(Reading time: 20 - 39 minutes)

 

ம் அகெய்ன்..?” புரிஞ்ச விஷயம் சரிதானான்னு புரியாம கேட்டான் வியன்.

“பயபடுறவங்களுக்கு எதப் பார்த்தாலும் எக்குதப்பாதான் தெரியும்கிறது அதுக்கு அர்த்தம்...உங்கள மாதிரியே நானும் இருக்கனும்னு எதாவது அவசியமா?...எனக்கு பயப்பட வராது...”

“வாட் யு மீன்...?...”

“தொட நடுங்கி தாண்டவராயன்....”மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டான் வியன். அவன் முகம் போன போக்கை நீங்களே கற்பனையில பார்த்துகோங்கோ.

“பாரட்டுனதுக்கு இப்படி ஒரு காம்ப்ளிமென்டாங்க..?” பாவமா பார்க்கான் பையன்.

“ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோதுங்க...ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரு வியன் ராஜ தொண்டைமான் அவர்களே பாதி பள்ளத்தில், பாறையில் ஆடும் இந்த விளையாட்டை முடித்துவிட்டு வெளியேறி வீடு போய் சேர வழி பார்க்கலாமா...இல்லை வாழ்த்துபாக்கள் பாடி பாதாளம் நோக்கி ஓடி வீடு பேறு அடையலாமா?” அரச கால பணிபெண் போல பவ்யமாக தலை குனிந்து உரிய ஏற்ற இறக்கத்துடன் அவள் சொல்ல

தப்பிச்சா போதும்னு வியன் தம்பி காரவிட்டு வெளிய வர வழி பார்க்க ஆரம்பிச்சது இங்க எனக்கு தெரியுது.

யேசப்பா....மிர்னி ஆசப்பட்டது மாதிரி அவள எப்படியாவது இந்த மேரேஜிலிருந்து காப்பாத்திருங்க....அவ ஆசப்பட்டது ப்ளான் பண்ணது எல்லாத்தையும் நல்லபடியா நடத்திக் கொடுங்க.....ஆனா...இப்படி என்னய இந்த கிறுக்கு கவின்ட்ட மாட்டிவிட்டுறாதீங்க...ப்ளீஸ்..ப்ளீஸ்....அம்மா அப்பா மனச எப்படியாவது மாத்திடுங்க....உங்களுக்கே தெரியும் நான் மிர்னி மாதிரி போல்டெல்லாம் கிடையாது...என்னால அம்மாப்பாட்டயும் நோ சொல்ல முடியாது...அத்தன பேர் முன்னாலயும் நோ சொல்ல முடியாது...

வேரி ஜெபத்தை தொடர தொடர கவினிற்குள் ஒரு திட்டம் பிறந்தது.

இவன் நினைத்தது சரிதான். தம்பி மிர்னாவை எங்காவது ஒளித்து வைத்திருப்பான். ஆக வியன்  சுகபத்திரத்தைப் பற்றி கவலை இல்லை. நிம்மதியாக இவன் தன் தனது இன்ஸ்டண்ட் திட்டத்தை நிறைவேற்றலாம்.

பெற்றோர்கள் குழுமி குடுமி பிடிக்காமல் சண்டை போட்டுகொண்டிருந்த அறைக்கு விரைந்தான். வாய்ப்பை நழுவவிட கூடாது. இப்படி ஒரு வாய்ப்பு இனி கிடைக்காது.

னெர்ஷியாவை டிஸ்டர்ப் பண்ணாம இப்படி மூவாகுங்க....” வியன் வழி நடத்த எந்த பதற்றமும் இன்றி அவனது ஒவ்வொரு செயலையும் அப்படியே பின்பற்றி காரை விட்டு வெளியே வந்தாள் மிர்னா.

ஸ்லோரேஸ்ல கூட கலக்குறியே எம்.எம்...கடைசில வந்த....நீ தான் செல்லூ வின்னர்... தோத்தாங்குழி பிகே...தோத்தாங்குழி பிகே...மேடத்தோட மைன்ட்வாய்ஸ்.

பௌர்ணமி நிலவு பாதைகாட்டியது.

கார் நின்றிருந்த பாறை, அந்த செங்குத்து மலையில் இருந்து அந்த பள்ளத்தாக்கிற்கு குறுக்காக நீட்டிக்கொண்டிருந்தது. அதனால் தான் கார் பாதாளத்தை அடையாமல் இப்படி பாதியில் நின்றிருப்பதே. ஆனால் அந்த பாறை கார் நின்றிருந்த இடத்தில் மாத்திரம் அகன்று பின்பு வால் போல் நீண்டு ஒரு கால் வைக்கும் அளவாக குறுகி, அச்செங்குத்து மலையின் குறுக்காக ஓடி, தோராயமாக 500மீட்டர் தூரத்திற்கு அப்பாலிருந்த சறுகலான நிலபரப்பில் முடிந்திருந்தது.

“மிர்னா இப்ப மாதிரியே நான் சொல்றதை அப்படியே ஃபாலோ பண்ணிட்டே வாங்க பக்கத்தில் அந்த சரிவுக்கு போய்ட்டோம்னா சேஃப்.”

