(Reading time: 49 - 98 minutes)

 

நானா? மஜெந்தா...நீ அனு...”

“நான் நவாபழ நிறம்... நீங்க அக்கா” என்று அர்ச்சனாவிடம் திரும்பினாள்... “நான் என்னோட புருஷன் சட்ட நிறத்துல தான்ப்பா போட்டுப்பேன் லைட் ப்ளூ....” என்று அவள் கூறவும் அனைவரும் சேர்ந்து ஓ.... என்று கோரசாக கத்தினர்.

“ஏய் குழந்தைங்க தூங்குராங்க சும்மா இருங்க” என்று சிரிப்போடு கூறினார் அர்ச்சனா..

“தேஜு நீ??”

“எனக்கே தெரியலை அண்ணி என்ன போட்டுக்க?”

“ம்ம்ம்ம் நீ பிங்க் போட்டுக்கோ...”

“சரி அண்ணி... ஆனால் இத்தனை நிறம் இருக்கு நமக்கு ஏன் கொஞ்ச நாளுலேயே எல்லாமே போட்ட மாதிரியே தோணிடுது???”

“நம்மலே இப்படி சொன்னால் பசங்க என்ன பண்ணுவாங்க பாவம் அவங்களுக்கு ரெண்டே டிசைன் தான்” என்று சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.   

“(ஹே... ஹே... ஹே.... சுக்கி சுக்கி சுக்கி....)

கலக்கிட்ட சுக்கி... நல்லா விளையாடின... – பீம்..

அடுத்து அம்பு விடும் போட்டிக்கு மொதல்ல தயாரா இருக்குறது ராஜு...

(ஹே... ஹே... ஹே.... ராஜு... ராஜு... ராஜு...)”

“ஹே போதும் குட்டீஸ் டிவி ஆப் பண்ணுங்க நம்ம கிளம்பனும்..” என்று பரபரப்பாக வந்தாள் அஹல்யா...

“அம்மா அம்மா 2 மினிட்ஸ்ம்மா...”

“நோ குட்டி டைம் ஆச்சு பாரு, நம்ம நேரத்தோட போனால் தான் சாமி கும்பிட்டுட்டு சீக்கரம் வர முடியும்” என்று பேசியவாறே தொலைகாட்சியை அணைத்தாள் அஹல்யா...புடவையை சரிபார்த்தவாறே வெளியே வந்தாள் அனு..

“அண்ணி சரியா கட்டிருக்கேனா?”

“கட்டிருக்கம்மா இந்தா உன் மருமகனை பார்த்துக்கோ நான் போய் உன் அண்ணன் ரெடி ஆகிட்டறானு பார்க்குறேன்..”

“சரி அண்ணி...”

“அத்த நீ அழகா இருக்க..”

“உனக்கே இதை சொல்லி சொல்லி போர் அடிக்கலையாடா?”

“இல்லையே” என்று அவன் பேசிக்கொண்டு வர அவனை கொஞ்சிக்கொண்டே வந்தவள் அஸ்வத் மீது மோதி தடுமாறி நின்றாள். எதிரே நின்றவன் கண்ணை கவரும் வகையில் வெட்டி சட்டையில் இருக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்னனர். அமைதியை கலைப்பது போல, “ஏன் மாமா உனக்கு கண்ணே தெரியாதா?”

அவனது கேள்வியில் அனு சிரித்துவிட, அஸ்வத்தோ “எல்லாம் என் நேரம்டா... எனக்கு கிடைக்க வேண்டிய சலுகையெல்லாம் உனக்கு கிடைக்குது” என்று பொருமிவிட்டு போனான்.

இரு கைகளிலும் இரு பானை எடுத்துகொண்டு வந்து வண்டியில் வைத்துக்கொண்டிருந்த நிருவிற்கு உதவினாள் தேஜு.

என்ன சார் ரொம்ப வேலையோ என்று எதர்ச்சியாக அவன் நெற்றியில் வடிந்த வியர்வையை தன் இடுப்பில் சொருகிருந்த கைக்குட்டை வைத்து துடைத்தாள். அவ்வளவு தான் மயங்கிவிட்டான் நிரு... “ஹ்ம்ம்.. ஏண்டி உனக்கு இந்த வேண்டாத வேலை இப்ப எதுக்கு என்னை மனசு மாத்துற?...”

கணவன் கிறங்கி போக, அவளோ விளையாட்டாக “யோவ் போயா...” என்று செல்லமாக திட்டிவிட்டு சென்றுவிட்டாள்.       

விருஷிக்காவை கையில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தான் அர்ஜுன். அவனை தேடிக்கொண்டே வந்தவள் அவனை கண்டதும், “என்னங்க நீங்க இன்னும் கிளம்பலையா?”

அவளை சிறு நொடிகள் பார்த்து ரசித்தவன் “உன் அத்தை பாருடா உனக்கு போட்டியா தயார் ஆகிருக்கா...” என்று சொல்லி சிரிக்க அந்த குட்டி தேவதையும் அழகாக சிரித்தாள்.

