கண்ணீருடன் அமர்ந்திருந்த சங்கமித்ரா, அதிகம் யோசிக்காமல் சென்னையில் தனக்கு மட்டும் தெரிந்த ஒரு தோழிக்கு போன் செய்து பேசிவிட்டு போனை வைத்தாள் ...
அப்பா,
இப்போதைக்கு என் பேச்சை பொறுமையாய் கேட்க இந்த வீட்டில் யாரும் இல்லைப்பா ...உங்களை நம்பித்தான் இந்த கடிதத்தை எழுதுறேன். எனக்கு ஷக்தி மாமாவை கல்யாணம் செய்துக்க முழு சம்மதம் அப்பா ... ஆனா அதுக்கு முன்னாடி நீங்க வைஷ்ணவி அக்காவையும் ஷக்தி மாமாவையும் கூப்பிட்டு பேசுங்க அப்பா ... அக்காவுக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதமா ?ன்னு கேளுங்கப்பா ..உங்களுக்கே எல்லாம் தெரியவரும் ... நான் இங்க இருந்தா எல்லாம் சரியா நடக்கும்னு எனக்கு தோணலை ... நான் சென்னையில் இருக்குற என் தோழியை பார்க்க போறேன் ... நீங்க எனக்கு கால் பண்ணுங்கப்பா .... எல்லாம் சரி ஆகிடுச்சுன்னு நீங்க சொல்லுங்கப்பா அடுத்த நிமிஷம் நான் இங்கு வரேன் ... உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அப்பா ...நீங்க இதை சரி செய்திடுவிங்க ..அதே மாதிரி என் மீதும் நம்பிக்கை .வைங்க .நான் பத்திரமா இருப்பேன் .. அம்மாகிட்ட சொல்லுங்கப்பா அவங்க பொண்ணு எங்கயும் ஓடி போகல ... பிரச்சனைகளை விட்டு ஒதுங்கி .நிக்குறேன்னு . இது என் சீக்ரட் நம்பர் அப்பா ...உங்ககிட்ட மட்டும் தரேன் .. உங்க காலுக்கு வைட் பண்ணுவேன் ***********
அன்புடன் ,
மகள் மித்ரா
இதுதான் அந்த வீட்டில் இருந்து அவள் வெளியேறும் முன்பு கடைசியாய் எழுதி வைத்த .கடிதம்..தனது தந்தை அருகில் அதை வைத்துவிட்டு புறப்பட்டாள் மித்ரா ... சூரியன் கூட உதயமாகாத அந்த அதிகாலையில் வீட்டை விட்டு புறப்பட்டவளை தனது அறையில் ஜன்னல் வழியாக பார்த்தான் ஷக்தி ...தன்னையும் மீறி கண்ணீர் அவனது கன்னங்களை நனைத்தது..
" என்னை விட்டு எவ்வளோ தூரம் போயிடுவ நீ மிது ?" என்று கேட்டுகொண்டவன் போனில் எழிலை அழைத்தான் ..
" ஷக்தி என்ன இந்த நேரத்துல ?"
" நாம சந்தேகபட்ட மாதிர்யே அவ கிளம்பிட்டா அன்பு "
" நான் உடனே வரேன் "
" சரி ..ஆனா அவளை தடுக்க வேணாம் .. நான் சொல்லுற மாதிரி செய்ங்க "என்றான் ஷக்தி ...
" ஹாய் மை டியர் மித்ரா டார்லிங் " என்று சிரித்துக் கொண்டே அந்த அறையில் நுழைந்தார் மனோ ...
இனிய கனவு கலைந்தது போல தூக்கி வாரி போட அவரை நோக்கினாள் சங்கமித்ரா ....
( வைட் வைட் வைட் ?? என்ன நடக்குதுன்னு கேட்குறிங்களா ??? எவ்வளவு நாள்தான் நம்ம மிது மேடம் ப்ளாஷ் பேக் பற்றி தனியாகவே அசைப்போடுவாங்க ? கொஞ்சம் நிகழ் காலத்திற்கும் வரணும்ல ... அதனால் பிளாஷ் பேக்கை இங்கயே நிறுத்தி வைக்கிறேன் ... ஹா ஹா ஹா )
" அச்சோ பயந்துட்டியா பேபி "
" இல்லப்பா " என்று எழ முடியாமல் எழுந்தாள் நிறைமாத கர்ப்பிணியான சங்கமித்ரா ...
" இந்த நேரத்துல தனியா வெளிய வரக்கூடாது டா "
" சாரி மனோப்பா "
" இட்ஸ் ஓகே டா ... வா வீட்டுக்கு போலாம் "
" வேணாம் மனோப்பா எனக்கு ஷக்தியை பார்க்கணும் என்னை எங்க வீட்டுல விட்டுறிங்களா ப்ளீஸ் "என்றாள் மித்ரா,,,
"இதுக்கு ஏன் ப்ளீஸ் சொல்ற ? வா போகலாம் "என்று சங்கமித்ராவை அவளது வீட்டில் பத்திரமாய் விட்டுச் சென்றார் மனோ .. வாசலில் சத்தம் கேட்கவும் ஓடி வந்தாள் காவியதர்ஷினி
" நீ இன்னும் தூங்கலையா கவி ?"
