(Reading time: 12 - 24 minutes)

து எப்படியோ , நம் பகவான் அருள் எல்லோருக்கும் கிடைத்தால் சரி தான்".

"மாமி, வாருங்கள் போகலாம். ஏற்கனவே டயமாகி விட்டது. பாட்டிக்கு டிபன் கொடுத்துவிட்டு பள்ளிக் கூடத்திற்கு செல்ல வேண்டும்".

வீட்டை அடைந்த துளசி, "பாட்டி, பாட்டி எங்கே போனீகள். டிபன் சாப்பிட வேண்டாம்?"

"என்னது இது ஒரு சத்தமும் இல்லை. எங்கேதான் இந்த பாட்டி போனார்கள்? பாட்டி என்று அழைத்துக் கோண்டே வெளி முற்றத்திற்கு வந்தவள், கூடை நாற்காலியில் கண்மூடி சாய்ந்திருந்த பாட்டியை எழுப்பினாள்.

முகம் எல்லாம் வியர்வையில் குளித்திருக்க, மெல்ல மூச்சுக்கு போராடிக் கொண்டிருந்த பாட்டியைக் கண்டு,

"பாட்டி" என்று அலறினாள் துளசி. பாட்டி என்ன செய்கிறது? ஏன் இப்படி வியர்த்து இருக்கிறீகள்? எழுந்திருங்கள் பாட்டி என்று அவர் தோள்களை உலுக்கினாள்.

சிறிது தண்ணீர் எடுத்து வந்து அவர் வாயருகே புகட்ட முயன்றாள். மேலும் மேலும் முச்சுக்கு திணறும் பாட்டியைக் கண்டு மெல்ல நெஞ்சை தடவியவள், "அய்யோ! இப்பொழுது என்ன செய்வது?", என்று புரியாமல் பதறும் போதே, பக்கத்து வீட்டு மாமாவும், மாமியும் துளசியின் சத்தமான குரலைக் கேட்டு வந்தவர்கள், 

"என்னவாயிற்று துளசி? ஏன் அலறுகிறாய்?" என்று கேட்டு உடனேயே நிலைமையை தன் கையில் எடுத்துக் கொண்டார்.

"துளசி, பாட்டியை பார்த்தால் நெஞ்சுவலி போலிருக்கிறது? ஆட்டோவை கூப்பிடு. பாட்டியை மெல்ல நாங்கள் தூக்கி வருகிறோம். கதவை பூட்டு. சீக்கிரம்" என்று பாட்டியை துக்கினார்.

வெளியே சென்று ஆட்டோவை அழைத்து கொண்டு வந்த துளசி, அதற்குள் கதவை பூட்டி ரெடியாகி வந்த மாமியுடன் ஆட்டோவில் பாட்டியை உட்கார வைத்தாள். பின்னாலேயே தன் ஸ்கூட்டரில் வருவதாக கூறிய மாமாவுக்கு கண்ணீருடன், பாட்டியை அந்த ஊரில் உள்ள சிறிய அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு விரைந்தாள் துளசி.

காலை நேரத்தின் பொன் கதிர்களை சூரியன் பரப்பியிருந்தும் கலையிழந்து நின்றது அந்த அரண்மனை போன்ற பெரிய வீடு.

சுமார் ஐந்து மனைப் பரப்பளவில் சென்னையில், அதுவும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் இப்படி ஓர் இடம் கிடைப்பதே அரிது. அதிலும், பெரிய நாகரிகமான பங்களாவும், சுற்றிலும் தோட்டமும், புல் தரையும் காணக் காண கண்களை நிறைத்தன. தோட்டத்தின் ஒர் கோடியில் இருந்த சிறிய செயற்கை தாமரைக் குளமும் அதையடுத்த, சின்ன அருவியும் வீட்டிற்கு மேலும் அழகூட்டின.

ஆனால் என்ன இருந்து என்ன பயன்... வீட்டின் உள்ளிருந்த மனங்கள் இந்த எந்த அழகையும், அது தரும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அனுபவிக்கும் மன நிலையில் இல்லை.

சற்றே உள்ளே சென்று பார்ப்போம். அந்த பெரிய ஹாலில் நடுவே போடப் பட்டிருந்த சோபாவில் அமர்ந்திருந்த திருவாளர். கிருஷ்ணனின் முகத்தில் தாங்கொனாத் துயரம் அப்பியிருந்தது. பக்கத்தில் நிற்றிருந்த மனைவி சியாமளாவோ, அதைவிட துன்பமனான மன நிலையில் இருந்தாள்.

இருக்காதா? என்ன இருந்தாலும் பெற்ற வயிராயிற்றே? தவமிருந்து நீண்ட நாள் பிரார்த்தனைக்கு பிறகு பிறந்த இரட்டை பிள்ளைகளாயிற்றே.. அழகிலும், அறிவிலும், அந்தஸ்திலும் குறைவில்லை.

ஆனால் ஆயுள்?....

'இரண்டு கண்களைக் கொடுத்த ஆண்டவன் ஒன்றை திருப்பிக் கேட்பது என்ன நியாயம்? இதற்கா இவ்வளவு தவம்.'

"கடவுளே என்ன கொடுமை இது?" என மனம் கதற, வெளியில் தன் துயரத்தை அடக்கிக் கொண்டு உலாவுகிறார்.

