(Reading time: 11 - 22 minutes)

ந்த ஹாஸ்பிடல் என்று விசாரித்து வீட்டு வேலையாளிடம் வெளியே சென்று வருவாதாக கூறிவிட்டுச் சென்றாள். வெண்மதி. நல்ல வேளையாக அவள் அத்தைச் சற்றுக் களைப்பாக இருக்கவே சாப்பிட்டு ஓய்வு எடுக்கச் சென்று விட்டார். வெளியில் சென்று ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடலுக்குச் சென்றாள்.

அங்கே வாசலில் நின்றிருந்த டிரைவர் அவளை உள்ளே அழைத்துச் சென்றார். அவளைப் பார்த்த சூர்யா கோபமாக டிரைவரை முறைத்து விட்டு

“இங்கே ஏன் வந்தீர்கள்? வீட்டில் அப்பா அம்மா கவலைப் படுவார்கள் என்று தானே சொல்ல வேண்டாம் என்று விட்டேன்”

“நான் யாரிடமும் சொல்ல வில்லை. அத்தையும் மாமாவும் உறங்குகிறார்கள்.” என்றாள்.

“நீங்கள் வந்து என்ன செய்யப் போகிறீர்கள்? என்று ஏதோ சொல்ல வந்தவன் டாக்டர் வரவும் நிறுத்தினான். அவர் குடும்ப டாக்டர் ஆதலால் அவர் கண்டிப்பது போல் பார்க்கவும் நிறுத்தினான். பிறகு எல்லோரையும் பார்த்து “பயப்பட ஒன்றுமில்லை. கையிலும் காலிலும் ஃபிராக்சர்.  ஆபரேஷன் செய்து ஒரு மாதம் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும்” என்றார். சூர்யா ஆபரேஷனிற்கு சரி என்று விட டாக்டர் “அவனுக்கு நினைவிருக்கிறது. போய் பார்த்து விடுங்கள். உடனே  ஆபரேஷன் செய்து விடலாம் என்றார்.”

உள்ளே எல்லோரும் பார்த்த போது வலியில் கண்கள் மூடியிருந்தான். ஆபரேஷன் தியேட்டர் சென்ற பிறகு வெண்மதியைப் பார்த்து வீட்டிற்கு போகச் சொல்ல அவள் தயங்கியபடி சூர்யாவிடம் தான் இங்கேயிருப்பதாகக் கூறினாள். அவன் வேண்டாம் என, அதிதி தான் போய் அப்பா அம்மாவிடம் விஷயத்தைக் கூறுவதாகக் கூறினாள்.

“நீங்கள் எதில் வந்தீர்கள்? என்றாள். அவள் ஆட்டோவில் எனவும் திகைத்து விட்டு தான் வந்த காரில் டிரைவரோடு கிளம்பினாள்.

ஆபரேஷன் தியேட்டரில் வாசலில் சூர்யாவும், வெண்மதியும் காத்திருந்தனர். இரண்டு மணி நேரத்தில் ஆபரேஷன் முடிந்து ஆதித்யாவை ஐ.சி.யூ விற்கு மாற்றினார்கள். ஒரு நாள் அப்சர்வேஷனில் இருக்கட்டும், மறுநாள் வார்டுக்கு மாற்றி விட்டு 4 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து விடலாம்  என்று டாக்டர் கூறினார்.

அப்பொழுது அதிதி தன் அம்மா அப்பாவுடன் வரவே சூர்யா சற்று ஆச்சரியப்பட்டான். ஏனெனில் அவன் அப்பா, அவர் ஸ்ட்ரோக்கிற்கு பிறகு எங்கும் வெளியே வரவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆயிற்று அவர் வெளியே வந்து. சூர்யா வேகமாக வந்து தன் தந்தையை அணைத்துப் பிடித்து ஐ.சி.ய+ வெளியில் நின்று ஆதியை காட்டினான்.

அனைவரும் சற்று நேரம் அங்கிருந்து பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினர். அப்போது மதியம் ஒன்றும் சாப்பிடாமல் இருந்ததால் சூர்யாவிற்கு உணவு கொண்டு வந்ததாக அதிதி கூற, மணி ஏழாகிவிட்டதால் சற்று நேரம் சென்று டின்னராகச் சாப்பிடுவதாகக் கூறினான்.

பிறகு எல்லோரும் கிளம்பும் போது வெண்மதியையும் கிளம்பச் சொல்ல, அவள் தயங்கினாள். அவள் தயக்கத்தைப் பார்த்த ராகவன்,

“சூர்யா, வெண்மதி இங்கே இருக்கட்டும். இந்த சாப்பாட்டை அவள் சாப்பிடட்டும். நீ எங்களோடு வந்து சற்று ரெப்ரஷ் செய்து சாப்பிட்டு விட்டு வா” என்றார்.

