(Reading time: 47 - 94 minutes)

ன்னைக்கு நீங்க வந்து எல்லாத்தையும் மனசுவிட்டு பேசி கூப்பிட்டுட்டு போறவரைக்கும் நான் ECR  பீச்ல தான் நிப்பேன்….மத்திய கைலாஷ்ல இருந்து டுவர்ட்ஸ் மஹாப்ஸ் வாங்க…..14 கிலமீட்டர் பிஃபோர் மஹாப்ஸ் லெஃப்ட் சைட்ல ஒரு சவுக்குத் தோப்பு இருக்கும்….அங்கதான் நின்னுட்டு இருப்பேன்….”

கார் கீயை கையில் எடுத்து கொண்டு பார்க்கிங்கை நோக்கி ஓடத் தொடங்கி இருந்தான் ஜீவா.

“டேய்…….அவ ECR ல மஹாப்ஸுக்கு 14 கிலமீட்டர் முன்னால……….நீயும் வா….நானும் கிளம்பிட்டேன்….” இதற்குள் அவனது  கார் வீட்டைவிட்டு வெளியேறி இருந்தது.

இப்பொழுது சுகவிக்கு அழைத்தான் அரண்.

அவள் எண்தான் இவனிடம் இருக்கிறதே…

ஆனால் அவள் அழைப்பை ஏற்கவில்லை….. அம்மாவோ ப்ரபாத்தோ வேற நம்பர்ல இருந்து ட்ரை பண்றாங்களா இருக்கும்…. ஜீவாவே இருந்தால் கூட அவன்ட்ட ஃபோன்ல பேசுறதோட இன்னைக்கு விஷயம் முடிஞ்சிடக் கூடாது. அவனை மீட் பண்ணியே ஆகனும்…

இப்படியாக எண்ணம் அவளுக்கு.

அரண் இப்பொழுது FB இல் மெசேஜ் செய்தான்.

“ப்ளீஸ் கிளம்பி சிட்டிக்குள்ள வா….கண்டிப்பா நான் உன்னை வந்து பார்க்றேன்..”

“நோ…..நான் நம்ப தயாராயில்லை…” வெறுத்திருந்தாள் சுகவி.

விரக்தியின் உச்சத்திருந்தாள் அவள். ஆக்சுவலி அவளால் முடிந்த அத்தனை வகையிலும் தான் அவனை மறுக்கப் போவதில்லை என உணர்த்திப் பார்த்திருந்தாள் சுகவி. அத்தனைக் காதலை தனக்குள் வைத்துக் கொண்டு அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் ? இவளை ஏன் விலக்குகிறான் என அவளுக்கு புரியவே இல்லை. ஜீவா அவளை அந்த விஷயத்தில் நம்பவே தயாராயில்லை…. அது ஏன் என்று தெரியாமல் இன்று இவள் இங்கிருந்து போகப் போவதில்லை…. ஏன்னு தெரிஞ்சாதானே அதை சரி செய்ய முடியும்?

“போ…போய் காருக்குள்ளயாவது வெயிட் பண்ணு…வெளிய நிக்காதே….ரொம்ப ரிஸ்க்கான ஏரியா….ப்ளீஸ்….சொன்னா புரிஞ்சுக்கோ…..நான் வந்துட்டு இருக்கேன்….”

“அதெல்லாம் முடியாது….எனக்கு ரிஸ்க்னா உங்களுக்கு என்ன அக்கறையாம்?”

“ப்ச்..இதென்ன பேச்சு…?”

“இப்ப எனக்கு பதில் வேணும்….இல்லனா நான் அப்டியே இந்த கடல்ல இறங்கிடுவேன்….எனக்கு இன்னும் சீலலாம் ஸ்விம் செய்ய தெரியாது….”

“இரு …..நேர்ல பார்க்றப்ப மிரட்டின வாய்ல ஒன்னு போடுறேன்….”

“குட் குட் ஐ’ம் வெய்டிங் ஃபார் தட்….பைதவே சீ வாட்டர் இந்த நேரம் இவ்ளவு சில்லா இருக்குமா எனக்கு தெரியாதே……நிக்கவே முடியலை அலை அவ்ளவு ஃபோர்ஸ்ஃபுல்லா இருக்குது”

அவள் கடலில் இறங்கிவிட்டாள் எனப் புரிகின்றது தானே.

ஹேய்….விது ப்ளீஸ் வாட்டர்ல இருந்து வெளிய வா….ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காதுமா…ப்ளீஸ் காருக்கு வா கழுத…”

“அப்ப என் மேல ஏன் அக்கறைனு சொல்லுங்க….” அவள் பாய்ண்டில் நின்றாள்.

“சில விஷயத்தெல்லாம் நேர்ல தான் சொல்லனும் விது..” கெஞ்சினான் அவன்.

இப்பொழுது வெட்கம் எட்டிப் பார்த்தது சுகவிதாவுக்கு

அவன் நேரில் ப்ரபோஃஸ் செய்வதாய் ஒரு நினைவு காரணம்.

“ம்…..காருக்கு வர்றேன்…உங்களுக்காக வெய்டிங்” அரை மனதாய் குறை சிணுங்கலாய் சொல்லிவைத்தாள்.

பறந்தது அரண் கார் மட்டுமல்ல ப்ரபாத்தின் காரும் தான்.