கடகட வென மாடியில் இருந்த படிகளை வேகமாக கடந்து கீழே வந்த இரு மகன்களையும் நிமிர்ந்து பார்த்தார் தாயார்.

ஆறடி உயரத்தில்,

அழகான பொன் நிறத்தில்,

அடர்ந்த சிகை மற்றும்,

அளவான மீசையும்,

நேர் நாசியும், கூரிய கண்களும்,

கட்டான உடலும்,

பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அன்னைக்கு.

என் இரண்டு மகன்களும் தான் என்ன ஒரு அழகும், கம்பீரமும் என்று நினைத்தவர், சில சமயம் தன்னாலேயே அடையாளம் காண் முடியாத ஒற்றுமையை எண்ணி வியந்தார்.

கரணின் நெற்றியில் கூர்ந்து பார்த்தால் தெரியும் ஒரு சிறு அடிபட்ட வடுவும், சரணின் காதில் ஒர் சிறு அலகு போன்ற மச்சம் மட்டும் தான் இருவருக்கும் இருக்கும் வித்தியாசம்.

மற்றபடி, பெற்ற தாய்க்கே குழப்பம் வருமளவு ஒர் உருவ ஒற்றுமை அவர்களிடையே.

இந்த உருவ ஒற்றுமையால் பல சமயம் சில வேடிக்கையான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இந்த ஒற்றுமையை வைத்து இவர்கள் அடித்த கொட்டத்திற்க்கு அள்வே இல்லை.

ஒரு பெருமூச்சேடுத்த சியாமளா, "என்ன கரண் நீ தயாரா?" எனக் கேட்க, உடனே சரண்,

"அம்மா இந்த முறை நான் கரணுடன் ஹாஸ்பிடல் போகிறேன்".

சரண், ஒரு அலாதியானப் பிறவி. பிறர்க்கு உதவும் குணமும், கருணையும் மிகுந்தவன். கரணுக்கு பத்து நிமிடங்கள் பிந்தி பிறந்தவன். அனைவரையும் அனுசரித்து போகும் குணம் மிகுந்தவன்.

பல சமயம் சியாமளா நினைத்துண்டு, இவன் தான் முதலில் பிறந்திருக்க வேண்டியவன். ஆளுமை குணமும், சிந்தித்து செயல் படும் திறனும், முத்தவன் கரணை விட சரணிடம் அதிகம் என்று.

கரண் சற்று அவசரக்காரன், மற்றும் தன்னலம் பார்ப்பவன். அதனால் தானோ என்னமோ இந்த உலகை விட்டுச் செல்லவும் அவசரப்படுகிறான்.

நிகழ்வுக்குவந்த சியாமளா, "சரிடா கண்ணா , அண்ணன் பத்திரம். போன ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டாயா?"

சரண் , "எல்லாம் தயார் அம்மா. நீங்கள் இருவரும் பதட்டப்படாமல் இருங்கள் எனக் கூறி விட்டு அண்ணணுடன் வாயில் நோக்கி நடந்தான்.

ராம் கரண் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினியர். மற்றபடி ஒரு மிகப் பெரிய கணிணி மென் பொருள் உற்பத்தி நிறுவனத்தை திறம்பட நடத்துபவன். தங்கள் குடும்பத் தொழிலான கட்டுமான நிறுவனத்தில் ஈடு படாமல், தானே ஒரு பிஸின்ஸ் சாமராஜ்ஜியத்தை துவங்கி, தன் சாதுர்யத்தினால் விரைவில் உயர்வை எட்டி விட்டவன். தற்போது தலை சிறந்த இளம் தொழிலதிபர்களில் அவனும் ஒருவன்.

ராம் சரணோ ஒர் ஆர்க்கிடெக்ட். கட்டுமான துறையில் நல்ல பெயர் வாங்கியவன். தங்கள் குலத் தொழிலான கட்டுமான தொழிலில் தன் தந்தையுடன் ஈடுபட்டு திறம்பட நடத்துவதோடு மட்டும் நில்லாமல், தனியாக சில பல ஹோட்டல்கள் , மற்றும் டெக்ஸ்டைல் பிஸினசில் கொடி கட்டி பறப்பவன். தான் உயரும் பொழுது பிறறையும் சேர்த்தணைத்து செல்லுபவன்.

இருவரும் வீட்டை விட்டு கிளம்பி சரணின் பி.எம்.டபள்யூ. காரில் அந்த நட்சத்திர ஹோட்டலைப் போன்ற ஹாஸ்பிடலைச் சென்று அடைந்தனர்.

தாங்கள் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்தபடியால், அதிக காத்திருப்பு இல்லாமல் 'ஆங்காலஜிஸ்ட்' டாக்டர் பாலாஜியின் அறைக்குள் நுழைந்தனர் அந்த இரட்டையர்கள்.

ஏதோ ஒரு ரிப்போர்ட்டை வெறித்தபடி இருந்த டாக்டர் . பாலாஜி சப்தம் கேட்டு நிமிர்ந்தவர்,

"வாருங்கள் கரண், சரண். வந்து உட்காருங்கள்".

சங்கடமாக கரணை நோக்கியவர்,

"கரண், நான் நேரத்தை கடத்த விரும்பவில்லை. இது பற்றி நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். மனதை தேற்றிக் கொள். இது லாஸ்ட் ஸ்டேஜ் கான்சர். உனக்கு இபொழுது நுரையீரல் வரை பரவிவிட்டது."

இனி....

Episode # 02

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.