(Reading time: 27 - 53 minutes)

த்து நிமிடத்திற்கு பிறகு அவனுக்கு கோபம் தணிந்து... அவனிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தவன் வெளியே வந்தப் பிறகு தான் யுக்தா அவன் அறைக்குள் நுழைந்தாள்...

"யுக்தா நீயா...?? என்ன ஆஃபிஸ்க்கு வந்திருக்க..."

"மாமா வீட்ல இல்ல பிருத்வி... அத்தை உங்களுக்கு ஏதோ டென்ஷன்னு சொன்னாங்க... அதான் நான் ஏதாவது ஹெல்ப் பண்ணலாமான்னு வந்தேன்..."

"ஆமா யுக்தா... ஒரே சமயத்துல ரெண்டு பில்டிங் கான்ட்ராக்ட் கிடைச்சுது... அதுக்கு பிளான் போட்டு அவங்களுக்கு அது சேட்டிஸ்பேக்‌ஷன் ஆகனும்... ஒரு கான்ட்ராக்ட்டை நானே பார்த்துக்கிட்டேன்... இன்னொன்னை இங்க ஒரு ஸ்டாஃப் கிட்ட குடுத்திருந்தேன்... அவன் அந்த பில்டிங் பிளான்ல நிறைய மிஸ்டேக் பண்ணியிருக்கான்...

அதனால அந்த கான்ட்ராக்ட் கைவிட்டு போற மாதிரி ஆயிடுச்சு... நான் தான் எக்ஸ்கியூஸ் கேட்டு இன்னிக்கே வேற பிளான் போட்டு காமிக்கிறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்... ஆனா இருக்க டென்ஷன்ல எனக்கு எந்த ஐடியாவும் வரமாட்டேங்குது... அதான் அப்பாவை கூப்பிட்டேன்..."

"பிருத்வி இப்போ திட்டிகிட்டு இருந்தவர் தான் மிஸ்டேக் பண்ணவரா..??"

"நீ அப்பவே வந்துட்டியா... நான் அவன் எல்லாம் கரெக்டா செய்வான்னு நம்பி இந்த வொர்க்கை குடுத்தேன்... ஆனா அவன் சொதப்பிட்டான்... இந்த கான்ட்ராக்ட் கிடைக்கிறதுக்கு எவ்வளவு போட்டி தெரியுமா..."

"சரி பிருத்வி... நீங்க அந்த பில்டிங் பத்தி சொல்லுங்க... நான் பிளான் டிசைன் பண்ணி தரேன்..."

"தேங்ஸ் யுக்தா... எனக்கு ஹெல்ப்க்கு வந்ததுக்கு..."

"இருக்கட்டும் பிருத்வி தேங்ஸ்ல்லாம் எதுக்கு... சரி நம்ம வேலையை ஆரம்பிப்போமா..."

அவன் அந்த கான்ட்ராக்ட் டீடெய்ல்ஸ் சொல்ல சொல்ல அவள் அந்த பிளானை வரைந்துக் கொடுத்தாள்...

"யுக்தா இந்த பிளான் சூப்பரா இருக்கும்... இது கண்டிப்பா அவங்களுக்கு பிடிக்கும்.... அடுத்த கான்ட்ராக்ட்டையும் நமக்கே கொடுப்பாங்க... ரொம்ப தேங்ஸ் யுக்தா..."

"என்ன பிருத்வி எதுக்கு தேங்ஸ்ல்லாம்... எனக்கும் இது ஒரு எக்ஸ்பீரியன்ஸ் மாதிரி தானே.."

"யுக்தா பேசாம நீ இந்த ஆஃபிஸ்லயே ஜாயின் பண்ணிடேன்..." என்றதும் அவள் ஆச்சர்யத்தோடு பார்த்தாள்... அவள் பார்வைக்கு வேறு அர்த்தம் புரிந்துக் கொண்ட அவன்...

"ஸாரி யுக்தா... உனக்கு பெரிய பெரிய கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியிலேயே வேலை கிடைக்கும்... இது சின்ன கம்பெனி இங்க உன்னை வொர்க் பண்ண சொல்லிட்டேன்..."

பிருத்வி கூட வொர்க் பண்றதா... இது எனக்கு எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்... அம்மா இந்த படிப்பை படின்னு ஐடியா கொடுத்தப்ப அவளுக்கு தெரியல... ஆனால் அவளுக்கும் அதில் ஆர்வம் இருக்கவே தான் இந்த படிப்பை படிச்சா... பிற்காலத்துல பிருத்விக்கு இது மூலமா ஹெல்ப் பண்ண முடியும்ன்னு அவளும் அதன்பிறகு தான் நினைத்தாள்... ஆனால் பிருத்வி வாயால் இவ்வளவு சீக்கிரம் இதைக் கேட்பாள் என்று நினைக்கவில்லை... யுக்தா நிதானாமா இரு... என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவனோடு பேச ஆரம்பித்தாள்...

"பிருத்வி நான் அப்படியெல்லாம் நினைக்கல... இன்னும் கேட்டா இன்னும் நான் வொர்க் பண்றதா இல்லை மேலே படிக்கிறதான்னு டிசைட் பண்ணல...

கவிக்கு ட்ரெயினிங் முடிஞ்சதும்... அவ இங்க இருப்பாளா இல்லை பெங்களூர் போவாளான்னு தெரியலை... அதுக்காகத் தான் நான் வெய்ட் பண்றேன்... ஒருவேளை நான் இங்க இருக்க மாதிரி இருந்தா இங்க வொர்க் பண்றத பத்தி யோசிக்கிறேன்..."

"தேங்ஸ் யுக்தா... நீ இதை சொன்னதே போதும்..." இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே செந்தில் அங்கு வந்தார்... வந்தவர் பிருத்வியை திட்ட ஆரம்பித்துவிட்டார்.. வரும் முன்னரே விஷயங்களை தெரிந்துக் கொண்டு தான் அவன் அறைக்கு வந்தார்...

"பிருத்வி நம்ம ஸ்டாஃப் தப்பே பண்ணியிருந்தாலும் இப்படி தான் திட்டுவியா... இவ்வளவு நாள் வேலையை கரெக்டா செஞ்சவன் இப்போ தப்பு பண்ணியிருக்கானேன்னு யோசிக்க மாட்டியா..."

"அப்பா நான் எவ்வளவு நம்பி அவன்கிட்ட வேலையை கொடுத்தேன்... அதை சொதப்புனா... அதான் எனக்கு கோபம் வந்துச்சு..."

"பிருத்வி... அவன் மிஸ்டேக் செஞ்சது தப்பு தான்... அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல... அதான் அவன் ஏதோ தப்பு பண்ணிட்டான்... அதுக்கு நீ எப்படி திட்டியிருக்க... அவனை அப்படி திட்ட உனக்கு என்ன உரிமையிருக்கு.... இங்கப்பாரு நீ இப்படி கோபப்படறது நல்லா இல்ல..."

"அப்பா என்னை என்னப் பண்ண சொல்றீங்க... எனக்கு நம்பிக்கையானவங்களும் பிடிச்சவங்களும் தப்பு பண்ணா.... எனக்கு கோபம் வருது... நான் என்னப் பண்ணட்டும்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.