(Reading time: 18 - 35 minutes)

ன்னவனின் நூதனமான , நுணுக்கமான கண்காணிப்பை மனதிற்குள் மெச்சினாள்  சத்யா ..

" அது  மட்டுமில்ல சத்யூ , உனக்கு வேற பிரச்சனையா இருந்திருந்தா, அதை என்கிட்ட சொல்லனும்னு நினைச்சிருந்தா போன் பண்ணி கூட உடனே சொல்லி இருக்கலாமே ! நீ இன்னமும் என்னிடம் உன் கவலையை சொல்லலைன்னா , அது அருளை பற்றியாகத்தான் இருக்கும் .. அருளை பற்றி யாரிடம் விவாதிக்கும் முன்னே , அவனை விட்டு கொடுக்குறதா வேணாமா என்ற எண்ணம் தானே உன்னை தடுத்து நிறுத்துது ?"

அவள் மட்டும் சந்தோஷமான மனநிலையில் இருந்திருந்தால் சந்தோஷின் ஒவ்வொரு பதிலுக்கும் கை தட்டி பாராட்டி இருந்திருப்பாள் ..இப்போதும் அவன்மீது மரியாதையான ஓர் பார்வையை செலுத்தினாள்  ..

" அருள் உனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியும் .. அவன் மேல என்ன கோபம்னு நான் கேட்கமாட்டேன் .. ஆனா உன் மனசு எனும் நியாய தராசுல ஒரு பக்கம் அருளையும் இன்னொரு பக்கம்  உன் கோபத்தையும் வச்சு பாரு ..உன் அருளை விடவா கோவம் உனக்கு முக்கியமாய் தோன்றுது ?"

வழியை நான் காட்டிவிட்டேன் ..இனி பயணிப்பதும் கண்மூடி அங்கே நிற்பதும் உன் முடிவு என்பது போல சாலையில் கவனம் செலுத்தினான் சந்தோஷ்..

அதன் பிறகு இருவரும் சுபாஷ் , சைந்தவி  என பொதுப்படையாக பேசியே அந்த நாளை கழித்தனர் ..

" நீ என்ன சொல்லுற ஷீலா ? " என்று தங்கையை பார்த்து கேட்டான் அகில்.

" உண்மைதான் அண்ணா .. வழக்கம் போல இந்த சாஹித்யாவை தொடர்ந்து போனேன் .. அப்போதான் இது நடந்தது "

" அவன் யாராக இருக்கும் ?"

" அவளுடைய காதலனோ ? "

" அவன் காதலன்னா , அப்போ அருள் யார் ? ச்ச, இவளையும் ஒருத்தன் நம்பி காதலிக்கிறான் பாரு ... அவன் முட்டாளாகத்தான் இருக்கும் "

" அப்படின்னா , நாமே அவனை அடி முட்டாள் ஆக்கிட்டா என்ன ?"

" என்ன சொல்ல வர்ற நீ ?"

 " அண்ணா , அருளையும் சத்யாவையும் நாம பிரிக்கிறது தானே கஷ்டம் .. இதுவே அவங்க ரெண்டு பேருக்குமே வேண்டியவங்களை வைச்சே  பிரிக்க வைச்சுட்டா " என்றாள்  ஷீலா குரோதமாய் ..

" அண்ணா , எனக்கு என்னமோ இந்த அருளும் அவ கம்பனியில் புதுசா வந்த பெண்ணை தான் சைட் அடிக்கிறான்னு தோணுது .. அருளை பற்றி சத்யாவிடம் , இல்லன்னா சத்யாவை பற்றி அருளிடம் சொல்லித்தானே பிரிக்க முடியாது ? அவங்க ரெண்டு பேரை பற்றி மத ரெண்டு பேரிடமும் சொல்லி எவ்வளோ காரியத்தை சாதிக்கலாமே !"

" இது சரி வருமா ?"

" சரி வரணும் அண்ணா .. அவ அழனும் ! அன்னைக்கு காலேஜ்ல அத்தனை பேரு முன்னாடி என்னை அறைந்தவளை  நான் பழி வாங்கியே தீருவேன் ... அதுவும் அந்த அருள் , உனக்கு கிடைக்க வேண்டிய எல்லா வாய்ப்புகளையும் தட்டி பறித்தவன் .. அவனை சும்மா விடலாமா ?  " என்றாள்  ஷீலா உறுமியபடி ..

" பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் அது விஷம்தானே ! நீதான் விஷத்தை கண்டுபுடிச்சிட்டியே ! இனி சமயம் பார்த்து கலந்திடுறேன் விடு " என்றான் அகிலும் வில்லத்தனமாய் சிரித்து கொண்டே ..

ங்களை சுற்றி நடக்கும் சூது அறியாமலேயே சற்று விலகளோடு  தான் இருந்தனர் சத்யா அருள் இருவரும் .. தங்களது அண்ணன் , சித்தார்த் மூலமாகவே சத்யா லண்டணிற்கு போக விருப்பது அருளுக்கு தெரிய வந்தது.. தன்னிடமே உண்மையை மறைக்க வேண்டும் , தன்னை விட்டு விலக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள்  அல்லவா ? அப்படியே ஆகட்டும் என்று அவன் மனமும் முறுக்கி கொள்ள, சாஹித்யாவின் கண்ணாமூச்சிக்கு அவனும் உடன்பட்டே போனான்.. இருவரையும் ஒரே நேரத்தில் வீட்டில் பார்க்க முடியாமல் பெற்றோர்களுக்கு தான் மனபோராட்டமாய்  இருந்தது ..