மறுத்த சூர்யாவை விடாப்பிடியாக அழைத்துச் சென்றார். அவன் அவரை ஆச்சரியமாகப் பார்த்து, பொதுவாக அவர் இப்படி வற்புறுத்துவதில்லை என்று  எண்ணியவன் அவரோடு சென்றான். வெண்மதி தன் மாமனரைப் பார்த்து “தேங்க்ஸ் மாமா” என்றாள். அதைப் பார்த்த அனைவரும் அதிசயப்பட்டார்கள்.

வீட்டிற்குச் சென்றவர்கள் சூர்யா ரிபெரஷ் செய்து வரவும் அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர். யாருக்கும் சாப்பிட மனமில்லையெனினும் ஒருவருக்காக மற்றவர் என்று சாப்பிட்டனர். சாப்பிட பின் சூர்யா தந்தையைப் பார்த்து “ஏன் அப்பா, அவர்களை அங்கே இருக்கச் சொன்னீர்கள்? ஏதாவது மருந்து வேண்டுமென்றால் அவர்கள் எங்கே போய் வாங்க முடியும்? அண்ணாவை நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா? மேலும் அவர்கள் இங்கே உங்களுக்கு உதவியாகவும், வீட்டை கவனித்துக் கொள்ளவும் இருந்தால் சரியாக இருக்கும் என்று எண்ணினேன்.”

அதற்கு அவர் “என்னை மட்டும் கவனித்துக் கொள்ள அவள் நர்ஸ் அல்;ல. வீட்டை மட்டும் கவனித்துக் கொள்ள அவள் வேலைக்காரியுமில்லை. அவள் இந்த வீட்டு மருமகள். புரிந்து கொள்” என்று சற்று வேகமாகக் கூறினார்.

“அப்பா நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை. அம்மாவிற்கும் முடியாது. வீட்டிலும் யாராவது பொறுப்பாக இருக்க வேண்டும் அப்பா. அதனால் தான் அவ்வாறு கூறினேன்.” என்று சற்று வருத்தமாகக் கூறவும்,

அவனைத் தட்டிக் கொடுத்த ராகவன் “ நானும் உன்னை வருத்தப்படுத்தச் சொல்லவில்லை. இத்தனை நாளும் அவள் இதை மட்டும்தான் செய்தாள். இனியும் இப்படி இருக்க வேண்டாம் என்றுதான் சொன்னேன்.” என்றார்.

மற்ற அனைவரும் அவரை புரியாமல் பார்க்க “ஆதி, எத்தனை நாள் இப்படியே இருப்பான்? இனியாவது அவன் வாழ வேண்டாமா?” என்று கேட்க அனைவர் மனதிலும் அவர் கூறியது புரிய ஆரம்பித்தது.

“அவன் சற்று தேறியதும், நீயும் அதிதியும் வேலைகளைப் பார்க்கச் சென்று விடுங்கள். அம்மா அவளால் முடிந்த அளவு வீட்டைப் பார்த்துக் கொள்வாள். ஆதியை வெண்மதி பார்த்துக் கொள்ளட்டும். அப்படியானால் தான் அவன் அவளைப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் வாழ்க்கையைப் பற்றி அவன் சிந்திக்க ஆரம்பிப்பான்.”

சூர்யா “இதற்கு ஆதி அண்ணா ஒத்துக் கொள்வாராப்பா? “ என்று கேட்க ராகவன் “ஒத்துக் கொள்ள வைப்போம். நாளை அவனை வார்டுக்கு மாற்றிய பிறகு நான் அவனிடம் பேசுகிறேன்” என்று கூறவே அனைவரும் ஒத்துக் கொண்டனர். பிறகு சூர்யா ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான்.

ங்கே மருத்துவமனையில் மற்ற எல்லோரும் சென்ற பிறகு சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள். பிறகு நர்ஸிடம் கேட்டு உள்ளே சென்ற வெண்மதி மெதுவாக அவன் அடிபட்ட கையை தடவிக் கொடுத்ததோடு கண்களில் நீர் வழிய அவனைப் பார்த்தாள். திருமணமாகிய இந்த இரண்டு வருடங்களில் முதன்முறையாக தன் கணவனின் அருகில் உரிமையோடு நின்;று பார்த்தாள். அவனின் அடிபடாத கையில் மெதுவாக முத்தமிட அவன் விழிகள் அசையவும் மெதுவாக வெளியே சென்றாள்.

இதை எல்லாம் வெளியில் நின்று பார்த்த சூர்யாவிற்கு அவன் தந்தை கூறியது புரிய ஆரம்பித்தது. வெளியில் வந்த வெண்மதியிடம் “சாப்பிடவில்லையா? என்க, அவள் “இல்லை. நீங்கள் வந்த பிறகு சாப்பிடலாம் என்று இருந்தேன். நீங்கள் சாப்பிட்டீர்களா?” என்று வினவ தலையசைத்த சூர்யா. அவளை ஆதித்யாவிற்கு ஏற்பாடு செய்த தனி வார்டில் சென்று சாப்பிடுமாறு கூறினான். சரி என்று சென்றவளையே சூர்யா பார்த்துக் கொண்டிருந்தான்.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.