(Reading time: 47 - 94 minutes)

 “ப்ச்…இன்னைக்கும் ஜீவா ரிப்ளை பண்ணலைமா……”  ஒருவித இயலாமையுடன் சொல்லியபடி திரும்பிப் படுத்தாள்.

கேட்டிருந்த அரணுக்கு தூக்கி வாரிப் போட்டது என்றால் அவளது அம்மாவோ

“நங்குனு தலையில குட்டினேன்னா தெரியும்…. இங்க எல்லாரும் எத நினச்சு கவலப்பட்டுகிட்டு இருக்கோம்….உனக்கு இப்ப இதான் கவல என்ன…?” என்று அதட்டினார்…

கண்டிப்பாக அப்படியெல்லாம் இருக்காது என தனக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் அரண்.

“அது வேரொன்னும் இல்ல தம்பி…சொன்னேனே கவிதை கதைனு அப்பாவும் பொண்ணும் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்கன்னு……அட்னு இப்ப ஒருத்தர் எழுதுறார் தெரியுமா…? அவருக்கு இவங்க ரெண்டு பேரும் பயங்கர ஃபேன் …அவருக்கு அப்பாவும் மகளும் கமெண்ட் எழுதிட்டு, எப்ப ரிப்ளை வருது, என்ன வருதுன்னு நேரம் காலம் இல்லாம பார்த்துட்டு கிடப்பாங்க….

அரண் காலியோ காலி….

“அட் னா….இந்த chillzee.in ல எழுதுறாரே அவரா?” இவனுக்கு கன்ஃபர்மேஷன் கண்டிப்பாக வேண்டும்.

ல்லா மனிதர்களுக்கும் தன்னை சுற்றி இருக்கும் சமுதாயம் பற்றி தனக்கென ஒரு பார்வை இருக்கும். அதை அவரகள் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்த முனைவதும் இயல்பு. அதுவும் அரண் போன்று உலகம் சுற்றும் ஒருவனுக்கு, ஒரு விளையாட்டு வீர்னுக்கு அத்தகைய அழுத்தம் அதிகமாகவே இருக்கும்.

அத்தகைய அழுத்தத்தை, சமுதாய அக்கறைகளை, நியாய அநியாய பழக்கங்களை, நிறை குறைகளை, அவன் கருதும் தீர்வுகளை, விளையாட்டு சம்பந்தமாக அவன் எதிர் கொள்ளும் சவால்களை, அதை அவன் பார்க்கும் கோணங்களை, அவன் வாழ்வை செதுக்கும் உணர்வுகளை அரண் வெளிப்படுத்திய விதம் எழுத்துலகம். துவக்கம் கவிதையில் தான். அவ்வப்பொழுது கவிதைகள் எழுதிக் கொள்வது அவன் வழக்கம். அவன் டைரியில் அது தூங்கிப் போகும்.

அதன் ஒன்லி ரீடர் ப்ராபாத் தான். வேற வழி….ஃப்ரெண்டா இருந்தா இதெல்லாம் அனுபவிச்சு தான ஆகனும்…அவன் அதை புக்கா பப்ளிஷ் செய்யச் சொல்லி அறிச்சு பிடுங்கிக்கிட்டு இருந்தான்றது வேற விஷயம்.

அப்டியாவது இத அடுத்தவங்க தலைல கட்டிட்டு நீ தப்பிச்சுகிடலாம்கிற ஐடியாலதான….இது உனக்கு மட்டுமே கிடச்ச லைஃப் டைம் பனிஷ்மென்ட்…என அரணும் மறுத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் ஒரு நாள் ப்ரபாத் அதை கேஷுவலாக திரியேகனிடம் காண்பிக்க…படித்துப் பார்த்தவர்

“ஏன்பா நல்லாதான இருக்கு…..பப்ளிஷ் செய்ய வேண்டியதானே…” என்றார்.

அதன் பின்பு அதை பப்ளிஷ் செய்ய வேண்டும் என தோன்றிவிட்டது அரணுக்கு.

ஆனால் அதை கிரிக்கெட்டர் அரணின் கவிதைகளாக வெளியிட விருப்பம் இல்லை அவனுக்கு. அவன் ஸ்டார்டமின் எஃப்ஃபெக்ட் அதன் மீது விழ வேண்டாம். அந்த கவிதைகள் அவன் மனதின் வெளிப்பாடு…..அதை மனதால் பார்ப்போர் மாத்திரம் வாசித்தால் போதும்.

ஆக @ என்ற புனைப் பெயரில் சொந்த பப்ளிகேஷன் வழியாகவே வெளியிட்டான். பின் அவன் பார்வைகளை உரைநடை புத்தகங்களாக வெளியிட்டான் அதே @ என்ற பெயரில்……@ அவனைப் பொறுத்தவரை a t அதாவது அரண். T யின் சுருக்கம். புக்கிற்கு வந்த சில வாசகர் கடிதங்கள் மூலம் அவனுக்கு chillzee.in அறிமுகமாகியது. அங்குதான் அவன் ஜீவாவை சந்தித்தான்.

ஜீவா ஒரு ரீடர். அவ்வப்பொழுது கமென்ட் போஸ்ட் செய்துவிட்டு போகும் ஒரு நபர்.

ஜீவாவிற்கு அரணின் அதாவது @ ன் கவிதைகள், ஆர்டிக்கிள்ஸ் மிகவும் பிடித்துப் போனது போலும்.  @ன் கவிதைகளுக்கு தொடர்ந்து கமெண்ட் செய்வது அவள் வழக்கமாகியது.