“ம்” டி..மிர்னி இதில என்ன ரேஸ்டி வைக்க...ஃபாஸ்ட் ஸ்லோ ரெண்டுலயும் நிறைய மெடலாயிட்டு...புதுசா எதாவது....??? கேட் வாக்கிங்...கரெக்ட் கலக்கு எம் எம் நீ கலக்கு...இப்பவே சொல்லிட்டேன்...நான் தான் ஷோ ஸ்டாப்பர்....

அவள் யோசனையின் காரணம் புரியாத வியனோ அவள் தயங்குவதாக நினைத்து

“போய்ரலாம் தான...உங்களால முடியுமா...இல்லனா?” வியன் அவளை அசெஸ்மென்ட் பார்வை பார்த்தான்..

“ஐடியா....” அவள் ஆரவாரமாய் சொல்ல ஆர்வமாய் கவனித்தான் அவன்.

“எனக்கு போக முடியுமான்னு ஒரு தடவ போய் பார்த்துட்டு வந்து சொல்றேன்...”

ஷப்பா....தாங்கலடாப்பா....ங்கிற ரேஞ்சில ஒரு லுக் விட்ட வியன்

“கால்ல என்ன செருப்பு போட்டிருக்கீங்க..?” என்றபடி அவள் காலைப் பார்த்தான்.

ய்...பிகே...என்ன கேள்வில்லாம் எடக்கு மடக்கா இருக்குது....” மைண்ட் வாய்ஸ் எகிறினாலும் மௌத் வாய்ஸ் அடக்கித்தான் வாசிச்சது “ நாங்கெல்லாம் பேச்சுக்கு பதில் பேசித்தான் பழக்கம்...”

அவன் புரியாமல் அவளைப் பார்த்தான்.

“இல்ல.....நீங்க என்ன சொன்னாலும்...பதிலுக்கு பதில் பேசுவனே தவிர அடிக்கல்லாம் மாட்டேன்....” தன் செருப்பை குனிந்து பார்த்தபடி சொன்னவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் முகத்தில் அப்பட்டமாய் அதிர்ச்சி.

“ஹீல்ஸோட இந்த பாறையில நடக்கிறது ரிஸ்க்னு சொல்ல வந்தேன்...” தன் கையால் வல கன்னத்தை தடவிக் கொண்டான் வியன்.

அவன் என்ன காட்சியை கற்பனை செய்திருப்பான் என மன கண்ணில் கண்டவள் ஒரு கையை தன் வாய் மீது வைத்து வந்த சிரிப்பை அடக்கினாள்

“...அது...சில்லவட்...” என்றாள் அடங்காத பெரும் புன்னகையுடன். அவனுக்குமே சிரிப்பு வந்தது.

“ஓ...ஓகே” என உள்வாங்கியவன் “அப்படியே நில்லுங்க, நான் தான் கைவைக்றேன்...கால்ல எதோ ஏறுதுன்னு டென்ஷன் ஆயிடாதீங்க...உங்க ஃபூட்வேரை கழட்டிர்றது சேஃப்....உங்க ஹேண்ட்ஸ்ஸில் கிரிப் குறையாம பார்த்துகோங்க....கை ஸ்லிப் ஆனா கூட என் ஷோல்டரை பிடிங்க...”

பேசிக்கொண்டே குனிந்து அவனது ஒரு கையால் பாறையில் இருந்த எதையோ பிடித்துக் கொண்டு மறு கையால் அவளது செருப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக கழற்றி கீழே விட்டான்.

சத்தம் எழுப்பாமல் சென்று மறைந்தன அவை.

எத்தனை பெரிய பாதாளத்திற்கு மேல் இவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்?

அவனைப் பார்த்தாள். இதற்குள் அவனுக்கு வேர்த்திருந்தது. பின்னே அந்த குறுகிய பாறையில் நின்று கவனமாக பொறுமையாக இவள் செருப்பை கழற்ற கிட்டதட்ட அரை மணி நேரம் தேவைப்பட்டிருந்ததே!.

“இந்த சில்லவட் விலை நாலாயிரத்து ஐநூத்தி அம்பத்து ஒம்போது ரூபா...” அவள் சொல்ல அடுத்து இவள் என்ன சொல்ல வருகிறாள் என புரியாமல் அவன் பார்க்க....

“மேல போனதும் என்ன கீழ தள்ளுனதுக்கு நஷ்ட ஈடு தருவீங்கல்ல, அதில  இந்த 4559 ரூபயையும் சேர்த்துகோங்க...”

விளையாடுகிறாள் என துளியும் எண்ண முடியாத முகபாவத்தில் அவள் சொல்ல இதற்கு என்ன பதில் சொல்ல என புரியாமல் பார்த்தான் வியன்.

“சாரி...” எப்படியும் ஆக்ஸிடெண்ட் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமே, அவன் கேட்க...

“போ...பி.கே நீயும் செம போர்...வேரி மாதிரியே...” மைன்ட் வாய்ஸ் என நினைத்து ஓட்டைவாயாகி உளறினாள் எம்.எம்.

“பி.கே வா...? அப்படின்னா...?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.