“உங்களை திருத்தவே முடியாது... போங்க போய் எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க...” என்று கையில் இருந்த விருஷிக்காவை வாங்கிக்கொண்டு அர்ச்சனாவை தேடிசென்றாள்.

“இதை போட்டுக்கங்க மாமா...”

“முடியாது போடி... அந்த ஷர்ட் போட்டுக்குறேன்.”

“நீங்க இந்த கலர் போடுவிங்கன்னு தானே நான் இந்த புடவை கட்டினேன்...”

“அதுக்காகலாம் மாத்திக்க முடியாதுடா...”

“என்ன என்ன இங்க சின்ன பசங்க மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க நேரம் ஆச்சு பாருங்க...”

“இவர பாரு அஹல்... இவருக்காக நான் ப்ளூ கலர் கட்டினே... இவர் என்னடான இப்படி பண்ணுறாரு...” என்று எதுவோ பெரிய குறைப்போல சொல்லிக்கொண்டிருக்க, நவீனுக்கும், அஹல்யாவிற்கும் சிரிப்பாக வந்தது.

“நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க அண்ணா, அவளுக்கு மேட்ச்சா போட்டால் தான் திருப்தி...” என்று சிணுங்கிய தோழியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

ஒருவழியாக சிறுவர்களே அனைத்தையும் சரிபார்த்து தயாராகிவிட, பெரியார்களுக்கு வேலை குறைந்துப் போனது... அஸ்வத், அர்ஜுன், அஹல்யா, அனு, விபுன்,கண்ணன்,துளசி அனைவரும் ஒரு காரில் இருக்க, தேஜு, நிரு, நவீன், அர்ச்சனா,விருஷிக்கா,வெங்கட், ஹேமா மற்றொரு காரிலும், நவீனின் பெற்றோர், அன்பு,ரவி, லதா ஆகியோர் மற்றோர் காரிலும் ஏறிக்கொண்டு திருப்பூரை அடுத்த ஒரு கிராமத்துக்கு சென்றனர். அருகிலேயே இருந்தமையால் விரைவாக வந்துவிட, கோவில் கலை கட்டி இருந்தது.. வெளிபுரமே நன்றாக அலங்காரம் பண்ணிருக்க, வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தனர் சிறுவர்கள்.

பேசிக்கொண்டே வேலைகள் வேகமாக நடந்தது. ஆண்கள் எல்லாம் தூரமாக இருந்து தொல்லை தராமல் உதவி செய்ய, பெண்கள் எல்லாம் பேசிக்கொண்டே வேலை செய்தனர். அஹல்யா, அர்ச்சனா, அனு, தேஜு என நால்வரும் சேலையை இழுத்து சொருகி பொங்கல் வைக்க, பெரியவர்கள் எல்லாம் அருகிலேயே நின்று உதவி செய்தனர்.

விறகடுப்பு அருகில் நின்று பழக்கமில்லாத பெண்கள் எல்லாம் அவ்வபோது விலகி நின்று வியர்வை துடைத்துகொள்ள, தூரத்தில் நின்ற ஆண்கள் எல்லாம் ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டிருந்தனர். தூரம் இருந்து வேடிக்கை பார்த்த கணவன்களை எல்லாம் மயக்கி கொண்டிருந்த மனைவிகள் அருகில் இருந்த தட்டையும் கரண்டியையும் குழந்தைகளிடம் தந்து அவர்களை அழைத்து வர சொன்னனர். அவர்கள் வரவும் உலை பொங்கவும் சரியாக இருந்தது.

“பொங்கலோ பொங்கல்.... பொங்கலோ பொங்கல்” என்று அனைவரும் சேர்ந்து கத்த, வாண்டுகள் இரண்டும் தட்டை நன்றாக பிடிக்க தெரியாமல் அடித்துக்கொண்டிருந்தனர். அரிசியை உலையில் போட்டு ஆசுவாச படுத்தி நிமிர்ந்த அஹல்யா, “ஒரு பொங்கலோ பொங்கல் ஒழுங்கா கத்துரிங்களா? நல்லா ஓரமாய் நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இப்பதான் கல்யாணம் ஆன மாதிரி சைட் அடுச்சுகிட்டு இருக்கீங்க” என்று பொருமிக்கொண்டிருந்தாள். அதை பார்த்து அனைவரும் சிரித்து பேசிக்கொண்டிருக்க விரைவாகவே பொங்கலும் தயார் ஆனது.

சாமிக்கு படைத்து மனமார வேண்டி கோவிலில் இருந்த சிலருக்கு தந்து என்று நேரம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது. எல்லா வேலைகளும் முடிந்து மணியை பார்க்க நேரம் வெகுவாக மதியத்தை கடந்திருந்தது. லதா மணி இப்போவே ரெண்டை தொட்டிருச்சு, இனிமேல் வீட்டுக்கு போய் சாப்பிட நேரம் ஆகும் பிள்ளைகள கூப்பிடு இங்கேயே சாப்பிட சொல்லலாம்...

“சரி இரு கூட்டிட்டு வரேன்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.