(Reading time: 11 - 21 minutes)

ஹ்ம்ம்..வா...”  ,  அருகிலிருந்த பாறையின் மீது உட்கார்ந்துகொண்டான்.  அவளும் அருகில் வந்து அமர்ந்தாள்.

அவளின் தோள் மீது கை வைத்து தன்னோடு இறுக்கி அனைத்துக் கொண்டான்.

“ப்ப்ப்ஆ.. This is the best moment of my life...நீ..இந்த ஊர்..இவ்ளோ அழகான இந்த மீட்டிங் ஸ்பாட். Really awesome” 

“ஹஹா..ஊட்டி வந்ததே இல்லையா இதுக்கு முன்னாடி? “

“வந்திருக்கேன் சின்ன வயசுல எப்பவோ.. அதுக்கப்புறம் இன்டர்நேஷன டூர் எல்லாம் கூட போயிட்டு வந்திருக்கேன். இங்க வர முடியல. நீ ரொம்ப லக்கி இங்க பொறந்ததுக்கு. பேசாம இங்கயே செட்டில் ஆகிடுவோம்" 

“ஆகலாமே அதுக்கு எங்க வீட்ல எல்லாரும் ஒத்துக்கணும்"

“ம்ம்ம்? ஒத்துக்குவாங்களா?”

“தெரியலையே. நான் நம்ம விஷயத்த சொன்ன நாள்ல இருந்து என்கிட்டே அப்பா அம்மா அண்ணன் ..யாருமே சரியா பேசுறதேயில்ல.முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணுவோம். ஒன்னும் அவசரம் இல்லையே?"

“அவசரம் இல்லேன்னு சொல்ல முடியாது. எனக்கு இப்போ 27  ஆகுது. ப்ரோமோஷன் வாங்கிட்ட,நல்ல சம்பளம், எல்லாமே ஓரளவுக்கு செட்டில் ஆகியாச்சு..அப்புறம் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறனு அப்பா அம்மா கேட்டுட்டே இருக்காங்க. பிஸினஸ் ஸ்டார்ட் பண்ண போறேன்னு சொல்லி சமாளிச்சிட்டு இருக்கேன். Its okay.  இன்னும் கொஞ்ச நாளைக்கு சமாளிக்கலாம். பட் நான் உன்ன பிரஷர் பண்ணல. முடிஞ்ச அளவுக்கு கன்வின்ஸ் பண்ணு..பாப்போம்"

“கடைசி வரைக்கும் ஒத்துக்கலனா?” ,இவன் கண்களைப் பார்த்தாள்,கவலையோடு.

“அப்புறம், நாம கல்யாணம் பண்ணிப்போம். இவங்க பிடிவாதத்துக்காக நம்ம வாழ்க்கைய வேஸ்ட் பண்ண முடியாதில்ல?..”

“ம்ம்ம்"

“சரி ஓகே. இப்போ அதப் பேசி மூட் ஸ்பாயில் பண்ண வேண்டாம்.. சொல்லு.. எப்போ உங்க ஊர சுத்திக் காட்டப் போற?”

“நானா? சூப்பர்.. இப்போ ஒரு மணி நேரம் வெளிய வரவே எவ்ளோ பொய் சொல்லி வந்திருக்கேன். இதுல ஊர் சுத்தி வேற காட்டணுமா? நாளைக்கு எப்படியாவது ஒரு மணி நேரம் வெளியே வர்றேன். அவ்ளோ தான் முடியும்"

“ஸோ..இன்னிக்கு ஒன் அவர்,நாளைக்கு ஓன் அவர்..இந்த ரெண்டு அவர்க்காக தான் நான் சென்னையில இருந்து, வீக்கெண்ட்ல வீட்டுக்கு கூட போகாம இவ்ளோ தூரம் வந்தேனா?” , செல்லமாய் கோபித்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

“அய்யோ..ரொம்ப தான்.. என்னமோ நாம வருஷம் ஒரு தடவ தான் பாத்துக்கற மாதிரி,, ஒரே ஆபிஸ்ல தானே வருஷம் பூராவும் ஒருத்தர் முகத்த ஒருத்தர் பாத்துட்டு இருக்கோம். போதும் ஸீன் போட்டது"

“ஹஹா..சரி சரி.. சண்டே ஈவ்னிங் உனக்கும் பஸ் டிக்கெட் புக் பண்ணிட்டேன்.. குன்னூர்ல வந்து ஜாயின் பண்ணிக்கிறேன். சென்னை போய் சேர பத்து மணி நேரம் ஆகும். ஒன்னா போகப் போறோம்" என்று சொல்லி கண்ணடித்தான்.

“ம்ம்ம்..இதெல்லாம் கரெக்டா ப்ளான் பண்ணுவியே..சரியான fraud டா நீ " , கலகலவென சிரித்து அவன் தோள் மேல் சாய்ந்துகொண்டாள்.

ந்த மதிய வேளையில் நல்ல மழை கொட்டிக்கொண்டிருந்தது.  இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டம் மெதுவாக கலைந்துகொண்டிருண்டது.

வினோத்தின் தோளில்சாய்ந்து அழுதுகொண்டிருந்தார் ஜான். அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை ஏதும் இன்றி அமைதியாய் நின்றுகொண்டிருந்தான். துளிர்த்து வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டான் வினோத்.

பீட்டர் வந்து அவரை அழைத்துச் சென்றதும் ,  தன் காருக்குச் செல்லத் திரும்பினான்.  சில அடிகள் சென்றதும் மீண்டும் திரும்பி ஒருமுறை அந்த சமாதியைப் பார்க்கத் தோன்றியது. பார்த்தான்.

பச்சை நிறத்தில், கான்க்ரீட்டால் கட்டப்பட்டு,சிலுவை அதன் மேல் நிறுவப்பட்டிருந்தது.

