(Reading time: 36 - 71 minutes)

க அந்த கடிதம் எழுதுவது ஒஃபிலியா என முடிவுக்கு வந்தாள் வேரி. இவளது வெரோனிக்கா என்ற பெயர் மிர்னா வழியாக தெரிந்திருக்கலாம், ஏன் இப்படி இவளுக்கு நிலம் இருப்பது கூட எதோ ஒரு பேச்சில் மிர்னாவே சொல்லி இருக்கலாம்.. மற்றும் இவர்கள் திருமணம் நடந்தவிதம் அவள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லையே....

மிர்னாவின் மீதான கொலை முயற்சிகள் பற்றி வேரிக்கு யாரும் சொல்லாததாகையால்,  இந்த மெயில்காரியின் மூலம் யாருக்கும் ஆபத்து இருக்கமுடியும் என்று வேரிக்கு தோன்றவுமில்லை. ஏதோ ஒரு வேகத்தில் மெயில் செய்திருப்பாள் ஒஃபிலியா என்றே நினைத்தாள்.

மேலும் ஒஃபிலியா மீது வந்திருந்த இரக்கம் அவளைக் கண்டு பயப்படவும் அனுமதிக்கவில்லை. மொத்தத்தில் மெயிலை கண்டுகொள்ளாது விடுவது உத்தமம் என்ற முடிவுக்கு வந்தாள் வேரி.

ஆனால் தன் கணவன் மீது ஒருவர் கோபமாக வருத்தமாக இருக்கலாமா? அதை சரி செய்ய வேண்டும் என முடிவு செய்தவள், அதே நேரம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத விஷயத்தை தன்னை நம்பி பகிர்ந்து கொண்ட கணவனின் மனம் கோண இந்த விஷயத்தை மீண்டுமாக அவனிடம் குறிப்பிடவும் கூடாது என உறுதி எடுத்துக் கொண்டு வியனை அலைபேசியில் அழைத்தாள்.

வியனும் மிர்னாவும் இங்கு வந்து சென்றபின்பு அவ்வப்போழுது வியனிடம் பேசுவதும் வேரிக்கு வழக்கமாகி இருந்தது.

மெயிலைப் பற்றி குறிப்பிடாமல் ஆனால் ஒஃபிலியாவைப் பற்றி விசாரித்தாள். சில கேள்விகளில் நேரடியாக கேட்டுவிட்டான் வியன்.

“அண்ணி என்ன விஷயம்? அவளுக்கு எதுவும் அலையன்ஸ் மனசுல வச்சிருக்கீங்களா?”

வேரியின் கேள்விகள் அவனுக்குள் ஏற்படுத்திய எண்ணங்கள் அவைகள் தான்.

“உங்க ஃப்ரெண்டுனா நல்ல டைப்பாதான் இருப்பாங்க....அவங்க கல்யாணத்துக்கு எதுவும் ப்ளான் வச்சுருக்காங்களா? பாய்ஃப்ரெண்ட்...ஃபியான்சி இப்டி யாராவது...? என்ற ரீதியில் வேரி கேட்டால் வேறு என்ன வியனால் நினைக்க தோன்றும்.

“இல்ல...நம்மல்லாம் மாப்ள பார்த்தால் ஒத்துப்பாங்களா...?” இவள் தயங்க...

“என்ட்டதான் அவளுக்கு மாப்பிள்ள பார்க்க சொல்லிருக்கா....ஒலிம்பிக் முடியவும் இந்த வேலைய ஃபுல்ஃப்ளெஜா செய்யலாம்னு இருக்கேன்...உங்களுக்கு தெரிஞ்சு யார் இருந்தாலும் சொல்லுங்க....உங்க தங்கசிக்கோ என் தங்கச்சிக்கோ பார்த்தா எப்டி பார்பீங்களோ அப்டி கவனமா பாருங்க....”

அவ்வளவுதான் அடுத்த வேலையாக வேரி சென்று நின்றது நீலாவிடம்.

உங்க பொண்ணு ஒஃபிலியாவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையோடு.

“அவ இன்டோ டச்மா அவளுக்கு ஏத்த மாதிரி எப்படி..அவளே யாரையும் சூஸ் செய்தால் நாம முன்ன நின்னு கல்யாணம் செய்து வைக்கலாம்...இது எப்ப்டி....” என தயங்கியவரிடம்...

“அவள மாதிரியே ஒருத்தரை கண்டுபிடிப்போம்....அப்ராட்ல பிறந்து வளந்த இண்டியன் யாராவது சரியா இருக்கலாமில்லையா” என்ற மருமகள்

பேச்சோடு நிறுத்தாமல் தங்கள் நிறுவனங்களின் வெளி நாட்டு கிளைகளில் வேலை செய்யும் அனைவரது ஃபைலையும் குடைந்து பொருளாதாரம், படிப்பு, உருவம், கலாச்சாரம் எல்லாவற்றிலும் ஒஃபிலியாவிற்கு ஒத்துவரும் என்ற வகையில் 7 ப்ரொஃபைல்களை தெரிந்தெடுத்தாள்.

