(Reading time: 30 - 59 minutes)

" பாட்டு பாட்டு " என்று சிறுபிள்ளை போல ஆர்பரித்தாள்  தேன்நிலா.

பொன்னை நான் பார்த்ததில்லை

பெண்ணைத்தான் பார்த்ததுண்டு

பூவை நான் கண்டதில்லை

பூவையைக் கண்டதுண்டு

இந்த பூமியின் இன்ப தேவதை

அன்பு ராகம் நீயேதான்

எந்தன் கோவிலில் மஞ்சள் ஓவியம்

காதல் தீபம் நீயேதான்

என்று உணர்ந்து பாடினான் மதியழகன்... காதல் வழிந்த அவன் குரலும் பார்வையும் அவள் மனதை வருடியது ..

" ஐ லவ் யூ மதுக்கண்ணா " என்று அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சிட்டாய் பறந்துவிட்டாள் தேன்நிலா .. சின்னச்  சின்ன குறும்புகளையும் ரசித்தவன்  புன்னகையுடன் அன்றைய தினத்தை .தொடங்கினான் .. ஹாலில் அவளும் அம்மு பாட்டியும் பேசுவது அவன்  விழுந்தது...

சரியாய் அந்த நேரம் தேன்நிலாவின் செல்போன்  சிணுங்கியது...

" குட்டிச்சாத்தான் காலிங் " என்று வாய்விட்டு சொன்னாள்  அவள் ..

" யாரும்மா ?" என்று அம்முபாட்டி கேட்க

" என் சிநேகிதி பாட்டி .. நான் பேசிட்டு வரேன் " என்றபடி பால்கனிக்கு ஓடினாள்  நிலா ..

" ஹாய்  ஹனிமூன் "

" குட்டிச்சாத்தான் ..எத்தனை தடவை சொல்றேன் அப்படி கூப்பிடாதேன்னு "

" எத்தனை தடவைன்னு நான் கணக்கு பண்ணலையே ஹனிமூன் "

" ஷாபா  ஒரே மொக்கையை சலிக்காமல் உன்னாலத்தான்  சொல்ல முடியும் புவீ " என்றாள்  நிலா சலிப்பாய் ..

" பின்ன உன்கிட்ட என்ன நாட்டின் நிலவரத்தை பத்தியா பேச முடியும் ? ஆமா அதென்ன காலையிலேயே  எனக்கு கால் பண்ண சொல்லி மெசேஜ் அனுப்பி இருக்க ?"

" காலையா ? அடியே இங்கயே மணி 10 .அங்க சிங்கப்பூர்ல மணி 12.30 தானே ? இது உனக்கு காலையா ?"

" சாரி ஹனிமூன் ..என்னை பொருத்தவரை நான் கண்முழிக்கிற நேரம்தான் அதிகாலை ... ஒரு பாட்டு கேட்டுருக்கியா ?

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதினால்

பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

அந்த பாட்டே எனக்காகத்தான் எழுதினாங்க தெரியுமா உனக்கு ?"

"வைரமுத்து சார் க்கு மட்டும் இது தெரியனும், உன்னை தேடி வந்து உதைப்பாரு "

": ஹா ஹா அதுக்கு பயந்துகிட்டுதான் நான் சிங்கபூர்ல பிரந்துட்டேன் பேபி "

" அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் வாய் மட்டும் வாசப்படி தூரம் போகும் "

" உனக்கு என் அண்ணாவை பத்தி பேசுறதுக்கு நான் ஒரு சாக்கு "

" நீ சாக்கு  இல்லடி ..பேக்கு "

" நிலா இப்போ  நீதான் மொக்க போடுற ! என்ன விஷயம் சொல்லு எனக்கு உன் குரல் கேட்டு அகின் தூக்கம் வருது "

" அடிக்கழுதை.. எனக்கு மதுவுடைய அம்மா அப்பாவை பார்க்கணும் "

" பாரு "

" அடியே ..அவங்க இப்போ சிங்கப்பூர் கு வந்திருக்காங்கன்னு பாட்டி சொன்னங்க "

" ஓஹோ  சோ ??"

" சோ நான் விசா எல்லாம் ஏற்பாடு  அங்க வரப்போறேன்.. என்னை பிக் அப் பண்ணுறதுல இருந்து அத்தை மாமாவை பார்க்குறது வரை நீதான் பொறுப்பு எடுத்துக்கணும் "

" இதை நீ சொல்லனுமா ஹனிமூன் ?? பட் அண்ணாகிட்ட சொன்னா அவரே உன்னை கூட்டிட்டு வருவாரே "

" இல்ல அதெல்லாம் இப்போதைக்கு சரி வராது  புவீ ... "

" ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் " என்று ஏதோ யோசித்தவள்

" சரி டீ .. நீ எல்லாம் ரெடி பண்ணிட்டு எப்போ வரன்னு சொல்லு " என்றாள் புவனா ..

