(Reading time: 36 - 71 minutes)

பார்த்தீங்களா...பார்தீங்களா...நீங்க என்ன நம்பலை.....உங்கள யாரவது லவ் பண்ணாங்கன்னு தெரிஞ்சா....அதுக்கு நான் ஏன்பா அப்செட் ஆக போறேன்.....”

“முத முதல்ல என்னை லவ் பண்ண ஆரம்பிச்ச பொண்ணு... திருமதி நீலா மனோகர்....” அவன் சொல்ல துவங்க சட்டென அவனுக்கு ஒரு அடி வைத்தாள் மனைவி..

“போடி...நீ கேட்டன்னு பதில் சொன்னா அடிக்கிற....”

“பிறகு உங்க அம்மாவ சொல்றீங்க...”

“ஆமா என்னை பார்த்தவுடனே எங்கம்மாவுக்கு பிடிச்சுட்டதாம்....நான் எங்க அம்மா வீட்டு சாயல் வேற...எப்பவும் வியனைவிட ஒரு % அதிகமா எங்கம்மாவுக்கு என்னை தான் பிடிக்கும்...” முறைப்பாக அவனை பார்க்க தொடங்கியவள் அவன் பேச்சை கேட்க கேட்க அதை தக்க வைக்க முடியாமல் சிரித்தாள்.

“இப்டிதான் அங்க வியனும் சொல்லிகிட்டு இருப்பார்....”

“ஹி ஹி அது எங்க அம்மாவோட சாமர்த்தியம்....தன் குழந்தைகள ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைக்கிறது...”

உண்மைதான் வேரியின் மனம் சொன்னது...

“ஹேய்...இது டாபிகை டைவர்ட் பண்ற முயற்சி....அடுத்து பாட்டி பால்காரின்னு லிஸ்ட் சொல்ல கூடாது..”

“நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் அதுதான் உண்மை நான் பிறந்தப்ப என் ரெண்டு பாட்டியும், என் அப்பாவோட பாட்டி அதாவது என் பூட்டியும் ஹாஸ்பிட்டல் வந்துட்டாங்களாம்.... அம்மா அப்பா ரெண்டு பேரும் ஒத்த பிள்ளை அவங்கவங்க வீட்டுக்கு....அதனால ரெண்டு பக்கத்துக்கும் நான் தான் முதல் பேரன்...சோ மூனு பாட்டிமாருக்கும் நான் படு ஸ்பெஷல்...கணக்குப் பார்த்துக்கோ... இதுவரைக்கும் என்னை லவ் பண்ண பொண்ணுங்க 4 பேரை பத்தி சொல்லிருக்கேன்....”

“ஐயோ...என்ன ஒரு லவ் லிஸ்ட்....நல்ல வேளை இன்னும் சித்தி அத்தைனு லிஸ்ட் சொல்ல வழி இல்லை..ஆனா மொத்தத்துல நீங்க என்னை உங்க ஃப்ரெண்டா நினைக்கலை...”

அவன் பிடியை மீறி திரும்பி படுக்க முயன்றாள்.

“ஏய்....மெல்லடி...சட்டு சட்டுனு திரும்பாதன்னு சொன்னாங்கல்ல..”

முகத்தை இன்னும் உர்ரென வைத்திருந்தாள் வேரி..

“உனக்கு பொறுமை ரொம்ப அதிகம் குல்ஸ்...இந்த விஷயத்துல நம்ம பாப்பாவும் உன்னை மாதிரி இருந்தா பத்து மாசம் எப்படி உள்ள வெயிட் பண்ணும்னுதான் தெரியலை...”

“ஐயோ...என்னங்க இப்டி சொல்லிடீங்க...நான் பொறுமையா இருப்பேன்....ம் சொல்லுங்க....அடுத்து யாரு..?”

“நல்ல லவ்லாம் நீ வர்றதுக்கு முன்ன அவ்ளவுதான்....பட் மத்தது ரெண்டு இருக்கு. நான் யு ஜி படிக்கிறப்ப என் க்லாஸ்மேட் ஒரு பொண்ணு என்னை விரும்புறான்னு எங்க பாய்ஸ்லாம் அடிக்கடி சொல்லிப்பாங்க...ஆனா அந்த பொண்ணு கடைசிவரை ஒரு நாளும் ஒரு வார்த்தை கூட என்ட்ட வந்து பேசுனது கிடையாது...”

“பாவம்ல...அந்த பொண்ணு...கூப்பிட்டு அட்வைசாவது செய்திருக்கலாமில்லையா...?”

“ஏன்...அப்பதான் இவனுக்கு என் மேல அக்கறை இருக்குது...ஒரு நாள் என்னை லவ்பண்ணுவான்னு அது நினச்சுகிடுறதுக்கா?...அதோட அவ பிஜி க்ளாஸ்மேட்டை லவ் பண்ணி கல்யாணம் செய்துட்டான்னு பின்னால கேள்விப்பட்டேன்...”

“ஆங்....அடுத்து பிஜில....”

“பி..ஜி கால்டெக்....லாஸ்ஏஞ்சலிஸ்....அப்பதான் கொஞ்சம் மனசு உறுத்துறமாதிரி ஒரு இன்சிடென்ட்...”

வேரியின் ஆண்டெனா பலமாக உயர்ந்தது.

“என்னாச்சுப்பா....”

“எனக்கு எப்பவுமே பொண்ணுங்க கூட ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது கிடையாது...பட் வியனுக்கு ஸ்கூல் ஜாய்ன் பண்ண நாள்ல இருந்து ஒஃபிலியான்னு ஒரு ஃப்ரெண்ட் உண்டு....”

