(Reading time: 22 - 43 minutes)

விடுங்க…..இப்ப என்ன? எல்லாம்தான் சரி ஆகிட்டே….நான் நல்லாத்தான் இருக்கேன்…”

இப்பொழுது இவள் கண்களை ஆழமாய்ப் பார்த்தான்.

“எல்லாம் சரி ஆகிட்டுன்னு உனக்கு தோணுதா மனு?”

அவன் எதைக் கேட்கிறான் என அறிவுக்கு புரியவில்லை…ஆனால் அவனிடம் இருக்கும் தவிப்பு மனதுக்கு புரிகிறது…

“நீ இனி ஆஃபீஸ் வருவியா?”

‘ஓ இதுக்குதான் இவ்ளவு டென்ஷனா சாருக்கு’ நினைவே சிரிப்பை தருகிறது அவளுக்கு… “ஆஃபீஸ்க்கு வராம போற அளவுக்கு இப்ப என்ன ஆயிட்டு?..அதெல்லாம் வருவேன்…..அங்க இருக்ற எல்லா பொண்னுங்களுக்கும் உள்ள ப்ராப்ளம் தானே எனக்கும்….அதோட எனக்குத்தான் ஸ்பெஷல் ப்ரொடெக்க்ஷன் ஃபோர்ஸ் மிஸ்ட்டர் மித்ரன் ஐபிஎஸ்ஸா இல்லை ரா வா உங்க டிபார்ட்மென்ட் எனக்கு தெரியலை…பட் இருக்கீங்களே”

அவன் கண்களில் மின்னல்.

“வாவ்…மனு நீ ஷார்ப்னு தெரியும்…பட் இது ரொம்பவே அதிகம்….நான் ட்யூட்டில இருக்றப்ப எப்பவாவது பார்த்தியா என்ன?”

“எக்ஸாக்ட்லி…… நீங்க எவ்ளவு கரெக்டா ரீசனவ்ட் பண்றீங்க…  எஸ் பார்த்தேன்… “ அவனை முதன் முதலில் பார்த்த அந்த நிகழ்வை சொன்னாள்.

“ஓ…அதான் ஆஃபீஸ்ல என்னைப் பார்த்ததும் இவ்ளவு டென்ஷனானியா ஃபர்ஸ்ட் டே….?நோ ஒன்டர்…. பட் எனக்கு அந்த நைட் கண்ணுல மண்ணைப் போட்டது நீன்னு தெரியலை… “

“அதையும் கெஸ் பண்ணேன்…..இல்லைனா உங்க கார்ல ஏற பிஸ்டல் தர்றதுக்கு முன்னால உங்க ஐடி கார்ட காமிச்சிறுப்பீங்க…”

“ஸ்மார்ட்…..தென் எப்படி இவன் கிரிமினல் இல்ல போலீஸ்னு கண்டு பிடிச்ச…?”

“அதான் அந்த கிருபாகரன் பூனம் விஷயத்துல உங்க அப்ரோச் அப்படியே காமிச்சுதே நீங்க அக்மார்க் போலீஸ்னு….பூனத்தை அவன் கூட அனுப்பிட்டு பின்னால ஃபாலோ பண்ணீங்களே…அவன் கிரிமினல் தானா இல்லையான்னு கண்டு பிடிக்கதானே…. பட் இது மட்டும் ரீசன் இல்லை….” என்றவள்

அகதனை அந்த வயதான பெண்மணியோடு பார்த்த அந்த நிகழ்வை சொல்லி…. “வெளிய இருந்து பார்க்கிறப்ப தப்பா தெரிஞ்ச விஷயம் உள்ளே போய் பேசிய பிறகு பார்த்தா ரொம்ப ரொம்ப நல்லதா தெரிஞ்சுது….அன்னைக்கு நைட் அதைப் பத்தி யோசிக்றப்ப தான் உங்க சைடும் அது மாதிரி ரீசன் இருக்குமோன்னு தோணிச்சு….”

