(Reading time: 9 - 18 minutes)

வ்வாறு அவர் செய்ய காரணம்??செய்த தவறுக்கு இந்த தண்டனை ஏன்??காரணம் உண்டு...

அதன் விளக்கம் நிலா மனதளவில் அவரை வெறுக்க வேண்டும் என்ற நோக்கமே!!!

அதற்கும் காரணம் உண்டு..பிறகு கூறுகிறேன்.ஆனால்,அதை விட முக்கியம் நிலாவின் எதிர்காலம்!!ரஞ்சித்தின் குணநலன்கள் ஏதும் அறியா தந்தை மனம்!அவனை குறித்து தவறாக எண்ணுவது இயல்பே!அப்படியே அவர்கள் ஒருவராய் வாழ்ந்தாலும்,அவர்களின் மண வாழ்க்கை உலகிற்கோ!அவன் குடும்பத்திற்கோ தெரிய வந்தால் பழி ஏற்க போவது என் மகள் அல்லவா??பல கேள்விகளை அசைப்போட்டது அவர் மனம்.

ம்...இந்த இறைவன் மனதினுக்கு ஏன் இந்த மனம் என்னும் ஆறாம் அறிவை வழங்கினான் என்பது எனக்கு புரியவில்லை...

அவன் பாவம் அனைவரும் நம்மை போன்றே சிந்திப்பர் என்று மயங்கி அளித்திருக்கலாம்!ஆனால்,இன்றைய உலகம் முழுவதுமாக தன்னை அடுத்தவர் துன்பத்தில் கரையவிட்டதா???

தனக்கு மிஞ்சி தான் தானம் தர்மமாம்!!

உண்மையில் எனக்கு முன்னால் வாழ்ந்த சான்றோர் அதனை,

தனக்கு விஞ்சிய தானம் தர்மம் என்றே படைத்தனர்.இந்த உலகில் நான் பிறந்து செய்த புண்ணிய காரியம் அடுத்தவர் துன்பத்தை வேடிக்கை பார்ப்பது மட்டுமே!!!

மாற்றப்பட்ட புதுமொழிகள் கொண்டு மனதை சாந்தப்படுத்தவே!!!இதற்காகவா இறைவா என்னை இப்பவித்ர பூமியில் நீ படைத்தாய்???நான் இந்த பூமியை கலங்கப்படுத்த அல்லவா பிறந்துள்ளேன்!!அடுத்த பிறவி என்றால் மரமாக வாழ வாய்ப்பு கொடு!மழையை கொடுக்கும் பாக்கியத்தை செய்தாவது கங்கா ஸ்நானம் செய்கிறேன்.அதற்கும் அன்றைய மனிதர்கள் சண்டை பிடிக்க வந்துவிடுவார்கள்!!!

பெரும் சிந்தனையில் இருந்து மகேந்திரனை கலைத்தது "சார்!"என்ற குரல்.

மகேந்திரன் கேள்வியோடு எழுந்தார்.

"நீங்க மிஸ்டர்.மகேந்திரன் தானே!"

"ஆமா!"

"என் பெயர் ரஞ்சித்!நிலா என்னைப்பற்றி நிறைய சொல்லிருப்பான்னு நினைக்கிறேன்."மகேந்திரன் முகம் இறுகியது.

"உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்!"

"காரணம்?"

"பேச வேண்டிய கட்டாயம்!"

"கேட்க வேண்டிய கட்டாயம் எனக்கில்லை!"

"நிச்சயம் இல்லை தான்!ஆனா,எனக்காக உருவாக்கி கொடுங்க!"ரஞ்சித்தின் பேச்சு தனித்துவமாய் தெரிந்தது.

"ஒரு பத்து நிமிஷம்!"மகேந்திரன் ஆமோதித்தார்.இருவரும் குளக்கரையில் அமர்ந்தனர்.

"நிலாவுக்கும்,எனக்கும் இடையில் இருக்கிற உறவு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்!நடந்த நிகழ்ச்சியில சம்பந்தப்பட்டது நாங்க இரண்டு பேரும்!ஆனா,தண்டனையை அவளுக்கு மட்டும் தந்துட்டீங்க!"

"தப்பே பண்ணாம தண்டனை அவ அனுபவிக்கிறா!தப்பு பண்ண நான் வேடிக்கை பார்க்கிறேன்.தெரியாம கேட்கிறேன்.ஒரு பொண்ணு காதலிப்பது தப்பா?"

"நிச்சயம் இல்லை...ஒருவேளை நீங்க உங்க காதலை என்னிடம் நேரடியா சொல்லி இருந்தா!நிச்சயம் அதை நான் ஏத்துக்கிட்டு இருந்திருப்பேன்!"