“ம்...மிர்னு சொன்னா...”

மிர்னா வந்து தங்கி சென்றபின்...வேரி அவளை மிர்னு என்பதை கவனித்தான் கவின். மிர்னாவிடம் கூட ஒரு எல்லைக்கு வெளியே நின்று பழகும் வேரியின் சுபாவ மாற்றம் கவினுக்கு மகிழ்ச்சியை தந்தது.

“அந்த ஒஃபிலியா கால்டெக்ல யூஜி சேர்ந்தா நான் பி ஜி செய்துகிட்டு இருக்கிறப்ப..”

“அவ இங்க அம்மாவுக்குமே ரொம்ப பெட்....அவ அம்மா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க...அதோடு எங்க அம்மாவுக்கு பெண்குழந்தை கிடையாது.......அது எல்லாம் சேர்ந்து..எங்க அம்மாட்ட அவளுக்கு ஸ்பெஷல் ப்ளேஸ்...”

“.............”.

“என்ன சத்தத்தை காணோம்...பிடிக்கலைனா இப்டியே ஸ்டாப் பண்ணிடுறேன்...”

“அச்சோ இல்லப்பா....தேவையில்லாம உங்க மனச கஷ்டபடுத்துறனோன்னு ஒரு ஃபீல்....”

“சே...இதெல்லாம் நான் யார்ட்டயும் பேசுனதே இல்லை...ஒரு பொண்ண பத்தி இப்படி  ஃப்ரெண்ட்ஸ்ட்ட கூட ஷேர் பண்றது சரின்னு பட்டது இல்ல....அவ வியனோட ஃப்ரெண்ட் வேற...அதனால அவன்ட்டயும் சொன்னது இல்ல...உன்ட்ட எல்லாத்தையும் பேசிக்கிறது எனக்கு சந்தோஷம் தான்...”

அவன் மீது கைபோட்டு அவன் தோளை பிடித்தாள் வேரி.

“ம்...சொல்லுங்க...”

“அவ  ஜாய்ன் செய்த புதுசுல அம்மாவும் வியனும் கேட்டுகிட்டதால... அவளுக்கு தேவையான ஹெல்ப் எல்லாம் செய்திருக்கேன்... அப்புறம் ஸ்டடிசிலும் அவ என்ட்ட ஹெல்ப் கேட்டு வர ஆரம்பிச்சா...நானும் என்னால முடிஞ்சதை செய்து கொடுப்பேன்.....அதை தாண்டி நாங்க எதையும் பேசிகிட்டோம்னு கூட கிடையாது...பட் அவளுக்கு ஏன் அப்படி தோணிச்சுன்னு தெரியலை.....நான் கோர்ஸ் முடிஞ்சு இந்தியா கிளம்புற டைம் வந்து ப்ரபோஸ் பண்ணா...எனக்கு கஷ்டமா இருந்துச்சு....”

“பாவம்தான் அவ....நேர்ல கேட்டுடாளே...என்ன சொன்னீங்க....”

“உனக்கே தெரியுமே என்ன சொல்லிருப்பேன்னு.....”

“ம்...என்ன சொல்லிருப்பீங்க....எங்க அம்மா அப்பா யாரை செலக்ட்  செய்றாங்களோ அவங்களதான் நான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி இருப்பீங்க....ஆனா அது மத்த பொண்ணுனா ஓகே...இவளுக்கு அது வேற மாதிரி நம்பிக்கை தராதா....?”

“ம்....நீ சொல்ற மாதிரிதான்....என் அம்மா அப்பா சாய்ஸ்தான்னு சொன்னேன்....அவளும் உங்க பேரண்ட்ஸ் சாய்ஸ் நானா இருந்தால்னு கேட்டா... அப்ப என் மனுசுல பேரண்ட்ஸ் முடிவுதான்னு அழுத்தமா இருந்ததால அதை அப்ப பார்க்கலாம்னு சொல்லிட்டேன்..... சிரிச்சுகிட்டே போய்ட்டா....பட் அதுக்கு பிறகு இன்னைக்கு வரைக்கும் அவளை நான் பார்த்ததே இல்ல...நம்ம மேரேஜுக்கு கூட வரலை....எதோ ஒருவகைல இன்னும் மனசுக்குள் ஒரு உறுத்தல்...வியன் மாதிரி எனக்கு பழக தெரியலையோன்னு...அவன்ட்ட வராத சலனம் எதுக்கு என்மேலன்னு... ”

“ அது அவங்க ரெண்டுபேரும் சின்ன வயசுல இருந்து பழகி இருக்காங்க...உங்கட்ட அப்டி இல்லையே...அதான்...இதுக்காகல்லாம் ஃபீல் பண்ணாதீங்க...ஆனா அவ உங்க மேல கோபத்துல இருப்பாளோ...?அம்மா அப்பா சொல்ற பொண்ண தான் கல்யாணம் பண்னுவேன்னு சொல்லி நம்மள அவாய்ட் செய்துட்டு....கடைசில எப்படியும் அவன் விரும்புன பொண்ணை கல்யாணம் செய்துட்டானேன்னு....”

“ப்ச்...தெரியலை.....பட் நான் அவளை எனக்காக வெயிட் பண்ணுனு சொல்லலையே...அதோட அப்ப இப்டி உன்கிட்ட தலைகுப்புற விழுவேன்னும் எனக்கு தெரியாதே..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.