(Reading time: 18 - 35 minutes)

" ஹா ஹா என் அத்தைக்கு வாயெல்லாம் பல் .. உன் அத்தைக்கு உடம்பெல்லாம் மூளை .. கல்யாணமே வேணாம்னு சொன்னான் , திடீர்னு  சம்மதிச்சதே  அவங்களுக்கு அதிர்ச்சிதான் .. இதில், அதற்கு பிறகு நான் உன்கிட்ட எதுவும் பேசலையாம் , உன் போன் நம்பர் கூட வாங்கிகலயாம் .. உண்மையிலேயே கல்யாணத்துக்கு சம்மதமா ? இல்ல வேறேதும் ப்ளான்  போடுறேனான்னு அம்மாவுக்கு டவுட்டு .. அதான் அதை சரி பண்ணுற மாதிரி கெளம்பி வந்துட்டேன் .. அதுமட்டும் இல்ல, தன்னுடைய வாழ்க்கையை என்னோடு ஷேர்  பண்ணபோகிற பொண்ணுக்கு , ஏதாச்சும் பரிசு தரணும்னு தோணிச்சு " என்று கண்ணடித்தான் கிரிதரன் .. அவன் பேச்சில் தான் வீழ்வதை உணர்ந்தாள்  கவிமதுரா .. எனினும்

" இப்படியெல்லாம் பேசினா கவிமதுரா இம்ப்ரஸ் ஆகிடுவாளா ?" என்று கண் சிமிட்டினாள்  அவள்.. அவள் உல்லாசமான சிரிப்பும், அவள் பேச்சில் இருந்த மலர்ச்சியும் அவள் மனம் தன் வசம் சாய்வதை  உணர்ந்தே இருந்தான் கிரிதரன் .. "ஓஹோ அப்போ நீ இன்னும் இம்ப்ரஸ் ஆகாமல் தான் , கிரிதரனை சுருக்கி தரூன்னு கூப்பிட்டியா " என்றான் அவன் குறும்பாய் .. அவன் சொன்னதும்தான் , அதை உணர்ந்தாள்  கவிமதுரா .. இது எப்போதில் இருந்து நடந்தது ? என்று அவளுக்கே ஆச்சர்யமாய் இருந்தது .. எனினும் அதனை மறைத்தபடி

" அதெல்லாம் அம்மாவை நம்ப வைக்கத்தான் " என்று திணறியபடி கூறினாள் ....

" நான் ஒன்னு கேட்கலாமா கவி ?"

" யா "

" நான் வரும்போது நீயும் அத்தையும் ஏதோ காரசாரமாய் பேசிட்டு இருந்திங்களே ! என்ன விஷயம் ? " என்று கேட்டான் கிரிதரன் .. என்னதான் அவளது அன்னை மூலம் தெரிந்திருந்தாலும் , அவளாக சொல்கிறாளா ? என்று தெரிந்து கொள்ள ஒரு ஆர்வம் அவனுக்கு .. அவளோ இயல்பாய்

" நானே சொல்லனும்னு நினச்சேன் தரூ " என்றபடி நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தாள் .. தன்னிடம் எதையும் மறைக்காமல் கூறியவளை  மனதிற்குள் மெச்சினான் கிரி .. இப்போது அவளின்பால் சாய்வது அவனது முறையானது. தன்னை வேறொருவனாய்  நினைக்காமல் இயல்பாய் பழகியவள், அவனை கவர்ந்தாள் .. ஒருவரை ஒருவர் நேசிக்கும் தருனமானது அவ்விடத்திலே உதயமானது ..

ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே

உந்தன் அலை வந்து கடல் சேருதே

வெண்ணிலவுகள் வெட்டி மோதிரங்கள் செய்வேனே

அது உனைச் சேர ஒளி  வீசுதே

அவ்வளவு நேரம் வானொலி உயிர்பித்து இருந்தாலும் அவன் மனதில் அன்பின் விதை விழுந்த நேரம் சரியாய் இந்த வரிகள்  அனிருத்தின் குரலில் ஒலிக்கவும் உற்சாகமானான் கிரி ..

தானும் சேர்ந்து அந்த பாடலுடன் இணைந்து பாட துவங்கினான் ..

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே

வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே

இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே

ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

பெண்ணே பெண்ணே

என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன

உன்னைத் தந்தால் என்ன

அவன் தனக்காகத்தான் பாடுகிறான் என்று உணர்ந்தாள்  கவிமதுரா .. சுவாசம் நிற்பது போல இருந்தது .. முதன்முதலில்  வேறொரு ஆணின் நேசம் அவளை தடுமாற வைத்தது ... ஓர் அர்த்த புன்னகை இருவரின் இதழ்களிலும் குடி கொண்டது.

சட்டென டிரைவர் ப்ரேக் போடவும் , அன்றைய நினைவுகள் இருந்து விடுபட்டாள்  கவிமதுரா ..

" என்னாச்சு அண்ணா ?"

" ஒண்ணுமில்லம்மா, குறுக்கே இன்னொரு வண்டி " என்றார் அவர் .. லேசாய் அவளது குரல் நடுங்க

" பத்திரம் அண்ணா " என்றாள் .. கிரிதரனின் மூலம் ஏற்கனவே கொஞ்சம் நடந்ததை அறிந்திருந்த வானதி

" அப்பறம் என்னாச்சு அண்ணி ?" என்றாள் 

மீண்டும் அன்றைய நினைவுகளில் பயணம் செய்தாள்   கவிமதுரா .. அதற்குள் நாம நம்ம சத்யாவின் பயணத்தை பார்ப்போம் ..

" குரங்கு , லூசு , உடம்பு முழுக்க திமிர் ... போகாதேன்னு ஒரு வார்த்தை சொன்னா திரும்பி வந்திட மாட்டேனா ? என்னை வழி அனுப்ப கூட  தோணாமல் எங்கே போயிட்டான் இவன் ?" என்று புலம்ப தொடங்கினாள்  சாஹித்யா .. 

சந்தோஷ் கேட்ட அதே கேள்வியை தான் அவளது உள்மனமும் கேட்டது ,...

" சத்யா , உனக்கு அருள் முக்கியமா ? இல்ல அவன் மேல இருக்குற கோபம் முக்கியமா ?"

இதில் என்ன சந்தேகம் ! அருள்தான் முக்கியம் என்று அவள் உதடுகள் உச்சரிக்குமுன்னே அவளது கால்கள் விமானத்தில் அடிவைத்து விட்டன.. இன்னும் சில நிமிடங்களில் பறந்துவிடுவாள்  அவள் .. இனியும் இப்படி இருக்க முடியாது என்று எண்ணியவளாய் போனில் அவனை அழைக்க முயன்றாள்  அவள் .. அதற்குள் ஓர் இரும்பு கரம் அவளது செல்போனை  அவளிடமிருந்து பிடிவாதமாய் பறித்தது ... அது யாருடைய கை ? அடுத்த எபிசொட்ல சொல்றேன் .. !

தவம் தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.