(Reading time: 22 - 43 minutes)

ம்…இட்’ஸ் ஓகே…. நான் அப்பாவ வர சொல்லட்டுமா….? ரொம்ப நேரம் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…”

ஒரு கணம் அவளைப் பார்த்தவன் “ஷ்யூர்” என்றபடி இவளது மொபைலை எடுத்து நீட்டினான்.

வேற எதுவும் இவளிடம் சொல்ல நினைத்திருப்பானோ?  என்றது இவள் மனது.

ன்று இரவு தன் வீட்டு மொட்டை மாடியில் சேர் போட்டு அமர்ந்து இரு கால்களையும் நீட்டி கைப்பிடி சுவரின் மீது வைத்து காற்று வாங்கிக் கொண்டிருந்தாள் மனோஹரி. காற்று குழல் கலைக்க முகமெங்கும் முடி நர்த்தனம். கையால் அதை தள்ளிவிட்டாள்.

மனதில் இன்று ஹாஸ்பிடலில் வைத்து இவளுக்கு சுய நினைவு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், ஏதோ கனவு போல வந்த அந்த நிகழ்வு ஞாபகம் வருகிறது…

இவள் முடியை நர்ஸை கூப்பிட்டு பின் செய்ய சொன்ன மித்ரன் நடத்தை….பின்பு தன் உச்சி முடியில் குத்தி நின்ற ஹேர்பின்னை வீடு வந்த பின் இவள் பார்த்ததும், கண்டது கனவு அல்ல நிஜம் என்றும் புரிந்திருக்கிறது….

மனதிற்குள் ஒருவித சுக பெருமிதம்….

 “ஏன் மனு?...நான்னா ஏன்?”  அகதன் அந்த பாட்டிக்கு ஹெல்ப் பண்ண விஷயத்தை வைத்து, மித்ரனை இவள் மோசமாக நினைக்க காரணமான செயலுக்கும் பின்னால் நல்ல காரணம் இருக்கும் என இவள் நினைத்ததாக கூறியதற்கு, அவன் காரணம் கேட்ட அந்த கேள்வியும், அப்போதைய அவன் குரலும், கண்களின் பாவமும் இப்போது ஞாபகம் வந்து இவளுக்குள் …. இவள் பெண்மைக்குள் அலை  செய்கிறது….

“ஏன்னா அன்னைக்கு ட்ரெய்னிங்க்ல உன்னைப் பார்த்தப்பதான் தெளிவா ரியலைஸ் பண்ணேன் இவன் எனக்கான என்னவன்னு ….என மனசுக்கு நீ செய்த எதுவும் சரியா படலை, பிடிக்கலைனாலும் கூட உள்ளுணர்வில்  ஒரு அழுத்தமான இன்ஸ்டிங்க்ட்….

அன்று மித்ரன் இவள் பக்கத்தில் வந்து டேட்டிங் அது என பேசிய போது, இவள் மனதிற்குள் சுள் என கோபம் ஏறினாலும்…. உள்ளே ஆவியில் அவன் அருகாமையில் ஏதோ அவனும் அவளும் ஒரே நபர் போல் ஒரு ஒருமை உணர்வு….. எதோ அவனை இவள் மீது உரிமை எடுக்க இவளே இவளை மீறி அனுமதிப்பது போல் ஒரு நிலை….. அவளது உள் மன அறைக்குள் அவனை எளிதாய் கதவு திறந்து விட்டது இவள் உள்நெஞ்சம்.

 முதல் முறையாக இப்படி ஒரு அனுபவம் அதுவும் அவள் முழு மனதிற்கும் தவறானவன் என சந்தேகமின்றி தெரிந்தவனோடு…..அவளுக்கு அதை புரிந்து கொள்ளவும் முடியவில்லை…அனுமதிக்கவும் பிடிக்கவில்லை…அதனால் தான் அடுத்து அவனிடம் அவளது டிஃபென்ஸிவ் அப்ரோச்…. ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிடலாமா என அவளுக்கு தோன்றக் காரணமும் கூட அதேதான்….தன்னையும் மீறி அவனை விரும்பிவிடுவோமோ என்ற பயம்…. முழு மூச்சில் அவனை தவிர்க்க போராடினாள்.

