(Reading time: 15 - 29 minutes)

ராகவன் “அவர் அப்பாவை எனக்கு நன்றாக தெரியுமேப்பா. சூர்யா பிரெண்ட் என்பதால் பிரகாஷை பற்றியும் கவலை இல்லை. பின் என்ன ? வர சொல்.” என்றார்.

ஆதி  அதிதியை நோக்கி “இப்போ சந்தோஷமா அவரிடம் போய் சம்மதம் சொல் அதிம்மா” என்றான்.

அவள் “அண்ணா, “ என்று அழைத்து அவன் தோளில் சாய்ந்தாள்.

ஜானகி “ஒஹ் .. இதான் இன்றைய முக்கிய மீட்டிங்க்கா... பொருத்தமாகத்தான் செலக்ட் செய்து இருக்கிறேன்.”” என்று கூற,

“போங்கம்மா” என்று அதிதி வெட்கப்பட்டுக் கொண்டே வெளியில் ஓடி விட்டாள்.

சூர்யாவிடம் திரும்பிய ஆதி “சூர்யா .. பிரகாஷ் ரொம்ப நாளா அவளிடம் கேட்டு கொண்டிருப்பார் போல் இருக்கிறது, அதனால் அவள் முதலில் அவரிடம் பேசட்டும். பிறகு நீ பேசு”. இப்போ நீ ஆபீஸ் கிளம்பு”” என்று கூறினான்.

இவர்கள் எல்லாரும் கிளம்பிய பின் மதியும் வெளியே வர எத்தனிக்க, ஆதி “மதி என்று அழைத்து “தேங்க்ஸ்”” என்றான்.

“எனக்கு எதற்கு தேங்க்ஸ் ? நான் சொன்னதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டதற்கு நான்தான் தேங்க்ஸ் சொல்லணும்””

சரி . நீ அங்கே வேலை முடித்து விட்டு வா. இங்கே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு

சரி என்று சொல்லி வெளியே சென்றாள்.

அப்போது அவளருகே வந்த ராகவன் “மதிம்மா. ரொம்ப தேங்க்ஸ்டா. நானும் ரொம்ப நாளா நினச்சது, அதிதியை மாற்றி விட்டாய். கூடிய சீக்கிரம் எல்லாருக்கும் ஒரு நல்ல வழி பிறக்கும்.” என்று வாழ்த்தி விட்டு கிளம்பினார்.

அவரிடம் சிரித்து விட்டு சமையல் அறைக்கு சென்ற போது அங்கே அவள் அத்தை கண்ணில் நீர் வழிய அவளை பார்த்து கை கூப்பினார். வேகமாக வந்து அவர்கள் கையை இறக்கிய மதி “அத்தை. என்ன இது. நீங்கள் போய் இப்படி” “ என்று பதறினாள்.

“இல்லை. மதிமா. நீ எனக்கு என் மகளை திருப்பி தந்திருக்கிறாய். நேற்று நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன். எத்தனை வருடங்களுக்கு பிறகு என் பெண்ணிற்கு நான் அம்மாவாகி இருக்கிறேன் என்று உனக்கு தெரியாது. என்ன நன்றி சொன்னாலும் போதாது. ரொம்ப தேங்க்ஸ்.”””” “

அத்தை என்ன இப்படி சொல்கிறீர்கள்.?

“நீ இதற்குள் யுகித்திருப்பாய் என்று தெரியும். ஆனால் நான் உன்னிடம் எல்லாவற்றையும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன். இப்போது இந்த சந்தோஷமான விஷயத்தை மீனாட்சியிடம் சொல்கிறேன். “ என்று கூறி விட்டு தன் போனில் பேச ஆரம்பித்தார்.

வெண்மதிக்கு ஆச்சரியமாகி விட்டது. அவள் அத்தை தன் அம்மாவிடம் இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறாரே என்று. அவர் பேசுவதை கேட்க ஆரம்பித்தாள்.

“மீனாக்ஷி, ஒரு சந்தோஷமான செய்தி. இன்றைக்கு நம் அதிதிக்கு நான்தான் எல்லாம் செய்தேன். இதற்கு காரணம் நம் மதிதான். என்று காலையில் நடந்ததைக் கூறினார்.

அங்கே என்ன பதில் வந்ததோ “ இல்லை. நிச்சயமாக தெரியும் எனக்கு. நேற்று இரவு அவர்கள் இருவரும் பேசிகொண்டிருந்தர்கள்.” “

அங்கே உரையாடல் அவளுக்கு கேட்கவில்லை ஆனால் அவள் அத்தை “இல்லை. நான் இப்போ எதுவும் சொல்ல போவதில்லை. நல்ல சந்தர்ப்பம் வரும்போதுதான் சொல்வேன். சரி சரி. அதோடு அதிதிக்கும் பிரகாஷ்க்கும் திருமணம் பேசவும் ஆரம்பிக்கலாம் என்று ஆதி கூறியிருக்கிறான். அனேகமாக இந்த வாரத்தில் பேச்சு வார்த்தை இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் அப்போது உனக்கு சொல்கிறேன். ஓகே. பை” என்று “ வைத்தார்.

அப்போது தான் மதி அங்கேயே நிற்பதை பார்த்தவர் அவள் தன்னை ஆச்சரியமாக பார்க்கவும் “என்ன மதிம்மா”? “ என்றார்.

