(Reading time: 47 - 94 minutes)

ம் மன்யத் அந்த நிதி நிறுவனத்தை சமீபத்தில் தான் பெரும் முதலீட்டில் வாங்கி இருந்தான். மற்றபடி அவனது முக்கிய தொழில்  இரும்பு உபகரணங்கள். கஸ்டமர்ஸ் அதாவது ஃபேக்டரி ஓனர்ஸ் கேட்கும் வண்ணம் டூல்ஸ், மெஷினரிஸ் வடிவமைத்து சப்ளை செய்வது அவன் மெய்ன் பிஸினஸ்.

அவனது மெயின் க்ளையண்ட் அரண் க்ரூப்ஸ்…. அந்த மன்யத்தின் M&M நிறுவனம் அதன் உற்பத்தியில் கிட்டதட்ட 70சதவீதத்தை அரண் க்ரூப்ஸின் வெவ்வேறு தொழில்களுக்கே செய்து வந்தது.

நிதிநிறுவனத்தை வேறு எக்கசக்க முதலீட்டில் அப்பொழுதுதான் வாங்கி இருந்தானா மன்யத், இப்பொழுது அரண் க்ரூப்ஸும் மன்யத்துடன் உள்ள பிஸினஸை நிறுத்திக் கொண்டால் போதும்…..அவன் பேங்கரப்சியாக நேரிடும்….அவன் ஃபினான்ஸ் நிலை அந்த அளவு அரண் க்ரூப்ஸை சார்ந்து இருந்தது.…

தன் தந்தையை அழைத்தான் அரண். விஷயத்தை சொன்னான்.

மன்யத்திடம் அவனையே பேசச் சொன்னார் அவர்.

பின் மன்யத்தை ஃபோனில் தொடர்பு கொண்டு இவன் பேச வேண்டியதை பேச, அவன் அனவரதன் கம்பெனி கடன் விஷயத்தில் தான் செய்த தில்லிமுல்லுகளை விலக்கிவிட்டு, நியாயமாய் கொடுக்க வேண்டிய பணத்தை அக்ரிமென்டில் முன் குறித்தபடி நியாயமான தவணையில் பெற்றுக் கொள்ள உடனடியாக ஒத்துக் கொண்டான்.

“சுகவிதா சிஸ்டர் உங்க கேர்ள்ஃப்ரெண்டா சார்….? வெரி சர்ப்ரைஸிங்…..வெட்டிங்கு இன்வைட் செய்ங்க சார்…ஃபாமலியா வருவோம் சார் “ என்றானே பார்க்கலாம் அந்த மன்யத்…

தன்னையும் மீறி, திருமண உடையிலிருந்த சுகவிக்கு, மோதிரம் அணிவித்து அதே கையை பற்றி அவளை தன்னோடு அணைப்பது போல் ஒரு காட்சி அரண் மனக்கண்ணில்….

 ‘நோ அப்டி எந்த இன்டென்ஷனும் எனக்கு இல்லை’ என திரும்ப திரும்ப தனக்குள் சொல்லிக் கொண்டான் அவன். கானல் நீர் கனவுகளினால் என்ன ப்ரயோஜனம் என்பது அவனுக்கு.

அதற்குள் தனக்கு மிக நெருங்கிய நம்பிக்கையான நண்பர் ஒருவரை அழைத்து அனவரதன் கம்பெனிக்கு நியாயமான வகையில் லோன் ஆஃபர் செய்ய கேட்டுக் கொண்டார் திரியேகன். ரெஃபர் செய்தது தான் என தெரிவிக்க வேண்டாம் என்ற கோரிக்கையோடு.

அந்த நிறுவனம் மறுநாளே அனவரதனை தொடர்பு கொள்ள, திரியேகனின் நண்பர் நிறுவனத்திலிருந்து கடன் பெற்று மன்யத்தின் நிறுவனத்திற்கான கடனை அனவரதன் அடைத்துவிட்டு, பின் நியாய தவணையில் திரியேகனின் நண்பரின் நிறுவனத்திற்கு கடன் செலுத்தி முடிப்பது என முடிவாகி, முழு நிம்மதிக்குள் ப்ரவேசித்தார் அனவரதன். அவரது மகளும் தான்.

