(Reading time: 15 - 29 minutes)

திதி வெட்கத்தோடு நிலம் பார்த்தாள். பிறகு இருவரும் கிளம்பும் போது அவள் காரில் ஏறிய பின் சுற்றி பார்த்து விட்டு சட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான். திகைத்து விழித்தவள் அவன் சிரித்துக் கொண்டே “பை டார்லிங் “ எனவும், அவளும் “பை” என்று சொல்லி காரை கிளப்பினாள்.

அன்று மதியம் சாப்பிட வந்த அதிதியை மதி கேலிப் பார்வை பார்க்க, முகம் சிவக்க உள்ளே சென்று விட்டாள்.

காலையில் ஆபீஸ் சென்ற சூர்யா வாணியை எதிர்பார்த்து காத்திருந்தான். முதலில் அவன் அப்பாவிற்கு உதவியாக அவளை போட நினைத்தவன், பின் தன் உதவியாளரை அப்பாவிடம் அனுப்பி விட்டு, தனக்கு உதவியாக அவளை நியமித்தான்.

அவள் வந்தவுடன் வேலை விவரம் எல்லாம் சொன்னவன், அவளை சைட் அடித்து கொண்டே தன் வேலையை பார்த்தான்.

லஞ்ச் ஹவரில் அவள் சாப்பிட போகவும், அவளை தடுத்து நிறுத்தி அவள் வேலையை பற்றி அவளிடம் விசாரித்தான். சாப்பிட்டு விட்டு அவன் சைட் போக வேண்டும் என்பதால் அவள் மாலையில் தான் வந்ததும் வீட்டிற்கு போகலாம் என்றான்.

மாலையில் கிட்ட தட்ட ஆபீஸ் காலியான பின் தான் வந்தான்.

வந்தவுடன் “வாணி . அட்டெண்டரிடம் காபி வாங்கி வர சொல்லு” என்று விட்டு தன் காபினுக்கு சென்றான். சற்று நேரத்தில் வாணியும் உள்ளே சென்று “சார்..” என்று அழைத்து  அன்றைய வேலை பற்றி சொல்லி விட்டு “நான் கிளம்பவா?” என்றாள்.

நீ எதில் வந்திருக்கிறாய் ?

பஸ்ஸில் தான்

“இரு. நான் உன்னை டிராப் செய்கிறேன். “

“அதெல்லாம் வேண்டாம். நானே போய் விடுவேன். வீட்டில் பிடிக்காது“

ஏன்? யார் என்ன சொல்வார்கள்?

அவர்களுக்கு இப்படி வருவது பிடிக்காது

“இன்றைக்கு என்னோடுதான் வருகிறாய்” என்றவன் கால் மணி நேரத்தில் கிளம்பி வந்தான்.

அவள் மறுத்தும் பயனில்லாமல் வீட்டில் விட்டான். வாணியின் அம்மாவிற்கு சற்று கவலையாக இருந்தாலும், முதல் முறையாக வருவதால் உள்ளே வருமாறு அழைத்தார். அவர் சொன்னவுடன் எந்த பிகுவும் இல்லாமல் வந்தான் சூர்யா.

“என்ன சாப்பிடுகிறீர்கள் சூர்யா? காபி ஆர் டீ?

அதெல்லாம் வேண்டாம் அத்தை. இப்போதுதான் சாப்பிட்டு வருகிறேன். நீங்கள் என்னை ஒருமையிலேயே கூபிடலாம் .

அது நல்லா இருக்காது ...

அதெல்லாம் இல்லை நீங்கள் அப்படிதான் கூப்பிடனும். அதோடு அத்தை வாணியை எனக்கு பி.ஏ வாகத்தான் போடிருக்கிறேன். அண்ணா ஆபீஸ் வரும் வரை கொஞ்சம் பிஸியாக இருக்கும். நேரமும் ஆகலாம். அதனால் நானே அவளை நம் வீட்டில் விட்டு விடுகிறேன். மாமாவிடமும் சொல்லி விடுங்கள்.

மீனாக்ஷியால் மறுக்க முடியாதபடி பேசினான். அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவர் வாயேலேயே சம்மதம் வாங்கும் வரை அவன் விடவும் இல்லை. வாணிக்கு  அவன் நினைத்ததை நிறைவேற்றிக் கொண்டதைப் பார்த்து வியப்பாக இருந்தது.

கொஞ்ச நேரம் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பி வீடு வந்தவன், அங்கே பிரகாஷை பார்த்து ஆச்ர்யமடைந்தான்.

