" இது பாரு செல்லம்மா, உனக்கு என்மீது சந்தேகம் ஒன்னும் கிடையாது ..அதை முதலில் உன் மனசுல பதிய வெச்சுக்கோ. நீ விலகி போன்னு சொன்னதும் நான் டெல்லி போயிட்டேன் மூணு வருஷம் கழிச்சு உன்கிட்ட வந்தேனே, அப்போ உனக்கு என்மேல ஏன் எந்தவித சந்தேகமும் வரலை ?? அதுதான் காதல்டா ... காதலில் இந்த மாதிரி சின்னச் சின்ன ஊடல் எல்லாம் சகஜம் டா .. இதுதான் காதலை ஸ்வாரசயமாக்கும்...அளவோடு இருக்கும்வரை எதுவும் அழகுதான் செல்லம்மா .. அண்ட் எனக்கு தெரியும் நீ அளவுக்கு மீறி சந்தேகப்பட மாட்டேன்ன்னு.. அதனாலேதான் அப்போவே ஐ லவ் யூ ன்னு சொல்லி உன்கிட்ட சரண்டர் ஆகிட்டேன் " என்று சொல்லி அவள் நெற்றியில் முட்டினான். அவனது இயல்பான பேச்சில் மனம் நெகிழ்ந்தாள் முகிலா ...
" அதுவும் சந்தேகம் எதுவும் இல்லாமல், பொறாமை துளியும் இல்லாமல் சண்டையே போடாமல் காவியகாதலில் கூட வாழ்ந்திருக்க மாட்டங்க டா .. இதுதான் ரியாலிட்டி .. பட் எவ்வளவு சண்டை வந்தாலும் அது முடியும்போது ஒருதர் மீது ஒருத்தரின் காதல் அதிகம் ஆகுது பார்த்தியா அதுதான் எதார்த்தமான ஆத்மார்த்தமான காதல் "
எதுவும் சொல்லாமல் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் முகில்மதி .. அத்தனை நாட்களாய் அவள் மறைத்து வைத்த உண்மைகளை இன்று சொல்ல வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.
" எனக்கு இப்படயே இருக்கணும் போல இருக்கு எழில் .. அப்படியே உங்க தோளில் சாய்ஞ்சுகிட்டு லைப் லாங் நாம இப்படியே இருக்கணும் "
"அடடே என்னடா இன்னைக்கு சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் தர்ற நீ ? காவியாவின் வரவு உன்னை இவ்வளவு மாத்திடுச்சா ? தெரிஞ்சிருந்தா நான் எப்பவோ இந்த குரங்கை கூண்டோடு கூட்டிட்டு வந்திருப்பேனே "
" ஹா ஹா ... சர்ப்ரைஸ் லாம் ஒன்னும் கிடையாது எழில் .. இத்தனை நாளாய் மறைச்சு வெச்சிருந்த மனசை இப்போதான் திறந்து காட்டுறேன் அவ்வளவுதான் ..அதற்கு காரணம் நிச்சயம் வரவுதான் ,,ஆனா காவியா அக்காவின் வரவு இல்லை .. ஷக்தி அண்ணாவின் வரவு !!"
" ஷக்தியா ??? “
" ம்ம்ம்ம் ஆமா ..அண்ணாதான் காரணம் ... மூணு வருஷத்துக்கு முன்னாடி "
" அந்த சம்பவம் பத்தி ,வேணாமே டா "
" அதை நானும் நினைச்சு பார்க்கவிரும்பல் விரும்பல தான் எழில் .. ஆனா அன்னைக்கு ஒரு விஷயம் மனசுல தோணிச்சு, ஷக்தி அண்ணாவுக்கு மட்டும் இது தெரிஞ்சிருதா என்ன ஆகி இருக்கும் ? அப்போதான் நிறைய யோசிச்சேன் .. எனக்கு என் அம்மாவை விட அண்ணாவைத்தான் ரொம்ப பிடிக்கும் எழில் .. என் அண்ணாகிட்ட நான் எதையும் மறைக்கக முடியாது .. அப்படி இருந்த நான் அவர் இல்லாத நேரம், துபாய் போன நேரம் தானே நான் அந்த தப்பான முடிவை எடுத்தேன் ? நீங்க மட்டும் இல்லைன்னா ?" என்றவளுக்கு லேசாய் உடல் நடுங்கியது
" ரிலாக்ஸ் டா ... இன்னொரு நாள் பேசிக்கலாம் "
" எப்போதா இருந்தாலும் பேசித்தான் ஆகணும் எழில் .. அன்னைக்கு அந்த பிரச்சனையில் இருந்து வெளி வந்ததும் நான் எடுத்த முதல் முடிவு, இனி என் லைப் ல எதுவா இருந்தாலும் அதை நான் ஷக்தி அண்ணாகிட்ட சொல்லி அவர் சம்மதத்தில் தான் தொடங்கனும்னு .. அதுனாலதான் உங்க காதலை தள்ளி வைக்க நெனச்சேன் .. ஆனா உங்க செயலும் அன்பும் என்னை உங்க கிட்ட பக்கம் கொண்டுவந்துகிட்டே இருந்தது எழில் .. அட்லீஸ்ட் அண்ணா வர்றவரை பொறுமையா இருக்கணும்னு தான் உங்ககிட்ட நான் விலகியே இருந்தேன் .,.விலகி போக முடியாத அந்த நாளில்தான் வேணும்னே என்னைவிட்டு போங்கன்னு சொன்னேன் ... ஆனா நான் உங்களை தான் காதலிக்கிறேன் எழில் ..அப்பவும் எப்பவும் ஐ ஜஸ்ட் லவ் யூ மேட்லி. " என்றவாறு அவனது மார்பில் சாய்ந்தாள் முகிலா ..