ஆனால் இதெல்லாம் ஒரு கொயன்சிடென்சில் நடந்தது போல்தான் அனவரதனிடம் காட்டப் பட்டதே தவிர, அரண் க்ரூப்ஸின் பெயர் அவரை சென்று அடையாதபடி பார்த்துக் கொண்டனர் திரியேகனும் அவர் மகனும்.

றுநாள் சுகவிதாவிடம் சந்தோஷ கண்ணீரே…….

‘ ஐயோ ஜீவா, எனக்கு எவ்ளவு சந்தோஷமா, எவ்ளவு நிம்மதியா இருக்கு தெரியுமா…? எனக்கு நல்லா தெரியும் இதுல நீங்க எதோ செய்திருக்கீங்க….என்ன செய்தீங்க..எப்டி செய்தீங்கன்னுதான்  தெரியலை….அந்த மன்யத் நாய் எப்படி இப்டி நியாயமா லோன் க்ளோஃஸ் செய்ய ஒத்துகிட்டான்….? அவன எப்டி வழிக்கு கொண்டு வந்தீங்க…? அதோட இந்த L&L லோன் ஆஃபர்…..ஃபார் ஷுயுர் அதுல உங்க ஹேண்ட் இருக்குது….. அப்பாவோட இத்தன வருஷ லைஃபை வெறும் 24 அவர்ஸ்ல சேவ் பண்ணி கொடுத்துட்டீங்க ஜீவா ….அப்பாட்ட ரொம்ப ப்ரெஸ் பண்ணி கேட்க முடியலை....பட் கன்ஃபார்மா தெரியும் இது உங்க வேலை தான்…. நேத்து நீங்க என் கூட இருக்ற மாதிரி ஃபீல் தெரியுமா…இல்லனா நான் பயத்துல செத்தே போயிருப்பேன்…..இங்க ஆன் லைன்ல இந்த அழுமூஞ்சி சுகாட்ட பேசிகிட்டே அங்க அவ்ளவு தூரத்துக்கு வேலை பார்த்திருக்கீங்க…..நெவர் ஃபெல்ட் திஸ் சேஃப்…ஐ டோண்ட் நோ ஹவ் டு தேங்க் யூ’

அவள் சந்தோஷ சுக ஊற்றாய் அடுக்கிக் கொண்டு போக….

அவள் சந்தோஷமாய் இருப்பதும், அதற்கு தான் காரணமாய் இருப்பதும் எத்தனையாய் சுகம் சுகம்….. அரணுக்குள் ஆனந்த பூங்காற்று. ஆனாலும் இப்டியா முகத்துக்கு நேரா சொல்லுவா?

“ஹேய்….ப்ளீஸ் நிறுத்து….டோன்ட் எம்பரஸ் மீ….”

‘தெரியும் ஜீவா…..இப்ப கூட நீங்க ஷோ பண்ண மாட்டீங்க…..இப்டிதான் பேசுவீங்கன்னு….இப்ப ஒரு குட்டி ஸ்மைலோட….ரொம்ப சந்தோஷத்தோட….அப்டிதான் இத ரீட் செய்துட்டு இருப்பீங்க… தட்ஸ் வாட் ஸ் யூ….உங்க மைன்ட்ட எனக்கு தெரியுது….உங்களத்தான் தெரியல…உங்களுக்கு மட்டும் என்னை தெரியுது….ஆனா எனக்கு மட்டும் உங்கள தெரியல….’

 அவனை அறிந்து கொள்ள கேட்டுப் பார்த்தாள் தான் அவள். ஆனால் அரண் தன்னை வெளிப் படுத்த தயாராயில்லை….இவனை அவள் அரணாய் அக்சப்ட் செய்வாளா என உறுதியாக சொல்வதற்கில்லை….இதில் உதவி செய்தது இவன் என தெரிந்து அவளது அப்பா புது லோனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டால்…..? இன்னும் டீல் சைன் ஆகவில்லையே….. ஆக வெய்ட் அண்ட் வாட்ச் என முடிவு செய்து கொண்டான். சுகவிதாவிற்கோ ஜீவாவிற்கு இஷ்டமில்லா எதையும் கட்டாய படுத்தக் கூடாது என்ற மனநிலை.

