(Reading time: 47 - 94 minutes)

நான் அவள அவாய்ட் செய்றேன்னதும்….….அதான்….” அவன் குரல் ஒருவிதமாயிருந்தது.

“அவள பழி வாங்கனுங்கிறதுக்காக மட்டும் தான் நான் உயிரோட இருக்றேன்ற மாதிரி அரண பேசிட்டு….. இங்க இப்டி…முன்னால அவ கொடுத்றுக்க இன்டர்வியூஸெல்லாம் இப்பதான் படிச்சேன்…”

“சரி விடு மாப்ள….சீக்ரம் இந்த மென்டல் டிஸாடர் அவளுக்கு சரியாகிடும்….” சொல்லிவைத்தான் ப்ரபாத். இப்பொழுது வேறு என்ன சொல்ல?

“உன் தங்கச்சிக்கு மென்டல் டிஸாடர் சரியாகுறதுக்குள்ள என்னை ஹார்ட் பேஷண்ட் ஆக்கிடுவா போல…”  இத்தனை மணிக்கு இப்படிச் செய்தால் இவனுக்கு எப்படி இருக்கிறதாம்?

சொல்லிய படி தன் கார்க் கீயை ப்ரபாத்திடம் நீட்டினான் அரண். மற்ற இரு காருக்கும் சர்வீஸ் தேவை.

ப்ரபாத்திற்கு அதுவரை அரணின் சுகவி மீதான இந்த ஈர்ப்பு ஒழிந்து போகாதா எனதான் இருந்தது எண்ணம்.

ஆனால் இந்நொடி, இந்த காதல் அரணுக்கும் சுகவிதாக்கும் திருமணமாய் நிறைவேறாதா என தோன்ற தொடங்கியது.

 சுகவிதா  மீண்டும் விழிக்கும்போது தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள். எப்படி வந்தாள் என்றே அவளுக்கு புரியவில்லை….

உண்மையில் வழியில் அரணை அவன் வீட்டில் இறக்கிவிட்டு, அரணின் காரில் இவளை வீட்டில் கொண்டு இறக்கியது ப்ரபாத் தான். சுகவி வீட்டில் அது அரணின் கார் என யாருக்கும் தெரியாது என்ற நம்பிக்கை அவனுக்கு.

ஆனால் அந்த கார் அரணுடையது என அனவரதனுக்கு தெரிந்திருந்தது. சற்று முன்பு அரணை அதில் பார்த்திருந்தார் அவர்.

ஆக வெளியே சென்ற மகள், சுயநினைவு இல்லாமல் அரணின் காரில் வந்து இறங்குகிறாள், உடன் வரும் ப்ரபாத் மட்டும் இல்லையெனில் அன்று அரண் கொலை வழக்கு பதிவாகியிருக்கும். கொன்றவர் அனவரதன் என அலறும் டீவீஸ்… இத்தனைக்கும் மகள் 4 மணி நேரம் தன் அம்மாவோட ஃபோனைக் கூட அட்டென் செய்யலை என்பது அனவரதனுக்கு தெரியாது….

அரண் விஷயத்தில் கவனம் தேவை. அரண் எதுவும் மகளை மிரட்டுகிறானோ?

இப்படி ஒரு நினைவு அவர் மனதில் ஓடிக் கொண்டு இருக்கும் போதுதான் மன்யத்திற்கு அரண் க்ரூப்ஸோடு பிஸினஸ் டையப் பெரிய அளவில் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைக்கிறது.

கரெக்டாய் தப்பா புரிஞ்சுட்டார் அனவரதன்.

அரண் திரியேகன் தான் தன்னை இப்படி கடனில் கோல்மால் செய்து ட்ராப் செய்து,  மகளை கேட்டு மிரட்ட சொன்னதோ மன்யத்தை? இப்படித்தான் புரிந்தார் அனவரதன்.

ந்த நிலையில் மயக்கம் தெளிந்த சுகவிதா தன்னை ப்ரபாத் தான் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தான் என அறியவும் மறுநாள் அவனை தன்னை சந்திக்க வரச் சொன்னாள். இவளைப் பற்றி ஜீவாவுக்கு இன்ஃபோ கொடுக்கும் இவள் சைட் ப்ளாக்க்ஷீப்  இந்த வைட் பால்பாக்கெட் தானா?

மெசேஜை பார்க்க கூட இல்லாமல் இருந்த ஜீவா ஆன்டைம்க்கு மெசேஜ் பார்த்து இவளைத் தேடி வந்தானே…. சுகாவக் காணோம்னு இந்த பால்பாக்கெட் பதறிருப்பான்…பயந்து போய் ஜீவா மெசேஜ் பார்த்திருப்பான்….. ஆக இப்ப  இவ பால்பாக்கெட்டைப் போடுற போடுல ஜீவா இங்க தெறிச்சு வரனும்…

“நான் எப்டி உன் கூட வந்தேன்?” அதிகாரமாய் தொடங்கினாள்.

எதிரில் நின்ற ப்ரபாத் எல்லாவற்றிற்கும் எப்போதும் தயார். சுகவிய பிறந்ததுல இருந்து பார்த்து வளந்தவனாச்சே…..

