(Reading time: 22 - 43 minutes)

திரும்பவும் வந்து அவள் விழி மேல் விழுந்து பிரள….” அது  அசையாம இருக்க எதாவது செய்ங்களேன்…..திரும்ப வருதே” என நர்ஸைப் பார்த்தான்…. “ஏதோ பின் மாதிரி யூஸ் பண்ணுவாளே…அவள் ஹேர்லயே இருக்கும்…..” அவன் தான்.

“சார் இங்க நீங்க தான கொண்டு வந்து அட்மிட் பண்ணிங்க….அப்ப தூக்கிட்டு தான வந்தீங்க….” என சிறு குரலில் கிண்டலாக சொல்லியபடியே மனோஹரியின் காதருகில் இருந்த அந்த ஹேர்பின்னை எடுத்து முன் நெற்றி முடியினை அசையாமல் பின் செய்து வைத்தார் அந்த நர்ஸ்…

“அது எல்லோரும் எல்லோருக்கும் செய்ற ஹெல்ப்…ஆனா இது அப்படி இல்லையில்லையா? இது அவளுக்கு  பிடிக்காது…….” இவன்  சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறைக் கதவை யாரோ திறக்க….மித்ரன் முழு அலர்ட்டில் எழுந்தான்….அதற்குள் மனோஹரியின் சாயல் கொண்ட ஒருவரும் அவர் பின் அகதனும் உள்ளே நுழைந்தனர்….

அது அவளது அப்பாவையும் அகதன் அழைத்து வந்திருக்கிறான் என புரிகிறது.

ஃபார்மல் அறிமுகம்…..அதன் பின் அவள் பற்றிய நல விசாரிப்பு,  நடந்த நிகழ்வைப் பகர்தல்…..

“அம்மா கொஞ்சம் எமோஷனல்…பயந்திடுவாங்க…. வந்து சிச்சுவேஷனைப் பார்த்துட்டு அவங்களை கூட்டிட்டு வரலாம்னு நினச்சோம்….” மனோஹரியின் அம்மா பற்றி அகதன்  காரணம் கூறல்.. இந்த ஆண்கள் பேசி முடிக்கும் நேரம்… மனோஹரி கண் விழித்தாள்.

முதல் பார்வையில் அவன் தான் பட்டான்….இவள் படுத்திருந்த பெட் அருகில் நின்றிருந்தான் மித்ரன். அவன் முன்நிலையில் படுத்திருக்க ஒருவித தர்மசங்கடமாக தோன்ற எழ முயன்றாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் படு மகி….ஸ்டேபிளா ஃபீல் பண்றப்ப எழுந்தா போதும்…” எழ முயன்ற அவளைப் தடுத்து படுக்க வைக்க முயன்ற அகதனை அப்போதுதான் கவனித்தாள். இவளது இடபுறம் நின்றிருந்திருக்கிறான் அவன். அருகில் ச்சேரில் அமர்ந்திருக்கும் அப்பாவும் அடுத்து கண்ணில் படுகிறார்.

“ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணாத மனோ…. கொஞ்சம் ரிலாக்ஸான பிறகு நல்லா யோசிச்சு  நடந்ததை சொன்னால் போதும்…. “ அப்பா தான்.

மெல்ல நடந்தது ஞாபகம் வருகிறது அவளுக்கு….ஆனால் மித்ரன் எப்படி வந்தான்?

அவன் மீது கோபத்தில் தான் அவன் கூப்பிட கூப்பிட அவள் விலகி லிஃப்டில் போனதே….இருந்தும் இவளை அசட்டைப் பண்ணாது மீண்டுமாக இவளைத் தேடி வந்திருக்கிறான்……

“எப்படி வந்தீங்க…? நான் கூப்பிட்டது கேட்டுதா ? “ அவனைத்தான் பார்த்து முதல் கேள்வி கேட்டாள்.

