(Reading time: 19 - 38 minutes)

சுமிம்மா என்ன வார்த்தை சொல்லிடிங்க ? " என்று அதிர்ச்சியில் அவன் கேட்கும்போதே கோபமாய் தனதறைக்கு  ஓடினாள்  சாஹித்யா ... ( டிங் டிங் டிங் .. பிளாஷ் பேக் ஓவர் )

அவர்களிடம் பேசிவிட்டு சத்யாவின் அறைக்குள் நுழைந்தான் அருள் ..

பூவுறங்குது பொழுதும் உறங்குது நீ யுறங்கவில்லை நிலவே

கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை நானுறங்கவில்லை

மானுறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை

மானுறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை என்

வழியுறங்குது மொழியும் உறங்குது விழியுறங்கவில்லை

" ம்ம்ம்ம்கும்ம்ம்ம் பெரிய ஜான்சி ராணி மாதிரி கோபமா வந்துட்டு இங்க பாட்டு கேட்டுகிட்டு இருக்கா பாரு " என்று மனதிற்குள் அவளை திட்டிக் கொண்டே அவளருகில் அமர்ந்தான் அருள் .. அவள் கண்மூடி பாட்டலில் லயித்திருக்க

" ஆமாவா ? நீ ஏன் உறங்கவில்லை சத்யா ? " என்று கேட்டான் அவன் .. அவனது முகத்தை பார்காமலே " எதுக்கு இங்க வந்த ? " என்றாள் .. சூடான கண்ணீர் அவளது கன்னங்களை நனைத்தது ..

" ஷ்ஷ்ஷ்ஷ் .. ஹே லூசு பிறந்தநாள் அன்னைக்கு யாராச்சும் அழுவாங்களா ? கண்ணை துடைச்சிக்கோ "

" நீ முதலில் ஏன் இங்க வந்த ? யாரை கேட்டு வந்த ? "

" நான் யாரை கேட்கணும் ? இது என் சத்யா ரூம் "

" உன் சத்யா ?? ஹா .... அப்படிலாம் ஒன்னும் இல்ல .. எனக்கு உன் மேல என் உரிமையும் இல்ல .. அதே மாதிரிதான் உனக்கும் ..கீழே போ .. அங்க தான்  இருக்காங்க உன் மேல அக்கறை உள்ள எல்லாரும் .. நான் உன் லைப் ஐ நாசம் பண்ண வந்தவ " என்றவளின் குரல் மீண்டும் உடைந்தது ..

" அப்படியே ஓங்கி ரெண்டு அறை  விட்டேன்னா தெரியும் "

" அருள் " என்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்  அதிர்ச்சியாய் ...

" என்னடி கொழுப்பா, அவங்கதான் தப்பா பேசினாங்கன்னா நீயும் அதையே பிடிச்சுகிட்டு இருக்க ? நான் சொன்னேனா உனக்கு என்மேல உரிமை இல்லன்னு ? இந்த சீன் போடுற வேலை எல்லாம் வேணா .. உனக்கு கோபம்னா அதை அவங்க மேல காட்டு .. என்னை இதுக்கு  பலிக்கடா ஆக்கலாம்னு பார்த்த, கொன்னுடுவேன் " என்றவன் அவளது தலையணையில்  வாகாய் சாய்ந்து கொண்டு பேசினான் ..

" சரி உனக்கு என்ன கல்யாணம் மேல அவ்ளோ வெறுப்பு "

" ப்ச்ச் ..நீயும் இப்போ ஏன்டா  அதையே பேசுற ? "

" ஹே நான்  ஒண்ணும் அதை தெரிஞ்சுகிட்டு சரி பண்ண போறது இல்ல .. சும்மா பொழுது போக கதை கேட்குறேன்னு வெச்சுக்கோ "

" கழுதையே .. இங்க ஒருத்தி உயிரை கொடுத்து அழுதா அதுக்கொரு மரியாதையும் கொடுக்காமல் கதை கேட்குறியா நீ ? " என்று கேட்டவளின் குரல் சற்று தெளிந்து இருந்தது ..அதை மனதிற்குள் குறித்து கொண்டவன் " வெரி குட் டா " என்று தன்னைத்தானே மானசீகமாய் பாராட்டிக் கொண்டான் ..