“ஏன்?” நிச்சயமாய் முழு ஆச்சர்யம் இருந்தது இவன் குரலில். “உன் அண்ணா நல்லவங்களா இருந்தா எல்லோரும் கண்டிப்பா நல்லவங்களா இருப்பாங்கன்னு எப்படி யோசிச்ச?”

“எல்லாரும் இல்ல….நீங்க….. ” வேகமாக சொல்ல தொடங்கியவள் அதற்கடுத்து பேச முடியாமல் நிறுத்திவிட்டாள். கண்கள் அதுவாக தரை நோக்க

“ஏன் மனு?...நான்னா ஏன்?” அவன் குரலில் ஒரு வித சீண்டல் வந்திருந்தது….கூடவே ஆசையும்…

என்னவென்று இதற்கு பதில் சொல்வாள்? வாயை குடுத்து வகையா மாட்டியாச்சோ?

“சொல்ல பிடிக்கலைனா வேண்டாம்…” அவன் தான்.

“சே சே பிடிக்கலைனு இல்லை…ஆனாலும் வேண்டாம்…”

வாய்விட்டு சிரித்தான் அவன். “எங்க இரக்கப்பட்டு சொல்லப் போறியோன்னு ஒரு செகண்ட் நினச்சு ஏமாந்துட்டேன்…….ஆனாலும் அலர்ட் பார்ட்டி நீ”

 அவன் சிரிப்பதை விழியில் வாங்கி மனதில் சேமித்தாள். அவளது ‘வேண்டாம்’மை அப்படியே ஏற்றுக் கொள்ளும் அந்த அவனது பாங்கும் பிடிக்கிறது.

“சரி அதை விடு….. என்னைப் பத்தி ஏன் உங்க வீட்ல டெபுடி சி இ ஓ னு….இன்ட்ரோ கொடுத்த? அதான் என்னைப் பத்தி தெரிஞ்சிருக்கே உனக்கு?”

“இல்ல… ஆஃபீஸ்ல யாருக்குமே உங்க ரோல் என்னனு தெரியலை….சி இ ஓ தம்பின்னு சொல்றாங்க …சிலர் டெ பு டி சி ஓ ன்னும்…….கண்டிப்பா போலீஸா இருந்துகிட்டு …கம்பெனில எந்த ரோல்லயும் இருக்க முடியாது …நம்ம லீகல் சிஸ்டம் அலவ் பண்ணாதுன்னு தெரியும்…..எதோ ஒரு கேர்ள் மிஸ்ஸிங்னு வேற சொன்னீங்க….அப்படின்னா ஏதோ கேஸ் விஷயமா வந்திருக்கீங்கன்னு பட்டுது….அதே சமயம் உங்கள போலீஸா நீங்க பயோசில காமிச்சுகலை….அதோட அந்த கேர்ள் காணம போன விஷயமும் ஆஃபீஸ்ல தெரிஞ்ச மாதிரியே இல்லை….அப்படின்னா மறைக்க எதாவது வேலிடா உங்க பக்கம் ரீசன் இருக்கும்….அதை ஏன் நான் டிஸ்க்ளோஸ் செய்யனும்னு விட்டுட்டேன்….”

அவளைப் பார்த்திருந்த அவனது பார்வையில் அத்தனை ரசனையும் மெச்சுதலும்….

இவளுள்ளே சிணுங்கியது பெண்மை…. இப்டில்லாம் பார்த்தா நான் என்ன செய்றதாம்?

பயோஸி மொத்தமா என் அண்ணாவோடது….என் ஃப்ரொஃபஷன் இதுதான்….நான் ஐ பி ஸ் ஆஃபீஸர் தான்… பட் க்ரைம் ப்ரான்ச் ஸ்பெஷல் ஆஃபீஸர்….கொஞ்சம் ஜாப் ப்ரஃபைல் வேரி ஆகும்….மத்தபடி எல்லாம் ஒன்னுதான். இப்பொழுது அவன் சற்று சீரியஸ் தொனியில் கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது புரிகிறது அவளுக்கு.

“என்ட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு இல்லை மித்ரன்…புரியுது…”

“தேங்க்ஸ் மனு…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.