இல்லை அத்தை. நீங்கள் அம்மாவோடு இவ்வளவு நெருக்கமா. ஆனால் காட்டி கொண்டதில்ல்யே?

அது அப்படித்தான். சில விஷயங்கள் வெளிப்படையாக காண்பிக்க முடியாது. ஆனால் கூடிய சீக்கிரம் எல்லாம் மாறி விடும் என்று தோன்றுகிறது. நீ இப்போ குழம்பாதே என்றார்.

அவள் அவரை நேராக பார்த்துவிட்டு பிறகு சிரித்தாள். அப்போது ஆதி கூப்பிடுவதாக வேலையாள் கூறவே அங்கே சென்றாள்.

வீட்டு நிலவரம் இவ்வாறு இருக்க ஆபீஸ் சென்ற அதிதிக்கோ படபடப்பு தாங்க முடியவில்லை. இன்று வரை பிரகாஷை பிடித்திருந்தாலும் அவனிடம் அவள் திருமணம் இப்போ நடக்காது என்றுதான் இதுவரை பேசியிருந்தாள். இன்றைக்கு அவள் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வேண்டுமே என்று நெர்வஸ் ஆக இருந்தாள்.

எப்போதும் போல் அவள் ஆபீஸ் வந்து ஒரு மணி நேரத்தில் வரும் போன் இன்றும் வந்தது. அவன் நம்பரை பார்த்து கொஞ்சம் தயங்கியவள், பின் எடுத்து “ஹலோ” என்றாள்.

பிரகாஷ் “குட் மார்னிங் அதிதி. “

“குட் மார்னிங் “

“நான் கேட்ட விஷயத்தை பற்றி யோசித்தாயா”

“இன்று லஞ்ச் ஹவரில் மீட் பண்ணலாமா?

“ஷுர்... எங்கே மீட் பண்ணலாம். ஏதாவது ஹோடேலில் டேபிள் புக் பண்ணவா”

அதெல்லாம் வேண்டாம். ஆபீஸ் பக்கத்தில் உள்ள காபி ஷாப் வந்து விடுங்கள். அங்கே வைத்து பேசலாம். நான் சாப்பிட வீட்டிற்கு போய் விடுவேன்

சரி. நான் ஒரு மணிக்கு காபி ஷாப் வந்து விடுகிறேன். பாய்.

பை .. என்று வைத்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டாள்.

வழக்கத்தை விடவும் வேலை அதிகமாக இருந்த போதும் அன்று ஏதோ நேரம் போகாதது போல் உணர்ந்தாள். சரியாக பன்னிரெண்டே முக்கால் மணிக்கு கிளம்பி விட்டாள்.

ஒரு மணிக்கு ஐந்து நிமிடம் முன்னதாக அவள் சென்றாள், அவளுக்கும் முன்னதாகவே பிரகாஷ் காத்திருந்தான்.

அவளை பார்த்து சிலையாக நின்றவன் அருகில் வந்து அதிதி “ஹாய்” எனவும், தலையை குலுக்கி விட்டு “ஹாய்.. உள்ளே போகலாமா”

பேசுவதற்கு ஏதுவாக ஒரு இடத்தில அமர்ந்தவுடன் , பேரரிடம் இரண்டு பேருக்கும் ஒரு ஜூஸ் சொல்லியவன், அவளிடம் திரும்பி “சொல் அதிதி.. என்ன பேச வேண்டும்”

அவள் மேலும் கீழும் பார்த்து “அது.. நீங்கள் கேட்டதை பற்றி வீட்டில் சொல்லி விட்டேன். நீங்கள் வந்து பேசுங்கள் “ என்றாள்.

அவன் சிரிப்புடனே “நான் என்ன கேட்டேன்” என்றான். அவள் திடுக்கிட்டு அவன் முகத்தை பார்த்தவள் , அதில் குறும்பு சிரிப்பை பார்த்தவள் , அவனிடம் சிணுங்கினாள்.

அவள் கையை பிடித்து “அதிமா, உன் வீட்டில் பேசம் முன், உனக்கு என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? உன் வாயால் நீ சொல்லு,:” என்றான்.

“சம்மதம்” எனவும், அவள் கையில் முத்தமிட்டான்.

அவள் சிலிர்க்கவும், அவள் கையை பிடித்தபடி வீட்டில் நடந்தவற்றை கேட்டு அறிந்தான். அதற்குள் ஜூஸ் வரவும் இருவரும் குடிக்க ஆரம்பித்தனர், அப்போது அவள் போன் அடிக்க, காலர் ட்யூன் ஆக ,

“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று .. ஏதோ அது ஏதோ உன்னிடம் இருக்கிறது “

என்று பாடியது. அதிதி முகம் சிவக்க, பிரகாஷோ  “அதி .. இந்த சாரிலே நீ ரொம்ப அழகா இருக்க. உன்னை இப்பவே என் கூட கூட்டிட்டு போகணும் போல் இருக்கு, எதற்கும் நம் கல்யாணம் வரை தனியிடத்தில் சந்திக்க வேண்டாம். என்னால் கண்ட்ரோல் செய்ய முடியும் என்று தோன்றவில்லை”  என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.