ஆனால் சுஜாதாவிடம் அப்படியில்லை... சுஜாதா சென்னையில் இருந்ததால் அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை... சுஜாதாவும் கிராமத்திற்கு வரும்போதெல்லாம் லஷ்மிக்கு ஏதாவது வாங்கி வருவாள் அதனாலயே லஷ்மிக்கு சுஜாதாவை பிடிக்கும்.
அதுவும் இப்போது அவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் யுக்தாவையே தேவாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்பது லஷ்மியின் ஆசை... தேவாவிடம் லஷ்மி யுக்தா தான் இந்த வீட்டு மருமகளாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பாள், தேவாவிற்கு யார் மனதையும் கஷ்டப்படுத்த பிடிக்காது... அதுவும் தன் அன்னை என்றால்... அவனது திருமணம் அவன் அன்னையின் விருப்பப்படி என்று சொல்லிவிட்டான்.
வேண்டுமென்றே கவியிடமோ இல்லை சாவித்திரியிடமோ... தேவாவின் திருமணம் யுக்தாவோடு தான் என்று சொல்லிக் கொண்டிருப்பாள், சாவித்திரியை பொறுத்தவரை கவியோ இல்லை யுக்தாவோ தேவா போன்ற ஒருவனுக்கு தன் இரு மகள்களில் யார் மனைவியானாலும் சந்தோஷம் தான்...
You might also like - In search of love... Free English romantic story
தன் தந்தையின் சாயல்... தந்தையை போன்ற குணம்... தன் தந்தையை போல ஒரு நல்ல தோழன்... இந்த காரணங்களால் தேவாவின் பக்கம் சங்கவியின் மனம் சாய ஆரம்பித்துவிட்டது...
ஆனால் அவள் அத்தையின் விருப்பம்... தேவாவின் முடிவு... அவள் அன்னையின் அமைதி... இதெல்லாம் அறிந்த சங்கவி தன் காதலை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்...
எங்கே தன் மனதில் உள்ளது வெளிப்பட்டுவிடுமோ.. என்ற பயத்தில் யுக்தாவை தேவாவோடு சம்பந்தப்படுத்தி அவள் கிண்டல் செய்துக் கொண்டிருப்பாள்... அவனும் அமைதியாக சிரித்துவிட்டு போய்விடுவான்... யுக்தாவைப் பற்றி தேவா என்ன நினைக்கிறான் என்று இதுவரையிலும் சங்கவிக்கு தெரியாது...
எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பேசும் இந்த சகோதரிகள் அவர்கள் மனதில் உள்ள காதலைப் பற்றி மட்டும் இதுவரை பேசிக் கொண்டதில்லை..
யுக்தாவை பொறுத்தவரை பிருத்வியின் மேல் அவளுக்கு இருக்கும் காதலை யாரும் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லிவிடக்கூடாது... அது கவியாக இருந்தாலும் சரி... அதுமட்டுமில்லாமல் தன் காதல் ஒருவேளை நிறைவேறவில்லை என்றால்... கனவிலும் அவளால் அப்படி நினைத்துப் பார்க்க முடியாது.... இருந்தாலும் அப்படி நடந்துவிட்டால் இவளை விட கவிதான் மிகவும் வருத்தப்படுவாள்... அதனாலேயே கவியிடம் தன் காதலை மறைத்துவிட்டாள்.
சங்கவியோ தன் காதலை அறிவதற்கு முன்னரே அவள் அத்தை... யுக்தா தேவா திருமணத்தை பற்றி பேசுவதை அறிந்தவள் தானே... தன் சகோதரியின் வாழ்விற்கு தானே குறுக்கே நிற்க கூடாது என்று தன் காதலை யுக்தாவிடம் சொல்லாமலே மறைத்து விட்டாள்.
ஆனால் இப்படி ஒரு திருமண பேச்சு நடக்கிறது என்பதையும் அவள் யுக்தாவிடம் சொன்னது கிடையாது... தன் மனம் காதலால் சலனப்பட்டு தவிப்பது போதாதா...?? யுக்தாவிற்கு இதில் விருப்பமோ இல்லையோ... ஏன் அவள் மனதையும் சலனப்படுத்த வேண்டும் என்று இதைப்பற்றி சொல்லாமலே விட்டுவிட்டாள்.
ஆனால் தன் சகோதரியின் மனமும் காதலால் சலனப்பட்டு இருப்பதை இவள் அறியவில்லை.
யுக்தாவிற்கும் தேவாவிற்கும் திருமணம் நடந்தால் இருவருமே அதிர்ஷ்டசாலி என்று நினைப்பவள் தான் சங்கவி... அடிக்கடி யுக்தாவிடம் தேவாவைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பாள்... தேவாவையும் யுக்தாவையும் எப்போதாவது ஃபோனில் பேசவும் வைப்பாள்.
இப்படி யாருமே அறியாமல் தன் மனதிற்குள்ளேயே காதலை மறைத்து வைத்திருக்கும் இந்த சகோதரிகளின் காதல் நிறைவேறுமா...???
முடிந்துவிட்டது யுக்தாவின் காதல் திருமணத்தில் முடிந்துவிட்டது... ஆனால் இந்த திருமணத்தில் அவளுக்கே ஈடுபாடு இல்லாமல் இருப்பது ஏன்..?? பிருத்வி சப்னாவின் காதல் என்ன ஆனது...??
தன் அன்னையின் விருப்பப்படி யுக்தாவை திருமணம் செய்ய காத்திருக்கும் தேவாவின் நிலை என்ன..??
தன் சகோதரியின் மேல் உயிராய் இருக்கும் சங்கவி அவள் திருமணத்திற்கு கூட வராமல் இருக்கும் அளவுக்கு யுக்தாவின் மேல் என்ன கோபம்...??
இதற்கெல்லாம் விடை... விரைவில் சென்னைக்கு வர இருக்கும் சம்யுக்தாவின் வருகைக்கு பிறகு தான் தெரியும்.
தொடரும்
{kunena_discuss:933}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.