(Reading time: 11 - 21 minutes)

வரும் கட்டியணைத்து கண்ணீர் விட்டனர். இப்படியொரு நிலைவருமென கனவிலும் எண்ணியதில்லை. 

“போதும். இப்போ அழுறதால பிரயோஜனம் இல்ல. இப்போ நம்ம பண்ணவேண்டியது ஒன்னு தான். இங்க இப்படி ஒரு ஆக்ஸிடென்ட் நடந்ததுக்கு எந்த தடயமும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு இன்ச்சா தேடுங்க.  கிடைக்குற எல்லாப் பொருளையும் தூக்கி எறிங்க" என்றான் முகுந்த்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தை முழுமையாக அலசித் துடைத்தனர். உடைந்த வளையல் துண்டுகள், அஞ்சலியின் ஹேண்ட்பேக்,அதிலிருந்த பொருட்கள், அரவிந்தின் வாட்ச் என எல்லாவற்றையும் அப்புறப்படுத்தினர்.  அடுத்த ஐந்து நிமிடங்களில், அங்கே ஒரு விபத்து நடந்ததுக்கான தடையமே இல்லையென உறுதியானபின் காரில் ஏறிக் கிளம்பினர். அஞ்சலியின் ஸ்கூட்டி அங்கேயே தனியாய் நின்றது. அதன் சைட் மிரரில் அவர்களின் கார் மின்னல் வேகத்தில் சென்று கொஞ்சம் தொலைவில் மறைந்து போவது தெரிந்தது.

You might also like - Vasantha bairavi... A neat family story...

ஞ்சலியின் பேய் உருவம் நித்யாவின் உயிரைக் குடித்தது. அவள் உயர் பிரியத் தொடங்கியது. இறக்கும் தருவாயில்,இறுதியாக முகுந்தின் முகம் தெரிந்தது. அவன் பேசுவது வெகு தூரத்தில் கேட்டது.

கொஞ்சம் கொஞ்சமாய் சுயநினைவு பெற்றாள். மங்கலாயிருந்த பார்வை தெளிவானது. முகுந்த் இவள் கன்னத்தை தட்டிகொண்டிருந்தான்.

“நித்யா நித்யா,,என்னாச்சு? “

“முகுந்த்"

நித்யா அவன் நெற்றியைத் தடவினாள். உடல் வியர்த்துக்கொட்டி,நடுங்கிக்கொண்டிருந்து.

“உனக்கு ஒன்னும் இல்ல.வெறும் கனவு தான்" அவளை அணைத்துகொண்டான்.

“பயமா இருக்கு முகுந்த். எனக்கு என்ன ஆகும்?”

“ஒன்னும் ஆகாது. என்ன நம்பு. என்ன மீறி ஏதும் நடக்க விட மாட்டேன். நீ என் வீட்ல தான் இருக்க. இங்க அப்பா,அம்மா எல்லாம் இருக்காங்க. ஒன்னும் ஆகாது" என்றான்.

“இங்க எப்போ வந்தேன்?” எனக்கேட்டாள். தான் தன வீட்டில் இல்லை என்பது அப்போது தான் பட்டது. குழம்பிப்போய் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“நேத்து அப்பா அம்மாவை உன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். காலிங் பெல் அடிச்சும் நீ ரொம்ப நேரமா வரல. பாத்தா கதவு தெறந்தே இருந்துச்சு. உள்ள போனா, ஹால்ல நீ மயங்கிக் கிடந்த. அப்புறம் டாக்டர்கிட்ட உன்ன கூட்டிட்டுப் போயிட்டு, எங்க வீட்டுக்கே வந்துட்டோம். உனக்கு ஒரு வாரம் ஆபிஸ்ல லீவ் சொல்லிட்டேன். நல்ல ரெஸ்ட் எடு. சீக்கிரம் ரெடி ஆயிடுவ.”

“தேங்க்ஸ் டா" என அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.

“Its Ok. You will be alright”என்று அவளைத் தட்டிகொடுத்தான்.

வர்கள் இருவரும் போனில் பேசிக்கொண்டனர்.

“முகுந்த் இல்லையா?”அவள் கேட்டாள்.

“இல்ல. ஜேம்ஸ்"என்றான்.

“என்னாச்சு"

“இப்போ அவன் தனியா இல்ல. அவனோட அப்பா அம்மா கூட இருக்காங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்"

“சரி. ஜேம்ஸ் எப்போ?”

“வெள்ளிக்கிழமை நைட்"

“என்ன பிளான்?"

“நீ சொன்னது தான்"

“ஓகே"

“பை"

அழைப்பைத் துண்டித்தனர்.

வெள்ளிகிழமை இரவு பதினொரு மணி.

முகுந்த் வீட்டில் மாலை நேரத்தைக் போக்கிவிட்டு, தனது வீட்டிற்குத் திரும்பினான் . நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தோசமான ஒரு மாலை நேரம் அது.

