(Reading time: 22 - 43 minutes)

ரபோவது மித்ரன் விஷயம் என அவர் சொல்லாமலே இவளால் உணர முடிகிறது…. இவளிக்கும் அப்பாவிடம் மனம் விட்டு பேசிவிடுவது தான் சரி என்று படுகிறது…

“சொல்லுங்கப்பா…”

“மித்ரன் உன்னை மேரேஜ் பண்றதுக்காக அப்பாட்ட கேட்டார்மா இன்னைக்கு “ என்றார் அவர்.

ஒரு கணம் உச்சகட்ட சந்தோஷத்தில் உயிர் வெடித்தது என்றால் அடுத்த கணம்… எப்படா செய்த இந்த வம்பெல்லாம் என மனம் தன்னவனை கொஞ்சியது என்றால் கள்ளா….என்னை கவுத்த உனக்கு ரொம்ப நல்லா காய் நகர்த்த தெரியுதுடா….என அதே நொடி அவனை சிலாகித்தது என்றால் கூடவே ஒரு வித பயமும் உள்ளே வந்து உட்காருகிறது.

அப்பா சொல்லாமலே அவருக்கு இதில் சம்மதம் என புரிகிறது தான்….ஹாஸ்பிட்டல்ல அவன்ட்ட தனியா பேச பெர்மிஷன் கொடுத்துட்டு போனாரே…..ஆனால்

அவன் வீட்டில் இதற்கு சம்மதிப்பார்களா? என்ற பயம் தான் அது….. ஏன் அவன் நேரடியா அப்பாட்ட கேட்டான்? அவனோட அப்பாதான் இல்லை…அம்மா இருக்காங்க தானே அவங்களை தானே இவன் பேச சொல்லிருக்கனும்? அவங்க வீட்டு பொருளாதார உயரத்திற்கு இவளை இவள் குடும்பத்தை அவர்கள் ஏற்பார்களா?

அவன் இன்று மதியம் இவள் ஃபோன் காலை ஏற்கவில்லை என்றதும் மனதில் வந்து போன நினைவுகள் இப்போது திரும்பவும் நியாபகம் வருகின்றன அவன் சி இ ஓ…..அதோடு ஃபில்தி ரிச்….இவள் இப்பதான் என்ட்ரி லெவல் போஸ்டில் இருக்கிறாள்….அவனோடு போய் இயல்பாய் பழக நினைத்தால் எப்படியாம்? அவன் இவளை அலட்சியம் செய்யாமல் என்ன செய்வான் ? என்றெல்லாம் நினைத்தாள் தானே……. அவனோட ஒவ்வொரு  சின்ன சின்ன விஷயத்திற்கும் இவள் மனம் இப்படி தன்னை தானே வருத்திக் கொள்ளும் என்றால் இந்த திருமணம் இருவருக்குமே நரகமாகிவிடாதா?

அப்பாவிடம் அதை அப்படியே சொல்லி கேட்டாள்.

“ஒரு ஃபோன் எடுக்கலைனதுக்கே எனக்கு அவங்க திரும்ப மெசேஜ் பண்ற வரை மனசு ஆறலை….இப்படி ஒவ்வொன்னுக்கும் யோசிச்சா நிம்மதி எப்படிப்பா இருக்கும்?”

“அதுலாம் முதல்ல ஒன் ஆர் டூ இன்சிடென்ட்ஸ் அப்படி இருக்கும்….பட் அதுல அவங்க எப்படி நடந்துகிடுறாங்கன்னு வச்சு அவங்க குணம் உனக்கு புரிஞ்சிடும்….தென் தொட்டதுக்கெல்லாம் மதிக்கலைனு தோணாது…. “ அப்பா சொல்வது சரியாகத்தான் படுகிறது.

“ஆனா எப்படிப்பா இவ்ளவு ஷார்ட் பீரியட்ல…….பார்த்து 1 மாசம் கூட ஆகலை…..இவ்ளவு பெரிய முடிவெல்லாம் இப்படி எடுக்றது…..” அவளது அடுத்த பயத்தை கேட்டாள்.