" இன்னும் கொஞ்ச நாள்தான் எழில் .. ஷக்தி அண்ணாவும் மித்ரா அண்ணியும் சேரனும் அதுக்கு பிறகு நானே என் அண்ணாகிட்ட நம்மளை பத்தி சொல்லிடுவேன் " என்றாள் ..
" போதும்டா .. இது போதும் எனக்கு .. உன் மீது எனக்கு கோபம் இல்லைன்னாலும் நீ ஏன் என்னை புரிஞ்சுக்காம இருக்கன்னு அடிக்கடி பீல் பண்ணி ..இருக்கேன் . இன்னைக்கு உன் மனசை புரிஞ்சுகிட்டேன் டா .. எதுவா இருந்தாலும் நாம சேர்ந்து பேஸ் பண்ணுவோம் "
" ம்ம்ம்ம்ம்ம்ம் ஐ லவ் யூ எழில் "
" லவ் யூ டூ முகிலா " என்றான் எழில் .. அதன் பிறகு ,
" இன்னைக்கு நீ மனசு விட்டு பேசியதால் உனக்கு மட்டும் ஒரு சீக்ரட் சொல்லவா ?" என்றவன் காவியாவிற்கு கதிர் மீது உள்ள நேசத்தை சொன்னான் ..
" நிஜம்மாவா எழில் ? காவியாதான் எனக்கு அண்ணியா ?"
" அது உன் அண்ணா கையில தான இருக்கு டா "
" கவலையே படாதிங்க ... ரெண்டு பேரு மனசுலயும் என்ன இருக்குன்னு பார்த்து சேர்த்து வைக்கிறது என் பொறுப்பு " என்று சொல்லி சிரித்தாள் அவள் .. முகம் நிறைய புன்னகையும் மனம் நிறைய நிம்மதியுமாய் இருந்தவளை பார்த்து அன்பெழிலனும் நிம்மதியானான் .. அன்றைய தினமும் அனைவரையும்விட எழிலுக்கும் , காவியதர்ஷினிக்கும் தான் இனிமையாய் கழிந்தது !
மூன்று நாட்கள் கடந்து இருந்தது..
தனது அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் மதியழகன்.. அப்போது ஒரு கை, அவனது காதைப் பிடித்து திருக
" ப்ச்ச்ச் ஷாந்து சும்மா இருடா ...தூக்கம் வருது " என்றான்... மீண்டும் அதே கை அவன் தலை கோதி விட
" டேய் செல்லம் .. பக்கத்து வீட்டு பசங்க கூட விளையாடு டா .. என் ராஜாகுட்டி ல ப்ளீஸ் " என்று கொஞ்சியபடி திரும்பி படுத்தான்..பாதி தூக்கத்தில் இருந்தவனின் கண்கள் கதவு தாளிட்டு இருப்பதை உறுதிசெய்து கொண்டது... மீண்டும் அதே கை முன்னேற
" காலையிலே உனக்கென்னடி விளையாட்டு ..என் ஆசை பொண்டாட்டி " என்று சொல்லி தேன்நிலாவின் கையை பிடித்திழுத்தான் மதியழகன். அவன் இழுத்த வேகத்தில் அவன் மீதே சாய்ந்தாள் தேன்நிலா ..
" திருடா .... நான்தான்னு தெரியுமா உனக்கு ?" என்று சொல்லி அவன் கன்னத்தை கிள்ளினாள் அவள் ..
" ஹா ஹா .. நீ என் ரூமுக்கு வந்தபோதே எனக்கு தெரியும் குட்டிமா " என்றான் அவன் ..
" இதெல்லாம் ஓவர் ...பொய் சொல்லாத நீ " என்று விரல் நீட்டி மிரட்டியவளின் விரலை வலிக்காமல் கடித்தவன்
" உன் பெர்பியும் வாசம் எனக்கு தெரியாதா ??? " என்று சொல்லி கண்ணடித்தான் ..
" ஆமா ஏதோ அன்னைக்கு விளையாட்டுக்கு தான் நீ என்னை நீ வா போன்னு கூப்பிடுறன்னு நெனச்சேன் .. நீ என்னடான்னா, பெர்மனன்ட்டா எனக்கு மரியாதையே தரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியோ ?" என்று கேட்டான் மதியழகன் ..
" விளையாட்டா ஐ எம் சீரியஸ் மது .. எனக்கு நீங்க வாங்க போங்கன்னு கூப்பிட புடிக்கல .. நான் உன்னுடைய சரிபாதி தானே ? அப்போ இப்படித்தான் கூப்பிடுவேன் " என்றாள்...
" சரி உன் இஸ்டம் டா குட்டிமா .. நீ எப்படி கூப்பிட்டாலும் சம்மதமே "
" அய்யே..என்ன நீ உடனே ஓகே சொல்லிட்ட ? ஹீரோன்னா கொஞ்சம் பந்தா காட்டனும் மிஸ்டர் மது " என்று அவனை கொஞ்சினாள் தேன்நிலா ..
" ஊருக்கே ஹீரோன்னாலும் ஹீரோயின் முன்னாடி ஜீரோ தான் மிசஸ் மது " என்றான் அவனும் அவளை கொஞ்சியப்படி ...
" சரி சரி ... என்னை விடு " என்று அவனிடமிருந்து எழுந்தவள்
" நான் எப்படி இருக்கேன்னு சொல்லு " என்றபடி இடமும் வலமும் ஸ்டைலாய் நின்று காட்டினாள் ..
" ம்ம்ம்ம் வார்த்தையா சொல்லவா ? இல்லை பாடி காட்டவா ?"