(Reading time: 28 - 55 minutes)

டுத்த நாள் காலையில் தன்னருகே வந்தவளின் முகமே அவளின் நிலையை சொல்ல, அதை மாற்ற விரும்பியவனாய்,

“கிருஷ்ணா… இந்தா இதை பிடி…” என அவளின் கைகளில் அவன் திணித்தான்…

“என்னது இது?...” என்ற கேள்வியோடு அதை திறந்து பார்த்தவள்,

“என்ன சகி இது… இதுல ஒரு போட்டா கூட இல்ல…. வெறும் ஆல்பம் மட்டும் இருக்கு…. பட் ரொம்ப அழகா இருக்கு….” என்றாள் மனமாற….

“ஹ்ம்ம்… சும்மா செய்யணும்னு தோணுச்சு… அதான் செஞ்சேன்… உனக்கும் கொடுத்திட்டேன்….” என அவன் இலகுவாக சொல்ல….

“ஹேய்… நீங்க செஞ்சதா?... நினைச்சேன்… அழகா இருக்கும்போதே…” என அவனை பாராட்டியவளின் முகம் வாடி போனது சட்டென்று…

“கிருஷ்ணா… என்னாச்சுடா?... ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட?... நான் வேற செஞ்சு தரவா?... இது நல்லா இல்லையா?...” என கனிவாக அவன் கேட்டதும்,

“நான் தான் உங்க கிட்ட நிறைய கிஃப்ட் வாங்கியிருக்குறேன்… உங்களுக்கு நான் ஒன்னுமே கொடுத்ததில்லை… எனக்கு அதான் கஷ்டமா இருக்கு…” என்றதும்,

ஒரு பெரிய மூச்சை வெளியேற்றியவன், “இவ்வளவுதானா?... நான் கூட பயந்தே போயிட்டேன்…” என்றான் அவன்….

“இவ்வளவுதானாவா?... ஹ்ம்ம்… உங்களுக்கு என்ன தெரியும்… எனக்கு தான் புரியும் அந்த கஷ்டம்…” என்றவள் முகமே அவளது கஷ்டத்தினை சொல்ல

“என்னடா… கிருஷ்ணா… இப்போ என்னாச்சுன்னு இப்படி வருத்தப்படுற?... நீ எனக்கு நிறைய செஞ்சிருக்கடா… அதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியுமான்னு எனக்கு தெரியலை… நிஜமாடா… என்னை நம்பு…. ப்ளீஸ்….” என்ற கெஞ்சுதல் அவளை கொஞ்சம் மாற்ற,

அவனை கொஞ்ச நேரம் புரியாமல் தனது கண்களை உருட்டி பார்த்துவிட்டு, “சீக்கிரமே வளர்ந்து உங்ககிட்ட இருந்து எல்லா உண்மையையும் நான் வாங்கலை… என் பேரு கிருஷ்ண ப்ராணாதிகா இல்ல… ஹ்ம்ம்…” என கோபமாக உறைத்துவிட்டு, அவனுக்கு முன்னே வேகமாக நடந்து சென்றாள் அவள்…

அவளின் பின்னே சிரிப்புடன் அவளை பின் தொடர்ந்தான் அவன்….

அந்த ஒரு மாதமும் அவளுக்கு எதையோ இழந்தது போல் இருக்க, அவளும் அவனுக்காக பொறுமையாய் காத்திருந்தாள்…

தேர்வு எழுதப்போகும் முதல் நாள் காலையில், அவளிடம் வந்தவன், “இன்னைக்கு முதல் பரீட்சைடா… நல்லாதான் படிச்சிருக்கேன்… இருந்தாலும் கொஞ்சம் பயமா இருக்குடா…” என அவன் சொன்னதும் அவனின் மனநிலையை மாற்ற எண்ணியவள்,

“அட என்ன சகி நீங்க…. எனக்கு ப்ரெண்டா இருந்துட்டு இப்படி பரீட்சைக்கெல்லாம் பயப்பபடுறீங்க… என்னை நினைச்சிக்கோங்க… எக்ஸாம் ஹாலில்… பயம் எல்லாம் ஓடிப்போயிடும்… என்ன சரியா?...” என ஓற்றைப்புருவத்தை உயர்த்தி அவள் கேட்க, அவன் சரி என்று தலை அசைத்தான்…

“சரிடா… நான் வரேன்…” என கிளம்ப எத்தனித்தவன், “ஒருநிமிஷம்…” என்ற அழைப்பில் நின்றான்….