செக்யூரிட்டி இல்லை. தானே காரை விட்டிறங்கி கேட்டைத் திறந்துவிட்டு, காரை பார்க்கிங்கில் விட்டான்.

 அடுத்து அரை மணிநேரம் குளித்து முடித்து ரிலாக்ஸ் ஆனான். டிவியில் ஏதோ பாடல் ஓடிக்கொண்டிருந்தது. பீரைக் குடித்த படியே ரிமோட்டைத் தேடினான். அப்போது "ஸ்ஸ்ஸ்" என ஒரு சத்தம் கேட்டது. கண்டுகொள்ளாமல் ரிமோட்டை தேடுவததைத் தொடர்ந்தான். ஜன்னலை யாரோ தட்ட, 'டக் டக்' என சத்தம் கேட்டது. நிமிர்ந்தான்.

ஜன்னலருகே சென்றான். வெளியே யாருமில்லை. திரும்பி நடக்க, மீண்டும் அதே ஒலி. எட்டி பார்த்தான். யாரோ கடந்து போவது தெரிந்தது.

“ஹேய்..யாரது?”

பதில் இல்லை.

“ச்சே..செக்யூரிட்டி இன்னிக்கு தான் லீவ் போடுவான்" எரிச்சல் பட்டுக்கொண்டான்.

அப்போது இவன் வீட்டின் முன்கதவு தானாகத் தாழிட்டது.

அதை அறியாமல் இவன் கதவைத் திறக்க முயன்றான். திறக்கவில்லை.

“ஏய்,,யாரது? விளையாடாதீங்க.” கதவை பட படவென தட்டினான்.

இப்போது அந்த வீடு முழுவதும் ஒரு வாயு பரவியது. ஒரு சில நொடிகளில் அடர்த்தியாக அந்த வீட்டை நிறைத்தது. மூச்சுத்திணறியது, அந்த புகை வந்த திசையில் ஓடினான். சமயலறையில் இருந்து வந்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட மயங்கும் நிலையில் அந்த இடத்தை அடைந்தான். ஒரு எரிவாயு சிலிண்டர் திறந்துவிடப் பட்டிருந்தது. அதிலிருந்து வெண்ணிற வாயு பீய்ச்சியடித்துகொண்டிருக்க, இவன் அதிர்ந்து போனான். தடுமாறி அதன் அருகில் சென்று அதை நிறுத்த முயன்றான்.

அப்போது ஜன்னலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. “ஜேம்ஸ் ஜேம்ஸ்" அழைத்தது.

சிலிண்டரிலிருந்த வாயு முழுமையாக வெளியேறிவிட்டது. உயிர்பயத்தில் வெளியே ஓடினான். அந்தக் குரல் மீண்டும் அழைக்க, குரல் வந்த திசையில் பார்த்தான். அப்படியே உறைந்து போனான்.

அங்கே அஞ்சலியின் முகம் பிரகாசமாய்த் தெரிந்தது. அவள் இவனைப் பார்த்து மர்மமாய் சிரித்தாள்.

“காப்பாத்துங்க,காப்பாத்துங்க" என அலறியபடியே கதவை தட்டினான். யாரும் வரவில்லை.

இப்போது அஞ்சலையின் உருவம் மெதுவாய் மறைந்தது.  அந்த வாயுவின் நெடி மூச்சுக்குழலை எரித்தது. மூக்கைப் பொத்திக்கொண்டு அங்குமிங்கும் ஓடினான் ஜேம்ஸ். அப்போது அவன் செல்போன் ஒலித்தது. முகுந்த் அழைத்தான். தரையில் விழுந்து தடவிச் சென்று போனை எடுத்தான்.

“முகுந்த்..முகுந்" பேச முசியாமல் திணறினான் ஜேம்ஸ். கடுமையாய்த் தும்மினான்.

“ஹலோ.என்னடா ஆச்சு. வீட்டுக்கு போயிட்டியா?”

“முகு..மு..காப்பாத்..”

“ஹலோ..ஜேம்ஸ்?..ஹலோ?”

பதில் வரவில்லை. தும்மல் சத்தம் மட்டுமே கேட்டது.

“ஜேம்ஸ்..இருக்கியா? ஹலோ?”

“காப்பாத்து முகுந்த்..பேய் டா..அய்யோ.காப்பா,,,,,” முழுமையாய் சொல்லி முடிக்கவில்லை அவன். ஜன்னலிலிருந்து அஞ்சலியின் உருவம் மறைந்ததும், அந்த ஜன்னல் தானாக மூடிக்கொண்டது.

திடீரென ஒரு தீப்பிழம்பு தோன்றியது.

ஜேம்ஸின் எதிர்வீட்டு மாடியில் அந்த கல்லூரி மாணவன் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசிக்கொண்டே எதார்த்தமாய் திரும்ப, ஜேம்ஸின் வீடு வெடித்து சிதறுவதைக் கண்டான். அலறியபடியே கீழே ஓடினான்.

Episode # 04

Episode # 06

தொடரும்

{kunena_discuss:911}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.