"இப்போவும் எங்க காதல் உயிரோட தான் இருக்கு!ஆனா நீங்க அதுக்கு மதிப்பு தரலை!"

"சத்தியமா சொல்லுறேன்.உங்க வளர்ப்பு மாதிரி ஒரு அசாத்தியமான வளர்ப்பை நான் பார்த்ததில்லை.நிலா உங்களை அவமானப்படுத்தன்னு கனவுல கூட நினைக்கலை!அவ உங்களை பற்றி பேசும் போதெல்லாம்,எனக்கு இப்படி ஒரு அப்பா இல்லையேன்னு நான் ஏங்கியதுண்டு!"

"எனக்கு புரியுது...நீங்க நிலா எதிர்காலத்தைப் பற்றி பயப்படுறீங்க!நான் அவளுக்கு ஒரு சத்தியம் பண்ணேன்,வாழ்க்கையில எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அவளை பாதுகாப்பேன்னு!சாகுற வரைக்கும் அதை மீற மாட்டேன்!ஒருவேளை என்னை பற்றி சந்தேகம் இருந்தா,அதை நீங்களே தான் தீர்த்துக்கணும்!"மகேந்திரன் மனம் பலம் இழந்து கொண்டிருந்தது.

"நானும் நிலாவும் வாழ்ந்த அந்தக் காலங்களில் நல்ல நண்பர்களா மட்டும் தான் வாழ்ந்தோம்!மறந்து கூட என் நகம் கூட தவறான எண்ணத்தோட அவ மேலே பட்டத்தில்லை."உண்மையில் இது அவருக்கு அதிர்ச்சி தான்!

"நிஜமா!நிலா கலங்கமில்லாதவள்.அவ உங்களோட வளர்ப்பு அப்பறம் எப்படி அவ தப்பு பண்ணிருப்பான்னு நீங்க நம்புனீங்க?"-சரியான கேள்வியை கேட்டான்.

"உண்மையில நான் அந்தத் தாலியை அவளுக்காக தான் வாங்கினேன்.ஆனா,அப்போவே கட்டணும்னு வாங்கலை.எனக்கு அன்னிக்கு அவ அழுகை மட்டும் தான் தெரிந்தது.அவ எதிர்காலம் மறந்தே போச்சு!ஒருவேளை ஞாபகம் வச்சிருந்தா,அவளை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு நேரா உங்கக்கிட்டயே வந்து கேட்டிருப்பேன்!"-ரஞ்சித்தின் மனதைரியம் மகேந்திரனை ஈர்க்க தான் செய்தது.

"நிலா எந்த தப்பும் பண்ணலை சார்!ஒருவேளை பண்ணிருந்தா,இந்நேரம் உங்களை மீறி என் கூட என் மனைவியா வந்திருப்பா!இந்த நிமிஷம் வரைக்கும் அவ உங்க பொண்ணா தான் இருக்கா!எங்களுக்கு உங்க ஆசீர்வாதம் வேணும்!நீங்களா மனசு மாறி அவளை ஏத்துக்கற வரைக்கும் நான் அவ வாழ்க்கையை விட்டு விலகி இருப்பேன்!அதுக்காக அவளை விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்!"

"என் நிலாவை என்கிட்ட ஒப்படைச்சிடுங்க சார்!"அவன் கையெடுத்து வணங்கினான்.இச்சமயம் மகேந்திரன் நேத்திரங்கள் ஒரு சொட்டு கண்ணீரை கொண்டு மண்ணை நனைக்க தான் செய்தது.

"நான் உங்கக்கிட்ட பத்து நிமிஷம் டைம் கேட்டேன்.ஆனா ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டேன்.நெருக்கமானவங்கக்கிட்ட மன்னிப்பு கேட்க வேணாம்னு நிலா சொல்லுவா!அதனால,நான் கிளம்புறேன் சார்!"அவன் எழுந்து நடந்தான்.அந்த நொடி வரை தண்ணீரில் கலங்கப்பட்ட சூரியனின் பிம்பமானது அப்போது தெளிவாய் தெரிந்தது.

மனமானது அக்னியை போன்றது.

அதாவது,அது எவ்வளவு சீரியதோ!அதை போல அது தூண்டிவிடப்பட்டால் மட்டுமே உயர்ந்தெழும்.

இல்லையேல்,அது புகையாவது உறுதி!!

தூண்டிவிடப்பட்ட நெருப்பானது ஒருவேளை உயிரை குடிக்கவும் செய்யலாம்!அல்லது உயிரை ரட்சிக்கவும் செய்யலாம்!இங்கு தூண்டப்பட்ட நெருப்பு உண்மையை உணர்ந்துள்ளது.இனி,அந்நெருப்பே  இங்கு ரட்சகனாக திகழப்போகிறது.

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.