(Reading time: 22 - 43 minutes)

" ரொம்ப சந்தோசம் வைஷ்ணவிம்மா " என்றபடி மருமகளின் நெற்றியில் முத்தமிட்டார் சிவாங்கி ..

" அப்பாடா , ஒரு வழியா இவனை அடக்குறதுக்கு ஒரு ஜூனியர் வந்துட்டா , எனக்கு சந்தோஷம்மா " என்றார் சங்கரும் ..

" அப்பா , அதெல்லாம் நானும் என் ஜூனியரும் சேர்ந்து உங்க எல்லாரையும் மிரட்டுவோம் " என்றவனின் முகத்தில்  உலகையே வென்ற தேஜஸ் தெரிந்தது .. மகளின் தலையை பாசமாய் வருடி தந்தார் சித்ரா .. அனைவரின் அன்பெனும் மழையில் தெவிட்டாமல் நனைந்தாள்  வைஷ்ணவி .. இடையில் ஒரு முறை  இயல்பாய் வருவது போல , அவள் அருகில் நின்ற ஆதி , சன்ன குரலில்

" அதென்ன சொன்ன , உன்னை சீண்டாமல் எனக்கு தூக்கமே வராதா ? என் செல்லம் இதெயெல்லமா  தம்பி கிட்ட சொல்லுறது .. அவன் சின்ன பையன்ல " என்று சொல்லி அவளை புரையேற வைத்தான் ..

" ஹே , நான் வேறெந்த மீனிங் ளையும் சொல்லலை .. நீங்கதான் தப்பு தப்பா பேசுறிங்க " என்றவள் விட்டால் அழுவிடுவேன் என்பதுபோல முகத்தை வைத்து கொண்டாள் .. மேலும் சில இரகசியங்களை  பரிமாறி  அவளிடம் சரமாரியாய் அடிவாங்கி கொண்டான் ஆதி ..

ஒருவழியாய் வைஷ்ணவி - ஆதி இருவரிடமும் விடை பெற்றுவிட்டு , அவர்கள் சென்னை வந்து சேர நள்ளிரவாகியது . மதியழகனை பார்க்காமல் இருக்க முடியாமல் , நிலாவும் ஷக்தியின்  வீட்டில் காத்திருந்தாள் . மித்ரா, நிலா,முகில், காவியா நால்வரும் ஹாலில் அமர்ந்து கதை பேசி கொண்டிருக்க , ஷக்தியும்  கதிரும்  பெற்றோர்களுக்காக சமையல் செய்து கொண்டிருந்தனர் .

" இப்போ எங்க இருக்காங்கலாம் முகில்மதி ?"

" இன்னும் அரைமணி நேரம் ஆகும்னு சொன்னாங்க நிலா அண்ணி "

" ஹா ஹா , அண்ணாவை பார்க்கணும் போல இருக்குன்னு நேரடியா சொல்ல வேண்டியது தானே தேனு " என்று வாரினாள்  மித்ரா ..

" ஆமா, என் மதுவை நான் தேடுறேன் .. உனகென்னடி  ? இவ்வளவு நேரம் உன் ஷக்தி மாமாவை தானே சைட் அடிச்சுகிட்டு இருந்த, நான் எவ்வளவு பெரிய மனசு பண்ணி உன்னை கலாய்க்காமல் விட்டேன் .. " என்று பெருந்தமையுடன் பேசினாள்  தேன்நிலா ..

" நீ மட்டும் ஏன் அமைதியா இருக்க முகில் ?" என்றாள்  காவியா ..

" ஹா ... ஹாங் ... ஒண்ணுமில்ல காவியா "

" வேறென்ன ., எழில் வீட்டுக்கு வரானே அவனை எப்படி பேஸ்  பண்ணுறதுன்னு யோசிக்கிறா " என்றாள்  மித்ரா ..

" ஹ்ம்ம்ம்ம் " என்று அனைவரும் அமைதியாகிட , " எல்லாரும் நம்ம தேனு மாதிரி சுரணையே இல்லாமல் சைட் அடிக்க முடியுமா ?" என்று வாரினாள்  மித்ரா மீண்டும் ..

" அடியே உன் கல்யாணத்துக்கு நீ பண்ணின வம்பெல்லாம் மறந்தாச்சா ?" என்றபடி தலையணையை எடுத்து  நிலா வீச,  அதை சரியாய் கேட்ச் பிடித்தான் மதியழகன் ..

" ஷக்தி அண்ணா வந்துட்டார் " என்று மகிழ்வாய் குரல் கொடுத்தார் மதியழகன் ..

" கதிர் நீ இதை பார்த்துக்கோ " என்றபடி அவன் வாசலுக்கு விரையவும் , கதிருக்கு உதவ சமையலறைக்கு சென்றாள்  காவியா ..

" நான் பார்த்துக்குறேன் கதிர் "

" இல்ல காவியா , இதோ முடிச்சுட்டேன் "

" கதிர் .."

" என்ன காவியா ?"

" நாளைக்கும் லீவ் போடா முடியுமா ?"

" ஏன் ?"

