(Reading time: 24 - 48 minutes)

துவரை அவனையே பார்த்துக் கொண்டிருப்பது உறைக்க பார்வையை தாழ்த்திக் கொண்டாள் பெண்.

“எது எப்டியோ சிக்‌ஸர், நீ வந்ததால எனக்கு கொஞ்சம் ரிலாக்‌ஸா ஃபீல் ஆகுது….” சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“ தேங்க்ஸ்…” அதில் நிச்சயம் நிம்மதி நிரம்பி இருந்தது. இவளுக்காக ஃபீல் பண்ணிருப்பானோ?

ஒரு கணம் அவளது காட்டிக் கொடுக்கும் திட்டத்தை கை விட்டுவிடலாமா எனக் கூட தோன்றிவிட்டது அவளுக்கு. இதுக்கெல்லாம் ஏமாந்தா வாழ்நாள் முழுக்க இவன்ட்ட ஏமாந்துகிட்டே தான் இருக்கனும். கலைந்த மனதை மீண்டுமாய் கட்டிக் கொண்டாள்.

“சரி நான் கிளம்புறேன்…டேக் கேர் ஆஃப் யுவர் செல்ஃப்…”

“………………………..”

“பை “

“……….”

“பை கூட சொல்ல மாட்டியா நீ….? இன்டியாக்காக தான விளையாடப் போறேன்…?”

அவன் கார் கதவை திறந்து கொண்டு இறங்கப் போக அவளையும் மீறி வாய் முனுமுனுக்கிறது “ஆல் த பெஸ்ட்”

அவனிடம் தான் தோற்கத் தொடங்குவதை அவள் முதன் முதலாக உணந்த தருணம் இது தான். அவளையும் மீறி அவன் மன சந்தோஷத்திற்காக மட்டுமே சொல்லப் பட்ட வார்த்தைகள்.

மனதிற்குள் கோபமும் கூடவே பயமும் சடுதியில் எழும்பி சந்திர மண்டலம் அளவு உயர்கிறது அவளுள்.

திரும்பிப் பார்த்து ஒரு சிறு புன்னகை புரிந்தவன் அப்படியே இறங்கிப் போயிருக்கலாம்.

“தேங்க்ஸ்டா…திஸ் வில் டூ “ என்றான். எல்லாம் ஊருக்கு போற பிரிவாற்றாமை தான்.  அதோட அவனைத் தேடி இவ்ளவு தூரம் வந்துட்டாளே…

‘டா….வா ? எப்படிப் பட்ட உரிமையை இவள் இவனுக்கு கொடுக்கிறாள்? நிச்சயமாய் இவனை ஜெயித்தாக வேண்டும். இவள் புறம் அவன் திரும்பாமல் செய்தே ஆக வேண்டும். சங்கல்யாவோ மனதிற்குள் பழி வாங்க உறுதி பூண்கிறாள்.

ஜோனத் இறங்கவும் அரண் காருக்குள் ஏறிவிட்டான். அதோடு காரை வேகமாக கிளப்பியும் விட்டான்.   ஆக இப்பொழுது இவள் அந்த பீபுள் ரிப்போர்டரிடம் சொல்லிய படி பக்கத்துக்கு காருக்கு அடியில் எதையும் பதுக்க முடியவில்லை.

இப்பொழுது இவள் என்ன செய்ய?

அதற்குள் அரண் எண்ணில் அழைப்பு.

“என்னடா…? விட்டுட்டுப் போற மாதிரி ப்ளான் இல்லையோ?”

“…………..”

“அதெல்லாம் பார்த்துகிடலாம்”

“…………………………”

“பீச்சா…ஓகே டன்…”

அரணின் உரையாடலைக் கேட்டிருந்த சங்கல்யா, ஆக இப்போ பீச்சுக்குதான் அந்த ரிப்போர்ட்டரை வரச் சொல்லனும்..சடுதியில் முடிவெடுத்து, தன் அடுத்த திட்டத்தை அவசரமாக மீண்டுமாக அந்த பீபுள் நபருக்கு டெக்‌ஸ்ட் செய்தாள்.

பீச்.

“கார்லயே இருந்தா பீச் வந்த மாதிரியே ஃபீல் இருக்காது…ஒரு வாக் வாட்டர் வரை போய்ட்டு வர்றேண்ணா…”

அவன் சேர்ந்து வர மாட்டான் என நிச்சயமாக சங்கல்யாவுக்குத் தெரியும். தேவை இல்லாமல் மீடியா கண்ணில் விழுந்து வைக்க கூடாது என்று தானே அவளை ஏர்போர்ட்டில் காரை விட்டு இறங்கவே விடவில்லை.

