“நீங்க மேலும் மேலும் பேசி எனக்கு எரிச்சலை கிளப்பாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் நம்பப் போறதில்லை. திடீர்னு உங்களுக்கு ஞானோதயம் வந்துடுச்சுன்னு சொன்னா நம்பறதுக்கு நான் முட்டாள் இல்லை. இனி என் வாழ்க்கையில் உங்க குடும்பத்தாருக்கு இடம் இல்லை. நீங்க போகலாம்.”
“ப்ளீஸ் ருத்ரா. நீங்க இல்லைன்னா என் தங்கையோட வாழ்வு? அவ வேறு ஒரு வாழ்க்கையைப் பற்றி யோசிக்கவேமாட்டா? நான் செஞ்ச தப்புக்கு அவ தண்டனை அனுபவிக்கனுமா?”
“ஏன் முன்னாடி நீங்க என்கிட்ட கேட்டப்ப நான் ஒத்துக்கிட்டிருந்தா அவ நிலைமை சரியாகியிருந்திருக்குமா?”
“அதான் நீங்க ஒத்துக்கலையே!”
“கொஞ்சம் பலகீனமான ஆளா இருந்திருந்தா உங்க அழகையும் பணத்தையும் பார்த்து மயங்கியிருந்திருப்பேன்.”
“அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்டம்? இதை எல்லாத்தையும் விட பாலச்சந்தருக்கு வருத்தம் தந்த விசயம் இந்தளவுக்கு தங்களை கொண்டு வந்து நிறுத்திய அக்காவின் குடும்பம் இங்கே நடப்பதை எல்லாம் ஒரு நாடகம் போல் வேடிக்கை பார்ப்பதைதான் தாங்க முடியவில்லை. கண்களில் எந்த சலனமும் இல்லாது நின்றிருந்த தன் தமக்கை சௌந்தரத்தை வேதனையுடன் பார்த்தான்.