இவள் வேலையை விடப் போவதை பத்தி மித்ரன் என்ன நினைக்கிறான் என தெரிந்து கொள்ள நினைத்ததும், நீ இருந்தா இரு போனா போ என அவன் அசட்டை செய்யாமல், நீ கண்டிப்பா ஆஃபீஸ் வா என அவன் உணர்ந்து சொல்லிவிட்டு போனதில் அகமகிழ்ந்ததும் அதே அவனால் தான்…. அவள் அவனுக்கு முக்கியமானவளாக படுகிறாள் என்ற உள்மனதின் ஆனந்தம்  அது… ஆனால் அப்போது எதற்கு இவன் விஷயத்தில் இப்படி நடந்து கொள்கிறோம் என யோசிப்பதை கூட அவள் நிறுத்தி இருந்தாள். எங்கோ நான் அவனை விரும்புறேன்னு என் மனமே சொல்லிட்டுன்னா? என்ற பயம்….

அகதன் இவளுக்கு திரவியா அண்ணனுடன் திருமண சம்பந்தம் பற்றி சொன்ன போது இவளுக்கு சுள்ளென கோபம் வந்ததே அதைப் பற்றி யோசித்தால் அதற்கு காரணம் கூட ஆவிக்குள் ஆடிக் கொண்டிருந்த இந்த இவன் தான்….. அதையும் அவள் அப்போது யோசிக்கவில்லைதான்….

அவனது இவளுக்குள்ளான எல்லை விரிந்து கொண்டு போக….அதன் விளைவாகத்தான் அவன் செயலுக்குப் பின் நல்ல காரணம் எதுவும் இருக்குமோ என்ற ஒரு எண்ணம்….அடுத்து தான் பூனம் நிகழ்ச்சி….யோசித்ததில் அவன் போலீஸ் என புரிந்து போனதுதான்….

அதன் பின்னும், அவள் முதலில் அவனை புரிந்து கொண்ட மாதிரி பொறுக்கி இல்லை என்பதை ஒத்துக் கொள்ள தயாராக இருந்தாலும்….அவள் அடி மனதிற்குள் அவன் பற்றி பாய்ந்து கொண்டிருக்கும் எண்ணத்தைப் பற்றி யோசிக்க கூட தைரியம் வரவில்லை….  

ஸ்காலர்ஷிப் விஷயத்திலும்…. க்யூவைத்தாண்டி இவளுக்கு அவன் கொடுத்ததில் உடன்பாடு இல்லை என்றாலும்…. இப்படி இவளுக்கு பிடித்தது கிடைத்தால் அது வந்த வழி நியாயமில்லாமல் இருந்தால் கூட இவள் ஏற்றுக் கொள்வாள் என அவன் நினைக்கிறான் என்ற புரிதல் கடும் கோபம் தந்தாலும்….…..அவளை ஃப்ரான்ஸ் போன்னு அவனே அனுப்பி வைக்கிறானே என்பதுதான்….உள்ளுக்குள் அதிகமாக வலித்துவிட்டது அவளுக்கு….

இதெல்லாம் இப்பொழுது யோசிக்கும் போதுதான் புரிகிறது….. இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்?

தே நேரம் “காத்து நல்லா இருக்குல்ல…..” என்றபடி  அப்பா கையில் ஒரு நாற்காலியோடு வருகிறார்….

இவள் அருகில் நாற்காலி போட்டு அமர்ந்தவர் “இப்ப எப்படி இருக்க மனோ…? உன்ட்ட கொஞ்சம் பேசனும்…பேசலாமா?” என்றார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.