" நல்லா கேட்டிங்க அக்கா ... நீங்க பாட்டுக்கு சொல்லாமல் கொள்ளாமல் போய்ட்டிங்க ...வீடே கலவரமாச்சு .. கொஞ்ச நேரம் முன்னாடி தான் நீங்க நிலா அக்கா கூட இருக்கிங்கன்னு ஷக்தி சொன்னாரு..."
" அவர் எங்க ?"
" தூங்கரார்ன்னு நினைக்கிறேன் "
"கதிர் , மதி ??"
" ஷக்தி உங்களை தேடிட்டு இருந்ததுனால கதிர் கடையை பார்த்துக்க போனாரு அக்கா .. கடை அடைச்சிட்டு கொஞ்ச நேரம் முன்னதான் கிளம்பினார் .. வர்ற நேரம் தான் .. முகில் படிச்சுகிட்டு இருக்கா "
" என்ன இந்த பொண்ணு ? சரியா சாப்பிடாமல் தூங்காமல் படிச்சுகிட்டே இருக்கா ? சரி நான் அவகிட்ட பேசிக்கிறேன் ... நீ சாப்டியா ?"
" இல்ல ..கதிர் வரட்டும் "
" ம்ம்ம்ம் சரி " என்று வீட்டினுள் நுழைந்தாள் மித்ரா ..
" மதி "
" அண்ணி " என்றவள் மித்ராவை அணைத்துக் கொண்டு அழுதாள் ...
" எங்க போனிங்க அண்ணி ??? அண்ணா பாவம் தெரியுமா " என்றாள் ...
" ஷ்ஷ்ஷ்ஷ் ...அதுக்கு நீ ஏன் அழற ? உன் அண்ணாவே உன் அளவுக்கு வருத்தப்பட மாட்டார் மதி .. நீ முதலில் கண்ணை துடைச்சிக்க "
"..... "
" சரி படிச்சது போதும் .. போயி தூங்கு "
" ம்ம்ம்ம்" என்றவள் தன் புத்தகத்தை மூட அவளது செல்போன் சிணுங்கியது
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
முகில்மதி போனை எடுக்காமல் இருக்கவே அழைப்பு நின்று போனது ..போனை எடுத்து பார்த்தாள் சங்கமித்ரா ...
" எழில் 22 மிஸ் கால் ............ஹ்ம்ம்ம்ம் .... " என்று இரண்டடி எடுத்து வைத்தவள் மீண்டும் முகில்மதி பக்கம் திரும்பி
" ஒன்னு சொல்லவா மதி ?" என்றாள் .,..
" சொல்லுங்க அண்ணி "
" உன் அண்ணாவை நான் தவிக்கவிடும்போது உனக்கு எப்படி வலிக்கிறதோ, அதே மாதிரிதான் என் நண்பனை நீ ஒதுக்கி வைக்கும்போது எனக்கு வலிக்கிறது " என்றாள் மித்ரா ...
" அண்ணி ???"
" யோசிச்சு முடிவெடு முகில் ... எழில் யாருகிட்டயும் இப்படி கெஞ்சி நான் பார்த்தது இல்லை .. எனக்கே எங்க உன்மீது கோபம் வந்திடுமோன்னு பயம்மா இருக்கு மதி " என்றாள் சங்கமித்ரா ... பதில் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்தாள் முகில்மதி ...
" சரிம்மா உன் லைப் நீயே முடிவெடு " என்று தனதறைக்கு சென்றாள் சங்கமித்ரா.
சங்கமித்ராவின் தலையணையை கட்டியணைத்து உறங்கிகொண்டிருந்தான் ஷக்தி..ஏதேதோ சிந்தனையோடு உறங்கினான் போலும் தூக்கத்திலும் புருவங்களை நெளித்தபடி உறங்கிக் கொண்டிருந்தான் அவன் ... மெல்ல அவன் புருவங்களை வருடிக் கொண்டுத்தாள் சங்கமித்ரா ... அவன் தூக்கத்திலேயே திரும்பி படுக்க கட்டிலில் சாய்ந்து அமர்ந்தப்படி அவனது தலையை மடியில் வைத்து கேசத்தை கைகளால் அளந்தாள் ...
" இவனும் குழந்தை தான் " என்று எண்ணிய நேரம், வயிற்றில் இருந்த குட்டி ஷக்தி அல்லது குட்டி மித்ரா லேசாய் அசைய " ஒரே நேரத்தில் இரு குழந்தைகளை சுமந்தப்படி "நிம்மதியாய் கண்ணுறங்கினாள் சங்கமித்ரா .,..
அடுத்த ப்ளாஷ் பேக் எப்போ ? சென்னை போன மித்ரா என்ன ஆனா ? தற்பொழுது ஏன் முகிலாவும் எழிலும் சேராமல் இருக்காங்க ? இதெல்லாம் அப்பறம் சொல்றேன் ...பாய் பாய்
தொடரும்
{kunena_discuss:777}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.