(Reading time: 19 - 38 minutes)

" ன்ன ஆச்சு வானதி ?" என்றாள் சாஹித்யா மீண்டும் .. அவள் குரலில் சட்டென உடைந்தாள் வானதி.. அவள் அழவில்லை என்றாலும் கூட , லேசாய் குரல் தழுதழுத்ததை சத்யா உணர்ந்தாள் ..

" எனக்கு தெரியல சத்யா .. நான் உன் இடத்தில் இருக்கலாம்னு தோணுது " என்றாள் சட்டென .. விக்கித்து போனாள் சாஹித்யா அவளது பதில் .. ஆனால் அவளது அதிர்ச்சியை அவள் காட்டினால் , நிச்சயம் வானதி சுதாரித்து விடுவாள் என்று தோன்றவும் , குரலில் எந்த மாற்றத்தையும் காட்டாமல்

" என்னை மாதிரின்னா , லூசாகவா ?" என்று கேட்டு வைத்தாள் .. அப்போது இருந்த மனநிலையில் தான் அவளுடன் என்ன பேசுகிறோம் என்றே தோன்றாமல்

" உன்னை மாதிரி இருந்தா , அருள் என் கூடவே இருந்திருப்பார்ல ? " என்று கூறியே விட்டாள் .. அருள் லண்டனுக்கு போவது அப்போது தனது தெரியாதலால் அவன் மேற்படிப்பு படிப்பதற்காக அவளை விட்டு செல்வதை கூறுகிறாள் போலும் என்று எண்ணி கொண்டாள் சாஹித்யா .. ஒரு வகையில் அதுவும் சரிதானே ?

சில நொடிகளே என்றாலும் கூட , சாஹித்யா எடுத்த முதல் முடிவு எப்படியாவது அருளின் மனதினை மாற்றி அவனை இங்கேயே இருக்க வைப்பதுதான் ..

" லூசு லூசு .. என்னை கவனிக்கிறேன்னு சொல்லி , இவன் சொந்த வாழ்க்கையில் சொதப்பல் ஆக்கிடுவான் போல " என்று மானசீகமாய் அவனை திட்டும்போதே அவளது உள்மனம் கேள்வி கேட்டது ..

" ஒரு தோழனாய் , அவன் தனது கடமைகளை சரிவர செய்து கொண்டுத்தான் இருக்கிறான் .. ஏன் , பல நேரங்களில் அவளது தந்தை அர்ஜுனை விட அருள்தான் அனைத்துமாய் இருந்தான் .. அப்படி பட்டவனின் வாழ்வை சரி படுத்தவேண்டிய கடமை உனக்கு இல்லையா சத்யா ? அவன் கண்களுக்கு நீ இளையவளாய் இருக்கலாம் .. ஆனால் அவன் வாழ்வில் நீ வழிக்காட்டியாய் அல்லவா இருக்க வேண்டும் ? அன்பை பெற்றுவிட்டால் போதுமா ? அதை இரட்டிப்பாய் கொடுக்க வேண்டாமா ? செல்ல சண்டைகள் போடுவதும் சமாதானம் செய்வதும் மட்டும்தான் உங்கள் நட்பா ? அவன் மெழுகாய் தன்னை உருக்கி உனக்கு ஒளி வீசி கொண்டிருப்பதை நீ என்றுதான் உணர போகிறாய் ?" என்ற உண்மை அவளை சுட்டது .. அவள் சுதாரித்து பதில் கூறும் முன்பே , சத்யா லைனில் இல்லையோ என்று எண்ணி அழைப்பை துண்டித்து விட்டாள் வானதி .. அழைப்பை வைத்துவிட்டு கொஞ்சம் ஆசுவாசம் ஆகியவளுக்கும் அப்போதுதான் தான் சொன்னதின் அர்த்தம் புரிந்தது ..

" ச்ச .. என்ன பேசிட்டேன் ..சத்யா மனசு வருந்தி இருப்பாளே " என்று நினைத்தவள் உடனே மீண்டும் அவளை அழைக்க நினைக்க அதற்குள் என்ன செய்ய வேண்டும் என்று திட்ட மிட்ட சத்யா

" ஹே வானு .. சாரி லைன் கட் ஆயிடுச்சு "

" இட்ஸ் ஓகே சத்யா .. நான் பேசினது எதுவும் மைன்ல வெச்சுக்க வேணாம் ப்ளீஸ் .. ஏதோ வீட்டு ஞாபகத்தில் சொல்லிட்டேன் " என்றாள் குற்ற உணர்வுடன் ..

" அட போ மா .. நீ வேற .. நல்லவேளை லைன் கட் ஆச்சு இல்லனா நான் ஒரு ரகசியத்தை உளறி இருப்பேன் " என்றாள் உற்சாகமாய்

" ரகசியாமா ? என்னது ?"

" அதெல்லாம் நான் சொன்னா இனிக்குமா செல்லம் ? உங்க ஹீரோ காது குளிர சொல்வாங்க .. நீ மனம் குளிர கேளு .. சரி நாம கொஞ்சம் வெளில போகலாம் வர்றியா " என்று அவளை அழைத்தாள் ..