அங்கே ஆதியின் அறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்த பிரகாஷ் சூர்யாவை பார்த்து “வாடா .. மச்சான எப்படி இருக்க? என

“அண்ணா .. யாரு இவர்? இவரை எனக்கு தெரியவில்லயே? “ என்று சூர்யா கூறவும்,

சாரி மச்சான .. கோபபடாதே.. உன் தங்கை சம்மதமே எனக்கு இன்னிக்குத்தான் கிடைச்சது. அவ சம்மதம் இல்லாம உன்கிட்ட எப்படி சொல்றதுனுதான் சொல்லலை.. ப்ளீஸ் .. “

அது சரி.. அவ சம்மதம் மட்டும் கிடைச்சா போதும்மா?

உங்க சம்மதமும் வேணும். ஆனா நீ என் நண்பன்டா.. உன்னை நம்பித்தான் நானே அதிதிகிட்ட பேசிருக்கேன்.

இப்போ சொல்லுடா .... நண்பனம் நண்பன் ... உன்னையெல்லாம்... “ என்று ஏதோ சொல்ல வந்தவன் ஆதியின் “சூர்யா “ என்ற குரலில் அடங்கி

“அதை விடு.. ரொம்ப சந்தோசம்.. என் தங்கைக்கு நீ மாபிள்ளையா வரது. முறைப்படி பேசறதுக்கு உன் பேரெண்ட்ஸ் எப்போ வராங்க ..

“ஆதி மச்சானுக்கு இன்னும் கொஞ்சம் சரியாகட்டும். அடுத்த வாரத்துல கூட்டிட்டு வரேன். இப்ப அவரை பார்க்கத்தான் வந்தேன். “  என்றான் பிரகாஷ். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு “சரி நான் கிளம்பவா?” என்று கண்களால் தேடினான்.

அவன் தேடுவதை உணர்ந்து அதியோடு உள்ளே வந்தாள் வெண்மதி. இருவர் முகமும் மலர, எல்லாரும் அதை பார்த்து மகிழ்ந்தனர்.

அதிதியிடம் கண்களால் விடை பெற்றவன், மற்றவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அன்று எல்லோரும் மகிழ்ச்சியுடன் உணவருந்த சென்றனர்.

ரவு மருந்து வழக்கம் போல் ஆதிக்கு கொடுத்து விட்டு, படுக்க சென்றவளிடம் ஆதி “அதிதியிடம் நீ வேறு ஏதோ பேசியிருப்பாய் போல். அவள் இதுவரை அம்மாவிடம் இவ்வளவு உரிமையாக பேசியதில்லை. எப்படி ?”

“நானே கேட்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு தெரிந்த வரை எல்லோர் வீட்டிலும் அம்மாவிடம் தான் உரிமையாக கேட்பார்கள். அதை விட்டால் அப்பாவிடம். அது ரொம்ப குறைவு.  ஆனால் இங்கே நீங்கள் யாரும் உங்கள் அம்மாவிடம் எதுவும் கேட்பதில்லை. அது சாப்பாடு விஷயமாக இருந்தாலும் சரி. இல்லை வேறு விஷயமானாலும் சரி. அப்பாவிடமும் இல்லை. உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக் கொள்கீர்கள். எனக்கு அத்தையை பார்த்தால் இப்போதுதான் சற்று உடம்பு சரியில்லாமல் இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் பொறுப்பில்லாதவர்கள் இல்லை

வந்தனாவோடு உங்கள் திருமணம் நிச்சயக்கிப்பட்டதில் எதாவது அத்தையுடன் பிரச்சினையா? ஆனால் அது உங்களுடன் மட்டும்தானே இருக்கும். அதிதிக்கு என்ன பிரச்சினை? “

“நீ நினைப்பது போல் எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் சின்ன வயதிலிருந்தே அத்தையிடம் தான் வளர்ந்தோம். அம்மாவிற்கு வேலை சரியாக இருக்கும் என்பதால் அத்தைதான் எங்களை கவனிப்பது. அதனால் எதாவது வேண்டும் என்றாள் அத்தையிடம்தான் கேட்போம்.

வந்தனா அதிதி சேர்ந்தே வளர்ந்ததால், அவளுக்கு எடுக்கும் போதே அத்தை அதிதிக்கும் செய்து விடுவார்கள். அதனால் அதிதியும் எதுவும் அம்மாவிடம் சென்று கேட்டதில்லை. அத்தை இல்லாத இந்த இரண்டு வருடங்களில் அம்மாவிற்கும் சற்று உடம்பு சரியில்லாததால் அவள் வேலையை அவளே பார்த்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள். இன்றைக்குத்தான் முதல் முதலாக அம்மாவிடம் கேட்டு செய்திருக்கிறாள்.” என்று முடித்தான்.

வெண்மதிக்கு நேற்றிலிருந்து குழப்பிய விஷயம் தெளிவாகியது. தன்னை அறியாமல், வாய் விட்டு “அப்படியானால் உங்கள் அத்தைதான் காரணமா?” என்றாள்.

ஆதி  திடுக்கிட்டு “என்ன சொல்கிறாய் வெண்மதி?” என்றான்.

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.