சுகவிதாக்கு இருட்டு பயம், திருட்டு பயம், திரும்பும் இடமெல்லாம் தெரியும் முரட்டு செடிகளும் பயம்…..அலை பயம்…..வலை பயம் வந்து வந்து போகும் நண்டும் பயம்…

ஜீவா இத்தனை நாள் தவிர்த்ததில் இருந்த விரக்தியில் இங்கு வரும் போதும், இந்த நிமிடம் வரையும் அது எதுவும் விஷயமாக தெரியவில்லை… ஆனால் இப்பொழுது….? அவனைப் பார்க்கப் போகிறோம்…அவன் வாயால் இவள் மீதுள்ள காதலைக் கேட்கப் போகிறோம் என தோன்றும் போது…உயிர் மொத்த உணர்வும் கொள்கிறது தானே….இப்பொழுது பயம் பயம் பக் பக்

காருக்குள் போய் அமர்ந்து கொண்டாள். ஆனால் அவன் வராமல் இங்கிருந்து நகர்வதில்லை என முடிவோடு இருந்தாள்.

நீளக் கண்களை ஆந்தைக் கண்கள் போல் உருட்டி உருட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

‘யாரும் வர்றாங்களா? இவளை பிடிச்சிடுவாங்களா? எந்த காரும் இங்க ஸ்லோப் பண்ற மாதிரி இருக்குதாமா?’

இப்பொழுது உண்மையிலேயே பின்னால் தூரத்தில் வரும் ஒரு  கார் ஸ்லோவாகிறது போல் தெரிகிறது. சந்தன நிறத்தில் ஒரு SUV….ஜீவாவின் கார் ப்ளாக் லேண்ட் ரோவர் தானே….அன்னைக்கு பார்த்தாளே….சோ இது யாரோ…இவ பக்கத்தில் இந்த நேரத்தில் வந்து நிப்பாட்றது ஒன்னும் நல்லதுக்கு இல்லையே….

தன் காரை ஸ்டார்ட் செய்து சாலையில் ஏறினாள்…

ஸ்ஸ்ஸ்ஸ்ர்ர்ர்ர்ர்ர்ச்ச்ச்ச்ச்ச்….ர்ம்ட்ம்…டம்ட்ம்…

அவ்வளவுதான் அவளுக்குப் புரிந்தது.

 நடந்தது என்னவென்றால் அவள் பார்த்தது அரணதுக் காரைத்தான். இன்று BMWல் வந்திருந்தான்….அவனது கார் என தெரியாமல், பயத்தில் அவன் காரையே கவனித்துக் கொண்டு, இவள் காரை ட்ரைவ் பண்ண…….

அதேநேரம் அங்கு வந்திருந்த ப்ரபாத்தின் கார், அழுத்திய ப்ரேக்கையும் மீறி, எதிர் பாரா நேரம் சட்டென ரோட்டில் ஏறிய இவள் காரின் பின் புறம் இடித்து நின்றது.

இடிவாங்கிய அதிர்ச்சியில் சுகவிதாவின் கார் அருகிலிருந்த குட்டிப் பாலத்தின் சுவரில் இடித்து அருகிலிருந்த சில அடி ஆழப் பள்ளத்தை நோக்கி சரிந்த வண்ணம் போய் நின்றது.

பெர்ஃபெக்ட் ஏர் பேக் மொமன்ட்….நோ இஞ்சுரி….

மோதலினால் அவளது காரில் லைட் காலி….இவனது காரிலும் முன் பல்ப்ஸ் பலி. அவ்வளவே.

இடி காரில் விழும் முன்னமே அது சுகவிதாவின் கார் என உணர்ந்திருந்த ப்ரபாத்… வேக வேகமாக ”சுகா “ என கூப்பிட்ட படி இறங்கி ஓட, அவனுக்கும் முன்பாக சென்றிருந்தான் அரண்.

கவனமாக கார் கதவை திறந்து அரண் அவளை வெளியில் எடுத்தால், அதிர்ச்சியில் அவள் அரை மயக்கத்தில் இருந்தாள். இருட்டு வேறு.

அந்த நிலையிலும் யாரோ ஒரு ஆணின் தொடுகை என அவள்  பதற…..”விது நான் ஜீவா” என அவனை மீறி ஆறுதலாய்  ப்ராவகித்தான் அரண்..…

“ஜீவா!!!!!!”

அத்தனை நேரமாய் அவனுக்காய் அவள் தவித்திருந்த தவிப்பிற்கும், பார்வைக்கு கிடைக்காதவனின் அருகாமைக்கும்,  மனதில் இருந்த அவனை இழந்து போவேனோ என்ற பயத்திற்கும் அவனை அணைத்து மார்பில் பம்மினாள். இல்லை முயன்றாள்.

 முழுதாய் மயங்கும் முன் அவன் முகம் பார்க்க முயன்ற அவளது முயற்சிகள் இருட்டில் பலிக்காமல் போக….,

“என்னை விட்டுட்டுப் போய்டாதீங்க ஜீவா…ப்ளீஸ் ஜீவா….ஐ லவ் யூ ஜீவா….” எத்தனை தான் முயன்றும், மயங்க கூடாது என்ற அவள் முயற்சி தோல்வியில் முடிய, தவிக்க தகிக்க அவன் மார்பில் மயங்கி சரிந்தாள்.

அவளை கையில் அள்ளிய அரண் தன் காரின் பின் இருக்கையில் வந்து கிடத்தினான்.

“என்னடா ஆச்சு… ஏன் இங்க வந்தா?” ப்ரபாத் முகமெங்கும் பதற்றமும் வலியும்…

“நான் அவளோட மெசேஜஸைப் பார்த்து டூ வீக்ஸ் ஆகுது…..அதுக்கான ரெஸ்பான்ஸ் இது…”

வெறுமையாய் சொன்னான் அரண்.

ப்ரபாத்திற்கு என்ன சொல்லவெனத் தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.