(Reading time: 22 - 43 minutes)

கதனுக்கு மித்ரன் மேல் என்ன ப்ரச்சனையாக இருக்க முடியும்? ஏதாவது மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்காக இருக்கும். பேசினால் அண்ணா புரிந்து கொள்வான். ஆனால் அண்ணாவின் முழு சம்மதம் கிடைக்கும் வரைக்கும் இவள் இந்த கல்யாணத்தில் நுழையப் போவது இல்லை….

“அகி…” ரொம்பவும் உணர்ச்சி வசப்படும் போது அவளது அம்மாவும் இவளும் அகதனை இப்படி கூப்பிடுவது வழக்கம்.

“உனக்கு அவங்கள பிடிக்கலைனாலாம் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன் அகி…. மித்ரன் இன்னும் என்ட்ட கேட்க கூட இல்லை தெரியுமா….நான் அவங்கட்ட சரின்னு சொன்ன மாதிரி நீ நினைக்காதே…” என்ரு தன் மனதை விளக்கினாள் தன் அண்ணனுக்கு……கூடவே மித்ரனின் தவிப்பான முகம் மனதிற்குள் வந்து போவது அடுத்த விஷயம்….நெஞ்சுக்குள் நில அதிர்வு

“சே…அறிவு….என்ன நீ இப்படி நினச்சுட்ட…” அகதன் தான்.

அந்த ஒரு கேள்வியில் உயிர் திரும்ப வந்த போதுதான் அதுவரை தான் எத்தனை மன அழுத்தத்தில் இருந்திருக்கிறோம் என்பதே அவளுக்கு புரிகிறது.

“ மித்ரனை எனக்கு தனிப்பட்ட வகையில ரொம்ப பிடிச்சிருக்குதுன்னா….உன் விஷயத்தில அவர எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குது……ஆனா விஷயம் அது இல்ல மகிகுட்டி…..வெறுமனை மனசுக்கு பிடிச்சிறுக்குன்ற காரணத்துக்காக எடுக்ற கல்யாண முடிவை விட ஸ்பிரிட்ல எடுக்ற முடிவுதான் சரி….இன்ஸ்டிங்க்ட் இஸ் ஃப்ரெம் த ஸ்பிரிட்னு தான் சொல்வாங்க…அதனால எனக்கு இதெல்லாம்  தப்பா தெரியலை….ஆனா மத்த விஷயத்துல எப்படியோ கல்யாண விஷயத்துல நம்ம மனசுக்கு அந்த நேரத்துல வர்ற ஒரு எமோஷன்….ஹார்மோனல் ரஷ்ஷை கூட நாம இன்ஸ்டிங்க்ட்னு குழப்பிக்க வழி இருக்கு…அதுக்கு அந்த வயசு….ஹார்மோன் இப்படி  நிறைய ரீசன் இருக்கும்…..அதான் இப்படி எடுத்தேன் கவுத்தேன்னு முடிவு பண்ணாம….கொஞ்சம் வெயிட் பண்ணி…ப்ரேயர் பண்ணி டிசைட் பண்ணுநு சொல்ல வந்தேன்….அதைத்தான் அப்பவே ஹாஸ்பிட்டல்ல வச்சும் சொல்ல ட்ரைப் பண்ணேன்……அதுக்குள்ள நீ மித்ரன்ட்ட அங்க ஹாஸ்பிட்டல்ல வச்சே சரின்னு சொல்லிடக் கூடாதேன்னு எனக்கு தோணிச்சு….”

“அகி செல்லம்…நீ படு ஸ்மார்ட்….இன்டெலிஜன்ட்….குட் பாய்…. மகி லவ்ஸ் யூ….” அவன் இரு கன்னத்தையும்  பிடித்து பிய்த்தெடுத்தவள் “சரி தியாக்காக உன்னை விடுறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினாள்.

ஜெர்க் வாங்கினான் அகதன். அருகில் அப்பா இருக்கிறாரே…..