" என்னடா அமைதியா இருக்க ?"

" அடியே நீ என்ன மதர்  தெரேசாவா உன் கண்ணீரை பார்த்ததும் நான் உருகி போகுறதுக்கு .. முதலில் உன் சாமியார் வேஷத்துக்கு  காரணம் சொல்லு "

" சாமியாரும் இல்லை .. மாமியாரும் இல்லை .. எனக்கு கல்யாணம் வேணாம் அவ்ளோதான் "

" அதான் ஏன் ?"

" ப்ச்சச்  நம்மளை பிரிச்சிடுவாங்க அருள் "

" யாரு ??" என்று கேள்வி எழுப்பியவனுக்கு உண்மையிலேயே அவள் சொல்வது புரியவில்லை ..

" ஹ்ம்ம்ம்ம் எனக்கு புருஷனா வர போகிறவனும், உனக்கு மனைவியா வர போகிறவளும்... "

" வாவ் நீ மியுசிக் லே தான் டிக்ரீன்னு நெனச்சேன் .. ஆனா கை வசம் ஆருடம் சொல்லுற தொழில் வேற இருக்கு போல "

" டேய் !!! "

" பின்ன என்னடி .. ஏதோ பாட்டுதான் சரோஜா தேவி காலத்து பாட்ட கேட்குரன்னு பார்த்தா, மூளையும் அந்த காலம் மாதிரிதான் யோசிக்கிது ? ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் நு சொல்லுற ஜெனரேஷன் நாம தெரியும்ல .. என்னதான் அப்போவே கோ எடிகேஷன்  இருந்தாலும் அதை மேம்படுத்தினது நாமதான் .. "

" நீ சொல்ற அதே ஜெனரேஷந்தான் ஆணும் பெண்ணும் கொஞ்சம் நல்லா பழகினாலே காதல்ன்னு பார்க்குது .. நீயும் நானும் காலேஜ்ல பட்டது எல்லாம் மறந்துடுச்சா ? இன்னமும் பல பேரு நம்மளை லவ்வர்சா தான் பார்க்குறாங்க "

" லூசுப்பயளுங்க ..அவனுங்களுக்கு அருளின் டேஸ்ட்  புரியல .. "

" த்து .. நீயும் உன் டேஸ்ட்டும் .. நம்மளை தினம் தினம் பார்த்த ப்ரண்ட்ஸ்  ஏ  இப்படி தப்பா நினைக்கும்போது நமக்கு வர்றவங்க மட்டும்  புரிஞ்சுப்பாங்களா ? "

" ஹ்ம்ம் கஷ்டம் தான் பட் இம்பாசிபல் இல்லையே "

" உன் விஷயத்துல நான் ரிஸ்க் எடுக்க விரும்பல "

" சத்யா ..........."

" எதுவும் சொல்லாத அருள் ... நான் சொன்னா சொன்னதுதான் .. என்னைக்கோ வரபோற ஒருத்தனுக்காக உன்னை என்னால இழக்கவே முடியாது "

" ஜோசியக்காரன் எனக்கு ஏழரை சனின்னு தானே சொன்னான் .. நீ சொல்றத வெச்சு பார்த்தா இது ஜென்ம சனி போல இருக்கே "

" போடா டாக் "என்று தலையணையால் அவனை அடித்து தீர்த்தவள் இயல்பு நிலைக்கு வந்திருந்தாள் ..

" சத்யா , சுமிம்மா ....... "

" ............."