“எனக்கு அதெல்லாம் தப்பா தோணலை மனோம்மா…..உங்கம்மா ப்ரோபசல் வந்து மூனு நாள்ள அவளை பொண்ணு பார்க்க போனேன்…..அன்னைக்கே சரின்னு சம்மதம் சொல்லிட்டுதான் வந்தோம்…எங்க லைஃப் நல்லா இல்லையா? கல்குலேஷன் போட்டு கல்யாண முடிவு எடுக்றதில்லை எனக்கு அவளவா உடன்பாடு கிடையாது மனோம்மா…பார்த்ததும் உள்ள தோணனும் இதுதான் நமக்கானவங்கன்னு….மித்ரன் அப்படித்தான் சொன்னார்…எனக்கு ரொம்ப நாள் பழக்கம் கிடையாது…இன்ஃபேக்ட் எனக்கு இப்போ கல்யாணம் செய்றதா தாட் கூடையாது…மனுவைப் பார்க்கவும் இப்படித்தான் இன்ஸ்டிங்க்ட்ல தோணிச்சுன்னு…”

‘வாவ்’ என்றிருந்தது மனோவுக்கு…. இவளைப் போலத்தான் அவனுமா?

ஆனாலும் அப்பாவிடம் அவனைப் பற்ரி இன்னும் கூட கேட்க வேண்டி இருப்பதால் எதையும் வெளிகாட்டாமல்….

“ஆனா அதுக்காக நீங்க பாட்டுக்கு அவர்ட்ட பேசுன்னு தனியா விட்டுட்டு போய்ட்டீங்க?” அவனைப் பற்றி நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும் அது தெரிந்தாக வேண்டும் இவளுக்கு

“நான் அந்த ரூம்குள்ள நுழையுறப்ப…” அவள் முடியை நர்ஸை கூப்பிட்டு மித்ரன் பின் செய்ய சொன்ன அந்த நிகழ்வை சொன்னவர்….நீ கான்ஷியஸ்ல இல்லாதப்ப கூட கண்ணியமா நடந்துக்ற ஒரு பேர்சன்….ஒரு நார்ஸ்தானே இவ என்ன கேட்கிறதுன்னு பார்க்காம….அந்த பொண்ணுட்ட கூட காரணம் சொல்லிகிட்டு….. அப்ப கூட அவளுக்கு பிடிக்காது என உன்னை பிராதான படுத்தி பேசுனது….. அடுத்தும் உன்ட்ட கூட கேட்காம நேர அகதன் முன்னால என்ட்ட கல்யாணத்துக்காக கேட்டது…அவரை நம்ப இவ்ளவு போதாதா “ என்றவர்….

“என் வாயால மாப்ள புகழை கேட்க ஆசையா இருக்குன்னு நீ நேரடியா கேட்டா கூட சொல்லுவேன்…அதுக்கு ஏன் இப்படி சுத்தி வளைக்கனும் “ என்று சொல்லி இவளை “அப்பா “ என சிணுங்க வைத்தார்.

“சரி அடுத்து என்ன செய்யனும்னு சொல்லு…” இப்பொழுது முடிவை இவளிடமேவிட்டார்.

அதே நேரம் அகதன் அங்கு வந்தான்.

“மகிகுட்டி” என்றபடி.

அவனுக்கு காலியில் மித்ரன் மீது எந்த வருத்தமும் இருந்தது போல் இவளுக்கு தோன்றவில்லை….ஆனால் ஹாஸ்பிட்டலில் வைத்து தெளிவாக புரிந்தது மித்ரனை அகதன் தவிர்க்கிறான் என. அதில் இவளுக்கு அத்தனை வலி..

இவளுடையவனுக்கும் இவள் அண்ணனுக்கும் இடையில் உள்ள உறவு நிலை இவளுக்கு எவ்வளவு முக்கியம்? அது சரி இல்லை எனில் இவளால் சந்தோஷமாக எப்போதாவது இருக்க முடியுமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.