ஆக நம்பிக்கையோடே கேட்டாள்.  ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆள் நடமாட்டம்.

“ஓகே…மொபைல் கைல இருக்குதுல்ல…”

அவ்வளவுதான் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் அவள். தூரத்தில் அலை அருகில் இருட்டில் அரைகுறையாய் தெரிந்த அந்த பெரிய படகை தான் அடையாளமாக சொன்னாள் அந்த ரிப்போர்ட்டருக்கு. பை டெக்‌ஸ்ட்.

அதன் அருகில் அடைந்து தான் சல்வாருக்குள் வைத்திருந்த அந்த பார்சலை எடுத்தாள். அரண் காரைவிட்டு  தூரத்தில் இருக்கிறாள் அவள். இந்த தூரத்தில் அங்கு நிற்பது அவள் என அரண் புரிந்து கொள்ள முடியுமே தவிர, அவள் செயல்களை அவனால் பார்க்க முடியாது.

அந்த படகின் அருகில் அந்த பார்சலை வைக்கவென மணலில் முழந்தாளிட்டாள். அவ்வளவுதான்…!!!!!!

யார் யாரோ அவள் மேல் வந்து விழுந்தார்கள். எத்தனைப் பேர்??? இருந்த இருட்டில் அந்த படகிற்குள் ஆட்கள் இருந்து போதை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றே அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

தூரத்தில் இருப்பவர்களுக்கு இந்த இருட்டில் இவள் கத்தினால் ஒழிய இங்கு இவள் மாட்டி இருக்கிறாள் என்பதே தெரியப் போவதில்லை.

தரையில் கிடந்தாள் இவள். முதலில் அந்த மிருகங்கள் அடைத்தது அவள் வாயைத்தான். ஆக கத்தவும் வழி இல்லை. பயத்தில் மிரண்டு போனாள் சங்கல்யா.

இவளைப் பிடித்திருந்த அந்த மனித மிருகங்களின்  நோக்கம் புரிய போராடத் துவங்கினாள் அவள். கையில் இருக்கும் மொபைலை எப்படி கையாண்டால் அரணை அழைக்க முடியும்.???? அதோடு அரண் ஒருவன்…. இவர்கள் மூவர்…

இப்பொழுது இவள் கையிலிருந்த மொபைலை பிடுங்கி தூரத்தில் எறிந்தான் மற்றவன்.

அதில் ஒருவன் அருகில் இருந்த கல்லை எடுத்து அவள் தலையை குறிப் பார்த்து ஓங்க….தன் முடிவு என்னவென்று அறிந்து போனாள் அவள்.

ஆனால் அந்த கல்காரனின் நோக்கம் மட்டுமல்ல மற்ற நாய்களின் நோக்கம் கூட நிறைவேறவில்லை.

அரண்!!!!

இவளை அனுப்பிவிட்டு இவளுக்கு சற்று இடைவெளியிட்டு அவன் இறங்கி வந்திருப்பான் என சங்கல்யாவே எதிர்பார்த்திருக்கவில்லை.. இவள் அந்த இருட்டில் அந்த பார்சலை மட்டுமாக படகு மறைவில் வைத்துவிட்டு  நிமிர்ந்திருந்தால் அவனுக்கு வித்யாசமாக தோன்றி இருக்காதுதான்.

ஆனால் விழுந்தவள் எழும்பவே இல்லை எனும் போது…??? அவன் அவளைத் தேடி வந்திருந்தான் படு வேகமாக.

போதையில் இருந்த அந்த கும்பலுக்கு சங்கல்யா தனியாக வந்து நின்றது மட்டுமே கவனத்தில் இருந்ததால் இதனை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

“டேய் விடுங்கடா அவள….” அவன் கர்ஜனை கேட்கவுமே  அத்தனை பேரும் தலைதெறிக்க விழுந்தடித்து ஓடினர்.  

அவர்களை துரத்துவதை விட அவளுக்கு உதவுவதிலும், பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வருவதிலும் கவனம் செலுத்திய அரண், அவளை அழைத்துக் கொண்டு திரும்போது குனிந்து அங்கு கிடந்த தனது  டைரி அடங்கிய பார்சலையும் இயல்பாய் எடுத்துக் கொண்டான்.

 இனி??????

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:879}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.