“என்னோட ப்ரேயர்ஸ் உங்ககூடவே இருக்கும்… கண்டிப்பா நல்லா பண்ணுவீங்க… நிறைய மார்க்ஸ் எடுப்பீங்க…” என உளமாற சொல்லியவள்,

தனது வலக்கரம் நீட்ட, அவன் அவளை பார்த்தபடியே நிற்க, “சகி….” என அவள் மீண்டும் அழுத்தி சொல்லியவாறு, தலை அசைத்து கை நீட்ட, அவன் அவளது கரம் பற்றினான்…

“குட்லக்…. சகி….” என வாழ்த்தியவளைப் பார்த்து புன்னகைத்தபடியே சென்றான் அவன்…

பேப்பரை பார்த்ததுமே லேசான பயம் தொற்றிக்கொள்ள, சட்டென்று அவள் சொன்னது அவனுக்கு நினைவு வந்தது…. மெதுவாக கண் மூடி அவளை நினைத்துக்கொண்டவன், “கிருஷ்ணா….” என்ற உச்சரிப்போடு கண் திறக்கையில் அவனது பயம் அவனை விட்டு தொலைவில் ஓடிப்போனது…

சாய்ங்காலம் பள்ளி முடிந்து வெளியே வந்தவள், “எப்படி எழுதினாங்கன்னு தெரியலையே… எக்ஸாம் வேற மதியமே முடிஞ்சிருக்குமே… ஹ்ம்ம்… வீட்டுக்கு போயிருப்பாரே… இப்போ என்ன பண்ண?...” என முகத்தை தொங்கபோட்டபடி நடந்து வந்தவள், அவர்கள் வழக்கமாக அமரும் ஆலமரம் பக்கத்தில் பார்க்க, அங்கே அவன் அவளுக்காக காத்திருந்தான்…

“சகி…..” என்ற துள்ளலோடு அவனிடம் ஓடியவள்,

“எக்ஸாம் எப்படி பண்ணீங்க?... நல்லா பண்ணீட்டீங்கல்ல?... எனக்கு தெரியும்…” என அவளே சொல்லிக்கொண்டே போக, அவன் சிரித்தான்…

“நல்லா பண்ணியிருக்கேண்டா…” என சொன்னதும் “ஹை… சூப்பர்…” என அவள் குதிக்க, அவன் அந்த குதூகலத்தை ரசித்தான்…

“எங்க நீங்க எக்ஸாம் முடிஞ்சு போயிருப்பீங்களோன்னு நினைச்சேன்… நல்லவேளை நீங்க இங்கதான்…” என சொல்லிக்கொண்டே போனவள், அவன் இன்னும் அதே பள்ளி சீருடையில் இருப்பதைப் பார்த்துவிட்டு,

“சகி… என்ன இது இன்னும் டிரெஸ் சேஞ்ச் கூட பண்ணலையா?...” என கேட்டதும் தான் அவனுக்கே அது உரைத்தது…

“இல்லடா… படிச்சிட்டிருந்தேனா… அதான்… அப்படியே…” என அவன் உண்மையை கூற,

அவனை ஒருகணம் ஊன்றி பார்த்தவள், அவன் பையை ஆராய்ந்துவிட்டு அவனை முறைத்தாள்…

“என்னடா?... என்னாச்சு?...”

“என்ன என்னடா?.... சாப்பிடலல்ல நீங்க?...” என கோபமாக கேட்டதும் தான் அவனுக்கு அவன் சாப்பிடாததே நினைவு வந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.