சும்மா நல்லாருக்குது…சூப்பர் என்ற அளவில் அது இருக்காது.

கவிதையின் கரு, பெரும்பாலும் அரண் தேர்ந்தேடுக்கும் சூழல்கள், அவனது அதற்கான பதில்கள், பார்வைகள்……இதை அவள் பெரிதும் ரசித்தாள்…இல்லை ஆராதித்தாள், பல வகையில் இருவரது ஒப்பினியஸும் ஒத்துப் போயின.

அரணுக்கு ஃபேன்ஸ் என்பது புதிது கிடையாது. ஆனால் இது நிச்சயம் வேறு வகை. ஒத்த கருத்துக்கள்….ஒரு வகை நட்பை அவனுமே உணர ஆரம்பித்தான்தான். விளையாட்டை ஆராதிக்க ஆயிரம் நபர்களை அவன் பார்க்கலாம்…அவன் மனதோடு ஒத்து போவதென்பது வேறல்லவா?

இதில் குறிப்பிட பட வேண்டிய விஷயம் என்னவெனில் அரண் ஜீவாவை முதலில் ஆண் என புரிந்து கொண்டான்.

அவன் @ என்ற அடையாளத்துக்கு உருவாக்கிய FB ஐடியில் ஜீவா ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தாள். இவன் அதை ஏற்க….அவ்வப் போது இவனுக்கு மெசேஜ்கள் வரும் அவளிடமிருந்து.

பின் மெல்ல அது text சாட் ஆகியது. அதுவும் எப்பொழுதாவது தான். அதுவும் பேச்சுக்கள் அரணின் கவிதைகளை சுற்றியே இருக்கும். நோ பெர்சனல் இன்ஃபோ…மரியாதை எல்லையை கடக்காத கலந்துரையாடல்கள்.

எக்க்ஷெம்ஷன் இந்த ஒரு கான்வர்ஷேன் மட்டும்.

“உங்கள @னு அட்ரெஸ் செய்யறது எப்டியோ இருக்குது சார் …. உயிருள்ள நேம் எதாவது இருந்தா நல்லா இருக்கும்…”

‘’உயிருள்ள நேம்னா ஜீவா சார் நேம்தான் தெரியுது…..’’ இது இவனது ரிப்ளை

“சரி அப்ப நீங்க ஜீவா சார், நான் ஜீவா மேம்…”

என ரிப்ளை அவளிடமிருந்து….

அப்படித்தான் இவன் ஜீவாவானது. அந்த ஜீவா பெண் எனவும் அப்போதுதான் இவனுக்கு தெரியும்….லைஃப் ப்ரொசீடட்……ஏறத்தாழ ஒரு வருடமாய் நடக்கும் கதை இது….

ப்பொழுது இவன் கேள்விக்கான பதிலை புஷ்பம் சொன்னார்.

 “ஆமா… AV நு கமென்ட் செய்றது அங்கிள்….ஜீவா னு செய்றது இந்த பெரிய மனுஷி…..பார்த்தீங்கன்னா தெரியும்….அப்பாவும் பொண்னும் உருகி உருகி கமெண்ட் போட்ருப்பாங்க….”

.  இவனுக்குள் விவரிக்க முடியாத ஆர்ப்பரிப்பு. ஒருவகை சமாதானம்….குழந்தை கால நாட்களை வைத்து இவனை வெறுப்பவள் இவன் உள் மனதை மதிக்கிறாளே…..

அதோடு ஜீவாவாக இவனது கவிதை கட்டுரைகளை அவளால் ஏன் அதிகமாக உணர ஒத்துக்கொள்ள முடிந்தது என்பதும் இப்போது அவனுக்கு புரிகிறது. இவனைப் போலவேதான் அவள் வாழ்க்கையும்…ஒற்றைக் குழந்தை……ஸ்போர்ட்ஸ் பெர்சனாலிடி….

 அதற்குள் சுகவிதாவோ அலறினாள்.

“அம்மா….எதை எங்க பேசனும்னு இல்ல உங்களுக்கு….”

அதோடு இவனை வேறு எச்சரித்தாள்.

“ஹலோ நீங்க அங்க வந்து எதாவது டிஸ்டர்ப் செய்ங்க அப்றம் இருக்குது…..”

பதிலேதும் சொல்லாமல் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அரண். அரணாக இவன் மேல் என்ன ஒரு மரியாதை வைத்திருக்கிறாள் இவள்!!!

@ ன் FB அக்கவ்ண்டை  திறந்து பார்த்தான்….  நேற்று… இப்பொழுது எல்லாம்…. இவனுக்குத்தான் மெசேஜ் அனுப்பிக்  கொண்டிருந்திருக்கிறாள் சுகவிதா…. இவன் எதிரில் இருந்து கொண்டே…அத்தனை சோக முக பாவத்துடன்….

‘சார் எனக்கு ஒரு பெரிய ப்ரச்சனை…எப்டி ஹேண்டில் செய்றதுன்னு எப்டி யோசிச்சும் தெரியலை…..உங்களால இதுக்கு சொல்யூஷன் சொல்ல முடியும்னு ஒரு நம்பிக்கை…கேட்கலாமா? கேட்கிறது தப்புனா சாரி…’

‘இதோட 100த் டைம் செக் செய்துட்டேன்னு நினைக்றேன்….உங்க ரிப்ளை இல்லையா ரொம்பவே டென்ஷனாகுது….’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.