(Reading time: 47 - 94 minutes)

ஜீவா ஓபனா சொல்லிகிட்டது கிடையாது….பட் எனக்கு புரிஞ்ச வரை அவங்களுக்கு வீட்ல அப்பா மட்டும் தான்….என்னை மாதிரி….உன்னை மாதிரி ஒன்லி சைல்ட் சின்ட்ரோம் ஜீவாக்கும் நிறைய இருக்கும்….கண்டிப்பா மேரிட் கிடையாது….

அதோட அவங்க கண்டிப்பா நிறைய நாட்டுக்கு போயிருக்காங்க…..வேர்ல்ட் லெவல் எக்‌ஸ்போஷர்….தட் டூ, மன்யத்த விரட்டனும்னா கண்டிப்பா, நீ கேட்கிற மாதிரி என் அப்பா சம்மதிக்க முடியாத அளவு ஃபினான்ஷியலி லோவா இருக்க சான்ஸே இல்ல….

அப்பாக்கு பிடிச்ச மாதிரி ஹெல்தி அண்ட் ஃபிட்……. அன்னைக்கு மால்ல பார்த்தேனே…. என் மேல புல்லட் பட்றக் கூடாதுன்னு…. “ பெருமூச்சுவிட்டாள் சுகவி

“ஹி லவ்ஸ் மீ ட்ரூலி…அப்பா புரிஞ்சிப்பாங்க ப்ரபாத்…..பட் சொல்ல வேண்டிய விதத்துல சொல்லனும்….யூ நோ, அப்பா ஈகோவ மட்டும் குத்திடக் கூடாது… மத்தபடி அப்பா நோ சொல்ல எதுவும் இல்ல…

ஜீவாக்கு ஸ்கின் டிஸாசடர் எதுவும் இருக்குமோன்னு எனக்கு ஒரு ஃபீல்…என்னை பார்க்க அவாய்ட் பண்றாங்கல்ல…அதான் அப்டி தோனிச்சு….அவங்கட்ட அதெல்லாம் சொல்லிட்டேன் எனக்கு இதெல்லாம் இஷ்யூ கிடையாதுன்னு…. அப்பாவும்  அப்பியரென்ஸுக்கு இம்பார்டன்ஸ் கொடுக்ற ஆள் கிடையாது….

அதோட சாட் செய்துறுக்கேன்…..இத்தன நாள்ள ஒரு தடவை கூட ஜீவா ஜோக்குக்கு கூட எதுவும் வரம்பு மீறி பேசுனது கிடையாது தெரியுமா…..? ஜெம்….

எல்லாத்துக்கும் மேல ஜீவா ஓகே சொன்னதும் என் அப்பாட்ட தான இன்ட்ரோ கொடுப்பேன்….எல்லாத்தையும் விசாரிச்சதும் அப்பா சரின்னு சொல்லிடுவாங்க… அப்பாக்கு ஜீவாவ எவ்ளவு பிடிக்கும் தெரியுமா? அப்பா சொல்லித்தான் நானே அவங்க புக்‌ஸை ரீட் பண்ண ஆரம்பிச்சேன்…

கேட்டிருந்த ப்ரபாத் தான் தன் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று…..

“நீதான் ப்ரபா எனக்கு இந்த விஷயத்துல சப்போர்ட் செய்யனும்….அப்பாவுக்கு ஜீவாவ பிடிக்கும் பட் லவ் மேரேஜ் பிடிக்காது….” சோக பாவமாய் தன் நண்பணைக் கேட்டாள்.

“முதல்ல ஜீவாவ நேர்ல ஒழுங்கா பாரு…அப்புறமா இத சொல்லு….” அவன் அதற்கும் மேலாக பரிதாபமாக விழித்தான்.

இவங்கட்ட மாட்டிகிட்டு இந்த காதல் படுற பாடு இருக்கே….கொடுமைங்க காட் சார்!!!

ஆனால் இந்த உரையாடல் தான் சுகவி அரணின் திருமணம் ப்ரித்விராஜ், செங்க்யுக்தா ரேஞ்சுக்கு செல்வதற்கான விதை விழுந்த இடம் என யாருக்கும் தெரியாது.

ப்ரபாத்தும் சுகவிதாவும் பேசிக் கொண்டிருந்த வேளையில் ப்ரபாத்திடம் ஏதோ பேச அங்கு வந்த அனவரதன் காதில் ப்ரபாத் சுகவிதாவைப் பார்த்து கேட்ட “அரண கல்யாணம் செய்துக்றியா…?”  அரைகுறையாய் விழுந்து வைத்தது.