" இந்த ஒரு தடவை மன்னிச்சிரு டா .. அவங்க ஏதோ ஆதங்கத்தில் சொல்லிட்டாங்க "

" அவங்க பெரியவங்கதான் .. நாம அவங்களை மதிக்கணும் தான் .. அதுக்காக இப்படி நம்ம மனசை அவங்க கஷ்டபடுத்தலாம அருள் ?"

" புரியுது டீ .. எனக்காக இந்த ஒரு தடவை மன்னிப்போம் மறப்போம் ப்ளீஸ் "

அவனது முகத்தை கூர்ந்து நோக்கினாள்  அவள் .. அவளுக்குமே அன்றைய நாளின் சந்தோஷத்தை கெடுக்க எண்ணம் இல்லை

" சரி உனக்காகத்தான் ...பட் அதுக்காக அடிக்கடி இப்படி பொறுத்து போக மாட்டேன் "

" போடி ரொம்பதான் .. சரி வா கீழே போகலாம் " என்று கை நீட்டினான் அருள் .. அவன் கை பிடித்துக் கொண்டே வெளியே வந்தவள் , பெற்றோர் நால்வரும் சோகமாய் இருப்பதை பார்த்து மனம் வாடினாள் .. வழக்கம் போல தனது குறும்புத்தனத்தை ஆயுத்தமாகி நேராக சுமித்திராவிடம்

" அம்மா இந்த குரங்கை பாரும்மா .. ஐஸ் க்ரீம் கேட்டேன் ..தர முடியாது சொல்றான் .. " என்று அவரது கழுத்தை கட்டிக் கொண்டாள் .. மகள் வந்து மறைமுகமாய் சமரசம் ஆனதும் தாயாரின் மனமும் குளிர்ந்து .. மற்ற மூவரும் புன்னகையுடன் அருளை பார்க்க  அவன் கண்ணடித்து ஸ்டைலாய் சிரித்தான் ..

" என்ன தங்கச்சி ரொம்ப கோவமா இருக்க போல ?" - அவன்

" அவளை இன்னைக்கு கோவிலில் பார்த்தேன் அண்ணா ..அதுவும் அவன் கூட !"

" யாரை ?"

" அதான் அந்த சாஹித்யா .. அருள் கூட வந்திருந்தா "

" இன்னுமா இதுங்க ஒண்ணா இருக்குதுங்க "

" அதுதான் அண்ணா எனக்கு கடுப்பா இருக்கு .... "

" அதான் என்கிட்ட சொல்லியாச்சுல ... நான் பார்த்துக்குறேன் விடு " என்றுரைத்தான் அவன் .. இங்கு அவர்களை  பிரிக்க சதி திட்டம் நடக்க, அதே நேரம் இன்னொரு இடத்திலும் வேறொரு சதித்திட்டம் தீட்டப்பட்டது ..

" அண்ணாத்தே "

" என்னடா ? "

" முதலாளி ஒரு போட்டோ அனுப்பிருகார்"

" எங்க காட்டு "

அவன் அந்த போட்டோவை காட்டுமுன்னே ரங்கனுக்கு போன் வந்தது ..

" ரங்கா "

" சொல்லுங்கண்ணே "

" போட்டோ பார்த்தியா ? "

" பார்த்துட்டேன் .. யாருண்ணே  இந்த பொண்ணு ? தூக்கிடனுமா ? "

" ம்ம்ம்ம் .. என்ன பண்ணுவியோ அது உன் இஸ்டம் .. ஆனா அவன் அழனும் .. இவளை பார்த்து அவன் அழுரதை நான் பார்க்கணும் .. வேலையை முடிச்சிட்டு கூப்டு " என்று போனை துண்டித்தான் அவன் ..

( இப்படிஇரண்டுபுறமும்சூழ்ச்சிவலைகள்பின்னஆரம்பிக்க, சிக்கிக்கொள்ளபோவதுயார் ??? அடுத்தஎபிசோட்லசொல்றேன் .. தவம்தொடரட்டும்)

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:838}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.