ஆச்சர்யபட்டுபோன நீலா அடுத்து தன் பங்கிற்கு, தங்கள் நிறுவனத்திற்காக வேலையாட்கள் எப்படி இருக்கிறார்கள் என அவ்வப்போது உளவு பார்க்கும் நிறுவனம் மூலம் இந்த 7 பேரை விசாரிக்க அதில் 4 பேர் கழிக்கபட வடிகட்ட பட்ட மூவரில் திருமணத்திற்காக பெண் தேடிக்கொண்டிருக்கும் இருவரின் ப்ரொஃபைலை வியனுக்கு அனுப்பி வைத்தனர்.

டுத்த காரியமாக வேரி செய்ய நினைத்த செயல் தன் இடத்தை கவின் பெயருக்கு மாற்றுவதுதான்.

அவனிடம் சொன்னால் அதை ஒத்துக்கொள்வான் என்பதில் அவளுக்கு துளியும் நம்பிக்கை இல்லை. அவளுக்கு வசதியாக கவினின் பிறந்த நாள் மிக அருகில்.

ஆக அவன் பிறந்த நாள் அன்று பத்திர பதிவு வரும்படி,  இவளே நேரடியாக, ரகசியமாக ரிஜிஷ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு செய்தாள்.

அன்று கவின் பிறந்த நாள்.

கவின் அலுவலகத்திலும் வீட்டிலும் படு பிஸியாக இருப்பவன்.

அவனை இரவு 12 மணிக்கு எழுப்பி வாழ்த்து சொல்ல வேண்டாம் என முடிவு செய்தவள் காலை அவன் கண் விழிக்கும்போது அறைமுழுவதும் பூக்களாலும் மெழுகுவர்த்திகளாலும் அலங்கரிக்க பட்டிருக்கும்படி செய்து வைத்தாள்.

 அப்பொழுது தொடங்கிய கொண்டாட்டம் ஒவ்வொன்றிலும் தொடர்ந்தது.

இன்று ரிஜிஷ்ட்ரேஷன் அலுவலகத்தில் 11 மணிக்கு பத்திர பதிவு.

“கவிப்பா உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.....என் கூட நீங்க வரனும்....”

கவின் ஏன் எங்கு என்று கேட்காமல் சம்மதிக்க, நீலாவும் மனோகரும் உடன் வர மறுத்துவிட்டார்கள்.

“அவன் பெர்த் டே...நீங்க ரெண்டு பேருமா செலிப்ரேட் செய்யனும்...நாங்க எதுக்கு...” என்றபடி ஒதுங்கிக் கொண்டனர்.

அவர்களுக்கு இவர்கள் செல்வது ரெஜிஷ்ட்ரேஷனுக்கு என்று தெரியாதே...சாட்சி கையெழுத்திட அவர்கள் வேண்டுமென இவள் எதிர்பார்த்தாள். ஆனால் இங்கு வைத்து விஷயத்தை சொன்னால் கவின் வரமாட்டேன் என்றுவிட்டால்....

ஆக அங்கு போய் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் கவினுடன் கிளம்பிவிட்டாள்.

காரில் கவின் அவளிடம் கணவனுக்குள்ள உரிமையுடன் அவளை  சீண்டிக் கொண்டே இருந்தான்.

“வர வர உங்க அட்டகாசம் தாங்க முடியலைப்பா....”

“இது ஓல்ட் டய்லாக்...ஒத்துக்க முடியாது...புதுசா எதாவது சொல்லுடி பொண்டாட்டி...”

“மிஸ்டர் .அழகு சுந்தரம் இன்னைக்கு படு குஷி மூட்ல இருக்கார் போல இருக்குது...”

“ஆமாண்டி ஆத்துகாரி....டாக்டர் சொன்ன மூனு மாசம் கதை நேத்தோடு முடிஞ்சிட்டு...இது புது டே...இதுக்கு புது நைட்டும் வரும்.....” கண்சிமிட்டினான்.

“ஷ்ஷ்ஷ்ஷ்....இத நான் மறந்தே போய்ட்டேனே....நான் கூட சார் பிறந்த நாள்னு தான் எஞ்ஜாய் பண்ணிகிட்டு இருக்கார்னு நினைச்சேன்...”

“அதுவும்தான் என் அன்பான மனைவியே... இது டூ இன் ஒன் செலிப்ரேஷன்.....ஃபர்ஸ்ட் பெர்த் டே வித் மை ஃபர்ஸ்ட் பொண்டாட்டி....அண்ட் ஃபர்ஸ்ட் டே ஆஃப்டர் ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ்...எப்டி....”

“போடா...நீ நல்ல பையன்னு நினச்சு ஏமாந்து போய்ட்டேன்...”

“ஹேய்....இது நல்ல பையன் வேலை இல்லாம என்னதாம்..? என் வைஃப்...என் டே...இல்ல இல்ல...என் வைஃப்... என் நைட்....”

“நிறுத்துறீங்களா...?”

“அதெல்லாம் கிடையாது...இது ஒரு தொடர்கதை....முடிவே கிடையாது..”

சட்டென ஒன்று வைத்தாள் அவனுக்கு....

“காரை நிறுத்றீங்களான்னு சொன்னேன்...” அவள் சொல்ல சொல்ல காரை செலுத்தி வந்தவன் விழிகளில் அவள் நிறுத்த சொன்ன இடத்தைக் கண்டதும் ஆச்சர்யம் ப்ளஸ் மகிழ்ச்சி.

வேரியின் நிலம் நகர எல்லையை சார்ந்தது இல்லை என்பதால் பத்திரபதிவு அலுவலகமும் முறம்பு என்ற ஒரு சிற்றூரில் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.