மன்யத் வழியா செய்த திட்டம் ஃப்ளாப் ஆனதால, அரண் ப்ரபாத் மூலம் தன் மகளை ஏமாத்தி கல்யாணம் செய்ய பார்க்கிறானா? ஏன்? அவளவிட தான் பெரியாள்னு காமிக்றதுக்கா? இல்ல கல்யாணம் செய்து அவ கரியரை காலி செய்யவா? ஒரு வேள அதுக்கு பிறகு தூக்கி தூரப் போட்டு போகலாம்னு கூட நினைப்பான்… அவன் திமிர் அப்படி… பொறாமைகாரன்…. அனவரதனோட வே ஆஃப் இன்டெர்ப்ரடேஷன் அது…

அதற்கு பிறகு சுகவிக்கும் ப்ரபாத்திற்கும் நடந்த உரையாடலை அவர் கேட்க முடியாதவாறு அந்த லோன் ஆஃபர் செய்திருந்த கம்பெனியிலிருந்து முக்கிய கால் வந்து சேர்ந்தது. சோ அவர் மகளின் ஜீவா ஆசையை தெரிந்து கொள்ளாமலே போனார் அனவரதன்.

வெட்டிங் வெரட்டிப் பிடிச்சு, துணிஞ்சு தூக்கிட்டுப் போய் பண்ணனும்னு இருந்திருக்கு சாரே!!! அதான் எல்லாம் எப்பவும் எடக்குமடக்காவே நடந்திருக்குது….

தென் கேம் ஸ்டார்ட்டட்….. அனவரதன் தன் மகளுக்கு அன்றே அப்பொழுதே ஆன் த ஸ்பாட் திருமணம் நிச்சயம் செய்தார். ஆம் சில காலமாய் பெண் கேட்டு கொண்டிருந்த பெலிக்‌ஸுடன் மொபைலில் பேசி திருமண தேதி வரை அப்பொழுதே முடிவு செய்துவிட்டார். மன்யத் போல் இன்னும் எத்தனை பேரிடம் மாட்டி முழிக்கவாம்? என்பது வேறு அவருக்கு.

 காரணத்தை சொல்லாமல் திருமண முடிவை மட்டும் மகளிடம் சொன்னார் அனவரதன். அவர் ப்ரச்சனைகளை கையாளும் விதம் அது.

இப்படி ஒரு ட்விஸ்ட்டை அந்த நேரத்தில் சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை சுகவிதா….ஒரு புறம் பயம், மிரட்சி, மறுபுறம் வலி வேதனை. திக்கற்றவளாய் அவள் உணர்ந்த தருணம் அது. இவள் என்ன ஆடா மாடா? இவளிடம் ஒரு வார்த்தை கேட்காமல்…….இவள் விருப்பம் அறியாமல்….என்ன செய்திருக்கிறார் இந்த அப்பா என்ற குமுறல்.

அதேநேரம் கண்ணால் இன்னும் ஒழுங்காய் காணாத, அவனை அடையாளப் படுத்தும் எதுவும் தெரியாத ஜீவாவைப் பற்றி அப்பாவிடம்  எப்படி கூற என்ற தவிப்பு….     

அதோடு  ஜீவாவிடம் நிலமையை சொல்லி நேரில் பெண் கேட்டு வரச் சொல்ல வேண்டும்….ஆனால் அதில் என்ன ப்ரச்சனைகளெல்லாம் வரப் போகிறதோ? நேற்று அவனிடம் இவள் சொன்ன ஐ லவ் யூவிற்கு இப்பொழுது வரை ஜீவாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை….அலைகழிந்து கொண்டிருந்தாள் உள்ளத்தில்……

மயங்கிய நிலையில் இவளை இவள் எதிரியான அரணிடம் வேறு ஒப்படைத்துவிட்டு போயிருக்கிறான் ஏன் என்றும் புரியவில்லை…. அரணின் சதி எதுவும் இருக்குமோ என்ற ஒரு பனிக் ஃபீல் எங்கோ ஒரு ஓரத்தில்…..

ஜீவா இவளைக் காதலிக்கிறான் என்பதில் அவளுக்கு சந்தேகமே இல்லை….ஆனால் அதை ஒத்துக்கொள்ள அவனுக்கு எதோ தடை இருக்கிறது என்று இவளுக்கு தெரியும்தானே….இப்பொழுது நிலைமை புரிந்து ஜீவா இவளுடையவனாய் வருவானா? இல்லையெனில் இவள் நிலை????

இதில் காரணம் எதுவும் சொல்லாமல் தன் மறுப்பை அப்பாவிடம் தெரிவித்துப் பார்த்தாள் சுகவிதா. அதை கேட்கவும் அவளது அப்பாவோ நீ யரையும் லவ் பண்ண மாட்ட, ஆனாலும் சொல்றேன் அப்டி எதாவது இருந்தா நான் செத்துறுவேன்ற ரேஞ்ச் மிரட்டல் மூலம் காதலுக்கான தன் எதிர்ப்பையும், அவர் பார்த்திருக்கும் மாப்பிள்ளை பெலிக்‌ஸ் பற்றி தன் எண்ணத்தையும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது போலும் அழுத்தமாக சொல்லி இன்னுமாய் புளி கரைத்தார்.

அடுத்து அவள் ஜீவாவை FBஇல்  தொடர்பு கொள்ள முயன்றாள். இந்த திருமண ஏற்பாட்டை பற்றி மெசேஜ் செய்தாள்.