" ஓகே ஓகே .. நான் உங்கண்ணா வீட்டில் இருந்து பேசுறேன் டீ ..பாவம் அவர் என்னை தேடுவார் ..  சோ அப்பறமா இதை பத்தி டிடைல்ட்டா பேசலாம் " என்றாள் ...

" ஓகே ஹனிமூன் " என்று புன்னகையுடன் போனை வைத்தவள் உடனே மதியழனை அழைத்தாள்  .. தனது அறை கதவை திறக்க வந்த மதியும் அவளது பெயரை போனில் பார்த்ததும் முதலில் போனை எடுத்தான் ..

" அண்ணா "

" புவீ , என்னடா ?"

" வேற என்ன உங்க குட்டிமா சிங்கப்பூர் வராலாம் .. இப்போதான் போன் பண்ணி சொன்னா " என்றாள்  புவனா .. மதியழகன் விரிந்த புன்னகையுடன் 

" நினைச்சேன் ! இவ இப்படித்தான் பண்ணுவான்னு " என்றான் பெருமையாய்

" அண்ணா நீங்க பொறுமையாய் பெருமை பட்டுக்கொங்க ... இப்போ நம்ம அடுத்தகட்ட ப்ளான்  என்ன ?"

" டோன்ட் வர்ரி  தங்கச்சி ... கௌதம் மேனன் தியரியை கடைபிடிச்சா போதும் "

" அதென்ன கௌதம் மேனன் தியரி ?"

" ஹா ஹ ஹீரோயின் எந்த வெளிநாட்டுக்கு போனாலும் ஹீரோவும் பின்னாடியே போறதுதான் கௌதம் மேனன் தியரி "

" ஹையா சூப்பர் ... அண்ணா அப்போ நீங்களும் என்னை பார்க்க வர்ரிங்களா ? " என்று துள்ளி குதித்தாள்  புவனா ..

" எஸ் தங்கச்சி .... மிச்சத்தை நான் அப்பறம் பேசுறேன் .. பாவம் அவ  வைட்  பண்ணுவா " என்று சொல்லி போனை வைத்தான் மதியழகன் ..

புரிதல் ...! வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கம் .. உறவு என்ற வண்டி நிம்மதியாய் பயணம் கொள்ள புரிதலும் பொறுமையும் அச்சாணி.. இங்கு தேன்நிலா  மிகப்பொருமையாய்  திட்டம் போட்டு கொண்டிருந்த நேரம், அங்கு சங்கமித்ரா பொறுமை கிலோ என்ன விலை ? என்று கேட்கும்படியாய்  முடிவெடுத்து கொண்டு இருந்தாள் ...

இரண்டு நாட்களுக்குப் பிறகுதான், வீடு திரும்பினாள்  வைஷ்ணவி.. வீட்டிற்கு நுழைந்தவளை " பளார் " என்று அறைந்து வரவேற்றார் சித்ரா..

" அம்மா " என்று அதிர்ச்சியில் உறைந்திருந்தனர் இரண்டு மகள்களும் ..

" இந்த அறையை நான் எப்பவோ கொடுத்திருக்கணும் உங்க ரெண்டு பேருக்கும் ! செல்லம் கொடுத்து ரெண்டு பெண்ணையும் கெடுத்து வெச்சிட்டேன் " என்றார் சித்ரா கோபமாய் ..இப்போ அவரிடம் அறை  வாங்கியது  மித்ராவின் முறையானது.. தேவசிவன் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை .... !

" என்னடி நினைச்சுகிட்டு இருக்கீங்க ரெண்டு பெரும் ?" என்று கோபமாய் கேட்டார் சித்ரா ..

" நீ எப்போ வீட்டுக்கு வரன்னு சொன்ன வைஷு  ??"

" அம்மா அது வந்து ....."

" உன்னால இங்க என்ன நடந்துச்சுன்னு தெரியுமா ?"

" ..."

" இதோ உன்கூட பிறந்த பெரிய மனுஷியை கேளு .. ஏதோ கொஞ்ச நாள் ரொம்ப தெளிவா முடிவெடுக்கிறான்னு  நானும் இவ வாய் துடுக்கை கண்டுக்காம விட்டேன் ... ஆனா பெரிய மனுஷி எல்லா   முடிவையும்  அவளாகவே எடுக்க ஆரம்பிச்சுட்டா ... பெரியவங்களை சபையில் நிற்க வெச்சு கேள்வி கேட்குற அளவுக்கு வளர்ந்துட்டா "

"......"

" போங்கடீ ! ரெண்டு பெரும் என் கண்ணுமுன்னாடி நிற்காதிங்க ... இனி எவளாச்சும் வாய திறங்க அப்போ இருக்கு " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாய் சென்றார் சித்ரா ...

" அக்கா " என்று மித்ரா அழைக்கவும் " உனக்கு இப்போ சந்தோசம் தானே மித்ரா "என்று சொல்லி அங்கிருந்து சென்றுவிட்டாள் வைஷ்ணவி  ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.