நேற்று இருந்த சூழலில், இவளது மொட்டைப் பிடிவாதத்தில் அரண் சுகவியிடம் தன்னை காண்பித்துவிடத்தான் எண்ணி இருந்தான்….அதையே சமாளித்தாயிற்று. இப்பொழுது லோன் கதை முடியும் வரை அமைதியாய் இருக்கலாம் என தான் முடிவு,

“ உனக்கு ஒரு சின்ன ஆக்சிடெண்ட்…..அரண் அந்த பக்கம் வந்தான் போல…..அவன் உன்னை என் கூட அனுப்பி வச்சான்….”

உண்மையை தேவையான வகையில் ப்ரெசென்ட் செய்தான் ப்ரபாத்.

ஜீவாவை தனக்கு தெரிந்ததாக காட்டிக் கொள்ள இது சமயமல்ல….அனவரதன் லோன் ட்ரன்ஸ்ஃபர் ஆகட்டும்… அதே நேரம் அரண் ஒன்றும் உன் எதிரி இல்லை என இவளும் புரிந்து கொள்ளட்டும்….இதுதான் ப்ரபாத் அப்படி சொல்ல நோக்கம்….

‘அரணா….?’ நிச்சயம் இது சுகவிதா சுத்தமாக எதிர்பார்க்காத பதில். அரண்டும் போனாள். ஒரு வகையில் மிரண்டும் போனாள்.

 காரணம் அரணுக்கு ஜீவாவை தெரிந்திருக்கும்…..உனக்கு க்ளோஸானவங்க எனக்கு பழக்கம்…..ஜீவா சொன்னது இந்த அரணையா…? இவன் இவளுக்கு க்ளோஸா?!!!! என்ன பொய் சொல்லி வச்சிருக்கானோ இந்த அரண்.  ஜீவாக்கு ஏன் அது புரியல?

Are போகும் முன்பே chat இல் அரண் பத்தி ஓரிரு முறை ஜீவாவும் இவளும் பேசிக் கொண்டது உண்டு….இவள் அரணை விமர்சிப்பதும்….அவன் அதற்கு விளக்கம் அளிப்பதுமாயும்…ஜீவா எப்பொழுதும் அரணை நியாயப் படுத்துவான்…..முதல்ல ஜீவாட்ட அரண பத்தி முழுசா வார்ன் செய்து வைக்கனும்’ இப்படியாக இதை மனதிற்குள் குறித்துக் கொண்டாள் சுகவிதா.……

அதோடு நேற்று இவள் அதிக நேரம் காணவில்லை என்ற தகவல் வரை அரண் வழியாக ஜீவாவிடம் செல்வதென்றால்…..அதை அரணுக்கு சொல்லும் அறிவு ஜீவி இந்த பால்பாக்கெட் தானே….

முதல்ல அத நிறுத்தனும்….

ஜீவாவைப் பற்றி தன் காதலைப் பற்றி சுகவிதா ப்ரபாத்திடம் வெளியிட்டாள்.

“FB ல பார்க்ற ஒருத்தன் ஒரு கொலைகாரனா, பொறுக்கியா…….பொண்னுங்களை கடத்திட்டு போய் விக்றவனா…ஏன் ஒரு டெரரிஸ்ட்டா கூட இருக்கலாம்…நீ என்ன லூசு மாதிரி இப்டி செய்துட்டு இருக்க….?” முடிந்தவரை மறுக்கப் பார்த்தான் அவன். அரணைப் பற்றி வெளிப்படையாக பேசும் சூழல் இன்னும் வந்திருக்கவில்லையே…

ஆனால் அவனது கேட்க முடிந்த கேள்விகள் எல்லாவற்றிற்கும் அவனை வாயடைக்கும் படி பதில் சொன்னாள் சுகவி.

“ FB  ல பார்த்து ஒன்னும் பழகலை….ஜீவா ஒரு ஆத்தர்…அதுவும் நான் ஃபிக்க்ஷன் எழுதுறவங்க…அவங்க வியூஸ் எல்லாத்லயும் ஒரு நேர்மை இருக்கும்….அவங்க ஆதங்கத்துல ஒரு நியாயம் இருக்கும்….அதுக்கு அவங்க சொல்ற சொலூஷன்ஸ்ல peace இருக்கும்….மத்த ஆர்ட் மாதிரி கிடையாது ரைட்டிங்…எப்டியும் நம்மோட இன்னர் மைன்ட் அதுல கண்டிப்பா எக்ஸ்‌ப்ரெஸ் ஆகும்… அதை புரிஞ்சுக்க கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தா போதும்….எனக்கு ஜீவாவை புரியுது…கரெக்டா சொல்லனும்னா அவங்க நிறைய உன்ன மாதிரி தெரியுமா……உனக்கு அவங்கள கண்டிப்பா பிடிக்கும்….”

இதிலேயே ப்ரபாத் ஸ்டம்ப்டாகி திணறியவன்…

“ஆமா எனக்கு அரணத்தான் ரொம்ப பிடிக்கும், அப்ப அரண மேரேஜ் செய்துக்றியா…..?”

“சீ…..”

“ஏய் என்ன சீ… அவனுக்கென்ன….?”

“அவன்ட்ட நீ வேணா ஏமாறுவ….அதுக்கு நான் இல்லப்பா ஆளு….ஜெலசி ஃபெல்லொ…பணத் திமிரு….பழி வாங்றதுக்காக என்ன வேணாலும் செய்வான்….”

“ஏய் அப்டி என்ன அவன் என்னை ஏமாத்திட்டான்….?”

“ப்ச்….பால்பாக்கெட் நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்…நீ இடையில ட்ராஜடி செய்துட்டு இருக்க….”

“சரி சீரியஸானத சொல்லித் தொல….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.