அதே நேரம் எதோ ஒரு எண்ணிலிருந்து அழைப்பு.

ஜீவாவோ?

அவசரமாக அழைப்பை ஏற்றாள்.

“ அந்த அரணை விட்டுட்டு இப்டி வேற ஒருத்தனத்தான் கல்யாணம் செய்யப் போறன்னா அதுக்கு நீ என்னயவே செய்துருக்கலாமே….இப்ப கூட ஐ’ம் வில்லிங்…..அத சொல்லத் தான் கூப்டேன்…இதுல எந்த கம்பெல்ஷனும் இல்ல…. த்ரெட்டும் இல்ல…. நீ இப்ப மேரேஜ் செய்யப் போறியே அந்த ஃபெலிக்ஸ் ப்ராப்பர்டி வேல்யூக்கு ஈக்வலா உன் நேமுக்கு ஷேர் ட்ரான்ஸ்ஃபர் செய்து கொடுக்கேன்……திங்க் இட் ஓவர் பெய்ப்…… அந்த அரண் உன் விஷயமா என்ட்ட டீல் பேசுனப்பவே எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்….உன் அளவு லோ க்ளாஸ்ல அந்த திரியேகன் எப்டி மகனுக்கு பொண்ணெடுக்க சம்மதிச்சார்னு…..இப்பதான் புரியுது உனக்கும் அரணுக்கும்  என்ன டீலோ….? அவனுக்கு மேரேஜ் தேவைப்பட்டிருக்காது…..ஆனா எனக்கு அரண் மாதிரிலாம் ஃப்யூ டேஸ் சரி வராது…..  அதான்….ஜெனியூனா மேரேஜுக்கு கேட்கிறேன்….”  மன்யத் பேசப் பேசப் சுகவிதாவுக்குள் அக்கினி அமில மழை. காது முதல் உயிர் வரை கந்தக வார்த்தைகள் காந்த கையிலிருந்த மொபைலை தூக்கி எறிந்தாள்.

சீ போனை வைடா பொறுக்கி நாயே!!!

 மன்யத்தைவிடவும் இப்பொழுது இவள் மனதை கொதிக்க வைப்பது அரண்……அவன் பேசிய டீல்….

ஆக ஜீவா இவளது அப்பாவின் கடன் ப்ரச்சனையை தீர்த்து வைக்க உதவி கேட்டது அரணிடம் போலும். அதை செய்து கொடுத்துவிட்டு பதில் உபகாரமாக அந்த அரண்  ஜீவாவை இவளை விட்டு விலக கேட்டிருக்கிறான். சாடிஸ்ட்……!!!!

இவளது ஜீவா மீதான காதல் அரணுக்கு தெரிந்திருக்குமாயிருக்கும். ஜீவாவே அதை சொல்லி இருக்கலாம்…..இல்லை இவளது @ட்டிற்கான கமெண்ட்ஸை வைத்து ஊகித்திருக்கலாம் அரண்.

@டிற்கு ஜீவா என கமெண்ட் செய்யும் பெண் சுகவிதா என  இவளது அம்மா அவனிடம் Are ல் வைத்து உளறி வைத்தார் தானே… எப்படியோ இவள் சந்தோஷத்தை வேரறுக்க, இவளை கொல்லாமல் கொன்று பார்க்க, அணு அணுவாய் வதைக்க அந்த அரண் இப்படி செய்திருப்பானாய் இருக்கும்….பழி வாங்கும் வெறி பிடித்தவன் தானே அவன்……

ஆனால் அரண் கேட்டுக் கொண்ட்டதற்காக இந்த ஜீவா எதற்காக இவளைவிட்டு விலக வேண்டும்…??? இவள் அப்பாவின் பணத்தை காப்பாற்றி கொடுத்துவிட்டு, இவள் வாழ்க்கையை குழி தோண்டி புதைக்க ஜீவா எப்படி முடிவெடுத்தான்? அவன் ஒரு நாளும் பணத்திற்கு இப்படி ஒரு முக்கியத்துவம் கொடுக்கும் நபராக பட்டதில்லையே இவளுக்கு…..மன்யத்திடமிருந்து காப்பாற்றி ஃபெலிக்‌ஸிடம் இவளை பலி இடுவதில் ஜீவா என்ன வித்யாசத்தைக் கண்டான்?????

இந்த கேள்விக்கு  சுகவிதா பதில் கண்ட விதம் தான் விபரீதத்தின் உச்சம்…….

Friends, போன வாரம் NNK  அனுப்பிட்டு ஆன் த ஸ்பாட் இந்த எபி எழுத ஆரம்பிச்சுட்டேன்…. வழக்கமா நான் அப்டி செய்றது கிடையாது….ஏனோ போன வாரம் அப்டி ஆகிட்டு….அதோட பின் விளைவுதான் இந்த லாங் எபி. பொறுமையா படிச்சு கமெண்ட் செய்ங்க….Thanks.  

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:879}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.