“அப்பா மகிக்கு ஒன்னும் இல்லை…அவ ஃபுல் பார்ம்ல தெளிவா இருக்கா….நாம அம்மாவ வரச் சொல்ல வேண்டாம்…இவளை கூப்பிட்டுடு இப்பவே கிளம்பிடலாம்….” இடையிட்ட அகதன் குரலில் மகிழ்ச்சியும் கிண்டலும் இருந்தது. ஆனால் ஏனோ அவன் இவள் மித்ரனிடம் பேசுவதை விரும்பவில்லையோ…? ஏன்? என்ற உணர்வு இவளுக்குள் வந்து போகிறது….

“வழக்கமா எல்லோரும் நான் எங்க இருக்கேன்? இங்க எப்படி வந்தேன்…?ன்னு கேட்பாங்கல்ல இவள் எடுத்த உடனே….நீங்க எப்படி வந்தீங்கன்னு ஆரம்பிக்றால்ல அதை சொல்றான்…. நார்மல் க்ரவ்டை விட அவ எப்பவும் கொஞ்சம் வித்யாசம யோசிப்பா அதை வச்சு இப்படி சொல்றான்….” அப்பா அகதனின் பேச்சை மித்ரனுக்கு விளக்கினார்….

நொடியில் இவளுக்குள் சிலீர் என்ற உற்சாகம் ‘அப்பாக்கு மித்ரனை பிடிச்சிருக்கு……அகதன் மித்ரனை விலக்கி நிறுத்றதை அப்பா பேட்ச் அப் செய்றாங்க..’ உயிரில் துள்ளலாய் ஒரு சந்தோஷம்…

மீண்டும் மித்ரன் முகம் நோக்கினாள். “இல்ல,  நீ கூப்டது கேட்கலை மனு…..லிஃப்ட் க்ரவ்ண்ட் ஃப்ளோர்ல நிக்கலைனதும் ஏதோ சரி இல்லைனு பட்டுது…. அதான் ஃபேஸ்மென்ட் வந்தேன்….” இவள் அவனிடம் கோபித்துக் கொண்டு போனதை அவள் வீட்டினர் முன் சொல்ல அவன் விரும்பவில்லை என்பது புரிகிறது…

“அகதா டாக்டரைப் பார்க்கனும்னு சொன்னியே வா போகலாம்…” இதற்குள் அப்பா அண்ணாவை அழைத்தார். அதாவது இவர்கள் தனியாக பேசிக் கொள்ள வேண்டும் என அப்பா நினைக்கிறார். அப்பா எப்போதும் இவளை எல்லாவற்றிலும் நம்புபவர் தான்…..இருந்தாலும் இது மித்ரன் மேல் உள்ள நம்பிக்கையையும் அல்லவா காண்பிக்கிறது? ஒரு மீட்ல நம்புறதுன்னா?  என்ன நடக்குது இங்க?

தன் அண்ணனைப் பார்த்தாள். அவன் இவளை கவனமாய் இரு என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு அப்பாவுடன் நடக்க தொடங்கினான். அப்பாவை மீறி இவள் விஷயத்தில் அவன் எப்போதுமே தலையிட மாட்டான்…. அவன் அப்படித்தான்.

மித்ரன் இப்போது இவள் அருகில் இருந்த ச்சேரில் வந்து அமர்ந்தான். இவள் எழுந்து பெட்டில் பின் வாங்கி உட்கார்ந்தாள்…

“நீ கூப்டதெல்லாம் கேட்கலை மனு…. கோபத்துல போறியே  ஏன்னு கேட்கதான் க்ரவ்ண்ட் ஃப்ளோர் வரை வந்தேன்…பட் அங்க லிஃப்ட் நிக்கலைனதும்…..” அடுத்து நடந்தவைகளை விளக்கினான் அவன்…

“நீ விழுந்து கிடந்ததைப் பார்த்தப்ப ஃப்யூ மினிட்ஸ் உயிரே போய்ட்டுது ….” சொன்ன அவன் குரலையும் முகத்தையும் கண்டு அசையாமல் இருக்க இவள் என்ன கல்லா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.