இவர்களின் கண்ணாமூச்சிக்கோ, ஷீலா- அகிலின் திட்டத்திற்கோ , வானதியின் புத்தி கூர்மைக்கோ , சந்தோஷின் அரவணைபிற்கோ  கட்டுபட்டு நிற்காமல் காலச்சக்கரம் சற்று வேகமாகவே சுற்றியது .. விடிந்தால், லண்டணிற்கு கிளம்பி விடுவாள் சாஹித்யா .. அதை இன்று கூறியபோது, அருளின் மூலமாய் ஏற்கனவே தெரிந்திருந்தாலும் சாஹித்யாவிடம் தங்களது அதிர்ச்சியையும் உடன்பாடின்மையும் வெளிபடுத்தினர் அர்ஜுன், சுமி, ரவிராஜ், சுஜாதா நால்வரும் ... அங்கு நடக்கும் வாக்குவாதங்களை அறிந்தும் அருள் அவனது அறையில் இருந்து வெளிவரவில்லையே என்று ஆயாசமாய் இருந்தது சாஹித்யாவிற்கு . உண்மையிலேயே அவளுக்கு அவன்மீது இருந்த கோபம் வடிந்துவிட்டதுதான் ..

தான் போவதாய்  கூறியவுடன் , அவன் உரிமையாய்  சண்டையிடுவான் அப்படியே சமாதானம் ஆகி விடலாம் என்று தான் நினைத்திருந்தாள்  சாஹித்யா ..ஆனால் அருளின் மௌனமோ அவளை நிலை குலைய செய்தது ..

" சோ , நீ பேசமாட்ட  ! போகாதேன்னு சொல்ல மாட்ட அப்படிதானே ? அப்போ நான் போறேன் " என்று மனதிற்குள் முறுக்கி கொண்டவள் விடிய விடிய அழுது உறங்கியும் போனாள் .. மறுநாள் மகளை வழியனுப்ப   பெற்றோர்கள் நால்வரும் அவளுடன்  சென்றனர் ..இப்போதும் அருள் அங்கு இல்லாமல் போகவும் அவளுக்கு துயரம் பீரிட்டது .. எங்கே அவன் என்று கேட்க துடித்த இதழ்களை இறுக மூடி கொண்டாள் ... அவளை சோதிப்பதற்காகவே செல்போன் சிணுங்கவும் , அருள் தானே ? என்ற எதிர்பார்ப்புடன் போனை எடுத்தவள் சைந்தவியின் எண்ணை  பார்த்ததும் சோர்ந்து தான் போனாள் ..

" ஹெலோ சத்யா "

" சொல்லுங்க சைந்து  அக்கா "

" கெளம்பிட்டியா டா ?"

" ம்ம்ம்ம்ம் "

" ஏன் குரல் ஒரு மாதிரியா இருக்கு ? எல்லாரையும் விடுட்டு தனியா போறோம்னு கஷ்டமா இருக்கா டா ?"

" ம்ம்ம்"

" பீல் பண்ண கூடாது பேபி .. உன்னை விட்டுட்டு நாங்க மாட்டும் யாரை நினைச்சுகிட்டு இருக்க போறோம் ? டைம் கிடைக்கும்போதேலம் போன் ல பேசலாம் , ஸ்கைப் ல பேசலாம் .. நீ தைரியமா இருக்கணும் .. ஹெல்த் பார்த்துக்கணும் .. தெரிஞ்சவங்க வீட்டில் தானே இருக்க போறதா , சந்தோஷ் சொன்னான் .. சோ சந்தோஷமாய் இருக்கணும்  " என்று அறிவுரைகளை வாரி தந்தாள் சைந்தவி .. சத்யாவோ அருளைத்தான் நினைத்து கொண்டிருந்தாள் .. இவங்களுக்கு இருக்குற அக்கறை கூடவாடா உனக்கு இல்லாமல் போச்சு ? எங்கடா போயி தொலைஞ்ச ? என்று புலம்பினாள் .

அதே நாளில் தான், கவிமதுராவுடன் தேனீக்கு  செல்ல தயாரானாள்  வானதி .. செல்வதற்கு முன், அருளிடம் பேசலாம் என்று போன செய்தவள், பதில் இல்லாமல் போகவும் , லேசாய் எழுந்த ஏமாற்றத்துடன் பயணத்தை துவங்கினாள் .. அப்படி என்றால் அருள் எங்கே ?

" ஷீலா நீ எங்க இருக்க ?" போனில் தங்கையிடம் வினவினான் அகில் ..

" நான் ஏர்போர்ட் ல தான் இருக்கேன் .. உனக்கொரு விஷயம் தெரியுமா அண்ணா , அந்த அருள் இவளை வழி அனுப்ப வரவே இல்லை ..!"

" என்ன சொல்லுற ?"

" ம்ம் ஆமா , நான்தான் சொன்னேன்ல, நமக்கு சாதகமாய் தான் எல்லாமே நடக்குதுன்னு " என்று சிரித்தாள் அவள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.