" இல்லை நீங்க ரெண்டு நாளாய் சரியா ரெஸ்ட் எடுக்கவே இல்லை .. நானும் கவனிச்சுட்டு தான இருக்கேன் ..இப்படி இருந்தா உடம்பு என்னாகும் கதிர் ? " என்றாள்  அக்கறையாய் ..

அவள் அக்கறையில்  புருவம் உயர்த்தினான் கதிரேசன் . ஏற்கனவே அவள் மீது அவனுக்கொரு ஈர்ப்பு பெருகிக்கொண்டே போகிறது , இதில் இவளது அக்கறை , அவன் மனதை மயிலிறகால் வருடியது ..

" எனக்காக இல்லை தர்ஷினி .. உனக்காக !" என்று சிரித்தான் அவன் ..

" நீங்க என்னை தர்ஷினின்னு  கூப்பிட்டு ரொம்ப நாளாச்சு கதிர் "

" ஹா ஹா எல்லாரும் உன்னை காவியான்னு கூப்பிடுறாங்க ..அதான் நானும் அப்படியே மாரிகிட்டேன் " என்றான் அவன் ..

" மத்தவங்களும் , நீங்களும் ஒண்ணா ?" என்று அவன் விழி கலந்து பார்த்துவிட்டு சட்டென, அவன் பார்வையில் இருந்து மறைந்தாள்  அவள் .. சில நொடிகள் அவள் வார்த்தைகள் புரியாமல் அப்படியே நின்றான் கதிர்,, ( சரியான  டியுப் லைட் பாஸ் நீங்க !)

" அண்ணா , வாங்க " என்றபடி மதியை கை பிடித்து அழைத்து வந்தான் ஷக்தி ...

" நாங்களும் இங்கதான்டா இருக்கோம் " என்று குரல் கொடுத்தார் அவன் தந்தை ..

" ஹா ஹா ..வாங்கப்பா " என்றவன் அவர் கையில் இருந்த பொருட்களை எடுக்க

" மாமா இரு நான் ஹெல்ப் பண்றேன் " என்று எழ முயன்றாள்  மித்ரா...

" வேணாம்டி , நான் பார்த்துக்குறேன் " என்றவன் அவர்களை அமர வைக்க , மகளையே பெருமையாய் பார்த்தார் சித்ரா ..

" என்னம்மா என்னை பார்த்ததும் தோசை கரண்டிய எடுப்பிங்கன்னு பார்த்தா ,இப்படி சீரியல்  மம்மி பார்வை விடுறிங்களே  " என்றாள் ..

" இல்ல நீ எவ்வளவு பொறுப்பா , மாறிட்டன்னு பார்க்கிறேன் "

" இதெல்லாம் அநியாயம் .. என் மாமா விஷயத்தில் நான் எப்பவுமே பொறுப்பான பெண் தான் " என்று சிலிர்த்து கொண்டாள்  மித்ரா ..

" ஆனா வாய் மட்டும் அடங்கவே இல்லையே " என்றார் தேவசிவம் ..

" எல்லாம் அண்ணா கொடுக்குற செல்லம் தான் மாமா " என்றபடி அங்கு வந்தான் கதிர் .. மித்ராவிற்கு  தனியாய் ஜூஸ் கொண்டு வந்த ஷக்தி , அதை அவளிடம் கொடுத்துவிட்டு விரிந்திருந்த அவாது நீண்ட கூந்தலை லேசாய் பின்னலிட்டான் .. தன் தந்தையின் கேலியில்

" பாருங்க மாமா " என்று நாராயணனை  மித்ரா பஞ்சாயத்துக்கு அழைக்க , அவரோ அவர் மகனையும் மருமகளையும் ரசித்து கொண்டிருந்தார் ..

" பார்த்துட்டு தான் இருக்கேன்மா " என்று இருபோருளில் அவர் சொல்ல , நாணமுற்றாள் மித்ரா ..

" டேய் மாமா " என்று ரகசிய குரலில் அவனை அழைத்தாள் ..

" என்னடி .."

" எல்லாரும் நம்மையே பார்க்குறாங்க "

" இருக்கட்டும் ..என் பொண்டாட்டிக்கு நான் தலை வார கூடாதா ?" என்றான் அவன் உரிமையாய் ..

" ஓஹோ " என்று அனைவரும் சேர்ந்து கோரஸ் பாட, அனைவரின் கண்களிலும் ஆனந்தமழை .மதியையே கண் இமைக்காமல் பார்த்தாள்  தேன்நிலா..

" பாரு உன் தம்பி, அவன் கூட காதல் ரேசில் நம்பர் ஓன்  வந்துட்டான் ..ஆனா நீ இன்னும் பழைய பஞ்சாங்கமாய் தள்ளி நின்னு சைட் அடிக்கிற " என்று பார்வையாலே முறையிட்டாள்  அவள் ..  அவனோ முகத்தை கடுமையாக வைத்துகொண்டு அவள் மித்ரா மீது வீசிய தலையணையை காட்டினான் ..

" என்ன இது நிலா ?"

" பார்த்தா உனக்கு தெரியலையா மது "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.