(Reading time: 27 - 53 minutes)

"தில்ல பிருத்வி... நம்ம வீட்டில் இருந்து இந்த கோவிலுக்கு வர கொஞ்சம் டைம் ஆகுமில்ல... சின்ன வயசுல வந்தது ஞாபகம் இருக்கு..."

"ஆமாம் நம்ம வீடு கோவிலில் இருந்து கொஞ்சம் தூரம்... ஆனா பிரணதியோட கம்ப்யூட்டர் கிளாஸ் கோவிலுக்கு பக்கத்திலேயே இருக்கு..."

"எது எப்படியோ பிருத்வி... நானே இந்த கோவிலுக்கு போகனும்ன்னு கவிக்கிட்ட சொல்லிகிட்டு இருந்தேன்... நியூயார்க்ல இருக்கும் போது கூட வடபழனி முருகன் கிட்ட தான் வேண்டிப்பேன்... இப்பவும் எனக்கு முருகன் கிட்ட ஒரு விஷயமா வேண்டிக்கனும்..."

"யுக்தா... அம்மாக்கிட்டேயோ... பிரணதிக்கிட்டயோ சொல்லியிருந்தா கூட்டிட்டு போயிருப்பாங்களே.... யுக்தா எல்லோருக்கும் வந்த சந்தேகம் எனக்கும் வந்துடுச்சு... நீ நிஜமாவே நியூயார்க்ல இருந்து தான் வந்தியா...?? இல்லை ஏதாவது சாமியார் மடத்துல இருந்து வந்தியா...?? ரொம்ப பக்தி பழமா இருக்க... என்று கேட்டுவிட்டு சிரித்தான்... அவளும் முறைத்தாள்..

"முறைக்காதே... உன்னோட ஞாபக சக்திக்கு அளவில்லாம போச்சு... உன்னோட ஞாபகத்துல வடபழனி முருகனைக் கூட விட்டு வைக்கலியே... அதான் அப்படி சொன்னேன்..."

"என்ன பிருத்வி கிண்டல் பண்றீங்க... சின்ன வயசுல எக்ஸாம்க்கு முன்னாடி இங்க வந்து தானே வேண்டிப்பேன்... என்னமோ தெரியல முருகன்கிட்ட வேண்டிக்கிட்டா நடக்கும்ன்னு ஒரு நம்பிக்கை..."

"ஸாரி யுக்தா... நான் சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன்... ஆமாம் முருகன் கிட்ட அப்படி என்ன வேண்டுதல்..."

"இல்லை பிருத்வி... வேண்டுதலை வெளிய சொல்லக் கூடாது... அப்புறம் அது நடக்காது..."

"சரி நீ வெளிய சொல்ல வேணாம்... உன்னோட வேண்டுதல் நிறைவேறனும்ன்னு நானும் வேண்டிக்கிறேன்..."

பிருத்வி அப்படி சொன்னதும்... யுக்தாவிற்கு மிகவும் சந்தோஷம் ஏனென்றால் அவள் முருகனிடம் வேண்டிக் கொள்ள வந்ததே... பிருத்வியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று தான்... இருவரும் கோவிலுக்குள் சென்றனர்.

அதுவரை பக்தர்களுக்கு சிரிப்போடு காட்சி கொடுத்துக் கொண்டிருந்த முருகனோ இவர்களை பார்த்ததும் ஸ்டன் ஆயிட்டாரு... தன்னோட பக்தை எந்த வேண்டுதலோடு வந்திருக்கிறாள் என்பது அவருக்கு தெரியும்... யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன்னிடம் வேண்டிக் கொள்ள வந்திருக்கிறாளோ அவனையே கூட அழைத்து வந்திருக்கிறாளே என்ற ஆச்சர்யம் தான்... ஆனால் அந்த நாடகத்தை நடத்துபவரே அவர் தானே...

இருவரும் அவர் முன் மனமுருகி வேண்டினர்... என் விருப்பப்படி பிருத்வியையே மணக்க வேண்டும் என்று யுக்தாவும்... யுக்தா என்ன வேண்டிக் கொள்கிறாள் என்று தெரியாமல் அவளின் வேண்டுதலை நிறைவேற்று என்று பிருத்வியும் வேண்டிக்கொண்டனர்...

இந்த ஜோடியை முருகனுக்கே பிடித்து விட்டது... யுக்தாவின் விருப்பப்படியே பிருத்வியுடன் திருமணம் நடக்க வேண்டும் என்று வரம் அளித்து விட்டார்... அதுவும் இந்த சன்னிதானத்திலேயே திருமணம் நடக்கப் போகிறது என்று கூட அவர் முடிவெடுத்து விட்டார்...

ஆனால் அவர் அந்த ஆளாளப்பட்ட ஈசனுக்கே பிள்ளையல்லவா... தன் தந்தையைப் போல தன்னோட பக்தையை சோதிக்க முடிவெடுத்துவிட்டார்...யுக்தாவின் காதலை கொஞ்சம் சோதித்து பார்க்க நினைத்தார்... இது தெரியாத அவர்கள் இருவரும் முருகனிடம் அவர்கள் வேண்டுதலை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

இவர்கள் திருமணத்திற்கு முன்னமே முருகனிடம் ஜோடியாக வரம் வாங்கி கொண்டு போனது தெரியாமல் திருமணத்தன்று இவர்கள் முருகனிடம் ஆசி வாங்கவில்லையே என்று சாவித்திரியும் சுஜாதாவும் வேறு அவர்களுக்காக வேண்டிக் கொண்டனர்... எத்தனை பேர் வேண்டுதல் வைத்தாலும்... அவர் முடிவை அவர் மாற்றி கொள்ள போவதில்லை... சில சோதனைகளுக்குப் பிறகு தான் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கப் போகிறது...

பிறகு பிரணதி வந்ததும் மூவரும் சினிமா தியேட்டர் சென்றார்கள்... அங்கேயும் பிரணதி தொல்லையில்லாமல் சினிமா பார்க்க... கார்னர் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.. யுக்தாவும் பிருத்வியும் அருகருகே உட்கார்ந்து படம் பார்க்க வேண்டியதாயிற்று... இப்படி அன்றைய நாள் அவளுக்கு ஆனந்தமாக கழிந்தது.

றுநாள் பிருத்வி ஆஃபிஸில் இருந்து செந்திலுக்கு ஃபோன் செய்தான்... அவர் ஃபோனை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்... கட்டிடம் கட்டுவதற்கான பிளானில் ஏதோ தவறு ஏற்பட்டதால் கான்ட்ராக்ட் கேன்சல் ஆகும்படியான சூழ்நிலை உள்ளதால் தந்தையின் உதவியை நாடி பிருத்வி ஃபோன் செய்ததாகவும்... அவன் மிகவும் டென்ஷனாக உள்ளதாகவும்... மதி அத்தை கூறியதும்...

பிருத்விக்கு தன்னால் ஏதாவது உதவி செய்ய முடியும் என்று யுக்தா அவன் அலுவலகத்திற்கு சென்றாள்...  அலுவலகத்தில் அவன் அறையில் நுழையும் போதே... பிருத்வி யாரையோ கோபமாக திட்டிக் கொண்டிருந்தான்... சிறுவயதிலேயே பிருத்விக்கு கோபம் வரும்... ஆனால் இந்த அளவுக்கு கோபம் வருமா... என்று வியந்தாள் யுக்தா... வெளியிலியே சிறிது நேரம் நின்றிருந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.