்தைகளின் பிறந்தநாளும் இவர்களின் திருமண நாளும் ஒரே நாள் என்று... மறந்திருந்தால் மன்னிக்கவும்...)    

“அழகிடி நீ...”

“ரொம்ப வலியுற நிரு...”

“ஹ்ம்ம் என்ன பண்ண? நீ அவ்வளவு அழகா இருக்க...”

“ரொம்ப ஐஸ் வைக்குறியே... என்ன விஷயம்...”

“திருமணம் ஆகி ஒரு வருஷம் முடிஞ்சிருச்சு...”

“சரி...”

“இன்னைக்கு கொஞ்சம் ஸ்பெஷல்லா ஒரு முத்தம்...”

“சீ போடா...”

“ஏய் என்னடி வர வர எனக்கு சப்போர்ட்க்கு ஆள் இல்லன்ற கொழுப்புள கண்டபடி திட்டுற?!”

“என்ன சொல்லிட்டேன்னு நீ இப்போ கத்துற?”

“நான் என்ன கேட்டுட்டேனு நீ இப்போ சீன் போட்ட?”

“சரியான...” என்று அவளை விளையாட்டாக அடிக்கவந்தவளை தன்னோடு அணைத்துக்கொண்டான் நிரு

“என்னடா?”

“லவ் யூ டி...”

“சொல்ல முடியாது போடா...”

“இரு இரு எனக்கும் சப்போர்ட் பண்ண என் பொண்ணு வருவாள்...” பல நாட்களாக நிரு சொல்லும் வசனம் இது. ஆனால் தேஜு அவள் ஆசையை சொல்லி வைத்திருந்தாள். “எனக்கு அனுவுக்கு என்கையால பிரசவம் பார்க்கணும் போல இருக்குடா... அதுவரைக்கும் காத்திருப்போமே” என்று சொல்லவும் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக்கொண்டான் நிரு. இதையெல்லாம் நினைக்கும் போது அவனின் மீது அன்பு பொங்கியது எத்தனை பேர் ஒத்துகொள்வார்கள் திருமணம் போதும் அப்படிதான் நடந்தது, குழந்தையின் விஷயத்திலும் அப்படிதான்... எல்லாம் மனதில் தோன்ற அவனை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்னடி பார்வை இது...”

“ம்ம்ம்ம்... காதல் பார்வை...”

“காதல் பார்வையா??? அது எனக்கு ரொம்ப வசதியானது ஆச்சே...”

“ம்ம்ம்ம்... இருக்கும் இருக்கும்” என்று அவன் மூகோடு மூக்கு உரசி கொஞ்சினாள்...

“என்னடி ஓவரா கொஞ்சுற...”

“என் புருஷன் நான் கொஞ்சுறேன், உனக்கு எங்க வலிக்குது...”

“அது சரி எனக்கு ஏன் வலிக்க போகுது, இனிக்குது” என்று கண்சிமிட்டி இன்னும் அணைத்துக்கொண்டான்.

“போதும் போதும் விடுங்க நேரம் ஆச்சு...”

“நீ தாண்டி பிடுச்சிருக்க...” என்று மெல்லிய சிரிப்போடு கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.