" இப்போ வேலை இருக்கே "

" சரி .. இவினிங் கோவில் போகலாம் " என்றாள் சத்யா தீர்வுடன் ..

" யா கண்டிப்பா போகலாமே " என்றாள் வானதியும் .. அதன்பின் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு விட்டாள் சாஹித்யா ;.. தனது இந்த முடிவை அவள் சந்தோஷிடம் கூட ஆலோசிக்க வில்லை ..! மேலும் எப்படியாவது அருளிடம் பேசிவிட வேண்டும் என்று அவனை போனில் அழைத்தும் பார்த்தாள் வலைபோட்டு தேடியும் பார்த்தாள் ..ஆனால் இதை அறியாதவனோ அவளுக்கு இன்ப அதிர்ச்சி தருகிறேன் என்ற பெயரில் லண்டனுக்கு பறந்தே விட்டான் .. ஆக , இதுதான் சாஹித்யாவின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் .. யாரங்கே, கதை சொன்ன புவிக்கு ஒரு கப் ஆப்பிள் ஜூஸ் கொண்டு வாங்கப்பா !

ங்கு தனது தாய் தந்தை இருவர் முன்பும் அமர்ந்திருந்தாள் கவிமதுரா தீவிரமான முகபாவத்துடன் .. அவளது மௌனம் அவர்களை இன்னும் கலவரமாக்குவதை அவளால் உணர முடிந்தது .. இதற்குமேல் அமைதியாய் இருந்தும் என்ன பயன் ? மாண்டவன் மீண்டு வரவா போகிறான் ? ஆயாசமாய் இருந்தது அவளுக்கு ..

" அம்மா, அப்பா நீங்க ரெண்டு பேரும் இதை பொறுமையா ஏற்றுக்கொண்டு தான் ஆகணும் " என்று அவள் கூறியவுடனேயே வித்யாவின் மனதில் வந்த முதல் எண்ணம்

" இவள் அரவிந்ததை பிரிந்து விட்டாலோ " என்பதுதான் ..விழிகள் இடுங்க அமைதியாய் அவளை பார்க்க , அந்த மௌனத்தை சம்மதமாய் எடுத்து கொண்டு

" ஜீவா ... ஜீவாவுடைய அப்பா இப்போ உயிரோடு இல்லை " என்றாள் கவிமதுரா இறுகிய குரலில் ..

" என்னம்மா சொல்லுற ?" என்று இருவருமே ஒன்றாய் அதிர்ச்சியில் உறைய , அவர்களை நிமிர்ந்து பார்த்து

" ம்ம்ம் ஆமா , அண்மையில் நடந்த ஒரு தீவிரவாத தாக்குதலில் அவர் இறந்துட்டார் அம்மா " என்றாள் கவிமதுரா .. அவள் சொன்ன வார்த்தையை மூளைக்குள் பாதிக்கும் முன்னரே மயங்கி இருந்தார் வித்யா .. தனது மகளின் வாழ்வு இப்படி தலைகீழாய் மாறும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை தாய் மனம் .. மீண்டும் அவர் இயல்புநிலைக்கு திரும்பிய நேரம் , விமல் கொஞ்சம் சுதாரித்து இருந்தார் .. வித்யாவை மறைமுகமாய் தேற்றுவதற்காக மிக மெல்லிய குரலில்

" கவி முன்னாடி அழாதே வித்யா " என்று அதட்டல் போட்டார் .. ஒரு வகையில் அவரது பேச்சுக்கு பலன் இருந்தது .. அரவிந்த் இயற்கையை எய்தியதில் இருந்து சென்னையில் பணி புரிவது வரை அனைத்தையும் கூறினாள் கவிமதுரா , கிரிதரனின் குடும்பத்தாரை சந்தித்தை தவிர !

அவளுக்குள் ஏனோ ஒரு போராட்டம்.. அவளால் இயல்பாய் கிரிதரனை பற்றி பேச முடியவில்லை ..அன்று அவன் அவளை ஊடுருவி பார்த்த பார்வைக்கு இன்னமும் அவளால் பொருள் கண்டுபிடிக்க முடியவில்லை ..

" இனம் விளங்கவில்லை

எவனோ என்னகம் தொட்டுவிட்டான் "

பாரதியின் வரிகள் .. அவன் மீது நேசம் கொண்டதில் இருந்தே அவளை ஆக்ரமித்த வரிகள் இவை .. அன்று அவள் மனம் தடுமாறியதில் புதுவசந்தமாய் அவர்களது காதல் மலர்ந்தது .. ஆனால் இன்று ? நேசப்பூ மீண்டும் பூக்குமா என்ன ?

ஒருவழியாய் அவள் வீட்டில் ஏற்பட்ட புயலும் ஓய்ந்து இருந்தது .. கவிமதுராவுக்காக , அவள் பெற்றோர்ரும் , அவர்களுக்காக அவளும் , இவர்கள் அனைவருக்காக வானதியும் என அனைவருமே மனதிற்குள் இருந்த தத்தம் கவலைகளை மறைத்து வைத்து இயல்பாய் இருக்க முயற்சி செய்தனர்.. அவர்கள் அனைவரையுமே இயல்பாக்கும் பொறுப்பை தானும் எடுத்து கொண்டான் ஜீவவேலன் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.