“Sarah John Devasagayam,  11.6.1993 – 2.3.2015”

அதை பார்த்ததும் கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை , அவனையும் மீறி , பொங்கிவிட்டது.

கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு ,கதறி அழுதபடியே தன் காரை வந்தடைந்தான்.

அங்கே முகுந்த்,ஜேம்ஸ், நித்யா மூவரும் நின்றிருந்தனர். சாராவின் இந்த திடீர் மரணம் நால்வரையும் நிலைகுலையச் செய்துவிட்டது. இவர்களது பதினைந்து வருட நட்பில் இப்படி ஒரு இடி விழுமென கனவிலும் நினைக்கவில்லை. 

பள்ளியில் தொடங்கி, கல்லூரி, ஒரே கம்பெனி என இவர்கள் ஐந்து பேரும் இணைந்து, பிணைந்து போயிருந்தனர்.  புத்திசாலி முகுந்த், அமைதியான நித்யா, எமோஷனல் வினோத், கோபக்கார ஜேம்ஸ் , துள்ளலான சாரா என ஒரு கூலான கலவையாய் வாழ்க்கையை அதன் உச்சகட்ட சந்தோசத்தில் கழித்துக்கொண்டிருந்த சமயத்தில் இப்படி எல்லாம் தடம்புரண்டு போகுமென்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை இவர்கள்.   நேற்று காலை அந்த போன் வந்தது சாராவின் தம்பி பீட்டரிடமிருந்து.  சாரா மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்திருக்கிறாள். 

“வாங்க கெளம்பலாம்.. இன்னும் எவ்ளோ நேரம் அழுதாலும் அவ வரப்போறதில்ல..வா..வாங்க.போலாம்", அதற்கு மேல் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடித்துக்கொண்டுவிட்டது ஜேம்ஸ்க்கு.

காரில் சென்னையை நோக்கிப் புறப்பட்டனர்.  வினோத் காரை ஓட்டினான்.  பின்னால் நித்யா முகுந்த் மார்பில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தாள்.  யாரும் யாருடனும் பேசவில்லை.  ஒரு மணி நேரம் கழிந்தது.

நித்யா பேசத் தொடங்கினான்.

“உங்க எல்லார் கிட்டயும் ஒரு விஷயம் சொல்லணும்"

 முகுந்த் அவளது முகத்தைப் கேள்விக்குறியோடு பார்த்தான். வினோத்தும் திரும்பினான்.

“சாகறதுக்கு முன்னாடி சாரா எனக்கு போன் பண்ணினா..”

“வாட்??” அதிர்ச்சியானான் ஜேம்ஸ்.

“இத ஏன் முன்னாடியே சொல்லல? என்ன சொன்னா?”

“ஒரே பதட்டமா பேசினா.. அவங்க ரெண்டு பேரையும் பாத்ததா சொன்னா.. அதும் இவ வீட்லயே "

“யார் அது? ரெண்டு பேர்?”

“அதான்.. அருண்,அஞ்சலி ...”

வினோத் சட்டென ப்ரேக் அடித்து நிறுத்தினான்.

மூவர் முகத்திலும் ஈயாடவில்லை.

“ No way.. அது எப்படி முடியும்?” முகுந்த்தால் நம்பமுடியவில்லை.

“ம்ம்ம்.. அவ இந்த ரெண்டு மாசமாவே ஓவரா டோப் அடிக்குறா.. நானே சொல்லிருக்கேன் இவ்ளோ பண்ணாத. உடம்பு கெட்டுப்போயிடும்னு. கேக்கல.. அடிக்கடி இப்படித் தான் உளறிட்டு இருந்தா "  ஜேம்ஸ் சொன்னான்.

“ஹ்ம்ம்.. ஆமா..அன்னிக்கு ஆபீஸ் வரும்போது கூட ஒரு நாள் தலைகால் புரியாம தடுமாறி வந்தா..ஸெல்ப் கண்ட்ரோல் சுத்தமா இல்ல" என்றான் வினோத்.

“நானும் அப்படி நெனச்சு தான் அசால்ட்டா விட்டுட்டேன். ஏதோ போதைல அவளுக்கு அவங்க ரெண்டு பேரும் இருக்கிற மாதிரி தெரிஞ்சிருக்கும் போலனு. ஆனா கால் பாதியிலேயே கட் ஆயிடுச்சு "

"அப்படி எல்லாம் ஏதும் இருக்காது நித்யா. நிச்சயமா இது ட்ரக் ஓவரா யூஸ் பண்ணினதால வந்தது தான்" ஜேம்ஸ் சொன்னான்.

“இதுக்கு தான் உங்ககிட்ட எவ்ளோ தடவ சொல்லிருப்பேன் இந்த குடி, ட்ரக்ஸ் எல்லாம் வேணாம்னு. கேட்டிங்களா?” என்று சொல்லி குமுறி அழுதாள் நித்யா.

“நித்யா,, சொல்றத கேளு.. இது ஒரு ஆக்ஸிடென்ட். இது ஒன்னும் இன்னிக்கு நேத்து வந்த பழக்கம் இல்ல. இவ்ளோ வருஷமா நல்லா தானே இருக்கோம். இதோ..எங்களுக்குக் கூட ஒன்னும் ஆகலையே. எல்லாம் நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கணும். இது ஒரு எதிர்பாராத சம்பவம். ஒரு ஆக்ஸிடென்ட். அவ்ளோ தான்..”  சொல்லி முடித்து, காரின் வேகத்தைக் கூட்டினான் வினோத்.

கார் சென்னையைநோக்கி சீறிப் பாய்ந்தது.

Episode # 02

தொடரும்

{kunena_discuss:911}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.