“தியான்னா யாரு…….அவ ஃப்ரெண்ட் திரவியாவா ?” என்றார் அப்பா அடுத்த நொடி….

ஓடியவளை ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிட்டு  பேசத் தொடங்கினான் அகதன்.

மாடியிலிருந்து கீழே இறங்கினால்….. எதிரில் படிக்கட்டில் மேலே ஏறி வந்து கொண்டிருக்கிறார். அம்மா கையில் பாயாச பாத்திரமும் ஸ்பூனும்… அம்மாவிடம் பேசாமல் அப்பா இவளிடம் பேச வந்திருக்க மாட்டார் என தெரியும் தான்…. தாவி அவர் கழுத்தை கட்டினாள் மகள்.

“அம்மா…ஐ லவ் யூ….ஐ லவ் யூவர் ஆத்துகாரர்….ஐ லவ் யுவர் அட்வைஸ் நல்ல முத்து….ஐ லவ் மீ…..ஹான் முக்கியமா ஐ லை யுவர் மாப்பிள்ள….” அம்மாவின் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் வைத்து……அவர் கையிலிருந்த பாயாச பாத்திரத்தில் அம்மா கையிலிருந்த ஸ்பூனைப் பிடுங்கி  பாயாசம் எடுத்து அம்மா வாயிலேயே விட்டு….சந்தோஷத்தில் இவளுக்கு கண் கட்டுகிறது என்றால் அம்மா முகத்தில் அத்தனை பூரிப்பும்…..அதோடு சேர்ந்த துளி விழி நீரும்….

“இத்தனை வருஷத்துல உன்னை நான் இவ்ளவு சந்தோஷமா பார்த்தது இல்லை மகி குட்டி…இப்ப மாதிரி எப்பவும் நீ சந்தோஷமா இருக்கனும் மகிமா…..”

‘ஆமாம் உண்மைதான்….இதுவரை இப்படி சந்தோஷத்தை அவள் உணர்ந்தது இல்லைதான்….’ ‘எல்லாம் உங்க மாப்ள செய்ற வேலை…’ மனதுக்குள் நினைத்துக் கொண்டவள்…

அம்மாவின் கன்னத்தில் அடுத்த முத்தத்தை இறக்கினாள்.

“மேல போய் அகிக்கும் அப்பாக்கும் குடுங்க……உங்க மருமகள் டாக் நடக்குது போய் ஜாய்ன் கரோ”

அம்மா முகத்தில் இருந்த மகிழ்ச்சியோடு இன்னுமாய் ஆட் ஆகிறது அத்தனை ஆச்சர்யம்…..இவள் துள்ளியபடி கீழே இறங்க தொடங்க…”அது சரி……நீ என்ன செய்யப் போற?”

திரும்பி அம்மாவைப் பார்த்தவள் சொன்னாள் “அண்ணா வெயிட் செய்ய சொல்லிருக்கான்மா…சோ….வெயிட் பண்ணப் போறேன்… “

ஆம் அந்த முடிவில் தான் மனோஹரி இருந்தாள். என்னதான் மனதிற்குள் சரி என்ற முடிவு வந்திருந்தாலும்….அதை அவள் மித்ரனிடம் உடனே சொல்வதாய் இல்லை. கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லி  மித்ரனிடம் சொல்ல வேண்டும் என்றும் நினைத்தாள்.

மறுநாள் நிச்சயம் மித்திரன் இவளிடம் திருமணம் பற்றிப் பேசுவான் என்றும் எதிர்பார்த்தாள். ஹாஸ்பிட்டல்ல வச்சு அவன் சொல்ல வந்ததை இவள்தான் அறியமல் பாதியில் நிறுத்தியவள். 

ஆனால் மறுநாள் மித்திரன் இவளிடம் திருமணம் குறித்து பேசுவதற்கு பதிலாக தன் லாயரிடம்…. விவாகரத்தை குறித்து பேசுவதை இவள் கேட்க நேரிட்டது.

Episode # 04

Episode # 06

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.