இதில் அரணுக்கும் சுகவிதாவுக்கும் ஒருவருக்காய் ஒருவர்  ஹெட் ஆன் ஹீல்ஸ் தாங்கள் விழுந்து கொண்டு இருக்கிறோம் என்பது புரியவே இல்லை.

ஆனால் அஸ் யூஸ்வல் இருவரையும் புரிந்து கொண்ட நபர் ப்ரபாத் தான்.

அவனுக்கு இது ஒரு நல்ல விஷயமாக படவில்லை. காரணம் சுகவிதா அனவரதனின் அரண் வெறுப்பின் எல்லை அவனுக்கு நன்றாக தெரியும். ஆனால் சுகவியிடம் அரண்தான் ஜீவா என உடைத்துப் பேசும் சூழல் இது இல்லை. ஆக பொறுமையாய் காத்திருந்தான் அவள் விஷயத்தில்.

அரணையோ எச்சரித்தான் தான்.

“மாப்ள கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்துக்கோ…..ஆசைய வளக்காத…சுகா அவங்க அப்பாவ மீறிலாம் எதையும் செய்ய மாட்டா…..அப்டியே செய்தாலும் அத அவளாலயோ, உன்னாலயோ கூட தாங்க முடியாது….”

“ம் பார்த்துக்றேன் மாப்ள…இனிமே அவட்ட விலகியே இருந்துக்கிடுறேன்…..” அரண் முழுமனதாய் உணர்ந்து முடிவாய் சொல்லி வைத்தான் தான். ஆனால் அது அப்படி ஒன்றும் ப்ளெய்ன் செய்லிங்காக இருக்கப் போவதில்லை  என அன்றே தெளிவாக அரணுக்கு புரிய வைத்தாள் சுகவிதா.

  ன்று இரவு….குளிர் கொன்று எடுத்துக் கொண்டிருந்தது….இவனது அறையின் ஜன்னலிலிருந்து வெளியே தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரண்…..அந்த ஹோட்டலின் ஸ்விம்மிங் பூல் நிரம்பி இருந்தது… இப்பொழுது இருக்கும் வெதரில், யாராவது கேட்டுக் கொண்டிருந்தாலொழிய அதை நிரப்பி இருக்க மாட்டார்கள்.......

என்னதான் வெண்ணீராய் இருந்தாலும் இந்த  க்ளைமேட்டில் யாருக்கு இப்படி நீச்சலடிக்கவெல்லாம் தோன்றுகிறதாம்…?

இவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அங்கு ஒரு பெண் வந்து நிற்பது தெரிகிறது…..வெளிச்சத்தில் அது சுகவிதா எனவும் ஓரளவு புரிகிறது…… ஃபுல்லி கவர்ட் ட்ரெஸ்….கண்டிப்பாக குளிக்க வந்தவள்  இல்லைதான்…. ஆனா இவனுக்கு கேள்வி என்னன்னா ஸ்விம்மிங் பூலை பார்க்கவே அவ பயங்கரமா பயப்படுவாளே….இங்க என்ன செய்றா…?

ஏதோ தோன்ற அவசர அவசரமாக கிளம்பி அங்கு சென்றான்….. இவன் பூலைப் பார்த்து போய்க் கொண்டிருக்கும் போதே முழு உடையுடன் அவள் குளத்திற்குள் குதித்துவிட்டாள்…..மிரண்டு போனான் அரண்…. சூசைட்டா???

“ஏய்…..என்ன செய்ற….? “ இவன் அவளை நோக்கி ஓட,

அவளோ “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……போடா இங்க எதுக்கு வந்த….? குளிக்றேன்ல….தூரப் போ….” கத்தினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.